மார்கழி மாதம் திருவாதிரை நாளில் செய்யப்படும் கூட்டு…

தேவையான பொருள்கள்:

பூசணி, பரங்கி, வாழை, அவரை, கத்தரிக்காய்*, கொத்தவரங்காய், பீன்ஸ், உருளை, கேரட், சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, காராமணி,…..

வேர்க்கடலை, பட்டாணி (ஊறவைத்தது)
துவரம் பருப்பு – 1/2 கப்
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி

மசாலா அரைக்க:
மிளகாய் வற்றல் – 10
தனியா –  4 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
தேங்காய் – 1 மூடி

தாளிக்க:
எண்ணை, கடுகு, கருவேப்பிலை

செய்முறை:

  • மேலே உள்ள காய்கறிகளை நீளவாக்கில் அல்லாமல் கொஞ்சம் பெரிய உருண்டை வடிவமாக(cubes) நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • காய்கறிகள் மற்றும் வேர்க்கடலை, பட்டாணி சேர்த்து கூட்டுத் தொகை ஒற்றைப்படை எண்ணில்(7,9,11..) இருக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை. ஒருவேளை ஒரு காய் குறைந்தால் தேங்காயையும் ஒரு காயாக எண்ணிக் கொள்ளலாம், அல்லது ஒரு பச்சை மிளகாயைச் சேர்த்துக் கொள்ளலாம். :))
  • துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, தனியா, பெருங்காயத்தை சிறிது எண்ணையில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு நீரில் வேகவைக்க வேண்டும். காய்கறிகள் வெந்ததும், புளியைக் கரைத்து வடிகட்டிச் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.
  • அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்க்கவும்.
  • கடைசியாக வேகவைத்துள்ள துவரம்பருப்பையும் சேர்த்து இறுகும்வரைக் கிளறவும்.
  • எண்ணையில் கடுகு, கருவேப்பிலை தாளித்து, கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

* மற்ற காய்களுக்கு நடுவில் அதிகமாக வெந்த கத்திரிக்காய் இருப்பது பிடிக்காதவர்கள் தவிர்க்கலாம். நான் தவிர்த்துவிடுவேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

திருவாதிரைக் களி