கைசிக ஏகாதசி குறித்து இங்கே கொஞ்சமாய் குறிப்பிட்டிருக்கிறேன். “ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி” என்று இணையத்தில் தேடினால் மேலும் விபரங்கள் கிடைக்கும்.
இந்த வருடச் செய்திக்கான சுட்டி: பிரம்ம ரத மரியாதை ரத்து பிரச்னையில் சுமுக தீர்வு
கோயில் ‘ஸ்ரீபாதந்தாங்கிகள்’ என்கிற பெருமாளைச் சுமந்துசெல்பவர்கள் மறுத்தாலும் பிற சீடர்கள் விரும்பிச் செய்யத் தயாராக இருந்தும் ம.க.இ.க போராட்டத்திற்கு பயந்து இராமானுஜர் காலத்திலிருந்து தொடர்ந்து நடக்கும் பிரம்ம ரதம் இந்த வருடம் நடக்காமல் ‘சுமுக’மாக முடிந்தது. இதுகுறித்து பட்டர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்கிறது சன் செய்திகள்.
போராட்டத்தின் நோக்கம்: மனிதனை மனிதம் சுமக்கும் அவலத்தை எதிர்த்து.
எனவே இந்த வருடம் ஏகாதசி இரவில் விடிய விடிய கைசிக புராணம் படித்த பட்டரய்யங்கார், முடித்த நொடியே (அதிகாலை) கோயிலின் பிற மரியாதைகளான சந்தனம், மாலை, மேளம் உள்பட அனைத்தையும்கூட மறுத்துவிட்டு (“நான் அரங்கனுக்கு கைங்கர்யம் செய்யவந்தேன்; செய்துவிட்டேன். இவை எதுவும் தேவையில்லை”) வீட்டுக்குச் சென்றுவிட்டார். ம.க.இ.க உடனே தன் வெற்றியை, மகிழ்ச்சியை 10,000 வாலா வெடித்துக் கொண்டாடியும் இன்று ஊரெங்கும் பிரம்ம ரதத்தைப் புறக்கணித்து ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் செவிவழிச் செய்தி.
அடுத்த மாதம் மார்கழியில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இராப்பத்து ‘அரையர் சேவை’ முடிந்து கடைசியில் 4000 பாசுரங்களும் பாடிய அரையருக்கும் இந்த பிரம்மரத மரியாதை வழக்கமாக உண்டு. தமிழ்ப்பெயர் வைத்தாலே வரிவிலக்கு தரும் அரசாங்கத்தின்கீழ் இருக்கும் ‘இந்து’ அறநிலையத் துறையும் அறங்காவலர்களும் இந்த ஆண்டு என்னசெய்வார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தொடர்புடைய பதிவுகள்:
திருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா – அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 21, 2010 at 12:00 பிற்பகல்
This practice was started in 1890 or so when there was no other mode of transport except bullock carts etc. So ஸ்ரீபாதந்தாங்கிகள் did the pallakku thookkuthal. When there are plenty of mode of tpt available y still men have to carry other men?
Narayanan
செவ்வாய்க் கிழமை, நவம்பர் 23, 2010 at 9:29 மு.பகல்
narayanan, உங்கள் மறுமொழியிலேயே இந்தப் பிரச்சினைக்கு(?!) பதிலும் ‘சுமுக’த் தீர்வும் இருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் வெத்துச் சத்தமும் எதிர்ப்பும் மட்டுமே இருக்கிறது; தீர்வு என்றுமே இருந்ததில்லை என்பதற்கு இன்னொரு சாட்சி.
திங்கட் கிழமை, நவம்பர் 22, 2010 at 3:08 பிற்பகல்
ambi nee yenga pakamaa illa avaa pakammaa
perumolda kovathukku matum allagaadhe please
idhu nerupoda vilaayaadra kaariyam
செவ்வாய்க் கிழமை, நவம்பர் 23, 2010 at 4:18 பிற்பகல்
i also heard this but what to do
வியாழன், December 23, 2010 at 3:32 பிற்பகல்
அவியல்,வெஜ் குருமா ..ரெசிப்பி ப்ளீஸ்
திங்கட் கிழமை, ஜனவரி 10, 2011 at 12:19 பிற்பகல்
சென்னை புத்தகக் கண்காட்சி ஆரம்பித்து ஆறு நாட்கள் முடிந்து விட்டன.இம்முறை வருகை தரவில்லையா?
செவ்வாய்க் கிழமை, மார்ச் 29, 2011 at 8:06 மு.பகல்
சென்னையில் இருக்கும் போது, ஒவ்வொரு வருடமும் தவறாமல் திருநீர்மலை சென்று அரங்கனை தரிசனம் செய்தது நினைவுக்கு வந்தது..
அரங்க அரங்க அரங்க நாதா….
*******
நேரம் கிடைக்கும் போது, இங்கேயும் வாருங்கள்.
உலகின் ஒரே ஏழை – அட்ராட்ர நாக்க முக்க… http://edakumadaku.blogspot.com/2011/03/blog-post_26.html
*********
எங்களின் இரண்டாவது குறும்பட முயற்சியான “விதை” குறும்படத்தை கண்டு, கருத்து பகிர வேண்டுகிறேன்…
“விதை” – குறும்படம் http://jokkiri.blogspot.com/2011/03/blog-post_22.html