‘சின்னி இறந்திருந்தாள்’ன்னு உங்களோட ஏதோ ஒரு தொடர்கதையோட கடைசி வரிபடிச்சு அழுதது மட்டும் தான் நினைவிருக்கு. அந்தக் கதை நினைவில்லை. வீட்டுல திட்டு, அதோட கதை புஸ்தகமெல்லாம் கட். பொதுவாவே கதை புஸ்தகம் படிச்சா படிப்பு கெட்டுப் போயிடுங்கற ‘ஆசாரமான’ குடும்பம். இதுக்கப்பறம் அக்கம்பக்கம் வாங்கிப் படிக்கக் கூட தடை. அப்படியும் விடலை. ரெண்டுவீடு தள்ளி ஒருத்தங்க வீட்டுக்கு சாயங்காலமா குழந்தையைக் கொஞ்சற மாதிரி போய் விகடன், குமுதம், கல்கின்னு உங்களோட எழுத்தை மட்டும் டக்னு திறந்து படிச்சுட்டு (இதுக்கு லஞ்சமா குழந்தையை தூளில ஆட்டிகிட்டே படிக்கணும். ஆனா அது எப்பவும் பிடிச்ச வேலைதானே. அதனால டபிள் பெனிஃபிட் ஸ்கீம்ல சந்தோஷமா செய்வேன். வெளிலேருந்து எங்கம்மா குரல்கொடுத்தா, ‘அவ தூளி ஆட்டிகிட்டிருக்கா, குழந்தை தூங்கற நேரமில்லைன்னு சொன்னா கேட்டாதானே’ன்னு பாப்பாவோட அம்மா பதில் சொல்லிடுவாங்க. அதெல்லாம் படிக்கற பத்து நிமிஷம் மட்டும் தான். படிச்சு முடிச்சதும் குழந்தையோட அம்மா அலற அலற பாதி தூக்கக் கலக்கத்துல இருக்கற குழந்தையை அப்படியே அள்ளிகிட்டு, ஓடீடுவேன் எங்கவீட்டுக்கு.
படிக்கறது ஒரு சுகம்னா அதைவிட பதின்மவயசுல(இப்பவும் தான்) அதகளமான கூட்டத்துல அதைப் பேசிகிட்டே இருக்கறது அதைவிட சுகம். அப்படித்தான் எனக்கு RSV வாத்தியாரோட ட்யூஷன் பிடிக்க ஆரம்பிச்சது. எங்க வீடு மாதிரி புத்தகங்களுக்குத் தடை எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் வீடுகள்ல இல்லை. அவங்கல்லாம் காலைலயே படிச்சுட்டு வந்து ட்யூஷன் நேரத்துலயே பேசி முடிச்சுடுவோம். சாயங்காலம் நான் திருட்டுப் புத்தகம் படிக்கறது சும்மா ஒரு எக்ஸ்ட்ரா வாசிப்பனுவத்துக்குத் தான். க்ளாஸ்ல உங்களைப் பத்தி பேசுகிட்டிருக்கும்போது RSV, “ரெங்கராஜன் என்னோட ஸ்கூல்மேட். கிரிக்கெட் போட்டியெல்லாம் அடையவளஞ்சான் வீதிக்கு வந்து விளையாடுவான். எங்காத்து கீழ்ரூம் ஓரத்துல சாத்திவெச்சிருக்கற பேட்(bat) ரெங்கராஜன் விளையாடினதுதான்”னு சொன்னதும் நம்பமுடியாம(அவர் வயசென்ன, உங்க வயசென்ன?) ஆனா சந்தோஷமாயிட்டேன். ஒருநாள் அடக்கமுடியாம அவங்கவீட்டு வாசப்பக்க கீழ இருட்டுஉள்ல ஜன்னலை ஒட்டி சாத்தி வெச்சிருந்த பேட்டை வெளித் திண்ணைலேருந்து ஜன்னல் வழியா கையை உள்ள விட்டு தொட்டுப் பார்க்க நினைச்சு உள்ள கையை விட, அதுக்குள்ள RSV இறங்கிவர, அவசரத்துல கையை வெடுக்குனு எடுக்க.. போகும்போது கை எப்படி சுளுவா போச்சுன்னு தெரியலை. வெளில எடுக்கும்போது கை மட்டும்தான் வந்துது. வளையல் எல்லாம் உள்ளயே உடைஞ்சு கொட்டிடுச்சு. கொஞ்சூண்டு இரத்தம் வேற.
அப்படியே விட்டிருக்கலாம். வீதி பிஸ்தாக்கள்கிட்ட இதைச் சொல்லி பீத்திக்கணும்னு நினைச்சு விலாவாரியா சொல்லிட்டேன். ஆளாளுக்கு என்னை அழவெச்சுட்டாங்க. அவங்களுக்கெல்லாம் அவர் (பாய்ஸ் ஹைஸ்) ஸ்கூல் மேத்ஸ் வாத்தியாராச்சே.
“RSVஆ? அவர் பீலா விடுவாருன்னு தெரியும். அதுக்காக இப்படியா?”
“எந்த சுப்புணி பேட்டையோ தொட்டுட்டு… பாவம்டா.”
“அவர் சொன்னா இந்த கேப்ஸ் (கேப்ஸ்- KPVT யோட ஷார்ட் ஃபார்ம். இது எங்க வீதி குழூஉக்குறி) ஏன் நம்பணும்?”
“இல்லை, அவர் இதுக்கெல்லாம் பொய் சொல்ல மாட்டாரு. ரொம்ப நல்லவரு”ன்னு நான் திரும்பத் திரும்பச் சொன்னதை யாரும் நம்பத் தயாரில்லை. அல்லது நம்பினாலும் என்னை ஓட்டியே தீரணும்னு முடிவா இருந்திருக்காங்களோ என்னவோ.
“இவகிட்ட நமக்கென்னடா பேச்சு. அந்த பேட்டை வாங்கி மேக்கை(make) பாத்தா தெரிஞ்சுட்டுப் போகுது. என்ன மரம், எந்தக் கடை, எந்த வருஷம் எல்லாம் சொல்லிடமாட்டோம்?”
பயந்துட்டேன். இவங்க வாத்தியார்கிட்ட கேட்டுடுவாங்கன்னில்லை. அது நீங்க தொட்டு விளையாடின பேட்டா இல்லாம இருந்துடக் கூடாதேன்னு. வீட்டு வாசல்ல அழுதுகிட்டிருந்ததைப்; பாத்து பாட்டி வந்து விசாரிச்சா. “அது என்ன நடந்துச்சுன்னா… உங்க பேத்தி…” ன்னு ஒருத்தன் விஸ்தாரமா சொல்ல ஆரம்பிக்க, என் அழுகைக்கு பயந்து இன்னொருத்தன் “வேண்டான்டா” ன்னு அவன் வாயைப் பொத்த, அவன் அந்தக் கையையும் வலுக்கட்டாயமா தள்ளி, “உங்க பேத்தி டேஷ் டேஷ் டேஷ்..” ன்னு கத்திட்டுப் போனான்.
அம்மா வந்து அலட்சியமா என்னன்னு விசாரிச்சா. “வளையல் உடைஞ்சிடுச்சாம், திட்டுவீங்களோ?”ன்னு எவனோ எடுத்துக் கொடுத்தான். “ஆமா, போன மாசம் காதுல இருந்த தங்கத் தோடை தொலைச்சா. போன வாரம் வெள்ளிக் கொலுசைத் தொலைச்சா. அதுக்கே பாட்டியும் பேத்தியும் வெளிய சொல்லாம கமுக்கமா இருந்திட்டாங்க. கண்ணாடி வளையலுக்கா அழப்போறா இவ. அதெல்லாம் பசப்பு”ன்னு நல்லவேளை கண்டுக்கலை.
ஆனாலும் அப்றம் வந்த நாள்கள்ல இந்தப் பசங்கபோய் வாத்தியாரைக் கேட்டு அது நீங்க விளையாடினதில்லைன்னு ஆயிடுமோன்னு ஒரே பக்பக்தான். எங்கண்ணன் தான் தைரியம் சொன்னான், இவனுங்க எல்லாம் போய் கேக்கமாட்டாங்க. அவர் ரொம்ப ஸ்டிரிக்ட். அவரைப் பாத்தாலே டிராயரை நனைச்சுடுவாங்கன்னு. அதே கொஞ்சம் நிம்மதி. ஸ்கூல்ல அவர் பையன்கள் கிட்ட அப்படி ஸ்டிரிக்டா இருப்பாரோ என்னவோ எங்களை எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார். ‘அவருக்கு கல்யாணம் ஆகலை இல்ல. அதனால பெண்களை எப்படி டீல் பண்றதுன்னு அவருக்குத் தெரியாது. ஏதாவது சொன்னா எங்கயாவது அழுதுகிழுது வெச்சிடுவீங்களோன்னு பயப்படுவாரு’ன்னு ஒருத்தன் ஆரூடம் சொல்லியிருந்தான். இருக்கலாம். ஆனா அதை நான் தான் முழுமையா (மிஸ்)யூஸ் பண்ணின்டேன்.
ஆனா RSV அன்னிக்கி ஒருநாள் ஆர்வமா உங்களைப் பத்தி சொன்னதோட சரி. அப்றமெல்லாம் உங்களைப் பத்தி நாங்க பேசறதை வகுப்புல அனுமதிக்கவே இல்லை. அப்றம் கொஞ்சம் பொறுக்காம நீதான் எல்லாரையும் கெடுக்கறன்னு என்னை குறிப்பிட்டு சொல்லிகிட்டே இருந்தாரு. நமக்கு அதெல்லாம் ஒன்னும் உரைக்காதுன்னு வைங்க.
ஒருநாள் ____ குனிஞ்சு மெதுவா என் காதுல கிசுகிசுப்பா, இப்பல்லாம் உங்க பொழுதுபோக்கு வாக்மேன்ல பாட்டு கேட்கறதுதான்னு சொன்னா. “ஐயய்யோ காது சீக்கிரம் செவிடாயிடுமே!”ன்னு கொஞ்சம்- கொஞ்சம்னா பக்கத்துல எல்லாருக்கும் காது செவிடாகிற மாதிரி– சத்தமா என்னை மறந்து கத்திட்டேன். RSV சடக்னு சாக்பீஸை தூக்கி எறிஞ்சுட்டு கீழ விடுவிடுன்னு கோபிச்சுகிட்டுப் போயிட்டாரு. இதென்ன ஸ்கூலா, நாம போய் மன்னிப்பெல்லாம் கேட்டு திரும்பக் கூட்டி வர. நான் நல்லதாப் போச்சுன்னு தொடர்ந்து உங்க பேட்டியோட முழு விபரமும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். (இப்ப இத்தனை வருஷம் கழிச்சு உங்களுக்கு உடம்புசரியில்லாம இருந்தபோது தேசிகன் உங்களைப் பார்த்துட்டு உடனே போன்செஞ்சு, “சார் ரொம்ப bore அடிக்குதுன்னு சொல்றாரு. வாக்மென்ல பாட்டு கேட்கறதுதான் ஒரே பொழுதுபோக்கு. அதுவும் என்னவோ சரியில்லயாம். காட்லெஸ் ஹெட்போன் கேக்கறாரு. சென்னைலயே கடைல தேடணும்”னு சொன்னபோது நெகிழ்ந்துட்டேன். நான் பயந்தமாதிரி உங்க காதுக்கு ஒன்னும் ஆகியிருக்கலை.)
எந்த ரியாக்ஷனும் எங்ககிட்ட இல்லாததாலே, RSV தானே மேல வந்து தூக்கி எறிஞ்ச சாக்பீசை கண்ல ஒத்திகிட்டாரு (பாவம்! ஆனா என்மேல என்ன தப்பு?). “நீ நாளைலேருந்து _______யோட டயத்துக்கு ட்யூஷன் வா. அவ தமிழ் மீடியம். ரெண்டு பேருக்கும் சேர்ந்து சொல்லிக் கொடுக்கறது எனக்கு கஷ்டம். ஆனாலும் அவ்ளோ கஷ்டமில்லைன்னு சொல்லிட்டாரு. ஒருவேளை இனிமே அப்படி எல்லாம் செய்யமாட்டேன், இங்கயே இருக்கேன்னு சொல்வேன்னு நினைச்சிருப்பாரோ என்னவோ. நான் நடக்றது நடக்கட்டும். நாம கெட்டதோட சந்திரபுஷ்கரணியையும் சேர்த்துக் கெடுத்துடலாம்னு தயாராயிட்டேன். அதெல்லாம் சரியா வராது. ரொம்ப அறுக்கும். வேற ஏதாவது யோசிக்கலாம்னு மத்த ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க.
மறுநாள் அந்தப் பொண்ணை பேர் என்னன்னு (சும்மா. அதெல்லாம் தெரியாமலா இருக்கோம்.) கேட்டேன். வாத்யாரே பதில் சொன்னாரு. “அவ அதிகம் பேச மாட்டா”ன்னு உபரி வாக்கியம் வேற. கடுப்பாயிட்டேன். “சரி, பேசவேண்டாம் ஒரு பாட்டு பாடேன்”ன்னு சொன்னேன். “எனக்கு கர்நாடிக் தான் தெரியும். உங்களுக்கு(?!) அதெல்லாம் புரியாது”ன்னு அந்தப் பொண்ணு சொன்னதை நான் மன்னிச்சுட்டேன். ஆனா மூணே நாள்ல அந்தப் பொண்ணு என் நண்பன் ஒருத்தனை யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சுகிட்டு ட்யூஷனையே நிறுத்தினதைத்தான் அவரால மன்னிக்கவே முடியலை பாவம்! :)))))
அப்றம் என்ன, நான் என் ஜோதில கலந்து, வழக்கம்போல கலக்க ஆரம்பிச்சுட்டேன். RSV திட்டாட்டாலும் அப்பப்ப பாராளுமன்ற ஸ்பீக்கர் மாதிரி அமைதி காக்க வேண்டிகிட்டே இருப்பாரு. நாங்களும் உறுப்பினர் மாதிரி வெளிநடப்பெல்லாம் செய்யாம ரணகளப் படுத்திகிட்டிருந்தோம். எல்லா வாத்யார்களையும் போலவே, “போன செட் கொஞ்சம் பேசுவாங்களே தவிர ரொம்ப ஸ்மார்ட். படிப்புன்னு வந்தா அசத்திடுவாங்க”ன்னு அடுத்து வந்த செட்கிட்ட புகழ்ந்துகிட்டிருந்தாராம். காரணம், அவர் நிஜமாவே அருமையா மேத்ஸ் சொல்லித் தருவாருங்கறதுதான். RSV வீட்டு மாடிரூம் சுவர்களும், கீழ அடையவளஞ்சான் மதில் சுவர், ஹெட்போஸ்ட் ஆபிஸ் பக்கம் எல்லாம் இன்னும் கூட உங்க கதைகளையோ உங்களைப் பத்தியோ என் குரலை எதிரொலிக்கலாம். இத்தனை வருஷம் கழிச்சும் அங்க போகும்போது ரொம்ப சின்ன பொண்ணா ரொம்ப உற்சாகமா ஆயிடறேன்.
=====
எப்படி இருந்தாலும் நான் குழந்தையா இருந்தபோது ‘நாராயணன்’ங்கற பேர் எப்படி எங்கவீட்டுல எல்லாருக்கும் அலர்ஜியோ அப்படி பதின்ம வயசுக்கு மேல ‘சுஜாதா’ங்கற பேர் அலர்ஜியாயிடுச்சு.
ஸ்கூல், காலேஜ் கட் அடிச்சுட்டு சினிமா எல்லாம் ஓக்கே, கதைபுக் படிக்கக் கூடாதுங்கறது என்ன லாஜிக்னு எனக்கு இன்னும் புரியலை. அதை விட நாமதான் ஸ்கூல் போயிடறோம். அப்பக் கூட கடமையா அம்மா ஏன் அக்கம்பக்கம் கூட புக்ஸ் வாங்கிப் படிக்கறதில்லைங்கறது என் ஆச்சரியமாவும், நாம வீட்டுலயே புக்ஸ் வாங்கலை. ஆனா இவ எங்க எப்படி படிக்கறாங்கறது அம்மாவோட ஆச்சரியமாவும் தொடர்ந்து இருந்துகிட்டே இருந்தது. முடிஞ்சவரைக்கும் அடக்கியே வாசிப்பேன். ஆனாலும் அதை இத்தனை வருஷம்கழிச்சு கிளறிட்டேன்.
2005 ஜூன்ல ஸ்ரீரங்கத்துலேருந்து இரண்டு நாள்ல மும்பை கிளம்பணும். எல்லாம் தயார். கண்ணுல லேசர் சிகிச்சை; அதனால இடைல ரெண்டுநாள் மட்டும் கொஞ்சம் ஓய்வு. மதியம் 3 மணிக்கு கரண்ட் போயிடுச்சு. கரண்ட் போனா ஊர் ஏன் இப்படி ஒரு அமைதியாகுது தெரியலை. அப்பா அடுத்த ரூம்ல ஏதோ பீரோவை குடைஞ்சுகிட்டிருந்தாரு. அம்மா கூடத்துல தரைல உட்கார்ந்து அரிவாள்மணைல பீன்ஸ் நிதானமா காம்பு, நார் நீக்கி திருத்தறா. எதுவும் செய்யத் தோணாம அம்மா மடில போய் படுத்துக்கறேன்.
“போய் தலைகாணியை வெச்சுப் படு. திருத்தற இடத்துல..”
“போம்மா”
“கண்ல என் கை பட்டுடப் போறதுடா. தள்ளிப் படேன்.”
“போம்மா”
உலகத்துலயே எந்த ஈகோவும் பார்க்காத அனுமதி தேவை இல்லாத ஒரே இடம் எந்தக் காலத்துலயும் அப்பா அம்மா மடிதான்.
“கண் ஆபரேஷன் ஆனதால இன்னிக்கு வெளில போக முடியலையாக்கும். இல்லைன்னா அப்பாவும் பொண்ணும் வெயில் வீணாப் போறதேன்னு திரிலோக சஞ்சாரம் கிளம்பியிருப்பீங்க”
“ஆபரேஷன்னு சொல்லி கேவலப்படுத்தாத. சின்ன சிகிச்சை. நான் என்ன பாட்டிமாதிரி கண்ல பச்சைத் திரை கட்டிகிட்டா உட்கார்ந்திருக்கேன்?”
“வேண பணத்தை கொட்டி அழுதிருக்கு. அப்றம் என்ன சின்ன சிகிச்சை?”
“போம்மா”
“போம்மா போம்மான்னுண்டிரு. கண் ஒன்னுதான் அழகா இருந்தது. அதையும் கெடுத்துண்டாச்சு. உன் வயசுல எல்லாம் நான் எப்படி இருந்தேன்!”
“என்னோட எல்லா வயசுலயும் நீ இதையேதான் சொல்லிகிட்டிருக்க. சும்மா விடாத. நீங்களெல்லாம் சின்ன வயசுலயே எப்படி இருந்தீங்கன்னு சார் சொல்லிட்டாரு”
“சாரா? யாரு அது?”
இதுதான் எனக்குப் பிரச்சினை. உங்களை சுஜாதான்னு பெண்பேர்ல கூப்பிடப் பொருந்தலை. ரெங்கராஜன்கற பேர் ரொம்ப அந்நியமா இருக்கு. சார்னு சொன்னா அது நீங்க மட்டும்தான். மற்ற ஆண்கள் யாரையும் நான் அப்படி கூப்பிடறதில்லை. நான் பேர் சொல்லி அவங்களைக் கூப்பிடறதை செரிக்கமுடியாத ஆண்களைக் கூட அவங்க பேரோட சார், அல்லது எக்ஸ்க்யூஸ்மீ இப்படியே ஒப்பேத்திகிட்டிருக்கேன். என்னைத் தெரிஞ்சவங்களுக்கு நான் சார்னு சொன்னா அது நீங்கதான்னு புரியும். அப்படிப் புரிஞ்சுக்காதவங்களைப் பாத்தா கோபமா வருது. அம்மாவோட இன்னொசன்ஸ்(அல்லது இக்னரன்ஸ்) எப்பவும் போல மன்னிச்சுட வேண்டியதுதான்.
“எங்கவீதி (கீழச்சித்திரை வீதி) பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ சிலாக்கியமா இருக்காது. ப்ரோட்டீன் சத்து குறைஞ்ச பொண்ணுங்க”ன்னு எழுதியிருக்காரு.
“ஏய், அவர் யாரைச் சொன்னாரோ, அந்தாள் காலத்துல நம்பாளு வயசுக்கே வரலை”– அடுத்த ரூம்லேருந்து அப்பா.
அப்பா எங்க பேச்சை கேட்டுகிட்டிருக்காரு. அதைவிட அதிர்ச்சி. நீங்க என் அம்மா அப்பாவை விட வயசுல பெரியவரு. இது எனக்குத் தெரிஞ்சதுதான்னாலும் என் மனசுல பதிஞ்சதே இல்லை. இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. அதெப்படி வயசு தெரியும் ஆனா தெரியாதுன்னு சொல்ற. உளறாதன்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்குத் தெரியலை. நிறைய சந்தர்ப்பங்கள்ல உங்க வயசை யாராவது சுட்டும்போது அல்லது நிகழ்வுகள் குறிக்கும்போது எனக்கு இன்னும் அதிர்ச்சியாவேதான் இருக்கு. ஃபோன்ல நீங்க என்கிட்ட பேசும்போது உங்ககுரல் அதைவிட மோசமா குழந்தையோட உற்சாகத்தோட இருந்தது.
[அம்பலம் சாட்ல ஒருதடவை ஹரியண்ணாவுக்கு 'நாட்கள்' குறிச்சு நீங்க சொல்லிகிட்டிருந்தபோது அப்படித்தான்-- நாங்க எல்லாம் மரியாதைகொடுக்கற ஹரியண்ணாவே ஏன் உங்ககிட்ட இப்படி ஏதோ பெரியவர்கிட்ட பேசறமாதிரி மரியாதையா பேசறாருன்னு அதிர்ச்சியா இருந்தது.
இதுமாதிரி பல சந்தர்ப்பங்கள். எனக்கெல்லாம் உங்களோட தடால் தடால்னு சண்டைபோட்டு எதிர்த்துப் பேசி கலாய்ச்சே பழகிடுச்சு.]
அம்மாவுக்கு இன்னும் யாருன்னு தெரியலை. ஆனா கோபமாயிட்டா. தான் சின்ன வயசுல ரொம்ப ரொம்ப அழகா இருந்ததா இன்னும் ஊர்ல சொல்ற காலத்துல இந்த கமெண்ட்.. “யார் சொன்னது?”
“எழுத்தாளர் சுஜாதா!
“
“திமிருதான்!”
“என்ன திமிரு?
) எப்பவுமே சட்டை மேல் பட்டனுக்கு ஊக்குதான் போடுவீங்களாமே வீதில. போடுவீங்களா இல்லையா?
)”
அம்மா அதுக்கு உடனே ஒன்னும் சொல்லலை. அம்மாவுக்கு கவிஞர் வாலி பத்தி கொஞ்சம் குறையுண்டு. கோமளத்து மாமியாத்து வாச திண்டுல உட்கார்ந்துண்டு, வெத்தலையும் புகையுலையும் போட்டு, துப்பிண்டு… சே ஒரு பொண்ணும் அந்தப் பக்கம் போகவர முடியாது. ஆனா பாவம், உன்னை விட்டா ஆளே இல்லைன்னு தட்டிவிட்டே சின்ன வயசுல ‘ரேடியோ மாமா’ நிகழ்ச்சி நாடகத்துலேருந்து ஹைஸ்கூல் நாடகம் வரைக்கும் ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி வாங்கி நான் பேர் வாங்கிட்டேன்’னு கொஞ்சம் நன்றியுணர்வோட சொல்வா. ஆனா சுஜாதாங்கர பேர்ல எந்தக் கருத்தும் இல்லாம இருந்திருக்கா போல. நானாத்தான் நாறிட்டேன்.
திடீர்னு அஞ்சு நிமிஷ அமைதிக்கப்புறம் அம்மா, “அந்தாள் தன் மூஞ்சியை கண்ணாடில பாத்ததே இல்லையா? நட்டுவெச்ச நட்ராஜ் பென்சிலுக்கு கையும் காலும் ஒட்டவெச்ச மாதிரி இருந்துண்டு எங்களை கிண்டலாக்கும்!” [எனக்குத் தெரிஞ்சு உங்களுக்கு வந்த விமர்சனங்கள்லயே இந்தக் கோணத்து விமர்சனம்-- அதுவும் தெருப் பொண்ணுகிட்டேயிருந்து இதாத்தான் இருக்கணும். சே சே பாவம் சார் நீங்க. ஏதோ என்னாலானது.
)) ]
அம்மா ரொம்ப பாதிக்கப் பட்டுட்டாங்க போலன்னு தோணிச்சு.
) எத்தனை வயசானாலும் ஆண்களோட இந்த மாதிரி கமெண்ட் பெண்களுக்கு தாங்கறதில்லைன்னு நினைச்சுகிட்டேன்.
“அதெல்லாம் சும்மா சொல்லாத. சார் சின்ன வயசுல சூப்பரா இருப்பாரு. இப்பத்தான் டயட்ல மெலிஞ்சிருக்காரு.”
“ஆமா, நீதான் பாத்த.”
“சரி நான் பாக்கலை. நீதான் சிறப்புத் தமிழ் எடுத்துப் படிச்சவள்னு பீத்திக்கற. நீயும் புத்தகங்களுக்கு எழுதியிருக்கலாமில்ல, கீ.சி.வீதி பாய்ஸ் எல்லாம் ப்லா ப்லா அவ்ளோ சுவாரசியம் இல்லைன்னு..”
“நீ எழுதுவ அப்படி எல்லாம்”:
“நான் எழுதமாட்டேன். ஆனா சார்கிட்ட அடுத்த சாட்ல எங்கம்மா மட்டும் அதுல விதிவிலக்கு. அழகோ அழகா இருந்தாங்கன்னு சொல்லிடறேன். போதுமா?”
“அப்படியே நீ உங்கப்பா ஜாடைன்னும் சொல்லிடு”
“அதெல்லாம் பிரச்சினை இல்லை. சாட் தானே. என் மூஞ்சி தெரியாது.
“
“வெட்டி!”
“போம்மா”
அப்புறம் பேச்சே இல்லை. ஒரு கால்மணி நேரம் கழிச்சு மெல்ல திரும்பி அம்மாவைப் பாத்தேன். கைதான் காயை திருத்திண்டிருந்தது. முகமெல்லாம் வரிவரியா நினைவுகள் ஓடற மாதிரியே ஆழ்ந்த சிந்தனை. முழுமையா கீழச்சித்திரை வீதி நாள்களுக்குப் போயிட்டாங்க. அசைக்காம விழியை மட்டும் நகர்த்தி காயைப் பாத்தேன். 4, 5 பீன்ஸ்தான் பாக்கி இருந்தது. காய் தீர்ந்ததும் திரும்ப நிஜவாழ்க்கைக்கு வந்துடுவாங்களேன்னு கவலையா இருந்தது.
=====
jaysனு என் கையெழுத்தை வெச்சு என்னைக் கூப்பிடற ப்ரெண்ட்ஸ்லேருந்து விலகி, நீங்க சுருக்கி வெச்ச jsri ங்கற பேர்தான் என் அடையாளமும் ஐடி முகவரிகளுமா மாறி 5 வருஷமாச்சு. மரத்தடி, பதிவுகள், தமிழ் இணையம்னு வாழ்க்கையே உங்க மூலமா மாறினாலும், என்னவோ இணையத்துல எல்லாருக்கும் என்னைத் தெரிஞ்சப்பறம், அம்பலம் சாட் எல்லாம் பொதுவுல வர ஆரம்பிச்சதும், பொதுவுல சாட் செய்றதுல என் அந்தரங்கம் பாதிக்கப்படறமாதிரி இருந்தது. இனிமே சாட்டுக்கு வரமாட்டேன், வருவேன் பேச மாட்டேன், இல்லைன்னா சொந்தப் பேர்ல வரமாட்டென்னு மாத்தி மாத்தி பாடாப் படுத்தி லெட்டர் போட்டாலும், “I understand”, “I guessed that much”, “I know” மாதிரி ஒருவரி பதில். ஆமா, நாம இல்லைன்னு தான் குறையுதான்னு சும்மா பாத்துகிட்டு நான் பேசாம இருந்தாலும் என் புனைப்பெயரைக் கூப்பிட்டு இழுத்துவெச்சு ரெண்டு மூணு கேள்வி, விசாரிப்பு… (‘கண்டுகொண்டேன்”னு சொல்ற மாதிரி)… உஷா சந்திச்ச போது நான்னு நினைச்சு நீங்க பேச ஆரம்பிச்சதா சொன்னதும் மனசுக்குள்ள படபடத்த பட்டாம்பூச்சியை, தீவிர ரசிகைகள் நேர்ல சந்திக்கமாட்டாங்கன்னு சொல்லிச் சொல்லியே அடக்கிட்டேன்.
உங்க மேல நிறைய அன்பும் மரியாதையும் வெச்சிருந்தும் ஏன் எப்பவும் சண்டை போடற மாதிரியே இருந்தேன்னு தெரியலை. எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சா சமத்தா இருப்பேன்னு தோணுது.
“சார், நானும் மரபுக் கவிதை எழுதக் கத்துக்கப் போறேன்”
“நீ மரபு மீறாம சரியா எழுதலாம். ஆனா அது கவிதையாங்கறதுக்கு நான் கியாரண்டி இல்லை.
“
இதுக்கே வீம்பா கத்துக்கணும்னு தோணித்து.
“என்னவோ சொன்னீங்களே, என் வெண்பாவுக்கு மரத்தடில பரிசு கிடைச்சிருக்கு”
“என்ன பரிசு?”
“நமக்குத்தான் எப்பவும் இரண்டாம் பரிசே பிடிக்காதே”
“முதல் பரிசா. வாழ்த்துகள்”
“இல்லை.
( அதை “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” ரேஞ்சுல கடைசில யாரோ ஒரு புலவர் வந்து எழுதி வாங்கிட்டு போயிட்டாரு”
“??”
“மூணாவது பரிசு”
“ஹா ஹா”
“பரவாயில்லை”
“btw jsri, regarding your venbas they were quite competent but not brilliant.”
“பரவாயில்லை”
“perhaps the last line was restrictive”
“பரவாயில்லை”
“I am looking for Venbas with innovative mix of modern words and topics”
“தேவையில்லை. எனக்கு மரபு சொல்லிக் கொடுத்த கனடா பசுபதிங்கறவரே நல்லாருக்கு. எனக்கு நம்பிக்கையா இருக்குன்னு சொல்லிட்டார். அது போதும்.”
”
“
(என் ஈகோவை இடறிவிட்ட ஸ்மைலி)
“உங்களைக் கூடத்தான் எல்லாரும் மரபுக்கு விரோதின்னு சொல்றாங்க”
“யார் சொல்கிறார்கள்?”
“எல்லாப் பெரியவங்களும்தான்”
“யார் பெரியவர்கள்?”
“(ஙே.. நீங்கதான் எல்லாரையும் விட பெரியவரா?) ஐ மீன் இணையத்துல என்னை விடப் பெரியவங்க… மரபுல எல்லாம் எழுதி முடிச்சாச்சுன்னெல்லாம் ஸ்டேட்மெண்ட் விட்டீங்களாமே”
“அவர்களை பசித்த புலி தின்னட்டும். நான் பதினான்கு வயதிலிருந்தே ‘மரபுநேசன்’ என்கிற பெயரில் மரபுக் கவிதைகள் எழுதிவருகிறேன்.” (அதெல்லாம் பேசும்போது நல்லா பேசுங்க. ஸ்டேட்மெண்ட் விடும்போது கோட்டை விட்டுடுங்க.)
அநேக நேரங்கள்ல பதில் சொல்றதும், உங்க தனிப்பட்ட செய்கையும் வேறயாவே இருக்கு. என்னாலயே இன்னும் முழுமையா புரிஞ்சுக்க முடியலை. நாய் மட்டும் ஏன் நன்றியுள்ளதா இருக்குன்னு கேட்டா, “அதைத் தனியாக் கூப்பிட்டுக் கேட்டா எல்லாம் ஒரு சர்வைவலுக்குத்தான்னு சொல்லும்”னு அலட்சியமா/நகைச்சுவையா பதில் சொல்றீங்க. 2003ல சுதந்திர தினத்தன்னிக்கு என்ன செஞ்சுகிட்டிருந்தீங்கன்னு(ரொம்ப முக்கியம்) மறுநாள் உங்க ரசிகர் ஒருத்தர் கேக்கறாரு, “நேத்தி என் வளர்ப்பு நாய்க்கு இறுதிநாள். முழுநாளும் அதுகூடவே ரெண்டுபேரும் இருந்தோம். வேற எதுவும் ஓடலை. ரொம்ப துக்கமா இருக்கு”ன்னு ஃபீலிங்ஸ் விடறீங்க.
பத்ரி பதிவுகளை படிக்கச் சொல்லி எனக்கு அறிமுகம் செஞ்சீங்க. அதெல்லாம் ஒன்னும் புரியவே இல்லை. தமிழே இல்லை, உவ்வேக். எனக்கு ஒன்னுமே புரிலயலை. இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்காய்ங்களோ”ன்னு நான் சொன்னதை மறுத்து, “அசடு, அது உலக இணையத் தமிழ் மாநாடு பதிவுகள். ரெகுலர் படி”ன்னு நிறைய சிபாரிசு செஞ்சீங்க. என்னை உருப்படியா ஒரு 15, 20 பதிவுகளை சுட்டி எடுத்து அனுப்பச் சொன்னீங்க. ஆனா பொதுவுல பதிவுகளைப் பத்தி வேற கமெண்ட் வெச்சீங்க. அதுலயும் அப்ப எனக்கு பெரிய மாற்றுக்கருத்து இல்லைன்னு வைங்க.
விஷ்ணுபுரம் 14 பக்கம் தாண்டலைன்னு சொல்லிகிட்டிருந்தீங்க. அப்ப 15 பக்கம் தாண்டினா நான் உங்களைவிடப் பெரியாளான்னு கேட்டதுக்கு ‘நிச்சயமா’ன்னு சொன்னீங்க. ஆனா படிச்சுட்டு, ஜெயமோகன்கிட்ட தனிப்பட்ட முறைல அந்த நாவலுக்கான உங்க மறுப்பை சத்தமில்லாம ஆனா அழுத்தமா சொல்லியிருக்கீங்க. கிரேட். இவ்ளோ பிரபந்தங்கள் மேல ஈடுபாட்டோட இருக்கறவரு எப்படி கனிமொழி, கமலஹாசன்னு நட்பா இருக்காருன்னு எல்லாரும் கேக்கறாங்க. (கனிமொழி, ‘திருப்பாவையை எரிச்சுடுவாங்களா?’ன்னு காஃபி வித் அனு’ல கேக்கறாங்க) அதுக்கும் இதுக்கும் குழம்பத் தேவை இல்லைன்னாலும் உங்க மறுப்பை தேவையான இடங்கள்ல, மத்தவங்ககிட்டயும் சொல்லாம இருந்திருக்க மாட்டீங்கன்னு இப்ப நம்பறேன். வேணா, எல்லாருக்கும் ஜெயமோகன் மாதிரி அதை பொதுவுல ஒத்துக்கற நேர்மை இல்லாம இருக்கலாம். இன்னும் வாழ்நாள் முழுக்க தெரிஞ்சுக்க உங்க ஆளுமைல பாக்கி இருக்குன்னு தான் தோணுது. நல்லவேளையா அதையெல்லாம் பகிர்ந்துக்கவும் எப்பவும் எனக்கு ஆள் இருக்கு.
=====
கல்யாணத்துக்கப்புறம் படிக்க புக்ஸ் இருந்தது; கட்டுபாடு இல்லை; ஆனாலும் ஏதோ குறை. அது என்னன்னா அதைப் பேசி பகிர்ந்துக்க ஆள் இல்லாதது. பக்கத்துவீட்டுல ஜேஎஸ்ராகவன் இருந்தாரு. உங்களைப் பாத்தேன், பேசினேன்னெல்லாம் சொல்வாரே தவிர ஒன்னும் சுவாரசியம் இல்லை. பெரிய பீத்தல்னு விட்டுடுவேன். வாழ்க்கையே மாறிப்போச்சுன்னு நினைச்சுகிட்டிருக்கும்போது தான் அந்தப் புதையல் கிடைச்சது. மதியம் இரண்டு மணிக்கு போஸ்ட் பாத்துட்டு குட்டிப் பாப்பாவைக் கொஞ்சிண்டே இரண்டாவது மாடி ஏறும்போது அந்தப் பொண்ணு விடுவிடுன்னு இறங்கிண்டிருந்தா. வேலைக்குப் போற அவசரம், ஹேண்ட்பேக், கைல கர்ச்சீப், அதோட அந்தப் புக்– ‘பதவிக்காக’. மனசுக்கு முன்னால மூளை சட்டுனு முழுச்சுண்டுடுத்து. பதவிக்காக ஹீரோ என்னோட நிஜ ஹீரோவாச்சே.
“இந்தப் புடைவை ரொம்ப நல்லா இருக்கு. அதைவிட நீங்க கட்டிகிட்டிருக்கறது”
சடேர்னு நின்னா. “அப்படியா, எனக்கு இது அவ்ளவா பிடிக்காது.” (அப்பாடீ, எனக்கும்தான் பிடிக்கலை. ஒரே டேஸ்ட்.)
அது என்ன புக்? ஓ பதவிக்காகவா. யார் எழுதினது? நான் இன்னும் (பதினஞ்சாவது தடவை) படிக்கலை. படிக்கலாமா?
“ம். லைப்ரரி புக்தான். சுஜாதாவோடது (அதுசரி, எனக்கேவா?)” உடனே கைல கொடுத்தா. ‘பரவாயில்லை, உனக்கும் டேஸ்ட் இருக்கு’ மாதிரி ஒரு பார்வை. இறங்கிப் போயிட்டா.
அடுத்த தடவைலயே, “அதென்ன அப்படி கேவலமான டிசைன்ல ஒரு புடைவை. வெள்ளைப் புடைவைல பெரிய பெரிய கிளி. இதெல்லாம் எப்படி வாங்கணும்னு தோணும்?” அப்படீன்னு நான் பொட்டுனு கேட்க, இரண்டு பேரும் இணைஞ்சு சிரிச்ச சிரிப்புல பிசிறே இல்லை.
கல்யாணம் ஆனாலே எந்தப் பொண்ணும் வீட்டுக்காரர் வேலை, பிரமோஷன், குழந்தைவளர்ப்பு, ஸ்கூல், , சாக்ஸ் எப்படி வாஷ் பண்றது, அசைன்மெண்ட், யூனிஃபார்ம், பெடிக்யூர்னு மட்டும் பேசி, கேள்விகேட்டு, திரும்பத் திரும்ப என்னை வீட்டுக்குள்ளயே இருக்கற உணர்வைத் தர பெண்களுக்குள்ள எனக்கான ஃப்ரெண்ட். எப்ப என்ன கேப்பான்னே தெரியாது. ஆனா அதெல்லாம் மேல சொன்னவைகள்ல வராது. இதே கருத்தையே என்னைப் பத்தி அவளும் சொன்னது தான் அதைவிட ஆச்சரியம்.
சென்னைல எதிர்த்த ஃப்ளாட்தான். ஆனாலும் மெனக்கெட்டு ஆபிஸ்போய் அங்கேருந்து ஃபோன் பண்ணித்தான் பேசுவா.
95ஆ, 96ஆ சரியா நினைவில்லை. பாஜக அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துமேல பாராளுமன்றத்துல பேசுகிட்டிருக்கறது அப்ப லைவா டிவில. பாராளுமன்றம் எல்லாம் இப்படி பார்க்கமுடியும்னு நினைச்சுக்கூட பார்க்காத நாள்கள்ல அது எனக்கு ரொம்ப அதிசயம். ஆட்சி கவிழப் போறது. அத்வானி ஒளஒளாங்காட்டிக்குப் பேசிகிட்டிருக்காரு. ஆனாலும் பரவசமா பாத்துகிட்டிருக்கேன். திடீர்னு ஃபோன்.
“டீவி பாக்கறியா?”
“பின்ன?”
“அத்வானிக்கு பின்னால ரெண்டாவது லைன்ல யாரு? புதுசா இருக்கு”
“ஏதோ மகாஜன். ஸ்கூல் வாத்தியார். பிரம்பு வெச்சிருப்பாரு.”
“ஓ. எப்படி இந்தக் கோஷ்டிகளைத் தெரிஞ்சுவெச்சிருக்க?”
“புதுசு இல்லை. கொஞ்சநாள் முன்னால டெபோனர்ல அண்ணன் பேட்டி வந்திருந்தது”
“டெபோனருக்கும் பாஜக மகாஜன் அண்ணனுக்கும் என்ன சம்பந்தம்?” (மற்ற பெண்களா இருந்திருந்தா, நான் அதைப் படிக்கறேன்னு கூட சொல்லிக்க முடியாது.)
“மரத்தைப் பத்தி எல்லாம் சொல்லி முடிச்சுட்டு, ‘அப்படியாப்பட்ட மரத்துல மாட்டைக் கட்டலாம்’னு சொல்ல முடியாதா? அப்படித்தான். சினிமா எல்லாம் குடும்பத்தோட நடுக் கூடத்துல உட்கார்ந்து நெளியாம பாக்கற மாதிரி இருக்கணும்னு திருவாய் மலர்ந்திருக்காரு.”
“எங்க? டெபோனர்லயா?”
“யா யா”
“அதுசரி!”
))))))))
நாங்க வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த முறையைப் பொருத்த வரைக்கும் எந்தப் புள்ளிலயுமே சேரமுடியாது. இவ்வளவு முரண்களோடயும் ஆனா எப்பவும் யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் பேசக்கூடிய ஒரு ஃப்ரெண்டு கிடைச்சது, எங்க ரெண்டுபேரையும் தனித்தனியா பிரிச்சுகூட வேற யாரும் யோசிக்கமுடியாத அளவுக்கு எங்களுக்கு நடுவுல இருந்த/ இருக்கற/ இருக்கப் போகிற ஒரே கயிறு நீங்கமட்டும்தான்.
“நேத்தி நான் எடுத்து வந்த புக் படிச்சுகிட்டிருக்கியா?”
“ம். 58ம் பக்கம்?”
“என்ன சொல்லியிருக்கான்?[கான் - உங்களைத்தான். பின்ன?
].
….
….
“என்ன நடை இல்லை? எவ்ளோ அறுவையான மேட்டர் எல்லாம்கூட இவ்ளோ அழகா சொல்ல வருது. சரியான பொறுக்கி.”
(பொறுக்கி – பொர்க்கி மாதிரி ஒலிக்கணும். சார்-க்கு எப்படி அதோட அர்த்தம் போச்சோ அதுமாதிரி பொறுக்கிக்கு அர்த்தமும் அழகுமே மாறிப் போச்சு.) “இந்தாளு வரலைன்னா நாம ________, ______ களையெல்லாம் படிச்சுகிட்டிருக்கணும். எவ்ளோ கொடுமையா இருந்திருக்கும்?”
))))))
அநேகமா எங்க பேச்சு எங்க ஆரம்பிச்சாலும் உங்ககிட்ட வந்து முடிஞ்சுடும் அல்லது அதோட நின்னுடும். அதைவிட பேச ஒன்னும் உலகத்துல ஸ்பெஷலா விஷயமே இல்லாத மாதிரி.
உங்க உடல்நிலை மோசமானதும் இப்ப இணையத்துல இருக்கற யாரையும் விட என் ட்யூஷன் ப்ரெண்ட்ஸோ அல்லது இவளோ பக்கத்துல இருந்தா எப்படி இருக்கும்னுதான் நினைச்சுகிட்டிருந்தேன். காலைலேருந்தே அழுதுகிட்டிருந்தாலும் இரவு செய்திகேட்டதும், ‘இந்த தேசிகனுக்கு ஏதாவது உளறிகிட்டே இருக்கணும். அப்படி எல்லாம் எதுவும் நடக்கவே முடியாது. ஏதாவது மிராகிள் நடக்கும்’னு நம்பினேன். முதல் SMS இந்த ப்ரெண்ட்கிட்டேயிருந்து– “i could hear you weeping dear. enough of it please. on duty. ‘ll talk to you after 12 midnight”
ஆனா நினைச்ச மாதிரி அது ஆறுதலா இல்லை. ஐயய்யோ இது உலகத்துகே இப்ப தெரிஞ்சுபோச்சு. இனிமே எதுவும் மாத்த முடியாது. எல்லாரும் அஞ்சலின்னு பதிவு போடுவாங்களேன்னு பதறிட்டேன். யாரோடயும் பேசப் பிடிக்கலை. முக்கியமா இணையத்துல. பெருசா எதுலயோ தோத்துப் போன மாதிரி. ரூம்ல போய் கதவை சாத்திகிட்டேன். இணையமும் நண்பர்களும் ரொம்ப அந்நியமா தெரிஞ்சாங்க. ஆனா ஆச்சரியமா எங்கப்பா, அம்மா தொலைப்பேசி சொன்ன ஆறுதலும், கோவிந்த் தனக்கு ஃபீவர்னு சொல்லி லீவ் எடுத்து கவனிச்சுகிட்டதும் நான் கொஞ்சம்கூட எதிர்பாராத ஆனா தேவையான ஆறுதலா இருந்தது.
“நம்ப முடியுதா பாரு. அந்தாளுக்கு எனக்குத் தெரிஞ்சு 35 வயசு ஆச்சு. அப்றம் வருஷா வருஷம் அதே தானே வயசாச்சு. எப்படி திடீர்னு 73 ஆகும்?”
எங்க ரெண்டுபேரையும் எல்லாரும் ‘two hearts that beat as one’ன்னு சொல்வாங்க. அதை அன்னிக்கிதான் அவ்ளோ நிச்சயமா உணர்ந்தேன். எனக்கும் தெரியலைன்னு கதறமட்டும் தான் முடிஞ்சது. நீங்களாவது சொல்லியிருக்கலாமில்ல. அழுது அழுது கண் வீங்கி, டாக்டர்கிட்ட காண்பிச்சு, ஜுரம் வந்து அடுத்த இரண்டுநாள் நினைவில்லாம போனது ரொம்ப நல்லாதாப் போச்சு. நடப்பு எதுவும் என் கவனத்துக்கு வரலை.
தாயோடு
அறுசுவை போகும்;
தந்தையோடு
கல்வி போகும்
குழந்தையோடு
பெற்ற செல்வப் பெருமை போகும்;
செல்வாக்கு
உற்றாரோடு போகும்;
உடன்பிறந்தாரோடு
தோள் வலிமை போகும்;
……
……
எல்லாம் இருக்க,
போடா (பொர்க்கி)
உன்னோடு இளமை போச்!
எனக்கு உங்களைமாதிரி வாக்மேன்ல பாட்டுக் கேட்கறேன்னு காதுக்குள்ள பாட்டை நேரடியா ஊத்தறதெல்லாம் பிடிக்காது. இசை என்னைச் சுத்தியிருக்கற காத்துல கலந்து, குழைஞ்சு அதுவா என் காதுகளையும் தொட்டுப் போகணும். நிறைய பாட்டு உங்களுக்குப் பிடிச்சவைகளை அப்பப்ப நீங்க சொல்லியிருந்தாலும், இப்ப கொஞ்சம் மட்டும்….
* நித்யஸ்ரீ மகாதேவனோட வீச்சான சாரீரம் இந்தப் பாட்டுக்கு அழகைச் சேர்த்திருக்கலாம். ஆனா அந்தச் சாரீரமும் கர்நாடக இசையுமே இறுதில திரும்பச் திரும்பச் சொல்லும் பல்லவியோட சங்கதியில அவ்ளோ மென்மையா கேட்கவேண்டிய கேள்வியோட பாவத்தை நீர்த்துப்போகச் செஞ்சுடுதோன்னு எனக்கு ஒரு எண்ணம்.
* டிஜிடலில் செதுக்கிய குரல்னு உண்மையிலேயே சொல்லலாம். காதல்ல்ல்ல்…. னு பாடும்போது போத்தலிலிருந்து ஒயினை கோப்பைகள்ல நிரப்பற ஒலி மாதிரி….. உங்களாலதான் இப்படி எல்லாம் யோசிக்கமுடியும்.
* சாத்திரம் மீறிய கீர்த்தனம்…
* உங்களுக்குப் பிடிச்சதுங்கற காரணத்தைவிட இந்தப் பாட்டுக்கு இன்னொரு பெருமை— நீங்க கடைசி வரை காதலிச்சு கைவிடாம வெச்சிருந்த மிஸ் தமிழ்த்தாய்க்கு இந்தப் பாட்டால அங்கீகாரமும் பெருமையும் கிடைச்சது. இந்தப் படத்தோட இந்திப் பதிப்புக்கு பாடல் எழுத ஆரம்பிச்ச கவிஞர், தமிழ்ல பல்லவியோட முதல் வரி அர்த்தம் மட்டும் கேட்டே, “தமிழ் மொழியில் இவ்வளவு ஆளுமையும் சாத்தியமும் இருக்கா?”ன்னு ஆச்சரியப்பட்டு பாராட்டினாராம். ஆனா இப்ப எனக்குக் கேக்கும்போதெல்லாம் மனம் அதிருது.
இன்னிக்கி பிறந்தநாள்னு உங்களுக்குப் பிடிச்ச இந்தப் பாட்டெல்லாம் காத்துல ஓடவிட்டுகிட்டு நான் ஸ்ரீரங்கத்துலதான் இருப்பேன். எனக்குத் தெரியும் நீங்க இனிமே எப்பவுமே ஸ்ரீரங்கத்துல தான் இருப்பீங்க. உங்களுக்கும் இதெல்லாம் கேக்குமா?
பி.கு:
1. ‘சுஜாதா என்றதும் உங்களுக்கு நினைவில் வருவது?’ன்னு தமிழோவியத்துக்காக bsubra ஒரு கடிதத்துல கேட்டிருந்தாரு. ஏதாவது ஒன்னு ரெண்டா இருந்தா சொல்லலாம். இருந்தாலும் அந்த ஒத்தை வார்த்தை இந்தப் பதிவுல இருக்குன்னே நினைக்கிறேன்.
2. சாருநிவேதிதா, உங்களை மாதிரி எழுத்தாளரைப் பத்தி எழுதும்போது உங்க எழுத்துலேருந்து எதையெல்லாம் எடுத்துகிட்டோம், கத்துகிட்டோம்னு தான் எழுதணும்னு சொல்றாரு. அப்டியாங் சார்? நீங்களும் எவ்வளவோ முயற்சி செஞ்சு கதைக்கு knot, டிரிக் எல்லாம் சொல்லி என்னை எழுது எழுதுன்னு சொன்னீங்க. நான் எழுதினேனா? நான் என்ன எழுத்தாளரா? இல்லை எல்லாரும் வாத்தியார்னு கூப்பிடற மாதிரி உங்க மாணவியா? ஒரு ரசிகையா எனக்குத் தோன்றதைத்தானே சொல்லமுடியும். நீங்க இருந்து உங்ககிட்ட சாருவைப் போட்டுக் கொடுத்தா, “அதெல்லாம் தேவை இல்லை. நீ பாட்டுக்கு நினைக்கறதை எழுது அவரை அப்றம் அடிச்சுடலாம்!”னு சொல்வீங்க இல்ல, இப்பவும் அப்படி சொல்லுங்க.
3. என்னவோ எல்லாரும் நினைச்சதை எல்லாம் வார்த்தைல கொண்டுவர முடிஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் நினைவுகள் எல்லாம் வார்த்தைகள்ல வந்துடக் கூடாதேன்னு ரொம்ப வடிகட்டி வடிகட்டி எழுதியிருக்கேன். அதே தலைப்பு.

சனிக்கிழமை, மே 3, 2008 at 1:26 மு.பகல்
அமைதி ஜெயஸ்ரீ அமைதி…
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா! மலையப்பா! கோவிந்தா! கோவிந்தா!
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா
அவ்ளோதான்…..
சனிக்கிழமை, மே 3, 2008 at 1:53 மு.பகல்
அட்டகாசமா, உருக்கமா இருக்கு.
-மதி
சனிக்கிழமை, மே 3, 2008 at 1:53 மு.பகல்
பிடிச்சிருக்கு.
சனிக்கிழமை, மே 3, 2008 at 1:57 மு.பகல்
[...] வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்ச… [...]
சனிக்கிழமை, மே 3, 2008 at 7:44 மு.பகல்
எல்லா உணர்வுகளையும் காட்டி(கொட்டி)யிருக்கிறீர்கள் கட்டுரையில்.
“எல்லாம் இருக்க,
போடா (பொர்க்கி)
உன்னோடு இளமை போச்!”
ரொம்ப தைரியந்தான் ஜெயஸ்ரீ!
அன்புடன்
கமலா
சனிக்கிழமை, மே 3, 2008 at 7:55 மு.பகல்
ம்ம்ம்… ஒரு கனமான காலை இது.
சனிக்கிழமை, மே 3, 2008 at 10:54 மு.பகல்
உங்கள் கட்டுரையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் உண்மை.
கட்டுரையைப் பற்றி எதுவும் சொல்லாமல் பின்னூட்டத்தை முடிப்பது தற்செயல் அல்ல.
சனிக்கிழமை, மே 3, 2008 at 10:59 மு.பகல்
ஒரு சகாப்தத்தின் முடிவு உங்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.உங்கள் பிறந்த மண்ணைப் போல் அந்த மண்ணின் நாயகனான ஸ்ரீரங்கம்.எஸ்.ஆர்.உம் உங்கள் உணர்வில் கலந்திருப்பது புரிகிறது.படித்துமுடித்ததும் என் கண்ணிலும் நீர்!.இதை விட ஒரு சிறந்த அஞ்சலியை இது வரை யாரும் எழுதவில்லை.(இந்த இடுகை உங்களாலும் சிறந்த சிறுகதைகளை எழுத முடியும் என்ற ஒரு நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்துகிறது.அவ்வாறு எழுத ஆரம்பித்தீர்களென்றால் அதுவும் சுஜாதா அவர்களுக்கு ஒரு அஞ்சலிதானே?)
சனிக்கிழமை, மே 3, 2008 at 11:49 மு.பகல்
//எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சா சமத்தா இருப்பேன்னு தோணுது.//
பூராவும் படிச்சுட்டேன்…………..
மனசு………………….. என்னிடம் இல்லை.
சனிக்கிழமை, மே 3, 2008 at 4:19 பிற்பகல்
உஷா சந்திச்ச போது நான்னு நினைச்சு நீங்க பேச ஆரம்பிச்சதா சொன்னதும் மனசுக்குள்ள படபடத்த பட்டாம்பூச்சியை, தீவிர ரசிகைகள் நேர்ல சந்திக்கமாட்டாங்கன்னு சொல்லிச் சொல்லியே அடக்கிட்டேன்.//
என்னை ஜெஸ்ரீன்னு நினைத்து, வளவளான்னு எழுதாம, கொஞ்சம் ஷார்ட் அண்டு ஸ்வீட்டா எழுதுன்னு சார் அட்வைஸ் செய்தார். என்னடா, நாமோ மகாபாரத்தை பஸ் டிக்கெட் பின்னாடி எழுதும் ஆள் ஆச்சேன்னு குழம்பி போனது இன்றைக்கு நினைவு வந்தது
சனிக்கிழமை, மே 3, 2008 at 10:47 பிற்பகல்
Enjoyed your post very much! I can see your devotion to Sujatha in every word!
Can you email me?
ஞாயிற்றுக்கிழமை, மே 4, 2008 at 12:52 மு.பகல்
oh neeingalum RSV sir student aa.. superb..
same pinch.. ( RSV sir + TR sir ) combo.
padhi padichu erukain ..rest padichu tu solluran.
திங்கட் கிழமை, மே 5, 2008 at 12:22 மு.பகல்
ஹப்பா..படிக்க க்ரேஸியா இருந்தாலும் நம்மாளே இவ்ளோ தூரம் ஏன் நெகிழ முடியலைன்னு கொஞ்சம் ஏக்கமாவும் இருக்கு.
//தாயோடு
அறுசுவை போகும்;
தந்தையோடு
கல்வி போகும்
குழந்தையோடு
பெற்ற செல்வப் பெருமை போகும்;
செல்வாக்கு
உற்றாரோடு போகும்;
உடன்பிறந்தாரோடு
தோள் வலிமை போகும்;
……
……
எல்லாம் இருக்க,
போடா (பொர்க்கி)
உன்னோடு இளமை போச்! //
அப்படியா..??
உடம்பு தானே எரிஞ்சது. எழுத்தெல்லாம் எரிஞ்சா போச்சு. எத்தனை “ரகுவை’ ஏத்தி விட்டிருக்காரு இந்தாள். என் உயிர் இருக்கரவரை மறக்குமா >>???
”ரகு”
திங்கட் கிழமை, மே 5, 2008 at 4:51 மு.பகல்
நல்ல பதிவு.. அனுபவித்துப் படித்தேன்..
அமரர் சுஜாதாவிற்கு என் அஞ்சலிகள்..
அன்புடன்,
சீமாச்சு…
திங்கட் கிழமை, மே 5, 2008 at 9:48 பிற்பகல்
பிரமிச்சுப் போய் உக்கார்ந்துக்கிட்டு இருக்கேன். நான் இது வரை படிச்ச பதிவுகளிலேயே இதுதான் நீளமான பதிவு. ஆனா ஒரு மூச்சில் படிச்சு முடிக்க வைச்சது உங்க எழுத்து. அதை விட அதில் இருக்கும் உண்மையான அன்பு.
செவ்வாய்க் கிழமை, மே 6, 2008 at 11:26 மு.பகல்
என்ன பின்னூட்டம் போடறதுன்னே தெரியலை. அவர் சொல்வதை போல மையமா ஏதோ எழுதறேன். அப்படியே படிச்சுட்டு போக மனம் வரவில்லை.
நீண்ட ஒரு பெருமூச்சு தான் வெளிபடுகிறது.
நீண்ட நாள் பதிவின்மைக்கு இது தான் காரணமா?
செவ்வாய்க் கிழமை, மே 6, 2008 at 2:19 பிற்பகல்
ஜெயஷ்ரீ,
எனக்கு சுஜாதா எல்லாம் அவ்வளவாக ஈடுபாடு இருக்கவில்லை..ஆனால் நீங்கள் எழுதியது கண்ணீர் வரவைத்துவிட்டது
புதன் கிழமை, மே 7, 2008 at 11:22 மு.பகல்
///
எல்லாம் இருக்க,
போடா (பொர்க்கி)
உன்னோடு இளமை போச்!
////
காலைக் காட்டுங்க தாயீ! அசத்திட்டீங்க. இனிமே பின்நவீனத்துவம்னா என்னங்கற சந்தேகம் எனக்கு வரவே வராது. ரொம்ப தெளிவாயிட்டேன்.
புதன் கிழமை, மே 7, 2008 at 11:38 மு.பகல்
நன்றி மேடம்.
அவர் எழுதிய ஸ்ரீரங்கத்து தேவதைகளிலெல்லாம் சிறந்த தேவதையாக நீங்கள்தான் இருந்திருக்க வேண்டும்.
//எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சா சமத்தா இருப்பேன்னு தோணுது.//
இல்லை நான் அப்படி நினைக்கவில்லை. உங்கள் சண்டைக் குணமே அவருக்கு சுவாரசியத்தை அளித்திருக்கவேண்டும். ‘சின்னஞ் சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி..’ என்ற
பாலமுரளிகிருஷ்ணாவின்சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் நினைவுக்கு வருகிறது. பித்தனுக்கு ஈடான நர்த்தனம் உங்கள் சண்டை. ஆனால் எப்பொழுதாவது அதற்குப் பின்னால் இருக்கும் இவ்வளவு அன்பையும் அவரிடம் சொல்லியிருக்கிறீர்களா? சொல்லியிருந்தால் அந்தக் கலைஞன் இன்னும்கூட இரண்டு வருடங்கள் உயிரோடு இருந்திருப்பானெ. கலைஞனுக்கான அன்பை அவன் வாழும் காலத்திலேயே சொல்லித் தொலையுங்கள். அவன் அதைத்தான் சுவாசிக்கிறான்.திங்கட் கிழமை, மே 12, 2008 at 11:22 மு.பகல்
//இனிமே எதுவும் மாத்த முடியாது. எல்லாரும் அஞ்சலின்னு பதிவு போடுவாங்களேன்னு பதறிட்டேன். யாரோடயும் பேசப் பிடிக்கலை. முக்கியமா இணையத்துல. பெருசா எதுலயோ தோத்துப் போன மாதிரி. ரூம்ல போய் கதவை சாத்திகிட்டேன். இணையமும் நண்பர்களும் ரொம்ப அந்நியமா தெரிஞ்சாங்க.//
Jsri,
இனிமே உங்களை உங்களுக்குப் பிடிச்ச மாதிரி அப்படித்தான் கூப்பிடப் போறேன்.
ஜெஸ்ரீ, உங்க பதிவைப் படிச்சதும், அதுக்கு வர எதிர்வினைகளைப் படிக்கவே பத்துநாளா ஆவலா இருந்தேன். நீங்க ஊர்ல பொட்டி திறக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன். அதனால நான் சொல்ல நினைச்சதையும் சொல்லிடறேன்.
ஜெயஸ்ரீன்னு ஒருத்தங்க திடீர்னு அஞ்சு வருஷம் முன்னால அப்பதான் மதிகிட்ட தமிழ்ல தட்ட கத்துகிட்டதா சொல்லி, முதல் கடிதத்துலயே முதல் வணக்கம் சுஜாதா ‘சார்’க்கு சொல்லிக்கிட்டு மரத்தடிக்கு வந்தாங்க. வந்த வேகத்துலயே புயல் மாதிரி கருத்துகளும் கடிதங்களும்.
படிச்சவங்க எல்லாம் உங்களை ஏதாவது முகமூடியா இருக்கும்னு சந்தேகப்பட, நீங்க கவலையேபடாம மரத்தடில சுஜாதா சுனாமியே அடிக்க வெச்சீங்க. மரத்தடியே சுஜாதாவைத் திரும்பிப் பாக்க ஆரம்பிச்சது. சிறிதே நாள்கள்ல சுஜாதாவை விட்டும் உங்களுக்குன்னு ஒரு தனிப்பாணி கருத்து, எழுத்து…எல்லாம் சேர்ந்து, குமரேசன், மதிக்குக் கூட கிடைக்காத ‘மரத்தடி’ ஜெயஸ்ரீங்கற பட்டம் கிடைக்கற அளவுக்கு உங்க செயல்பாடுகள்.
சுஜாதா இறந்தசெய்தி கேட்டதும் எனக்கு உங்க நினைவுதான் முதல்ல வந்தது. மரத்தடிலயோ, உங்க வலைப்பதிவுலயோ உங்க அஞ்சலி எதுவும் அடுத்தநாள் கூட வராத போது உங்களுக்கு செய்தி தெரியாதுன்னு நினைச்சு வீட்டுக்குத் தொலைபேசினேன். உங்க குட்டிப்பெண் எடுத்து அம்மா அழுதுகிட்டே இருக்காங்க. பேசமாட்டேங்கறாங்கன்னு சொன்னதை நான் நம்பலை. வம்பா நீ படுத்தினியா அம்மாவைன்னு கேட்டேன். இல்லை, எனக்கு பூங்குட்டி எழுதி அனுப்பின அங்கிள் இறந்துட்டாங்கன்னு ஒரு பதில் வரும்னு சத்தியமா நான் நினைக்கலை. பிடிவாதமா ஸ்கூல் நேரத்துல செய்யலாம், நீங்க எடுத்துதான் ஆகணும்னு நினைச்சு செஞ்சேன். எதிர்பாராமல் உங்க கணவர் எடுத்து, கண் சரியில்லாம இருக்காங்க. அவங்க தூங்கட்டும். ஃபீவர், எழுப்பமுடியாது, சாரி’என்று படபடவென்று சொன்னார். தர்மசங்கடமா போச்சு. அடுத்தடுத்த நாள்கள்ல உங்க செல்பேசி ஒலிக்கவே இல்லை. இதெல்லாம் அலட்சியம்னு நினைச்சு, இன்னும் ரெண்டு பேரிடம் சொல்லியும் விட்டேன்.
{சொன்னவங்க போட்டுக் குடுத்துட்டாங்களான்னு தெரியலை.
}
யாராவது ஒரு எழுத்தாளருக்கு இவ்வளவு வருந்துவாங்கன்னு என்னால அப்ப நம்ப முடியலை. உங்க பதிவு படிச்சதும்தான் வலி புரியுது. என்னை மன்னிச்சுடுங்க ஜெஸ்ரீ. உங்க கணவருக்கும், குழந்தைக்கும் என் அன்பு.
இது உங்க பதிவுக்கான பதில் இல்லை. ஆச்சரியம் என்னவென்றால், நாங்களெல்லாம் சுஜாதான்னதும் உங்களை நினைச்சுகிட்டோம். ஆனா உங்களுக்கு இணையம் ஏன் அந்நியமாப் போச்சுன்னு இன்னும் என்னால புரிஞ்சுக்க முடியலை.
திங்கட் கிழமை, மே 12, 2008 at 11:39 மு.பகல்
தினமும் வந்து படித்து அனுபவிக்கிறேன். என் முந்தையை மறுமொழி ஏன் பிரசுரமாகவில்லை? தவறாக எதுவும் எழுதிவிடவில்லை என்று நினைக்கிறேன்.
//‘அவருக்கு கல்யாணம் ஆகலை இல்ல. அதனால பெண்களை எப்படி டீல் பண்றதுன்னு அவருக்குத் தெரியாது.//
அடப் பாவிகளா!
//ஆனா அதை நான் தான் முழுமையா (மிஸ்)யூஸ் பண்ணின்டேன்.//
அதுதான் எங்களுக்கே தெரியுமே.
)
//“அந்தாள் தன் மூஞ்சியை கண்ணாடில பாத்ததே இல்லையா? நட்டுவெச்ச நட்ராஜ் பென்சிலுக்கு கையும் காலும் ஒட்டவெச்ச மாதிரி இருந்துண்டு எங்களை கிண்டலாக்கும்!”//
//“அப்படியே நீ உங்கப்பா ஜாடைன்னும் சொல்லிடு”
“அதெல்லாம் பிரச்சினை இல்லை. சாட் தானே. என் மூஞ்சி தெரியாது.
”//
முடியலை. விட்ருங்க.
)))))))))))
///“என்ன பரிசு?”
“நமக்குத்தான் எப்பவும் இரண்டாம் பரிசே பிடிக்காதே”
“முதல் பரிசா. வாழ்த்துகள்”
“இல்லை.
( அதை “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” ரேஞ்சுல கடைசில யாரோ ஒரு புலவர் வந்து எழுதி வாங்கிட்டு போயிட்டாரு”
“??”
“மூணாவது பரிசு”
“ஹா ஹா”///
ஒரு லெஜண்ட் கூட நடக்கற உரையாடல் இவ்ளோ கலக்கலா?
எல்லா உரையாடல்களுகே அருமை. வெயிலடிக்குது மழையும் பெய்யுது மாதிரி நகைச்சுவையும் கண்ணீரும் கலந்துகட்டி அடிக்கிறது. நன்றி ஜெயஸ்ரீ. நீங்கள் ஸ்ரீரங்கம் போய்வந்த அனுபவத்தையும் எழுதுங்கள்.
செவ்வாய்க் கிழமை, மே 13, 2008 at 10:34 பிற்பகல்
One of my close friends shared this post recently. I too have struggled to come to terms with this loss and continue to be in denial.
Your post is poignant but in Sujatha-esque way has tried to seek the grace in this moment. Thank you!
திங்கட் கிழமை, மே 26, 2008 at 7:41 பிற்பகல்
என் மறுமொழிகளை அனுமதித்ததற்கு நன்றி. அந்தப் பாடலைப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். உணர்ச்சிவசப்பட்ட நேரத்தில் தவறாகத் தட்டியிருக்கிறேன். எப்படி திருத்துவது என்று தெரியவில்லை. தயவுசெய்து மாற்றிவிடவும். மீண்டும் நன்றி.
செவ்வாய்க் கிழமை, மே 27, 2008 at 1:23 பிற்பகல்
Jsri,
இதுக்கு மறுமொழியா என்ன எழுதறதுன்னு சத்தியமாத் தெரியல, ஆத்மார்த்தமாக நீங்க எழுதியிருக்கறதை வாசிச்ச பிறகு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு, I am overwhelmed, Your writing continues to be an enigma to me !!!
நானும் வாத்தியாரின் ரசிகன், அவரை நிறைவாக வாசித்தவன் .. அப்டீன்னு சொல்லிக்கறதுக்கு (நீங்களும் அவரோட ரசிகை என் காரணத்துக்காகவும் தான்!) பெருமையா இருக்கு ! நீங்கள் மன அமைதி பெற வேண்டிக் கொள்கிறேன்.
எ.அ.பாலா
செவ்வாய்க் கிழமை, மே 27, 2008 at 1:26 பிற்பகல்
(நீங்களும் அவரோட ரசிகை என் காரணத்துக்காகவும் தான்!)
என்பதை
(நீங்களும் அவரோட ரசிகை என்ற காரணத்துக்காகவும் தான்!)
என்று வாசிக்கவும் !
செவ்வாய்க் கிழமை, மே 27, 2008 at 1:36 பிற்பகல்
http://balaji_ammu.blogspot.com/2008/03/426-5.html
செவ்வாய்க் கிழமை, மே 27, 2008 at 3:24 பிற்பகல்
ம்ம்ம்… ஊர்லேருந்து வந்தாச்சா?
)) ரொம்ப போரடிச்சுது உங்க பதிவு இல்லாம.
///சார்னு சொன்னா அது நீங்க மட்டும்தான். மற்ற ஆண்கள் யாரையும் நான் அப்படி கூப்பிடறதில்லை. நான் பேர் சொல்லி அவங்களைக் கூப்பிடறதை செரிக்கமுடியாத ஆண்களைக் கூட அவங்க பேரோட சார், அல்லது எக்ஸ்க்யூஸ்மீ இப்படியே ஒப்பேத்திகிட்டிருக்கேன்.///
த்தோடா. இதெல்ல்லாம் ஓவர் சொல்லிட்டேன்.
//“அந்தாள் தன் மூஞ்சியை கண்ணாடில பாத்ததே இல்லையா? நட்டுவெச்ச நட்ராஜ் பென்சிலுக்கு கையும் காலும் ஒட்டவெச்ச மாதிரி இருந்துண்டு எங்களை கிண்டலாக்கும்!” //
///“அவர்களை பசித்த புலி தின்னட்டும். நான் பதினான்கு வயதிலிருந்தே ‘மரபுநேசன்’ என்கிற பெயரில் மரபுக் கவிதைகள் எழுதிவருகிறேன்.”
///
இதை நாம நம்பலாம். அவர்கிட்ட கவிதைகள் மேல எப்பவும் தனிரசனை இருக்கும். Btw, அவர் எழுதின மரபுக் கவிதைகள் தொகுப்பு எங்கயாவது கிடைக்குமான்னு தேசிகனைக் கேளுங்க.
///பத்ரி பதிவுகளை படிக்கச் சொல்லி எனக்கு அறிமுகம் செஞ்சீங்க. அதெல்லாம் ஒன்னும் புரியவே இல்லை. தமிழே இல்லை, உவ்வேக். எனக்கு ஒன்னுமே புரிலயலை. இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்காய்ங்களோ”ன்னு நான் சொன்னதை ///
ஹூம்.. எப்டி இருந்த ஜெஸ்ரீ இப்படி…
/// வேணா, எல்லாருக்கும் ஜெயமோகன் மாதிரி அதை பொதுவுல ஒத்துக்கற நேர்மை இல்லாம இருக்கலாம்.///
அடடா… இந்த ‘ஜெயமோகனமேனியா’லேருந்தும் வெளிய வந்திட்டீங்கன்னா முழுசா ‘சமத்தா’யிடுவீங்க. அதுக்கு அமரர் சுஜாதாதான் அருள் புரியணும்.
Jokes apart, Jsri, இந்த ஆண்கள் எல்லாம், ‘நீ கோபத்துலகூட அழகா இருக்க’ன்னு பெண்கள்கிட்ட அப்பப்ப ஒரு பிட்டைப் போடுவோமே அது மாதிரி நீங்க துக்கமா பதிவுபோட்டாக்கூட அழகாவும் உற்சாகமாவும் இருக்கு. ஆனா இது பிட் இல்லை. உண்மை. சுவையான உரையாடல்கள். எல்லாரும் உங்களோட ஏன் சாட் செய்ய விரும்பறாங்கன்னு இப்ப புரியுது. ரொம்ப ரசிச்சு படிச்சேன். நிறைய எழுதுங்களேன்.
செவ்வாய்க் கிழமை, மே 27, 2008 at 3:30 பிற்பகல்
முக்கியமா சொல்ல நினைச்சது விட்டுப் போச்சு Jsri.
//எனக்கு உங்களைமாதிரி வாக்மேன்ல பாட்டுக் கேட்கறேன்னு காதுக்குள்ள பாட்டை நேரடியா ஊத்தறதெல்லாம் பிடிக்காது.
//
நினைவு தெரிஞ்சு 10 வருஷமா வாக்மென்ல பாட்டு கேக்கறேன். யுஎஸ் வந்ததும் அந்தப் பழக்கம் அதிகமாயிருக்கு. ஆனா கடந்த இருபது நாளா வாக்மென் காதுல மாட்டும்போதெல்லாம் லேசா கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் சிரிப்பு. பாட்டை காதுல ஊத்தாதடான்னு ஒரு உள்குரல். அதுக்குக் காரணம் இந்த வாக்கிய அமைப்பு. சுஜாதா சார் சொல்ற மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா அதே நேரத்துல அவர் எழுத்துகள் தந்த பாதிப்போட உங்களாலயும் எழுதமுடியுங்கறதுக்கு இந்த வாக்கியம் கூட ஒரு உதாரணம். இந்த மறுமொழி விளக்குத் திரியைத் தூண்டிவிடற சின்ன செயல்தான். நீங்க தொடர்ந்து எழுதினா மகிழ்வேன்.
செவ்வாய்க் கிழமை, மே 27, 2008 at 10:31 பிற்பகல்
உங்களின் அனுமதி எதிர்பார்த்து தங்களின் பதிவை வலைசரத்தில் கோர்த்துள்ளேன்.
Thanks in advance
http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_27.html
செவ்வாய்க் கிழமை, மே 27, 2008 at 11:13 பிற்பகல்
uknowme2 சார், //:)))) ஸ்ரீரெங்கம் பெண்களுக்கே கொஞ்சம் வாய் ஜாஸ்தி// ரொம்ப அநியாயத்துக்கு வம்புல மாட்டிக்கிறீங்க. திருச்சிக்கார பசங்க கூட எங்களைப் பாத்தா வழிவிட்டுப் போயிடுவாங்க, இக்கும்.
ஏதோ ஜெஸ்ரீக்காக உங்களை மன்னித்தோம்.
புதன் கிழமை, மே 28, 2008 at 1:21 பிற்பகல்
மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி. எனக்குத்தான் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
பிரகாஷ், ‘கடவுள்’ படம் பார்க்கும்போது இருக்கும் பக்குவம் தியேட்டரைவிட்டு வெளியே வந்ததுமே காலியாகிவிட்டது. நான் ரொம்ப ரொம்ப சாதாரணமானவள்.
kekkepikkuni (என்ன பேர் இது? நல்லா இருக்கு.) தனிமடல் வந்துகிட்டே இருக்கு.
ambi, வலைச்சரத்தில் சேர்த்திருப்பதற்கு நன்றி.
JsriKnwsMe: திருச்சியோட சுத்துப்பட்ட பதினெட்டுப்பட்டி பசங்களையும் விட்டுவிட்டதை வன்மையா கண்டிக்கறேன். உண்மையா இவங்களை சமாளிக்கறதுதான் கொஞ்சம் கஷ்டம்.
புதன் கிழமை, மே 28, 2008 at 1:26 பிற்பகல்
சுந்தர்,
என்ன சொல்றதுன்னு தெரியலை.
“மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்” – சாரோட எழுத்துதான்.
எங்காவது ஒரு மூலைல என் நியாபகமும் ஒரு துளி இருந்திருந்தா, எந்த நொடி அந்த டேட்டாபேஸ் அழிஞ்சிருக்கும்னு யோசிச்சிகிட்டே இருக்கேன்.
என் ப்ரெண்ட் இந்த முறை விடுமுறைக்கு நான் வரும்போது, “சார் வீட்டுக்குப் போகலாம். அவர் நினைவா ஏதாவது கேட்டு வாங்கிவரலாம். மாமி ரொம்ப யோசிச்சா, நாமே ரெண்டு மூணு பொருளை ‘தேட்டை’ போடலாம். எவ்ளவோ செஞ்சுட்டோம். இதைச் செய்யமாட்டோமா.”னு சொல்லிகிட்டிருந்தா. எனக்கு சம்மதமில்லை. எடுத்துவந்த பொருளை உலகத்துல எந்தப் பாதுகாப்பான இடத்துல வைக்க முடியும்?
‘அவர் போனா என்ன அவர் விட்டுச் சென்ற _______ இல்லையா’ மாதிரி நானும் நிறைய பேருக்கு சொல்லியிருக்கேன். இன்னமும் பலருக்கு சொல்வேன். ஆனா சார்கிட்ட அது முடியலைன்னு எனக்கே பின்னாலதான் தெரிஞ்சது. நீங்க அவர் எழுத்துல இருக்கற கேரக்டரோட ஒன்றியிருக்கீங்க போல. நான் ரகு-லயும் மது-லயும் கூட அவரை மட்டும் தான் பாத்திருக்கேன். படிக்கும்போதும் எழுதினவர் நினைவு தான் ஓடிகிட்டிருக்கும். பலநாளா அவர் எழுத்துகளை படிக்கறதையே நிறுத்திட்டேன்.
“வானம் எங்கும் உன்பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன்வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை..”
ஏற்கனவே சொல்லியிருக்கேனே.
புதன் கிழமை, மே 28, 2008 at 1:29 பிற்பகல்
உஷா:
//என்னை ஜெஸ்ரீன்னு நினைத்து..//
எனக்குத் தெரியும். அப்ப, சாருக்கு நன்னா வேணும்னு நினைச்சுகிட்டேன்.
//வளவளான்னு எழுதாம, கொஞ்சம் ஷார்ட் அண்டு ஸ்வீட்டா எழுதுன்னு..//
ச்சோ ச்வீட். ஆனா இதைச் சொல்றது இது முதல்முறை இல்லை. என்னைப் போய் அரைப்பக்க கதை எல்லாம் எழுதணும்னு எதிர்பார்த்தார். நாம படிஞ்சுடுவோமா. அப்றம் முடியாம கடைசில சாரே ‘சற்றே பெரிய சிறுகதை’, கட்டுரை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாரு. ரசிகர் ஒருத்தர் அதைக் கேள்விகேட்க, எனக்கு என்னவோ இப்பல்லாம் விபரங்களும், வர்ணனைகளும் எழுதணும்போல இருக்குன்னு ஃபீலிங்ஸ்.
அது! பின்ன, என் கேரக்டரையே புரிஞ்சுக்காம…
புதன் கிழமை, மே 28, 2008 at 1:31 பிற்பகல்
Adiya,
RSV + TR Combo வா நீங்க? ரொம்ப சமத்து. எதுக்கும் நாம ஒரு அடி தள்ளியே இருப்போம்.
எனக்கு RSV மட்டும்தான். RSV வீட்டுலேருந்து படியிறங்கினா நேரா 90 டிகிரில ஒரு நேர்கோடா நடந்து மதில்சுவர் ஓரமாப் போய்தான் TR வீட்டையே தாண்டுவேன். அடைமழைக்குக்கூட அந்தப் பக்கம் ஒதுங்கினதில்லை. ‘நல்ல பொண்ணு’ன்னு என் தம்பிகிட்டயே சர்டிபிகேட் கொடுத்திருக்காரு. ‘பாவம் விஞ்ஞானம் புரிஞ்ச அளவுக்கு அவருக்கு யதார்த்தம் தெரியலை’ன்னு சொல்லிகிட்டே இருந்தான். நான் சேர்ந்திருந்தா என் முதுகுத்தோலைக் கழட்டியிருப்பார் அல்லது தொழிலையே விட்டு ஓடியிருப்பார். என் அராஜகத்துக்கு RSV மட்டும்தான் சரி. இன்னிக்குள்ள முடிச்சுடலாம்மா, அப்றம் பேசலாம்மான்னு புலம்பிகிட்டோ அல்லது ஒரு தினுசா நகத்தை கடிச்சுகிட்டோ… ஆனா இப்பவும் அவர் க்ளாஸ் எடுத்தா மணிக்கணக்கா கணிதம் கத்துக்க ஆர்வமா இருக்கேன்.
இந்தமுறை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது அவரைப் பாத்தேன். 5, 6 பையன்களோட ரிசல்ட் வந்த குஷில வாசல்ல பேசிகிட்டிருந்தார். அவரை மாணவர்களுக்கு நடுவுல பாக்கறது நிறைந்த காதலர்களைப் பாக்கறதுக்கு சமம். அந்த நேரத்துல என் ரெங்கராஜனைப் பத்தி இருபது வரிகளுக்கு மிகாம சொல்லச் சொல்லி சூழ்நிலையை மாத்த விரும்பலை. தாண்டிப் போயிட்டேன். சில பழைய RSV ஸ்டூடண்ஸ் தனிமடல் எழுதியிருக்காங்க. ஆச்சரியம்.
புதன் கிழமை, மே 28, 2008 at 1:36 பிற்பகல்
Krishnakumar, ஆமாம் கொஞ்சம் அதிகமாகத்தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டீர்கள். எனக்கு அந்தத் தகுதி எல்லாம் இல்லை. இருந்தாலும் அருமையான பாடலை நினைவூட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன்.
அன்பைச் சொல்வது அவ்வளவு சுலபமில்லை. அல்லது எனக்குத் தெரிவதில்லை.
புதன் கிழமை, மே 28, 2008 at 1:38 பிற்பகல்
uknowme
, uknowme2, ….
ஏதாவது கருத்து சொல்ல நினைத்தால் சொந்தப் பெயரிலேயே சொல்லலாம். என் பதிவு ஒன்றும் பஞ்சாயத்தில் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த தீண்டத்தகாத பதிவு இல்லை. கருத்து சொன்னதற்காக யாரும் முத்திரை குத்தி ஒதுக்கிவிடப் போவதில்லை. நானும் எந்தக் கருத்து சொன்னாலும் அதை தவறாக நினைத்துவிடக் கூடிய தொட்டாற்சிணுங்கி இல்லை.
தொலைப்பேசியில் யாராவது, ‘நான் யாரு தெரியுதா?’ மாதிரி கேள்விகேட்டாலே எரிச்சலாகிவிடுவேன். உஷா, ‘நான் உஷா பேசறேன்’ என்று சொன்னாலே, எந்த உஷா என்று கேட்கும் அளவுக்கு குழப்பமாய் 4, 5 உஷா என் லிஸ்டில் இருக்கிறார்கள். நீங்கள் uknowme 1,2, 3..என்று வரிசையாக வருவது என்னை அநாவசிய டென்ஷனாக்குகிறது. இந்தப் பதிவு முழுவதும் அன்பான வார்த்தைகளாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். அதனால் உங்கள்மேல் வருத்தம் எதுவும் இல்லை.
பொதுவில் உங்கள் சொந்தப் பெயரைச் சொல்லாமல் இருப்பதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தால் புனைப்பெயரில் சொல்லிவிட்டு ஈமெயில் முகவரியை மட்டும் சொந்தமானதைக் கொடுக்கலாம் (JsriKnwsMe மாதிரி). அது எனக்கு மட்டுமே தெரியும். ஹரியண்ணா தவிர எழுத்தை வைத்து எழுதியவரைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு நான் இன்னும் தேர்ச்சிபெறவில்லை. அல்லது இணையத்தில் பலர் குழப்புவதற்காக ஸ்டைல் மாற்றியே எழுதுகிறார்கள். எனினும் உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
புதன் கிழமை, மே 28, 2008 at 1:39 பிற்பகல்
uknowme
,
என்னிடம் யாரும் எதையும் போட்டுக்கொடுக்கவில்லை. கொடுத்தாலும் மன்னிப்புக் கேட்குமளவுக்கு தவறாக நினைக்க எதுவும் இல்லை. யார்யாரிடமிருந்து அழைப்பு வந்தது என்றெல்லாம் என் கணவரிடம் நான் கேட்கவில்லை. என்னைவிட நல்லவர்தான்.
அன்று ஏன் அப்படிப் பேசினார் என்றும் தெரியவில்லை. தொடர்ந்து சிலநாள் நான் செல்பேசி சார்ஜ் செய்யாமல் இருந்ததால் ஒலித்திருக்காது. உங்கள் அன்புக்கு நன்றி.
//ஆச்சரியம் என்னவென்றால், நாங்களெல்லாம் சுஜாதான்னதும் உங்களை நினைச்சுகிட்டோம். ஆனா உங்களுக்கு இணையம் ஏன் அந்நியமாப் போச்சுன்னு இன்னும் என்னால புரிஞ்சுக்க முடியலை.//
எனக்கும் தெரியவில்லை. என் அப்போதைய உணர்வைத்தான் எழுதினேன். ஏன் அப்படித் தோன்றியது என்று நானும் யோசிக்கவில்லை. இப்போதும் தெரியவில்லை.
புதன் கிழமை, மே 28, 2008 at 1:41 பிற்பகல்
uknowme2:
//ஹூம்.. எப்டி இருந்த ஜெஸ்ரீ இப்படி..//
//அடடா… இந்த ‘ஜெயமோகனமேனியா’லேருந்தும் வெளிய வந்திட்டீங்கன்னா முழுசா ‘சமத்தா’யிடுவீங்க. அதுக்கு அமரர் சுஜாதாதான் அருள் புரியணும்.//
சான்ஸே இல்லை.
சாருக்கு எவ்வளவு மாற்றுக்கருத்து இருந்தாலும் அல்லது அவர்மீது வெறுப்பைக் கொட்டியவர்களாகவே இருந்தாலும் யாரையும் அவர் வெறுத்ததில்லை. வெறுக்கச் சொல்லிக் கொடுத்ததுமில்லை. அவரே மற்றவர்மீது கடுமையான மாற்றுக்கருத்து வைத்த பலர்கூட இன்று அவரைப் பாராட்ட அதுதான் காரணம். உதாரணங்களை அடுக்க விரும்பவில்லை.
புதன் கிழமை, மே 28, 2008 at 8:46 பிற்பகல்
//
//ஹூம்.. எப்டி இருந்த ஜெஸ்ரீ இப்படி..// இப்போதும் எதுவும் மாறிவிடவில்லை. பல கணினி, அறிவியல் தமிழ்ச்சொற்கள் எனக்கு தலைக்குமேலேதான் ஓடுகிறது. வேர்ட்பிரஸை தமிழ்ப்படுத்தியதற்கே கொஞ்சம் ததிங்கிணத்தோம் ஆகிவிட்டேன்
//
இவ்வளவு பச்சைப்புள்ளயா இருக்கீங்களேக்கா. நான் வரலை இந்த வெள்ளாட்டுக்கு.
//(கேப்ஸ்- KPVT யோட ஷார்ட் ஃபார்ம். இது எங்க வீதி குழூஉக்குறி)//
முடிஞ்சா இது என்னன்னு சொல்லுங்களேன். ரொம்ப ஆர்வமா இருக்கு. இணையத் தமிழுக்கும் உங்க பேரைச் சொல்லி பசங்க ஊஸ் பண்ணுவோம்.
//பொதுவில் உங்கள் சொந்தப் பெயரைச் சொல்லாமல் இருப்பதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தால் புனைப்பெயரில் சொல்லிவிட்டு ஈமெயில் முகவரியை மட்டும் சொந்தமானதைக் கொடுக்கலாம் (JsriKnwsMe மாதிரி).//
அஸ்க்கு புஸ்க்கு. அதுக்கு நாங்க சொந்தப் பேர் முகவரி மூஞ்சிவரி எல்லாமே போட்டே சொல்லிடலாம். நாங்களும் அவங்க மாதிரி (JsriKnwsMe மாதிரி) எங்க சொந்த மெயில் ஐடி குடுத்தா எல்லாருக்கும் நாங்க யாருன்னு Avatar காண்பிச்சுக் கொடுத்துடுமே. அதெல்லாம் செய்யமாட்டோம்.
ஏன்னா வேர்ட்பிரஸ்ல நாங்க ஸ்மார்ட்டு நாங்க ஸ்மார்ட்டு. தேவைப்பட்டா அடுத்தவனை மாட்டிக் கொடுக்க அவன் ஐடியை போட்டுத் தாக்கலாம்.
இக்கும். ஜெஸ்ரீ தவிர மத்த சீரங்கம் பொண்ணுங்களுக்கு வெறும் வாய்மட்டும்தான் போல. (கெக்கேபிக்கே)
புதன் கிழமை, மே 28, 2008 at 11:36 பிற்பகல்
ஒரு வார இறுதி அவசரத்தில் இந்தப் பதிவை ஏதோ திரைப்பாடலுக்கானது என்று நினைத்து விட்டுவிட்டேன். இன்றுதான் படித்தேன். பின்னூட்டங்களைப் படிப்பதற்குமுன்பு வரை ஏதாவது சிறுகதையாக இருக்குமோ என்றுகூட சந்தேகப்பட்டேன். நான் எல்லோரையும் படிப்பதுபோல்தான் சுஜாதாவையும் படித்திருக்கிறேன். இந்தப் பதிவைப் படித்தால், வாவ். Highly cherubic and …. பொறாமையாக இருக்கிறது ஜெயஸ்ரீ.
முக்கியமாக கடைசி பின்குறிப்பும் அதன் தொடர்பான தலைப்பும் உங்களிடம் இருக்கும் கவித்துவ மனதைச் சொல்கிறது. உங்கள் பதிவில் அதிகம் வைரமுத்து, ஜெயமோகனின் தாக்கத்தைப் பார்த்திருக்கிறேன். சுஜாதா ரசிகை என்று அறியவில்லை. கவிஞர் சொல்லியிருக்கும் வடிகட்டல் அசுத்தங்களை தேக்கிவைத்து சுத்தத்தை மட்டும் விடும். ஆனால் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருந்தாலும் உங்கள் வடிகட்டிய பதிவு, வடிகட்டியதாகச் சொல்லி எங்கள் கற்பனையைத் தூண்டிய பகுதி
இரண்டுமே அழகு.
\\\ஆனா பொதுவுல பதிவுகளைப் பத்தி வேற கமெண்ட் வெச்சீங்க. அதுலயும் அப்ப எனக்கு பெரிய மாற்றுக்கருத்து இல்லைன்னு வைங்க.\\\
அப்படியா? சுஜாதா சொன்னதை தனியாக வைத்துவிடலாம். உங்கள் மனசாட்சியை மட்டும் கேட்டுச் சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு ஆத்மார்த்தமான (ரசிகையின்- ரசிகைதானே?) அஞ்சலிப் பதிவை எந்த அச்சு இதழாவது வாங்கிப் போடுவார்களா? சமுதாயத்தில் அதற்கெல்லாம் தனியாக நீங்கள் பெயர் வாங்கியிருக்க வேண்டும். அவர்கள் எதை உளறினாலும் அச்சிலும் அரங்கிலும் ஏறும். சாருநிவேதிதா சொன்னதின் ஒரு பகுதி சரியே. வலைப்பதிவு இந்தத் தடையைத்தான் உங்களுக்கு தகர்த்திருக்கிறது.
முதலில் எந்தப் பெண்ணும் இப்படி ஒரு பதிவை அச்சுக்கு தைரியமாக எழுதமுடியுமா என்றே எனக்கு பயமாக இருக்கிறது. இங்கேயே கடைசி பின்னூட்டம் படிக்கும்வரை இந்தப் பயம் எனக்கு தொடர்ந்து இருந்தது. மோசமில்லை. சமூகம் லேசாக முன்னேறியிருக்கிறது. கத்திமேல் நடந்து கவனமாக தரையிறங்கியிருக்கிறீர்கள். ஆல் தி பெஸ்ட்.
என் சஜஷன், தலைப்பிலும் பதிவின் சுட்டியிலும் ‘சுஜாதா அஞ்சலி’ என்று இருந்தால் கூகிள் தேடலில் அதிகம் மாட்டும். என்னைப் போல் பலர் தவறவிடுவதும் தடுக்கப்படும். சுஜாதா குறித்த மிக நல்ல பதிவுகளில் இதுவும் ஒன்று.
வியாழன், மே 29, 2008 at 8:00 மு.பகல்
uknowme2,
வியாழன், மே 29, 2008 at 9:06 மு.பகல்
லாவண்யா, (நீங்க ஆணா பெண்ணா?) என்ன இப்படி பயமுறுத்தியிருக்கீங்க. எதுக்கும் இருக்கட்டும்னு பாட்டி பேரைச் சொல்லி திருநீறு இட்டு கொழுமோர் குடிச்சுட்டேன்.
* அச்சுப் பத்திரிகை மேல ரொம்ப கோபமா இருக்கீங்க போல. அச்சுன்னு சொல்றதைவிட வணிகப்பத்திரிகைன்னு சொல்றதுதான் சரி. அங்க கம்பரசம்பேட்டை கயல்விழி சொன்னதை விட கமலஹாசன் சொன்ன ஒத்தைவரிதான் விலை போகும். அது நியாயமும்கூட. அதுக்கு இவ்ளோ உணர்ச்சிவசப்பட தேவை இல்லை.
* அச்சுப்பத்திரிகைகளையும் இணையத்தையும் இன்னும் சிலவருடங்களுக்காவது ஒப்புநோக்காம பேசறதே சரி. இணையமும் வலைப்பதிவும் இன்னும் பெரும்பான்மைக்கு சாத்தியமில்லை.
* வலைப்பதிவு குறித்து சார் ‘அப்ப’ சொன்னதுல ‘அப்ப’ எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லைன்னு தான் சொல்லியிருக்கேன். ஆனா அவர் என்னை ஒரு 15, 20 பதிவுகளை வரிசைப்படுத்தித் தரச்சொன்னதும் உண்மை. என்னை எல்லாரும் கல்லால அடிக்கமாட்டாங்களான்னு கேட்டேன். தன் பெர்சனல் உபயோகத்துக்கு மட்டும்னு சொன்னார். யார் எதைச் சொன்னாலும் அதை எந்த காலக்கட்டத்துல சொன்னாங்கன்னும் யோசிச்சா சரியா இருக்கும். நானே படிக்க ஒன்னுமில்லாம நண்பர்கள் எழுதினதுங்கற ஒரே காரணத்துக்காக எல்லாத்தையும் முந்தி வரிவிடாம படிச்சுகிட்டிருந்தேன். லிவிங் ஸ்மைல் வித்யா மாதிரி சிலர் வந்து வலைப்பதிவு எழுதியே பலருடைய கண்ணோட்டத்தை மாத்தமுடியும்னு யாருமே நினைச்சுப் பார்த்திருக்க மாட்டாங்க. இப்பவும் டைரி கிழிஞ்சுபோகுதுன்னு அதுல இருக்கறதை எல்லாம் ஓசில கிடைக்குதேன்னு ஏத்தி வைக்கற என் சமையல் குறிப்பு பதிவை நானே மன்னிக்க முடியாது. நீங்களும் சும்மா புகழாம அதே மனசாட்சியை கொஞ்சம் திறந்துவிட்டு சொல்லுங்க.
* மத்தபடி ஒரு முழுமையான புத்தகம் எழுதறது ரொம்பப் பெரிய விஷயம் தான். பெருமைப் படலாம். ஆனா வணிகப் பத்திரிகைகள்ல நம்ப எழுத்து வரது என்னைப் பொருத்தவரை பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. இப்படி இணையத்துக்கெல்லாம் வரதுக்கு முன்னாலயே கோயம்புத்தூர்ல பாப்பா தூங்கினதும்(குளிச்சுவிட்டா, அது பாட்டுக்கு மணிக்கணக்கா தூங்கும்.) என்ன செய்யறதுன்னு தெரியாம நான் பேப்பர்ல பேனாவால எழுதித்தள்ளி(என்ன கொடுமை பாருங்க) என் கிறுக்கல் எல்லாம் ரிஜக்ட் ஆகாம வந்திருக்கு. வெளிய சொல்ல வெட்கப்பட்டுகிட்டு அப்பல்லாம் சொல்லாமலே இருந்திருக்கேன். சாரே பத்துல 4 கூடவா ரிஜக்ட் ஆகலைன்னு ஆச்சரியப்பட்டார். அதுதான் உனக்கு எழுத்துல ஒரு வேகம் வரலைன்னு ஒரு முடிவையும் சொன்னார். அரசியல் கலப்பு எதுவும் இல்லாத எந்தப் பத்திரிகைக்கும் என்ன தேவைன்னு தெரிஞ்சு எழுதறது பெரிய விஷயமில்லை. இணையம் வந்ததும் பலருக்கு அச்சுமேல ஒரு ஆர்வம் இருக்கறது எனக்கு ஆச்சரியமா இருந்தது. இந்த வாரம் படிச்சுட்டு அடுத்த வாரம் வீசைக்குப் போட்டுடுவாங்க. இணையத்துல எப்பவும் இருக்குமேங்கறது என் கருத்து.
* இந்தப் பதிவை, என் வலைப்பதிவு, எனக்குச் சொந்தமான இடம்னு இருக்கறதாலதான் எழுதினேன். சரியாச் சொன்னா, இதை எழுதவிட்டுதான் என்பதிவுங்கற அபிமானம் இந்தத் தளத்துமேல எனக்கு வந்திருக்கு. இதுக்கு மேல எதுவும் எழுதாம மூடிடலாமான்னு கூட யோசிச்சேன். எந்தக் கூமூட்டை பத்திரிகையே வந்து கேட்டிருந்தாலும் நானே இதை எழுதித் தந்திருக்கமாட்டேன்.
* கூகிள் தேடல் பத்தி எல்லாம் நான் நினைச்சுப் பாக்கலை. தலைப்புல இனிமே மாற்றம் செய்ய முடியாது. சிலர் தன் பதிவுல சுட்டி எல்லாம் கொடுத்துட்டாங்க. இனிமே எழுதற முக்கிய பதிவுகளுக்கு நினைவு வெச்சுக்கறேன். நன்றி உங்க சஜஷனுக்கு.
உங்க கருத்துகள்ல முக்கிய திருத்தம்:
இது அஞ்சலி பதிவு இல்லை.
வியாழன், மே 29, 2008 at 12:10 பிற்பகல்
Jsri,
இப்பதிவு “இரங்கல்” பதிவு இல்லை என்று நீங்கள் கூறிவிட்ட காரணத்தால் …
//எதுக்கும் இருக்கட்டும்னு பாட்டி பேரைச் சொல்லி ‘திருநீறு இட்டு’
எனது இரங்கல் கூட்டம் தொடர்பான பதிவுகளை பார்த்தீர்களா ? IPL செமி
//
நீங்க எதுக்கு ?
ஃபைனல் / ஃபைனல் போட்டிகளை நேரில் பார்க்கும் உத்தேசம் உள்ளதா ?
எ.அ.பாலா
வெள்ளிக்கிழமை, மே 30, 2008 at 7:30 மு.பகல்
Hi, Crazzzy but Cute!!
It seems Sujatha had great taste in film songs. Thanks for those wonderful songs. Tears couldnt be controlled.
வெள்ளிக்கிழமை, மே 30, 2008 at 10:25 மு.பகல்
I stumbled into your blog from another link.What a refreshing blog.The blog world is certaily too small for you.How I wish you write everyday.
Keep Up
வெள்ளிக்கிழமை, மே 30, 2008 at 12:39 பிற்பகல்
பாலா, பின்ன திருநீறைக் குடிச்சு, கொழுமோரை இட்டுக்க முடியாதே.
வேற பதில், பின்ன பயத்துக்கு ஸ்ரீசூர்ணத்தையா இட்டுக்க முடியும். ஹரியும் சிவனும் ஒன்னாமே. என் நெத்திக்கு திருநீறு, ஐயப்பன் சந்தனம், ஆஞ்சநேயர் செந்தூரம், தாயார் மஞ்சள்காப்பு, மீனாட்சி குங்குமம் எல்லாம் ஓக்கேதான். ஊர்லேருந்து வந்ததுலேருந்து அழகர் கோயில் பதினெட்டுப் படியான் (குலதெய்வம்) விபூதி. நேத்தி ஏதோ நினைப்புல வைக்காம படுத்துட்டேன். தூக்கமே இல்லை. நீங்க எதிர்பார்க்கற சுவையான பதில் இன்னொரு தடவை சொல்றேன்.
சிலருடைய பதிவுகள் ஏற்கனவே படிச்சுட்டேன். அதுல உங்களோடதும்.
“எதா இருந்தாலும் மேட்ச் எல்லாம் முடியவிட்டு பேசலாம்”னு எங்கவீட்டுல பல முக்கிய விஷயங்களுக்கு பேச்சுவார்த்தையே நடக்காம இருக்கு. ஸ்டேடியம் எங்க காம்பவுண்டுக்கு அடுத்த காம்பவுண்ட்தான். நடந்தே போயிடலாம். என்னக் கொடுமை பாருங்க, ஏற்கனவே எக்கச்சக்க பணம் முந்தைய மேட்ச்களுக்கு நான் ஊர்ல இல்லாத தைரியத்துல ரங்கமணி தெண்டம் அழுதாச்சு. செமிஃபைனல், ஃபைனல் டிக்கட் விலைக்கு மயக்கமாயிட்டேன். ரொம்பத் தேவையா? வீட்டுலயே அரங்கு நிறைந்த காட்சி.
வெள்ளிக்கிழமை, மே 30, 2008 at 12:41 பிற்பகல்
Vikky,
உங்க ரசனை அருமைன்னெல்லாம் ஜால்ரா தட்டாம, ‘இதெல்லாம் ஒரு பாட்டா, சீ தூ என்ன ரசனையோ உங்களுக்கு’ மாதிரி விட்டா சார்கிட்ட பாட்டைப் பத்தி இப்படி நிறைய மேட்டர் வாங்கலாம்.
நீங்க யாரோ, உங்க பின்னூட்டத்துக்கு சார் சார்பா நன்றி.
“பிரபந்தம் எழுதச் சொன்னா நேரமில்லைன்றாரு. தாத்தாவுக்கு இந்த வயசுக்கு ‘உதயா உளறுகிறேன்’ பாட்டெல்லாம் தேவையா? செரிக்குமா? நீயும் இதையெல்லாம் கண்டிக்காம அவரை ஏத்திவிட்டுகிட்டிருக்க”ன்னு ஒரு இணைய இலக்கியவாதி அப்ப என்னைத் திட்டி, தையாதக்கான்னு குதிச்சாரு. அவருக்கு உங்க பின்னூட்டம் சமர்ப்பணம்.
narasimhan thanks.
வெள்ளிக்கிழமை, மே 30, 2008 at 7:26 பிற்பகல்
நீண்ட கட்டுரை. எண்ணங்களையெல்லாம் ஒன்று சேர்த்துச் சொல்லிச் சென்றது, திக்கில்லாமல் எல்லா இடங்களிலும் செல்லும் எழுத்தாகிவிட்டது. எல்லாவற்றிலும் தெரிந்தது நீங்கள் சுஜாதா மீது வைத்திருந்த பிரியம் என்பதில் சந்தேகமில்லை. ஓர் எழுத்தாளர் ஒரு ரசிகரை இவ்வளவு பாதிக்கமுடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது.
‘உதயா உதயா உளறுகிறேன்’-ஐ சுஜாதா ரசித்ததெல்லாம் இப்போது யோசித்துப் பார்த்தால், அவரை மிஸ் செய்கிறோம் என்று தோன்றுகிறது. பாரா அவர் வலைத்தளத்தில், ‘ஐடி காரர்கள் கழுத்து டையை தளர்த்திக்கொண்டு ரசம் குடிக்கிறார்கள்’ என்று எழுதியதைப் படித்தபோது, சுஜாதாவின் டச் இருப்பதை உணர்ந்தேன். அந்த சமயத்தில் சுஜாதாவின் இழப்பு அளித்த அதிர்ச்சியும், மௌனமும் விளக்கமுடியாதது.
உங்கள் பதிவில் சில இடங்களில் சிரித்தாலும், ஹைலட்டாக அலறிச் சிரிக்க வைத்தது, நரசிம்மனின் பின்னூட்டத்தில் ஒரு வரி.”The blog world is certaily too small for you.”
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ.
வெள்ளிக்கிழமை, மே 30, 2008 at 7:43 பிற்பகல்
Haranprasanna,
//உதயா உதயா உளறுகிறேன்’-ஐ சுஜாதா ரசித்ததெல்லாம் இப்போது யோசித்துப் பார்த்தால், அவரை மிஸ் செய்கிறோம் என்று தோன்றுகிறது.//
சமர்ப்பணம் செய்த பின்னூட்டத்தை இவ்வளவு வழிந்து, வழவழவென்று பின்னூட்டம் எழுதி ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. பாவம்.
நரசிம்மன் உங்களுக்கும் நெருக்கமானவர் என்பது நம்பத்தகுந்த வட்டாரத் தகவல். அதனால் நான் சிரிக்கவில்லை.
செவ்வாய்க் கிழமை, ஜூன் 10, 2008 at 2:40 பிற்பகல்
jsri. Manam kanadhuponnadhu. Yours must be the best epilogue for one of the greatest literary veteran of our time. I am proud to be his contemporarian. Having read all his writings, Having the same intense respect & regards for Sujatha, I understand each of your emotional moment. Feel like having sailed thru moving moments of your emotional bondage with the SIR. Reading him has been an experience, every time. Reading your mail is another great experience. I am at a loss of words to express my feelings. With respect and regards.. venkat
செவ்வாய்க் கிழமை, ஜூன் 10, 2008 at 4:29 பிற்பகல்
Hi Jayasree,
I saw a comment in idlyvadai.thought i would bring it to your notice.
//
ஆனா இந்த ஜெயஸ்ரீ மேடம் மேல உங்களுக்கு என்ன காண்டு ????
உண்மைய சொல்லனும்னா வெறும் இட்லி வடை யா மட்டும் பாத்துட்டு இருந்த எனக்கு கலர் கலரா நெறையா சாப்பாட அறிமுகம் செஞ்சு வெச்சதே நீங்க தாங்க. நீங்க அடுப்படி மாமி னு கூப்பிட்டு அவங்களை கேள்வி கேட்டீங்களே, அப்போலேர்ந்து தான் அவங்க பதிவு படிக்க ஆரம்பிச்சேன்.
எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா …..
நீங்க அவங்களை எதாச்சும் சொல்ல அவங்க பதில் சொல்ல…இப்டி நீங்க நடத்துற இந்த tom-jerry கேம் படிக்கிற எங்களை சுவாரஸ்ய படுத்துறதுக்கு தானே தவிர….இணைய மறைவில் நீங்களும் ஜெயஸ்ரீ யும் செம friends… infact அவங்க இட்லி-வடையில் ஒரு உறுப்பினர் னு நான் நெனைக்குறேன்….
இதற்கு என்ன சொல்றீங்க?
//
what do you say Jayasree?
செவ்வாய்க் கிழமை, ஜூன் 10, 2008 at 6:25 பிற்பகல்
Nice and heart moving post. But atleast in this post,you should have tried to write short and sweet as he wanted.
////உலகத்துலயே எந்த ஈகோவும் பார்க்காத அனுமதி தேவை இல்லாத ஒரே இடம் எந்தக் காலத்துலயும் அப்பா அம்மா மடிதான்.////
But hey, No. This applies only to girls and after certain age the society silently bans few nice things to boys and this comes first in that sort.
/// போடா ///
God!
But in your flow of writing it sounds great, I should accept.
Dear Jsri,
My office collegues are talking about this post for the past few days and I came here that way. I am neither a fan of Mr.Sujatha’s literary works nor a reader of any such writers. My poor family background didnt allow me to think over such activities. Planning to read in coming days. But, HE only was indirectly my guide, inspiration, and everything in my life upto where I stand in my career. His death news gave me immense pain of missing my godfather. I never had an opportunity to thank him or I doubt whether he could understand my gratitude even if it were told. Happy in using this space to convey my heartful namaskaarams to my ‘aasaan’.
THANK YOU SIR!
புதன் கிழமை, ஜூன் 11, 2008 at 8:03 மு.பகல்
Venkat, Priya, thanks.
V Subramanian:
அப்படி எல்லாம் நான் S and S ஆ எழுதினா,
“போடா” எல்லாம் பதிவுல இல்லைன்னா,
இந்தப் பதிவே நான் எழுதலை,
எங்கயோ யாரோ மண்டபத்துல எழுதிக் கொடுத்ததை
எடுத்துவந்துட்டேன்னு சாருக்கு
அவரோட பட்சி (தப்பா) சொல்லிடும்.
இப்படி எழுதினாதான், “சனியன், என் பொழுதைக் கொல்லவே பொறந்திருக்கு!’ன்னு மனசுக்குள்ள திட்டிகிட்டே, படிக்காம தாண்டிப் போயிடுவாரு.
புதன் கிழமை, ஜூன் 11, 2008 at 11:42 மு.பகல்
dear Jayasree,
enaku edhuku thanks?
I was expecting ur trademark, nethiyadi, punch.
புதன் கிழமை, ஜூன் 11, 2008 at 2:29 பிற்பகல்
Priya, நான் இட்லிவடை பதிவு மட்டும் தான் படிப்பேன். கமெண்ட் எடுத்துச் சொன்னதுக்கு அந்த thanks. அதுக்கு மேல அதுல எல்லாம் சொல்ல எனக்கு ஒன்னுமில்லை.
உங்களுக்காக – நீங்கதான் அங்க கேள்விகேட்ட பெண் வாசகியா?
புதன் கிழமை, ஜூன் 11, 2008 at 4:11 பிற்பகல்
naan kekkanum na ungalai than jayasree ketruppen.
புதன் கிழமை, ஜூன் 11, 2008 at 4:41 பிற்பகல்
அப்டின்னு பொய் சொல்லலாம் னு நெனச்சேன்…
மனசு வரல.
என்னை உப்பு போட்டு குலுக்கி ஊறுகாய் போட்டுடாதீங்க ப்ளீஸ்!
புதன் கிழமை, ஜூன் 11, 2008 at 8:13 பிற்பகல்
Priya,
))
வியாழன், ஜூன் 12, 2008 at 1:12 மு.பகல்
வாரே வா!!!! தத்தி குத்தி தட்டு தடுமாறி நாங்களூம் தமிழ்ல தட்டச்சு செய்ய கத்துகிட்டோம்ல. இனி ரகள ரகளா தான். ஆம்ம்ம்மா…..ம்…வந்துடோம்ல….
அட, இவ்ளோ நாள் கழிச்சி கூட பின்னூட்டம் போடலாமா? அப்போ சரி. நான் தெரியாம பயந்துகிட்டு இ-மெயில் இல்ல அனுப்பினேன் உங்களுக்கு. அதுக்கு நீங்க ஒன்னும் பதில் போடலைங்கறது தனி விஷயம். எஙகளூக்கு இருக்குற பெரிய மனசுக்கு அதை எல்லாம் நாங்க கண்டுகிடலை விடுங்க.(ஆமா……இ-மெயிலு ஐடி கரெக்ட்டு தானுங்களே?) அதாங்க…..உங்க வெப் பேஜ்ல இருக்குதுங்களே அதுதானெ?
விஷயத்துக்கு வாரேன். சத்தியமா சொல்றேன்ங்க. என் நண்பனுக்குதான் நன்றி சொல்லொணூம். சுஜாதா சாரோட இரங்கல் செய்திதான்,… அதாங்க தேசிகன் பிளாக்ல லிங்க் குடுத்து இருந்தாங்களே அதுதான் என் முதல் தமிழ் வாசிப்பு நெட்ல.(அதுக்குதான் லிங்க் அனுப்பி இருந்தான் நண்பன்) படிக்க படிக்க கண்ணு கலங்க கலங்க இன்னொன்னும் புரிஞ்சிதுங்க. அதுதான் வாத்தியார் இருக்கும்போது கூட அவ்ளோ பீல் ஆவல நானு எல்லாம்.(ஒருதரம் புத்தக கண்காட்சில சார பாத்துட்டு அவர் தமிழ் புத்தகம் வாங்கினா கையெழ்த்து போடுவாருனு யாரோ சொன்னதால, உடனே “வீட்டுக்குள் வரும் உலகம்”னு நெனைக்கிறேன். அதை வாங்கி அவரு கையொப்பம் வாங்கினெதோட சரி). ஆனா போய்டப்பதான் புரியுது மாணிக்கத்தை தொலச்சிடொம்டான்னூ…….ஆனா அதுல பாருங்க ஒரு டுவிஷ்டு. இப்போதானுங்க தெரியுது. சாரு நாம்ள தனியா விட்டுட்டு போய்டல. ஒரு கூட்டமே இருக்குதுடா இங்கன்னு. அது என்னா மாயமோ தெரியல, எல்லாருமே நம்ளை மாதிரிதான் பீல் பண்ணி இருக்காங்க…ம்…ம்……இந்த ஏஜ் வித்யாசம்தான் மிக பெரிய ஆச்சரியம். நான் கூட அப்புறம்தான் யோசிச்சி பார்த்தேன். எனக்கும் அவருக்கும் ஒரு 30 வருஷ வித்தியாசம்ம்ம்….. தெரியவே இல்லல்ல. என்னா…. மாயமோ அவர் எழுத்துல போங்க. “குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா”….தான் நியாபகத்துக்கு வருது….ம்…..எங்கியோ ஆரம்பிச்சி எங்கியோ போயி நிக்கிறேன்ல. பரவால்ல….உங்களை எல்லாம் படிக்க குடுத்து வச்சிதே அதுவே போதும். அதுக்கே அவருக்கும் அவர் வணங்கிய அந்த திருவரங்க பெருமாளுக்கும் நன்றி…. நன்றி…. நன்றி…..
பின் குறிப்பு. முதல் தமிழ் எழுத்து முயற்சிங்க. அதனால சரி அல்லது தப்பு எது இருந்தாலும் அது எல்லாம் போகட்டும் அந்த திருவரங்கனுகே!!!!!!!!
வியாழன், ஜூன் 12, 2008 at 2:28 பிற்பகல்
Vijay,
//எஙகளூக்கு இருக்குற பெரிய மனசுக்கு அதை எல்லாம் நாங்க கண்டுகிடலை விடுங்க.//
சாரி, நிஜமாவே உங்க பெரிய மனசுக்கு நன்றி. உங்க ஈமெயில் கிடைச்சது.
* ஆனா நான் நெட்ல மொத்தமே அரை மணி நேரம் தான் இருக்கேன்.
* ஏற்கனவே தெரிஞ்சவங்க தவிர புதுசா வர தனிமடல்களுக்கு பதில்சொல்ல என்னவோ இப்பல்லாம் நிறைய தயக்கம். (முக்கியமா இந்த இழைல. இதைச் சொல்லிக்க எனக்குத் தயக்கமில்லை.)
உங்க முயற்சிக்கு நன்றி. என்னை மாதிரியே தமிழ் தட்டச் தெரிஞ்சதுமே பெருசு பெருசா அடிக்க ஆரம்சுட்டீங்களா?
மனசுக்கு இணக்கமான எழுத்து/பேச்சுல தப்பு சரியே கிடையாது. அழகு அல்லது உண்மை மட்டும்தான்.
//மாணிக்கத்தை தொலச்சிடொம்டான்னூ…….//
வெள்ளிக்கிழமை, ஜூன் 13, 2008 at 1:45 பிற்பகல்
மிக நன்றி. ஊங்களுடைய (மன) நிறைவான பதிலுக்கு.
\\உங்க முயற்சிக்கு நன்றி. என்னை மாதிரியே தமிழ் தட்டச் தெரிஞ்சதுமே பெருசு பெருசா அடிக்க ஆரம்சுட்டீங்களா?\\
சான்ஸே இல்லீங்கோ உங்களை மாதிரியெல்லாம் எளுதறத்துக்கு. என்னா நடை, என்னா வீச்சு.என்னா நகைசுவை……அப்புறம் நிறைய என்னா…என்னாவோ இருக்கு உங்க எளுத்துல. அந்த அளவுக்கு எல்லாம்…ம்ம்ம்…..வெரும் ஆசை மட்டும்தான்….ம்ம்….அதிர்ஷ்டம் ….ம்ம்கூம்ம்ம்….வேணாம்ங்க….அட விடுங்கனா…அய்ய……வேணாஆஆம்ம்ம்……ஆமா……..(இஙக ஒரு சோக ஸ்மைலி போட்டுக்கவும். எனக்கு போட தெரியல)…….(“அதிர்ஷ்டம்”னு சொன்னது வெறும் பழமொழி கூற்றுக்காகதான். அங்க இருக்கவேண்டிய சரியான வார்த்தை “திறமை”)
வெள்ளிக்கிழமை, ஜூன் 13, 2008 at 2:18 பிற்பகல்
என்னுடைய முந்தைய பின்னுட்டத்தில் இருக்கும்
இந்த ஸ்மைலி ரியலாவே நான் போடலைங்க. குலோஸ் பிராக்கட்தான் நான் போட்டது.அது எதோ தவறுதலா போட்ட ; கூட சேர்ந்து தானாதான் அப்பிடி வந்துருச்சி. அப்கோர்ஸ் இப்ப கத்துக்கிட்டேன். இனிமே ரகளைதான்….:)
:”>
)
( ( நிறைய அடிச்சி இருக்கேன். சரியா வரலைனா நான் பொறுப்பு இல்ல. யாகூவே துணை.)
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 15, 2008 at 8:02 பிற்பகல்
இன்னும் ஒரு பத்து வருஷம் இருந்திருக்கலாம். கையிலிருந்த சில சுஜாதாவின் நாவல்களை இலக்கில்லாமல் எதோ ஒரு பக்கத்திலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன்…
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 22, 2008 at 2:09 மு.பகல்
ஜெயஸ்ரீ
உங்க வீட்டுல எல்லாரும் ஹோட்டல் ல சாப்ட ஆரம்பிச்சுடீங்களா?
ரொம்ப நாளா ஒரு குறிப்புமே காணும்?
செவ்வாய்க் கிழமை, ஜூன் 24, 2008 at 5:14 மு.பகல்
நிதமும் வந்து போகிறேன். உங்கள் அமைதி கவலை கொள்ள வைக்கிறது. சுயநலம்தான். உங்கள் எழுத்துகளால்தான் அதிகம் வலைதளங்கள் படிக்கவே ஆரம்பித்தேன். ஆனாலும் நீங்கள் இல்லாதது (I mean உங்கள் பதிவுகள் இல்லாததை) வெறுமையாய் உணர்கிறேன். எனக்காக எல்லாம் நீங்க எழுத முடியாதுதான். அறிவேன். உங்கள் சூழ்நிலை இலகுவாகி நீங்கள் எழுதும் காலம் வர வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன்.
சனிக்கிழமை, ஜூன் 28, 2008 at 11:08 பிற்பகல்
//‘அவர் போனா என்ன அவர் விட்டுச் சென்ற _______ இல்லையா’ மாதிரி நானும் நிறைய பேருக்கு சொல்லியிருக்கேன். இன்னமும் பலருக்கு சொல்வேன். ஆனா சார்கிட்ட அது முடியலைன்னு எனக்கே பின்னாலதான் தெரிஞ்சது. நீங்க அவர் எழுத்துல இருக்கற கேரக்டரோட ஒன்றியிருக்கீங்க போல. நான் ரகு-லயும் மது-லயும் கூட அவரை மட்டும் தான் பாத்திருக்கேன். படிக்கும்போதும் எழுதினவர் நினைவு தான் ஓடிகிட்டிருக்கும். பலநாளா அவர் எழுத்துகளை படிக்கறதையே நிறுத்திட்டேன். //
ஜெ,
வெகு நாட்கள் கழித்து இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தேன்.
உங்களுக்கு ‘சார்’ மேல் இருக்கும் அபிமானத்துக்கும், எனக்கு இருக்கும் அபிமானத்துக்கும் இருக்கும் வித்யாசம் புரிகிறது. அது இயல்பானதுதான், ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்றுக் கொண்டு நான் நகர்ந்து விட்டேன்.
சுஜாதாவை பொறுத்தவரை ‘ அவர் போனா என்ன..?? எழுத்து இருக்கே “ என்பது க்ளீஷேவோ அல்லது ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் கட்டுரையில் வரும் “ அவர் புகழ் ஓங்குக” என்பது போலவோ இல்லை என்பதை உணர்க.
என் வரையிலும் அவர் மூளையால் ( மனசால் அல்ல) யோசிக்க சொல்லிக் கொடுத்த புண்ணியவான்.
அந்த பாடம் அவரிடமே தோற்பது நிகழ்ந்தால் குருவுக்கு அவமானம்.
என்றென்றும் அன்புடன்
சுந்தர்ராஜன்
செவ்வாய்க் கிழமை, ஜூலை 29, 2008 at 7:35 பிற்பகல்
வணக்கம்,
அதேதான்…பழைய பல்லவி…. எப்போ எழுத போறீங்க? நிஜமாவே டெய்லி வந்து போறேன். சீக்கிரம் எழுத ஆரம்பிக்க வாழ்த்துகள்.
வியாழன், ஜூலை 31, 2008 at 1:10 மு.பகல்
சரி, இன்னைல இருந்து அட்டன்டன்ஸ் போடறேன்.
)
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 3, 2008 at 1:13 பிற்பகல்
உங்களை தொந்தரவு செய்கிறேனோ? சரி, எப்பவும் போல அமைதியாவே இருக்கேன். வித் பெஸ்ட் விஷ்ஷஸ்.
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2008 at 4:52 மு.பகல்
அன்புள்ள ஜெயஷ்ரீ,
கணகளில் நீரை வரவழைத்து விட்டீர்கள். அவர் போனதோட, உங்களோட இளமை மட்டுமில்லைஙக – நெரையாப் பேருக்கும் போச்சே போச்…!
நெஜமா சொல்லறேங்க – சிற்றிதழ்கள் உட்படப் பல பத்திரிக்கைகளில், பல எழுத்தாளர்கள் எழுதின நினைவுக் கட்டுரைகள் கொடுக்காத ஒரு நிறைவை உங்கள் சுட்டி கொடுத்தது. `தன்னை மீறின எழுச்சி எழுத்துக்களில் இல்லை, பல கவிஞர்களை அடையாளம் காட்டியவர் (ஜெயமோகன்), மறைநோக்கம் கொண்டவர் (காலச்சுவடு கண்ணன்), நல்ல கவிதையை மோப்பம் பிடிக்கத்தெரிந்தவர், நல்ல மனிதர் (மனுஷ்யபுத்திரன்)’ என்று பலரது நினைவுகளில், வாத்யார் எதனால் வாத்யார் என்று கொண்டாடப்ப -ட்டார்/டுகிறார் என்ற அடையாளத்தை எந்த எழுத்தாளனாலும் / கவிஞனாலும் / பத்திரிகையாளராலும் `இதனால தான் சார் இந்தாளு’ என்று சரியாகப் படம் வரைந்து பாகங்களைக் குறிப்பிட முடியவில்லை. (எஸ்.ராமகிருஷ்ணன் கொஞ்சம் பக்கத்தில் வந்தார்). அந்த அடையாளத்தை ஒரு சுஜாதா வாசகன்/கி-யால்தான் முடியும். அதைத்தான் நீஙகள் அபாரமாகக் கெளப்பியிருக்கிறீர்கள். வாத்யாரின் ஒரு வரியைத் தழுவி சொல்வதென்றால் – அவரைப் பத்தி `தாட்டு தாட்டுன்னு’ (thought) `தாட்டி’, சந்தோஷப்படவும் வெச்சுட்டீஙக. அழவும் வெச்சுட்டீங்க.
எழுத்து நடையில் சுஜாதாயிசம்னா என்னன்னு எல்லாருக்கும் புரிய வைக்கணும். அதுக்காக ஒரு வலைமனை அமைக்கணும். என்ன சொல்லறீங்க? (இது உங்களுக்கு மட்டுமில்லை – இங்க வந்து ஃபீலிங்க்ஸ் விட்ட எல்லோரின் சிந்தனைக்காக). நமக்குத் தெரிந்த சுஜாதாவை தமிழ் வாசிக்கத் தெரிந்த அத்தனை பேருக்கும் தெளிவாக்க வேண்டும். இது எனது ஆசை. நன்றி.
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 29, 2008 at 7:18 பிற்பகல்
enga poiteenga? Romba naalla aallaiye kanome? Hope all’s fine with you .
புதன் கிழமை, செப்டம்பர் 3, 2008 at 7:48 பிற்பகல்
[...] கடைசியா ஒரு இணைப்பு! வருட வரும் பூங்காற்றையெல்லாம்! – சுஜாதாவின் மேல் தீவிர அபிமானமும், [...]
வியாழன், செப்டம்பர் 11, 2008 at 9:14 பிற்பகல்
what happened, write J. waiting for your posts
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 12, 2008 at 9:10 பிற்பகல்
hai why ur not posting recipes nowdays
சனிக்கிழமை, செப்டம்பர் 13, 2008 at 7:35 பிற்பகல்
Hi jsri, your blog is mentioned in this week ananda vikatan
திங்கட் கிழமை, செப்டம்பர் 15, 2008 at 10:17 மு.பகல்
வாழ்த்துக்கள். தங்கள் வலைப்பதிவு இந்த வார ஆனந்தவிகடன் வரவேற்பரை பகுதியில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 16, 2008 at 12:33 பிற்பகல்
//- இந்த வாரம் ஜெயஸ்ரீ-இன் (அவங்க இப்போ மரத்தடி பக்கமெல்லாம்
எட்டிப்பாக்கறாங்களா) வலைப்பதிவை விகடன் வரவேற்பறையில்
வைத்திருக்கிறார்கள். //
வாழ்த்துக்கள்
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 16, 2008 at 2:10 பிற்பகல்
Hi Blogger
I have a doubt?
How to write and comment in Tamil?
Can you help me to do so?
Regards
Jai
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19, 2008 at 1:31 பிற்பகல்
Hi Jayasree,
i am a regular vistor of this blog of yours.
enna konja naanla posting illaye..
Indha vaaram ananda vikatan parrthieengala.. this site refer panniyirukanga…
Expecting new and interesting postings and receipes from you..
Regards
Menakshi
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 23, 2008 at 6:12 பிற்பகல்
Jsri,
உங்கள் வலைத்தளம் பற்றிய சிறுகுறிப்பு ஆ.வியில் கண்டேன். உங்களுக்கு(ம்) தெரியும் தானே ? ஆ.வி உங்களை தொடர்பு கொண்டார்களா, இது தொடர்பாக ?
வாழ்த்துக்கள்
எ.அ.பாலா
செவ்வாய்க் கிழமை, அக்டோபர் 14, 2008 at 9:06 பிற்பகல்
Do you know how to get Tamil in wordpress.org blogs?
I am trying at http://www.palagai.com but am not able to get the Tamil fonts.
This is part of http://www.sangapalagai.com our Tamil portal.
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2008 at 10:25 மு.பகல்
AN APPEAL
==========
திரும்ப வாருங்கள்ஜெயஸ்ரீ
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 9, 2008 at 4:08 மு.பகல்
உங்க வலை தளத்துக்கு இப்போ தான் முதல் தரம் வரேன். எதேச்சையா ஸ்ரீ வில்லிப்புத்தூர் திரட்டிப்பால் போன வாரம் செஞ்சேன். அதுவும் எனக்கு முதல் தரம். அது நல்லா தான் வந்தது. இருந்தாலும் நம்ம செஞ்ச முறை சரியான்னு கூகிள் செய்ததில் உங்க தளம் சிக்கியது. ரொம்ப ஸ்வாரஸ்யமான தளம். வாழ்த்துக்கள்.
வெள்ளிக்கிழமை, December 19, 2008 at 7:48 மு.பகல்
அடிக்கடி வந்து அட்டன்டன்ஸ் போடறதுதான். இன்னைக்கி என்னமோ அதை பதிக்கணும்ன்னு தோணுச்சி. அதான். நல்லா இருக்கீங்க இல்ல?
செவ்வாய்க் கிழமை, December 23, 2008 at 11:43 பிற்பகல்
sujatha-vin kathaigalai thoguthu alithaal sandhoshamaaga irukkum,seiveergalaa?
புதன் கிழமை, December 24, 2008 at 12:11 மு.பகல்
சுஜாதாவின் கதைகளை தொகுத்து வழங்குவீர்களா?
திங்கட் கிழமை, December 29, 2008 at 5:09 பிற்பகல்
மைசூர்பா செஞ்சு பார்த்துட்டு சரி வேற எதாவது முயற்சி செய்யலாமேன்னு உங்க பதிவுக்கு வந்தப்போ தான் இதைப் படிக்க நேர்ந்தது.
என்ன சொல்றதுன்னு தெரியல. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம், உங்க எழுத்துகளை ரொம்ப மிஸ் பண்றேன்.
செவ்வாய்க் கிழமை, ஜனவரி 20, 2009 at 7:40 பிற்பகல்
சந்திரசேகரன் கிருஷ்ணன்: இந்தப் பக்கமும் அதேதான். போதாதற்கு கண்காட்சியிலும் வாங்கிவந்து எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் புரட்டிவைத்திருக்கிறேன். பிடிக்காதவர்களையே திரும்பிப் திரும்பிப் பார்த்து அழும் குழந்தை மாதிரி ஆகிவிட்டேன்.
Priya, Vijay: உங்கள் கடிதங்களுக்கும் அன்புக்கும் நன்றி. கடிதம் எழுதிய விசாரித்த, ஆவி தொடர்பாக அறிவித்த அத்தனை பேருக்கும் நன்றி.
chandra, இப்படி காணாமல் போனால்தான் உங்களைப் பார்க்கமுடியும்.
Sambarvadai, thanks. சாம்பார் வடை, நன்றி.
செவ்வாய்க் கிழமை, ஜனவரி 20, 2009 at 7:41 பிற்பகல்
Jai: தமிழ் மட்டுமில்லை, இங்கே டவுன்லோடினால் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் எழுதலாமாம்.
http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
அசத்துங்க.
பாலா: நாம் ஆவியைத் தொடர்புகொள்ளத் தான் மீடியேட்டர் உண்டு. ஆவி நம்மைத் தொடர்புகொண்டால்… பக்கத்தில் வேப்பிலைதான் வைத்துக்கொள்ள வேண்டும்.
(ஏற்கனவே எல்லாரும், “என்னடீ மந்திரிச்சு விட்டாப்ல இருக்க?” என்று கேட்கிறார்கள்.) நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
செவ்வாய்க் கிழமை, ஜனவரி 20, 2009 at 7:43 பிற்பகல்
சாணவாக்கியன்: உங்கள் அளவுக்கதிகமான பாராட்டுக்கு நன்றி. சுஜாதாவின் எழுத்துகள் தனிமனிதருக்கானதில்லை. அவர் குடும்பத்தினர் பதிப்பகத்தாருக்கான சொத்து. அதனால் அந்த விஷயத்தில் எதைச் செய்யவும் எனக்குத் தயக்கம் உண்டு. அதைவிட, அந்த அரசியலில் எனக்குத் துளியும் ஆர்வம் இல்லை. எனவே யாருக்கும் பாதகமில்லாமல் என் நேரத்தில் ஏதாவது செய்யமுடியுமென்றால் அவசியம் சொல்லுங்கள், செய்கிறேன்.
aruna: மேலே சொல்லியிருக்கும் பதிலையே உங்களுக்கும். முன்பு தேசிகன் பக்கதில் சில கதைகள் கட்டுரைகள் இருந்தன. அவற்றையே அவர் நீக்கிவிட்டார்.
KVR: வாங்கய்யா. நிலாக்குட்டி சௌக்கியமா? நாங்களும் தான் உங்க எழுத்தை மிஸ்ஸறோம். திரும்ப ஆரம்பிச்சிருக்கீங்க போல. WB. நாட்டுல எவ்ளோ அரசியல் நல்லது பொல்லாதது நடக்குது. கொஸப்பேட்டைக்காரரையும் கவனிக்கலாமில்ல…
செவ்வாய்க் கிழமை, ஜனவரி 20, 2009 at 7:59 பிற்பகல்
aargees: //enga poiteenga? Romba naalla aallaiye kanome?// நான் கேட்கவேண்டிய கேள்வி ரம்யா. எங்க போயிட்டீங்க? அல்லது இந்தியா வந்துட்டீங்களா? உங்க பதிவு ஏன் protect செஞ்சுட்டீங்க?
venkatramanan: மிக்க நன்றி. உங்க தனிமடலுக்கும் அந்த வரிசைல பதில் (தாமதாமா) வரும். ஆனா சென்னை வந்தா நீங்க சொல்ற விஐபிகளை நான் சந்திக்கறதில்லை. நான், “எனக்கு ஐஜியைத் தெரியும். ஐஜிக்குத் தான் என்னைத் தெரியாது” ரகம்.
kanchana, Manju நன்றி. சிறிது நாள் எடுத்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
ஐயப்பன், ஆயிரம் வேலை இருந்தாலும் மரத்தடிப் பக்கமும் எட்டிப் பாக்கறதுண்டுன்னு சொல்லிவைங்க.
செவ்வாய்க் கிழமை, ஜனவரி 20, 2009 at 8:12 பிற்பகல்
சுந்தர்:
//என் வரையிலும் அவர் மூளையால் ( மனசால் அல்ல) யோசிக்க சொல்லிக் கொடுத்த புண்ணியவான்.//
மூளை மாதிரி மனசு என்று தனியாக ஒரு உறுப்பு இருக்கிறதா என்ன? ஒருவேளை அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாக சிந்திப்பதைச் சொல்கிறீர்கள் என்றால், இதைவிட அபத்தம் எதுவும் இருக்கமுடியாது. இதை உங்களுக்காக மட்டும் சொல்லவில்லை. இப்படி சொல்லிக்கொள்கிற அறிவுஜீவிகள் அனைவருக்கும் அதுவே என் பதில். இப்படிச் சொல்கிறவர்கள் ஒன்று பொய் சொல்கிறார்கள், அல்லது அப்படி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள். பரிதாபப்படலாம் அல்லது புறக்கணிக்கலாம்.
மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லாமே விஞ்ஞானரீதியாக சரியாக நடந்தே வந்தாலும் அதற்காக யாரும் உணர்ச்சிவசப்படுவதை நிறுத்திவிடுவதில்லை. பிறந்த குழந்தை அழுவதிலிருந்து, தவழ்வது, நடப்பது, பல்முளைப்பது ‘அம்மா’ சொல்வது, வரை கொண்டாடாத பெற்றோரைப் பார்த்திருக்கிறீர்களா? குழந்தை பிடித்துக்கொண்டு நடக்கிறான் என்று சொன்னால், கோடானுகோடி மனித இனமும் இத்தனையாயிரம் ஆண்டுகளாக ஒருவயதில் அதைத்தான் செய்திருக்கிறது என்று அந்தப்பக்கம் தாத்தா பாட்டி சொல்வதில்லை.
எங்கள் இருவருக்குமே தெரியும், எங்கள் பெண் மிகச் சாதாரண சராசரிக் குழந்தைதான் என்பது. ஆனாலும் எந்த வயதிலும்- எல்லா வயதிலும் என் பெண்ணின் எல்லாப் பேச்சும் செய்கையுமே எங்களுக்குள் ரகசியமாய் கிசுகிசுத்துக் கொள்ளவும் பெருமிதப்படக்கூடியதாகவுமே இருக்கிறது. ஒருவர் சொல்லும்போது அடுத்தவர் மகிழாமல் இருப்பதில்லை.
ஹார்மோன் அடிதடியில் தான் காதல் காமம் எல்லாக் கண்றாவியும் என்று விட்டுவிடலாம். ஆனால் அது ஏன் எதிர்ப்படும் எல்லா எதிர்ப்பாலினத்தவரிடமும் வருவதில்லை. கிட்டத்தட்ட அரை உலகமே எதிர்ப்பாலினமாக, கோடிக்கணக்கானவர் நம்மைச் சுற்றியும் கடந்துகொண்டுமிருக்க, ஏன் எங்கோ இருக்கும் ஏதோ ஒருவரிடம் மட்டும் ஈர்ப்பு வருகிறது என்பதற்கு உங்கள் ஹார்மோன் அறிவில் பதில் இருக்கிறதா?
உங்கள் குருவுக்கு வருவோம். அந்நியன் அம்பி கேரக்டர் “என்னை ஏன் பிடிக்கலை?” என்ற கேள்விக்கு சதாவோட பதிலாக, “‘காதலன் சமத்து காதலில் தொல்லை’ என்று ஒரு வரியோடு வாலி முடித்துக் கொண்டுவிட உங்கள் வாத்தியார் எழுதியிருக்கும் ஒரு முழு நீள வசனம். எப்படிப் பிடிக்கும் என்று ஆரம்பித்து … நீ ஒரு அல்காரிதம்… வகையறா… வசனத்தைக் கேட்டிருக்கிறீர்களா? (சதா நடித்த ஒரேயொரு உருப்படியான காட்சி, வசனத்துக்காக மட்டுமே இதுவரை பார்த்துவிட்டு இத்தோடு படத்தை நிறுத்திவிடுவேன்.)
கல்யாணத்தின்போது ஒரு குட்டிப்பெண் பக்கத்தில் அமர்ந்து கையைப்பிடித்துக்கொண்டு ‘வழவழன்னு இருக்காங்க’ என்று ஆச்சரியப் பட்டது. ‘கழுதைகூட வயசுக்கு வழவழன்னுதான் இருக்கும்’ என்பது மாமியார் அணியின் உடனடிக் கருத்து. அதுதான் 100 சதம் உண்மையும்கூட. ஆனால் உலகமும் காதலனும் கணவனும் அப்படி நினைத்து நகர்ந்துவிட்டால் காவியங்கள் ஏது சுந்தர்?
மகிழ்ச்சியான விஷயங்களுக்கு மட்டுமே நான் சொல்லியிருந்தாலும் துக்கங்களுக்கும் துயரங்களுக்கும்கூட இதுவே(அதைவிட அதிகமாகவே) பொருந்தும். எனவே என்னைப் பொருத்தவரை மனிதன் தனக்காவோ மற்றவர்க்கோ உணர்வுபூர்வமாக சிந்திக்காவிட்டால், வாழாவிட்டால் வாழ்க்கை இயந்திரத்தனமாகவோ, கொடுமையானதாகவோ, இப்போது இருப்பதைவிட இன்னும் கோரமானதாகவோ இருக்கும்.
புத்தகக்கண்காட்சி முடிந்து வெட்ட வெளியில் மதுமிதாவிற்காக காத்திருந்தேன். உடல்நிலை சரியில்லாததால் அடித்த காற்று அதிகமாகவே குளிறிற்று. இந்தக் கண்காட்சிக் காற்றுதான் போனவருடம் வாத்தியாரைக் கொண்டுபோனது என்ற எண்ணமும், பில்போடவேண்டாம் என்று சொல்லி உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் வலுக்கட்டாயமாகத் திணித்த ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகமும் போதுமானதாயிருந்தது கண்மை கரைய. மதுமிதாவைப் பார்த்ததும் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிவிட்டேன். வீட்டுக்கு வந்து புத்தகத்தையும் கண்மை கரைந்தபோது எடுத்த படத்தையும் பத்திரப்படுத்திக்கொண்டேன். வேண்டியதெல்லாம் நாம் உணர்வுபூர்வமாக இருப்பதை நம்மை நாமே அறிவுபூர்வமாக வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கவோ, விமர்சிக்கவோ தெரியவும், எல்லை மீறும்போது அதிலிருந்து வெளிவரத் தெரிவதும்தான்.
மனிதன்- தான், குடும்பம், நண்பர்கள், மொழி, நாடு, சொந்த ஊர், பள்ளிக்கூடம், சுற்றம், சூழ்நிலை, நாய்க்குட்டி என்று பல விஷயங்களின்பாலான உணர்வுகளின் மொத்தக்கலவை. வாத்தியாரும் இதிலிருந்தெல்லாம் அப்பாற்பட்டவர் என்று நான் நினைக்கவில்லை.
மூளையை மட்டும் உபயோகித்திருந்தால் உங்கள் வாத்தியாரால் விஞ்ஞான அல்லது வெறும் கட்டுரைகள் மட்டுமே எழுதியிருக்கமுடியும். சுந்தரை சதாய்க்கக் கூடிய புனைவுகளை எழுதி ரகு-க்களை ஏற்றிவிட்டிருக்க முடியாது. அம்பிக்களுக்கு வசனம் எழுதியிருக்க முடியாது. அம்பிக்கெதிரான அவருடைய கருத்தும் அதுவாக இருந்திருக்கமுடியாது.
Last but not the least, அறிவியல் புனைகதையே எழுதினாலும் ‘திமலா’வை முடிவில் உணர்வுபூர்வமாகத்தான் முடித்திருந்தார். எத்தனை கண்டுபிடிப்புகளுக்கும், முன்னேற்றங்களுக்கும் அப்பாலும் மனிதனின் சில மாற்ற முடியாத உணர்வுகள் மட்டுமே உச்சமாக இருக்கமுடியும் என்ற வகையில்தான் அவர் எழுத்துகள் இருந்ததாக நான் நினைக்கிறேன்.
///அந்த பாடம் அவரிடமே தோற்பது நிகழ்ந்தால் குருவுக்கு அவமானம்.///
நல்லவேளை, அவர் எனக்கு குரு இல்லை. அதனால் எனக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. நான் அப்படித்தான் என்றுதான் வாழும்காலத்திலேயே பிடிவாதமாக இருந்திருக்கிறேன்/ இருப்பேன். இதுகுறித்து உங்கள் குருவிடம் ஒரு சண்டைபோட விட்டுப்போய் விட்டது. நரகத்துக்குப் போனதும் முதல்வேலை அதுதான்.
சுந்தர், நான் ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
பி.கு:
உங்கள் வலைப்பதிவு என்னாயிற்று?
சனிக்கிழமை, பெப்ரவரி 14, 2009 at 12:41 மு.பகல்
போச்சிரா, ரொம்ப நாளாவே பின்னூட்டம் போட்றதை அவாய்ட் பண்ணிட்டு சும்மா டபாச்சிகிட்டுதான் இருந்தேன். உங்க சுந்தர் பதில் பின்னூட்டம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியல. திரும்பவும் என்னை உங்களை மாதிரி யோசிக்கிற ஒரு ஆளுன்னு நெனக்க வச்சிட்டீங்க.(ரிவர்ஸ்ல சொல்லலாம். ஆனா அதுக்கு நான் இன்னும் நிறைய கத்துக்கணும்.லெவல்ன்னு ஒண்ணு இருக்குல்ல.இந்த மேட்டர்ல நீங்கதாங்க சீனியர்.) நான் ஆரம்ப பின்னூட்டங்களில் சொல்லி இருந்தாமாதிரி, உங்க வலை பதிவு படிச்சிட்டுதான் தமிழில் டைப்பும் ஆர்வமே ஏற்பட்டது. உங்களுடைய கம்பேக் எனக்கு 3 டேஸ்ல தெரிஞ்சாலும் என்னவோ அது படிச்சிட்டு பின்னூட்டம் இடும் ஆர்வம் வரலை.(பரித்ரானாய ஸாதூனாம்… – பார்ட் 2ஐ சொல்றேன்.)மனித மனம் ஒரே மாதிரி இல்லீங்க. இல்ல என் அன்றைய எதிர்பார்ப்பு வேறய இருந்து இருக்கலாம். சரியா சொல்ல தெரியலை. ஆனா இப்ப தோணுது அட்லீஸ்ட் ஒரு அட்டன்டன்ஸ் பின்னூட்டமாவது போட்டு உங்க “கம்பேக்”கை ஹானர் பண்ணியிருக்கனும்ன்னு. சாரி பார் தட். இப்போ ஜோதில ஐக்கியமாயச்சி. நேத்து நைட்டு பூரா சுஜாதா சாரோட ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ பார்ட் 1 & 2 தான் படிச்சிட்டு இருந்தேன். ஹி..ஹி… நைட் ஷிப்ட்ல தூங்க கூடாதாம். கம்பெனி உத்தரவு.(வெளங்கிரும்)
சனிக்கிழமை, பெப்ரவரி 28, 2009 at 12:41 பிற்பகல்
என்னோட முந்தைய பின்னூட்டத்துக்கு நீங்க பதிலே சொல்லலை. எதும் தப்பா எடுத்துகிட்டீங்களா?:(
புதன் கிழமை, மார்ச் 4, 2009 at 4:08 மு.பகல்
அளவுக்கதிகமான பாராட்டில்லை ஜெயஸ்ரீ – மனதில் பட்டதை சொன்னேன். வீட்டை விட்டுப் பல்லாயிரம் மைல் தள்ளி, தனிமையில் உட்கார்ந்து தமிழைத் துணைக்கொண்டு, விளையாட்டாக `நெட்’டிக்கொண்டிருந்தவனை, தேசிகனின் வலைத்தளத்திலிருந்து எதேச்சையாக `லிங்க்’க்வைத்து, அழகான தலைப்புடன், பல வருடங்களுக்கப்புறம் கண்ணில் நீர் வரும்படியாக வாத்யாரைப்பற்றி எழுதிக் கலக்கி விட்டீர்கள். (` நெட்’டுவது, `லிங்க்கு’வது கூட வாத்யார் பாதிப்புத்தான்!).
நன்றாக எழுதுகிறீர்கள் ஜெயஸ்ரீ. உங்கள் எழுத்துக்களைத் தேடிப்படித்துக்கொண்டிருக்கிறேன். நீண்ட நாள் நீங்கள் எழுத்தாதால், அதற்குக் காரணம் வேறேதோ என்று தவறாகக் கேள்விப்பட்டு, `உ.சேவை நா.தேவை’ ரேஞ்சில் ஒரு மெயிலிட்டிருந்தேன். இப்போதான், உங்களுக்குப் பல மாறுவேடங்கள் மாறுமுகவரிகள் இருந்ததாக எழுதி `பார்றா’ங்க வைத்துவிட்டீர்கள்.
சுந்தருக்கு நீங்கள் சொல்லியிருந்தது யோசிக்க வைத்தது. உங்கள் கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னதான் தலைவர் எப்பொப்பார்த்தாலும் `மூளை, ஹார்மோன்’னு ஜல்லியடித்தாலும், ஒரு முறை சன் டிவி காலை விருந்தினராகத் தனக்கே உரிய ஒரு மெல்லிய கூச்சத்துடன் உட்கார்ந்து கொண்டு, தனக்கே உரிய தன்னடக்கத்துடன், `சிலதெல்லாம் எழுத முடியலைங்க. காதல்… சரியா எழுத வர்லைங்க’, என்று சொன்னாலும், அவரது எழுத்துக்களில் ஊடாக வரும் நேசத்தின் வெளிப்பாடு அவ்வப்போது `வாவ்’ சொல்ல வைக்கிறது.
உதாரணத்துக்கு, பி.வோம் ச்.போம்-2இல், ரகு அமெரிக்காவில் ரத்னாவின் வீட்டுக்குக் கேஷுவலாக முதல் முறை போகும்போது, அவர்கள் வீட்டில் சிறிது நேரம் இருந்த பிறகு, `ரத்னா ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்தாள்… ஒரு முறை அவர்கள் பார்வைகள் கோர்த்துக்கொண்ட போது மேம்போக்கான சகஜத்தை மீறிக் கொஞ்சம் புதிதாக் ஒன்று இருந்தது. ரத்னா சட்டென்று பார்வையைத்தணித்துக்கொண்டாள்.’ என்று சில வரிகள் உண்டு. இதில் இருக்கும் மெலிதான நேச வெளிப்பாடு அழகானது. கிட்டத்தட்டக் கவித்துவம்! இவர் போய், `எனக்கு மூளைதான்பா’ என்பது கப்ஸா என்றே தோணுது. (சுந்தர் – சும்மா என் கருத்து. அவ்வளவுதான்).
மேலே சொன்னததுதாங்க மனசிலே இருந்தது – சுஜாதா எழுத்துக்களின் தன்மையை விவரிப்பது பற்றி, காப்பிரைட் விதிகளுக்குட்பட்டு. பாக்கலாம், பின்னால கடுதாசி போடறேன்.
ஒரு வருஷம் ஆயிடுச்சி. ஆனா இப்பொக்கூட நெனப்புல வந்து அப்பப்போ கண்ல தண்ணி வரவெச்சிடறார். அவரைப்பத்தி, `நினைவுகள் எல்லாம் வார்த்தைல வரக்கூடாதுன்னு வடிகட்டி எழுதியிருக்கேன்’னு சொல்லியிருக்கீங்க – ஏன் ஜெயஸ்ரீ. முழுசா எழுதினா என்ன? அபுரி! (வாத்யாரின் ஒரு சை.ஃபி. கதையிலிருந்து).
எனக்குத் தெரிந்து, (என் தலைமுறை) சுஜாதா தீவிரவாதிகளிடம் ஒரு ஒற்றிணக்கம் உண்டு. கிட்டத்தட்ட எல்லாரும், விடலையில் படிக்கத்தொடங்கி, அவரது நடையில், புத்திசாலித்தனத்தில், செய்திகளில், `சுஜாதாத்தனங்களி’ல் (கோஷ்டி, பதறிப்போய், ஜல்லி, மையமாக, ஒக்கபிலேரி… இத்யாதி), அவ்வப்பொது வரும் அசைவச் சிரிப்புகளில் பிடித்துப்போய் அவர் என்ன எழுதினாலும் படித்து, பிறகு அவர் எழுத்துக்களில் இருக்கும் சில மனிதநேய ஓட்டங்களை உணர்ந்து (எப்போதும் பெண், பி.வோம் ச.போம், அப்பா அன்புள்ள அப்பா…) அவரது கட்டுரைகளின் வசீகரத்தில் பின்தொடர்ந்து, அவராலேயே பல நல்ல விஷயங்களில் ஈடுபாடு வந்து (கர்நாடக சங்கீதம், அறிவியல், கவிதை, நல்ல சினிமா…) அவரது எழுத்துக்களில் வந்துவிட்ட ஒரு முதிர்ச்சியை நேசித்துப் பின் அவரது மறைவால் அதிர்ச்சியடைந்தவர்கள். மேலும், அவரது சினிமாப்பங்களிப்பு அவ்வளவு பெரிய விஷயமாகக் கூடத்தோன்றவில்லை. ஹிண்டு-வில், அவரது மறைவுச்செய்தியில், அவர் சினிமா வசனம் எழுதியவர் என்ற அடையாளம் பார்த்துப் பற்றிக்கொண்டு வந்தது.
அதனால, அவரைப்பற்றி மேலும் எழுதுங்களேன். அவருடன் உங்கள் நினைவுகள் பற்றி. படிக்கறக்கு ஆள் இருக்குங்கோவ்!
திங்கட் கிழமை, மார்ச் 16, 2009 at 10:15 பிற்பகல்
Vijay, கொஞ்சம் விட்டுவிட்டுதான் பதிவுப்பக்கம் திறக்கிறேன். தாமதமா பதில்சொல்றேன். மத்தபடி உங்க பின்னூட்டங்களுக்கெல்லாம் தப்பா நினைக்க ஆரம்பிச்சா மாளுமா? அட்டனன்ஸ், வெல்கம் பேக் மாதிரி ஃபார்மாலிட்டி எல்லாம் தேவையே இல்லை. ['வெளங்கிரும்' யாரோன்னு பட்சி சொல்லுதே.
))]
சாணவாக்கியம், அட்டகாசம். நீங்கதான் அப்ப அவரைப்பத்தி நிறைய எழுதணும். கடைசியா எப்போதும் பெண் படிச்சுட்டு ஆச்சரியப்பட்டுகிட்டிருக்கேன். அதெல்லாம் எழுத்துல கொண்டுவர முடியாது என்னால.