தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – –  தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, கறிவேப்பிலை

செய்முறை:

  • எல்லாவற்றையும் மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • சிறிது எண்ணையைச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கலக்கவும்.

* சில ஹோட்டல்களில் தேங்காய்ச் சட்னி சிவப்பாக இருப்பதன் காரணம் பச்சை மிளகாயைக் குறைத்து காய்ந்த மிளகாய் அதிகம் சேர்ப்பதனால் தான். சுவையாகவே இருக்கும்.

* 4 நிலக்கடலைப் பருப்பு சேர்த்து அரைத்தால் வித்யாசமான சுவையாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இது பிடித்திருக்கிறது.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி, பூரிவெண்பொங்கல், ஊத்தப்பம்

சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடும் போது அல்லது ஊத்தப்பம் செய்யும் போதும் சட்னியில் புளி சேர்க்கத் தேவை இல்லை.