தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 2 (விரும்பினால்)
செய்முறை:
- அரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித் தனியாக சிவக்க வறுக்கவும்.
- வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, நீளமாக அரிந்த வெங்காயம் தாளிக்கவும்.
- அடுப்பில், குக்கர் உள்பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, வறுத்த அரிசி, பருப்பு, தாளித்த கலவை, தேங்காய்த் துருவல், தேவையான உப்பு சேர்த்து மூடி, வெயிட் போட்டு, சுமார் 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
- சூட்டோடு நெய் சேர்த்து, மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
* வெங்காயம் சேர்க்க விரும்பாதவர்கள் முட்டைக் கோஸ் இலைகளை மெலிதாக ஆனால் நீளமாக அரிந்தும் செய்யலாம். அல்லது இரண்டும் சம அளவில் கலந்தும் உபயோகிக்கலாம். வெங்காயத்திற்கான மிகச் சிறந்த மாற்று முட்டைக்கோஸ் என்ற அளவில் இப்பொழுதைக்குத் தெரிந்து கொள்வோம்
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
கத்திரிக்காய் புளிக் கொத்சு, தக்காளிக் கொத்சு, சாம்பார் வகைகள்.
மறுமொழியொன்றை இடுங்கள்