உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க, மூட்டுவலி போன்ற பல பிரச்சினைகளுக்கு கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள். இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பெருங்காயம்
உப்பு
செய்முறை:
- துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் (மணம் நன்றாக இருக்கும்) முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.

வியாழன், April 2, 2009 at 5:25 பிற்பகல்
ஹிஹி, ராஜ முத்திரை சூப்பர். அப்படியே by ‘ஜெ’ன்னும் பொறிச்சிடுங்க.
ஏன்னா சில அல்பங்கள் இதே பெயர்ல ஒரு வூடு கட்டி(changing or adding some spelling) அவங்க பெயரை பக்கத்துல செதுக்கிடுவாங்க.
வியாழன், April 2, 2009 at 11:14 பிற்பகல்
ambi:
//அப்படியே by ‘ஜெ’ன்னும்..//
என்னை அதி அல்பமாக்கிட்டுதான் அடங்குவீங்க போல. பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 3:16 மு.பகல்
what is kollu?
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 3:20 மு.பகல்
Thanks Jayashree.My அம்மா Parcel-லில் கொள்ளு packet ஒன்னையும் அனுப்பிட்டு உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு போன் லே வேற advice. என்ன பண்ணறதுன்னு தெரியாம இருந்தேன். This is a very simple and good idea.
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 9:13 மு.பகல்
ஜெயஸ்ரீ,
பொறுத்தது போதும். பொங்கி எழுங்கள்.
இட்லியையும் வடையையும் “பிழிந்து”, எப்டி (வடாமாக) “காய” போடுவதுன்னு ஒரு போஸ்ட் போடவும்.
ப்ரியா.
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 10:24 மு.பகல்
தூயா, horse gram னு தமிழ்ல சொல்வோம்.
http://en.wikipedia.org/wiki/Horse_gram
Sunapana, கொள்ளுல நிறைய செய்யலாம். ஒவ்வொண்ணா சொல்லப் பாக்கறேன்.
Priya, எனக்குப் புரியலை. புழுங்கலரிசியை அரைச்சு வடாம் பிழியத்தான், இட்லிமாதிரி வேகவெக்கணும். பிறகு சொல்றேன்.
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 10:45 மு.பகல்
Priya: Okay. I got it.
இட்லிவடை உங்களுக்கு நண்பர்தானே. என்னோட அவங்களுக்கு ஏதாவது பிரச்சினைன்னா பேசித் தீர்த்துக்கலாம்னு சொல்லுங்க.
அதைவிட இதை எல்லாம் புறக்கணிக்கறதே சரின்னு தோணுது. யாருன்னு தெரியாத ஒரு குழுமத்தோட மல்லுக்கு நிக்க முடியாது. இதுல யாருக்காவது சந்தோஷம்னா இருந்துட்டுப் போகட்டும். வெறும் அரசியலே எவ்ளோதான் வறுப்பாங்க.
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 11:16 மு.பகல்
டியர் ஜெய்
அது கானா இல்ல காணா…….அது சரி இந்த பொடிய இட்லி பொடி மாதிரி use பண்ணலாமா? நான் வெறும் கொள்ளு ரசம், பாயசம் மட்டும் தான் வைப்பேன்..
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 11:35 மு.பகல்
//இட்லிவடை உங்களுக்கு நண்பர்தானே//
என்னை அவ்ளோ பெரிய ஆளுன்னா நெனச்சீங்க?
அனேகமாக அவரும் நான் உங்களுக்கு ரொம்ப நெருங்கிய நண்பர் என்றே நினைக்கிறார்.அவரிடமும் சொல்ல வேண்டும், நான் அவ்ளோ பெரிய ஆள் இல்லைன்னு…
கடைசில நீங்க ரெண்டு பேருமே கூட்டணி ஏதும் வெச்சீங்கன்னா, atleast எனக்கு ஒரு seat ஆவது குடுத்தீங்கன்னா சரி.
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 3:57 பிற்பகல்
அது கானாவும் இல்லை,காணாவும் இல்லை.தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் கொள்ளு என்று சொல்லக்கூடாது.காணம் என்றுதான் சொல்வார்கள்.எனவே அது காணப் பொடி.காணத்துகையல் தெரியுமா?ஏதோ ஒரு நாவலிலே நா.பா.இது பற்றி எழுதியிருப்பார்.
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 4:14 பிற்பகல்
ஸ்ரீலதா, சென்னை பித்தன் இருவருக்கும் நன்றி. என் அம்மாவையே கேக்கலாம்னா ஃபோன் எடுக்காம எங்கயோ காணாப் போயிட்டா.
ஆச்சரியம், இணையத்துல இது குறிச்சு எங்கயும் இல்லை.
ஸ்ரீலதா, மிளகாய்ப் பொடியா பொடியா உபயோகிக்க இன்னும் காரம் போட வேண்டியிருக்கும். நான் நம்ப ரெகுலர் இட்லிப் பொடிக்கு அரைக்கும்போது ஒரு பிடி கருப்பு உளுந்தும் ஒரு பிடி கொள்ளும் வறுத்து சேர்க்கறேன். நல்லா இருக்கும்.
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 4:15 பிற்பகல்
Priya:
//அனேகமாக அவரும் நான் உங்களுக்கு ரொம்ப நெருங்கிய நண்பர் என்றே நினைக்கிறார்.//
எவரு?
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 9:47 பிற்பகல்
//எவரு?
குழப்பிட்டேனா?
அவரா? அவர்களா? என்றெல்லாம் குழப்பங்களை நீடிக்கும் நிலையில், தெளிவாக சொல்லிருக்கணும்.
சாரி. இட்லிவடைய தான் சொன்னேன்.
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 10:01 பிற்பகல்
காணாம்பொடி பதிவில் பொடி படத்தைப் போடாமல், வாங்கின மளிகை சாமானை மட்டும் போட்டு ஒப்பேத்தின ரகசியம்….
அ. ஹ்வ்!! கொள்ளுப்பொடியா, அதை யாரு சாப்பிடுவா?
ஆ. ரங்கமணி ஊரில் இல்லை.
இ. மூல புத்தகத்தில் இந்த படம்தான் கிடைத்தது.
விடை ; ஆ
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 10:19 பிற்பகல்
ஜெயஸ்ரீ
கொள்ளு ரசம் வெச்சு சாப்பிடுன்னு பலதடவை சொல்லிட்டு எங்கம்மா மறைந்து போய் இப்ப ஒரு வருடத்துக்கு மேல ஆயிடுத்து. எனக்கு (இவ்வளவு பெரிய குழந்தைக்கு)அம்மா ஞாபகம் இந்தக் கொள்ளுப் பதிவைப் பார்த்ததும் வந்துடுத்து. நிஜமாகவே மிகவும் உருப்படியான ஒரு பொடியும்கூட. ஆபத்துக்கு உதவும்.
உடனே செய்யறேன்.
நன்றியுடன்
கமலா
வெள்ளிக்கிழமை, April 3, 2009 at 10:34 பிற்பகல்
ஆஹா, முந்திக்கிட்டாங்களே சிலரு!! கானா இல்லை, காணாவும் இல்லை, காணம்-னு சொல்லலாம்னு வந்தேன்!
காணத் தொக்கும், காணம் வேகவைச்ச தண்ணிவிட்ட ரசமும், சாமச் சோறும்… ம்ம்ம்.
ஞாயிற்றுக்கிழமை, April 5, 2009 at 2:02 மு.பகல்
ஜெயஸ்ரீ
horseradish கொள்ளு இல்லையா? Horseradish peroxidase enzyme இதில் இருந்தா வருகிறது? இல்லை அதுவேறா?
செவ்வாய்க் கிழமை, April 7, 2009 at 5:45 மு.பகல்
ஜெயஸ்ரீ,
நான் ரொம்ப நாளா தேடிய ரெசிபி. நன்றி. அப்படியே கொள்ளு துவையல் ரெசிபியும் போட முடியுமா. கொள்ளு எனக்கு கிடைத்ததும் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
செவ்வாய்க் கிழமை, April 7, 2009 at 4:53 பிற்பகல்
புடலங்காய் ரெசிப்பி எதாவது இருந்தால் போடவும். இன்றே போடவும். காய் நறுக்கி வைச்சிருக்கேன். என்ன செய்றதுன்னு தெரியல. பருப்பு போட்டு கூட்டு – வேண்டாம். எதாவது வித்தியாசமாக இருந்தால் நல்லது.
வெள்ளிக்கிழமை, April 17, 2009 at 11:48 பிற்பகல்
இன்னாமே !
ரெண்டு வாரமா கொள்ளையே தின்னு தின்னு வாய திறந்தாலே கனைக்கிற சத்தம் தான் வருது! புதுசா எதாவது வாய்க்கு ருசியா போடு கண்ணு!
இப்படிக்கு,
உன் அண்ணாத்தே
புதன் கிழமை, செப்டம்பர் 9, 2009 at 3:21 பிற்பகல்
சூப்பர் பதிவு