தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 1 1/2 கப்
பச்சரிசி – 1 1/2 கப்
முழு உளுத்தம் பருப்பு – 1 கப் (தோல் நீக்கியது)
வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
செய்முறை:
- அரிசிகள், வெந்தயம், பருப்பை ஒன்றாக 4 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- கிரைண்டரில் அவ்வப்போது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மிக மிக மென்மையாக, மாவில் கொப்புளங்கள் வரும்வரை அரைக்க வேண்டும்.
- அரவை முடிக்கும்போது உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிடவும்.
- மாவை கொஞ்சம் பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- இந்த மாவில் அடுத்த அரைமணி நேரத்தில் தோசை செய்யலாம். அல்லது ஒரு 6,7 மணி நேரங்கள் வெளியே வைத்து, மாவைப் பொங்கவைத்தும் செய்யலாம்.
- தோசைக் கல்லை சூடாக்கி, மாவை நடுவில் விட்டு, சுற்றி மெல்லிய வட்டமாகப் பரத்த வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விடவும்.
- சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, சிவந்ததும் திருப்பிப் போட வேண்டும். சுலபமாகத் திருப்ப முடியும்.
- அடுத்தப் பக்கம் அதிக நேரம் வேகத் தேவை இல்லை. இதற்கு, கல்தோசை என்று பெயர். கொஞ்சம் மொறுமொறுப்பாக வரும்.
* மொறுமொறுப்பில்லாமல் கொஞ்சம் சாஃப்டான தோசை தேவை என்றால் பச்சரிசியை அதிகரித்து புழுங்கலரிசியைக் குறைத்தோ (2:1) அல்லது முற்றிலும் பச்சரிசி மட்டுமே உபயோகித்தோ செய்யலாம். இதற்கு மெதுதோசை என்று பெயர். பச்சரிசி தோசை ஸ்பான்ச் மாதிரி இருக்கும்.
* தோசைக்கான அந்தச் சிவந்த நிறத்தை, வெந்தயம் தருகிறது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி, தக்காளிச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி, புதினாச் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார், தக்காளிக் கொத்சு, இட்லி(தோசை) மிளகாய்ப் பொடி, உருளைக் கிழங்கு மசாலா.
“எல்லாவற்றுள்ளும் இனிய பேரனுபவும் ஒன்று இருப்பதை உணர்ந்தவருக்கு ஒரு நாள் என்பது ஒரு பரிசு. உணவில் அவருக்கு வெறி இல்லை, ஆனால் சாப்பிடும்போது ரசித்துச் சாப்பிடுவார். தோசை அவருக்கு மிகமிகப் பிடித்தமானது. தோசைக்கு கீரை மசியலும் கெட்டித் தயிரும் தொட்டுக்கொள்வதைத் தான் என்னால் கடைசிவரை ஏற்கவே முடியவில்லை.”
இந்த மேட்ச் ஃபிக்சிங் குறிப்பு, யார், யாரைப் பற்றி, எங்கே சொன்னது? :))
புதன், ஜனவரி 31, 2007 at 12:33 முப
திருப்பிப் போடாமல் ஒரே பக்கமாக வார்த்து எடுத்தால் (மிதமான தீயில்), இன்னும் மொறுமொறுப்பாக வரும். ஆனால் பொறுமை தேவை. பசி வயிற்றைக் கிள்ளும் போது try பண்ண வேண்டாம்.
ஒரு நாலு நாள் இந்த பக்கம் எட்டி பாக்கல, என்ன அதுக்குள்ள இத்தன போஸ்ட்?!!
புதன், ஜனவரி 31, 2007 at 6:52 முப
ஆமாம், அடுத்த பேப்பர் ரோஸ்ட் தோசைக்கு அப்படித்தான் சொல்லியிருக்கிறேன். ஆனால் மேலே மூடிவிட்டால் அடியில் நமக்குத் தெரியாமல் கருகிவிட வாய்ப்பில்லாமல் போகும். ஏதாவது வகையில் மடிக்கவும் வாகாக வரும். இல்லாவிட்டால் விறைத்தாற்போல் ஆகி, மேனேஜ் செய்வது கடினம்.
ஒரு உணவுக் குறிப்போடு சேர்த்தே அதன் பக்க உணவுகளையும் தந்துவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் சில சமயம் போஸ்ட் அதிகமாகி விடுகிறது. 🙂
BTW, கடைசியில் இருக்கும் கேள்விக்கு விடை தெரியவில்லையா? :->
புதன், ஜனவரி 31, 2007 at 10:00 பிப
>>ஆனால் மேலே மூடிவிட்டால் அடியில் நமக்குத் தெரியாமல் கருகிவிட வாய்ப்பில்லாமல் போகும். ஏதாவது வகையில் மடிக்கவும் வாகாக வரும். >சில சமயம் போஸ்ட் அதிகமாகி விடுகிறது.
வியாழன், பிப்ரவரி 1, 2007 at 7:13 பிப
என்னோட reply-ஐ இப்படி சொதப்பி விட்டதே.. ம்ம்ம் 😦
வியாழன், பிப்ரவரி 1, 2007 at 7:31 பிப
சொக்காயி, cool! 🙂
வியாழன், ஒக்ரோபர் 11, 2007 at 4:27 பிப
dosai is good
வெள்ளி, ஒக்ரோபர் 12, 2007 at 8:00 முப
//BTW, கடைசியில் இருக்கும் கேள்விக்கு விடை தெரியவில்லையா? :-> //
தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்கள்.
🙂
வெள்ளி, ஒக்ரோபர் 12, 2007 at 11:19 முப
sps, thanks.
பாகீ,
அது சுந்தர ராமசாமி குறித்து ஜெயமோகன். “நினைவின் நதியில்” புத்தகத்தில்.. பக்கம் 40. 🙂
ஜெமோ கையெடுக்காமல் எழுதிய புத்தகமாமே. நானும் கீழே வைக்காமல் படித்து முடித்தேன். நான் அறியாத இரண்டு ஆளுமைகளை ஒரே நேரத்தில் படித்தது கொஞ்சம் வித்யாசமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. எப்படி இவ்வளவு விஷயங்களை நினைவுப்படுத்தி எழுதமுடியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் ஒருமுறை நிதானமாகப் படிக்க வேண்டும்.
வெள்ளி, ஒக்ரோபர் 12, 2007 at 9:50 பிப
ஜெயஸ்ரீ,
மறுமொழிக்கும், ஒரு நல்ல புத்தகம் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.
வியாழன், ஓகஸ்ட் 18, 2011 at 8:29 முப
[…] தோசை, அடை…. Posts Related to Idli & Dosai Milagai PodiKollu (Kaana) PodiDhall (Parupu) […]