(1)
தேவையான பொருள்கள்:

தக்காளி – 5
தேங்காய்த் துருவல் –  3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
உளுத்தம் பருப்பு –  1 டேபிள்ஸ்பூன்
புளி –  சிறிதளவு
பூண்டு –  4 பல்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை –  சிறிது (நறுக்கியது)
தாளிக்க – எண்ணை, கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

செய்முறை:

  • சிறிது எண்ணையில் பருப்பு, மிளகாய் இரண்டையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் தக்காளியையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி நன்கு வதங்கியபின் புளி, பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கி ஆற விடவும்.
  • வதக்கியவற்றை தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

 -0-

(2)
தேவையான பொருள்கள்:

தக்காளி –  4 (பெரியது)
காய்ந்த மிளகாய் – 4
சிறிய வெங்காயம் – 10
சோம்பு –  1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு  – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • தக்காளியை சிறுதுண்டுகளாக்கி மிளகாய், சோம்பு, வெங்காயத்தோடு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

-0- 

(3)
தேவையான பொருள்கள்:

தக்காளி –  4 (பெரியது)
வெங்காயம் – 1
மிளகாய வற்றல் – 6
இஞ்சி –  சிறு துண்டு
பூண்டு –  4 பல் (விரும்பினால்)
தனியா –  1/4 ஸ்பூன்
புளி –  சிறிது
உப்பு –  தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

  • வாணலியில் சிறிது எண்ணையைச் சூடாக்கி மிளகாய், தனியா, இஞ்சி, பூண்டு, அரிந்த வெங்காயம், அரிந்த தக்காளி என்ற வரிசையில் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கிய சூடு ஆறியதும் புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • எண்ணையில் கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியோடு கலந்து பரிமாறவும்.

-0-  

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, சப்பாத்தி, வெண்பொங்கல், போண்டா, பிரட்…

புளிப்பான ஊத்தப்பம் வெள்ளையப்பம் போன்றவைகளுக்கு தக்காளிச் சட்னி அவ்வளவாகச் சேர்வதில்லை