தேவையான பொருள்கள்: 

சின்ன வெங்காயம் – 25
புளி – சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி – 2
துவரம் பருப்பு – 1/2 கப்
சாம்பார்ப் பொடி – 1  1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் –  1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் – 6
தனியா – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை –  சிறிது

 தாளிக்க:
எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை:

  • துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ள்வும்.
  • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • மசாலா சாமான்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அத்துடன் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயம் வதங்கியதும், தக்காளித் துண்டுகள், புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • கொதிக்கத் தொடங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும்.
  • இறுதியில் வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.

* இந்தச் சாம்பாருக்கு மணத்தையும் சுவையையும் தருவதில் மசாலாவில் அரைத்துவிடும் சின்னவெங்காயம், கொத்தமல்லித் தழையின் பங்குதான் மிக முக்கியமானது. ஹோட்டல் சாம்பாரின் சுவையை அதுவே தருகிறது. எனவே சாம்பாருக்கு சின்ன வெங்காயம் உரிக்க நேரமில்லாவிட்டாலும், அதற்குப் பதில் பெரிய வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில அரிந்துபோட்டு, மசாலாவிற்கு மட்டும் 4,5 சின்ன வெங்காயம் உபயோகித்தாலே ஓரளவு சுவையைக் கொண்டுவந்து விடலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி, தோசை, மெதுவடை, சாதம்