போகிப் பண்டிகை, பொங்கல், கனுப் பொங்கல் நாள்களில் கிட்டத்தட்ட அனைத்துவிதமான நாட்டுக் காய்கறிகள், பச்சைப் பயறுகளையும் சமையலில் உபயோகித்துவிடுவோம். இப்போது காய்கறிக் கடைகளிலேயே எல்லாவற்றையும் நறுக்கிக் கலந்து தயாராகவும் கிடைக்கிறது. ஆனால் தனித் தனியாக வாங்கிச் செய்தால் நம் விருப்பப்படி தேவையான அளவுகளில் தேவையான நீளத்தில் நறுக்கிச் செய்யலாம்.

பொங்கல் பண்டிகைக்கு கதம்பச் சாம்பார்…

தேவையான பொருள்கள்:

அவரைக்காய், கொத்தவரங்காய், தடியங்காய், பரங்கி, பூசணி, கத்திரி, புடலை, சேனை, வாழை, காராமணிக்காய், பச்சை மொச்சை, நிலக்கடலை…

உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட், குடமிளகாய், முருங்கை, தக்காளி..(விரும்பினால் மட்டும். சிலர் நாட்டுக்காய் தவிர மற்றவை இந்த நாள்களில் சேர்ப்பதில்லை. ஆனால் பொதுவாக சாம்பாரில் இவையும் சுவை சேர்க்கும்.)

புளி – பெரிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 1/2 கப்
சாம்பார்ப் பொடி – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் –  1 டீஸ்பூன்
உப்பு –  தேவையான அளவு
கொத்தமல்லித் தழை –  சிறிது

மசாலா அரைக்க:

காய்ந்த மிளகாய் – 1
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது

தாளிக்க –  எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை

kathamba saambar 1

செய்முறை:

  • புளியை இரண்டு மூன்று முறைகளாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை பெரிய துண்டங்களாக நறுக்கி, பயறுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய அளவில் நறுக்குவதால் இதையும் குக்கரிலேயே தண்ணீர் சேர்க்காமல் வேகவைக்கலாம்.
  • காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய்த் துருவலை சிறிது எண்ணையில் வறுத்து, கொத்தமல்லித் தழையுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் தாளிக்கவும்.
  • கரைத்து வைத்துள்ள புளி, அரைத்து வைத்துள்ள மசாலா, வேகவைத்துள்ள காய்கறிகள், சாம்பார்ப் பொடி, தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • பச்சை வாசனை போனதும், வேகவைத்துள்ள பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து இறக்கவும்.
  • கொத்தமல்லித் தழை நறுக்கிப் போட்டு பரிமாறவும்.

kathamba saambar

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதம், வெண்பொங்கல், பிற பொங்கல் வகைகள், உப்புமா,…