babies.jpg

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்…

மும்பையில் மாடுயுலர் கிச்சன் சம்பந்தப் பட்ட ஒரு கடைக்குப் போய் படம் எடுத்துப் போடவேண்டும் என்பது நீண்ட நாள் பெண்டிங் வேலை. ஒரு intro வாக இங்கே. ஹூம்ம்… நாங்களெல்லாம் இப்பொழுதைக்கு படம்தான் பார்க்க முடியும். வங்கியாகப் பார்த்து விதவிதமாய்.. வித்யாசமாய்.. அழுக்கழுக்காய்.. அபத்தமாய்… ‘எப்படிக் கொடுத்தாலும் செய்யத் தெரியும் என் வைஃப்க்கு’ மாதிரி சான்றிதழ்களோடு போய்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

எங்க வீட்டு oven’க்கு வாய் இருந்தா அழும்னு சொல்லுவேன்.  ஆனா இங்க ஒரு oven அழாம சமத்தா தான் பிறந்து வளர்ந்த கதையைச் சொல்ல ஆரம்பிச்சிருக்கு. சாக்லேட் எல்லாம் பிசிபிசுன்னு கைல ஒட்டி, படபடன்னு சோளமாப் பொரிஞ்சு.. முட்டை வெடிச்சு… அப்றம் ஜாலிதான்!
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |…. 

ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு 6 கிராம் தான் தேவையாம். அப்ப மூணு பேருக்கு ஒரு மாசத்துக்கு.. 3*6*30 = 540 கிராம்.😦 நாம் எவ்வளவு வாங்குகிறோம்? அதைத் தவிர வெளியில் எவ்வளவு உணவு வாங்கிச் சாப்பிடுகிறோம்? தலையைச் சுத்துது! (சுத்தாம என்ன செய்யும்?)

எது கூடாதுன்னு படிச்சு நொந்து போன கையோட, எதெது நல்லதுன்னு படிச்சுக்கலாம்…

வனப்பைக் கூட்டும் தேங்காய்

150 ரூ பீஸ் + 100ரூ மருந்தும் செலவழிப்பது ஏன்?

என்ன, எப்போது, எங்கே, எவ்வளவு உண்ண வேண்டும்.