தேவையான பொருள்கள்: 

உருளைக் கிழங்கு –  300 கிராம்
பெரிய வெங்காயம் – 300 கிராம்
பயத்தம் பருப்பு – 200 கிராம்
பூண்டு –  8 பல்
பச்சை மிளகாய் –  6
தேங்காய் –  1 மூடி
பட்டை – 10 கிராம்
லவங்கம் – 10 கிராம்
கசகசா –  20 கிராம்
பொட்டுக் கடலை – 50 கிராம்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணை –  2 டேபிள்ஸ்பூன்
உப்பு –  தேவையான அளவு

செய்முறை:

  • பயத்தம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
  • உருளைக் கிழங்கை வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை வைத்துக் காய்ந்ததும், 4 பல் பூண்டு போட்டு சிவக்க வறுத்து, பின் பட்டை, இலவங்கம், நறுக்கிய வெங்காயம் என்ற வரிசையில் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் சிவந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பு, 2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும், உதிர்த்துவைத்துள்ள உருளைக் கிழங்கு, அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து இறக்கவும்.
  • இறக்கிய சூட்டோடு எலுமிச்சம் பழம் 1/2 மூடி பிழிந்து, மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, சப்பாத்தி…