சேவை என்பது ப்ரும்மப் பிரயத்னமாக இருந்த காலத்திற்குப்பின் இன்ஸ்டண்ட் சேவை வந்து வாழ்க்கையை சுலபமாக்கியது. இது ஒரிஜினலுக்கு ஈடே ஆகாது என்றாலும் நிச்சயம் புறக்கணிக்கக் கூடியதும் அல்ல. எப்பொழுதும் Concord சேவை(200 கிராம் 20 ரூபாய்) உபயோகித்துக் கொண்டிருந்தேன்.
இப்போது புதிதாக MTR நிறுவனத்தினர் With Low Glycemic Index என்கிற லேபிளோடு புதிதாக ஒரு இன்ஸ்டண்ட் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 200 கிராம் பாக்கெட் 18 ரூபாய். Glycemic Index தொடர்புடைய ஒரு பதிவு.
Concord நன்கு கொதித்த நீரில் ஐந்தாறு நிமிடங்கள் மூடிவைத்து, பின் நீரை வடிக்க வேண்டும், இதில் 5 நிமிடங்கள் அடுப்பிலேயே கொதிக்கவைத்து நீரை வடிக்கவேண்டும் என்பது தவிர இரண்டுக்கும் தயாரிப்பில் அதிகம் வித்தியாசம் இல்லை.
எந்த சேவையாக இருந்தாலும், சேவை தயாரித்தபின் நமக்கு விருப்பமான வகையில் தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, புளி சேவை, தயிர் சேவை போன்றவைகளைத் தயாரித்துக் கொள்ளலாம். எல்லாம் தயாராக இருந்தால் ஒரே பாக்கெட்டில் அரை மணி நேரத்தில் நான்கு வகை சேவைகளை குடும்பத்தினர் விருப்பத்திற்கிணங்க செய்துவிடலாம்.
எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்தது, சேவையை எதனோடும் கலக்காமல் அப்படியே சுடச் சுட இருக்கும்போது ஒரு டீஸ்பூன் பச்சைத் தேங்காயெண்ணெய் மட்டும் கலந்து மோர்க் குழம்பு அல்லது காரம் சேர்த்த தயிர்ப் பச்சடியுடன் சாப்பிடுவது.





திங்கட் கிழமை, மார்ச் 31, 2008 at 10:57 மு.பகல்
//Concord நன்கு கொதித்த நீரில் ஐந்தாறு நிமிடங்கள் மூடிவைத்து, பின் நீரை வடிக்க வேண்டும்//
அவ்வ்வ்
என் தங்கமணியும் 5 நிமிஷம் கொதிக்க வச்சாங்க. சேவை வரலை, அரிசி களி தான் வந்தது.
)
நல்ல வேளை, வேஸ்டாக வேணாம்! நீங்க சாப்டுடுங்க!னு சொல்லலை, அப்புறம் என்ன பிரட் வாங்கி வந்தேன்.
செவ்வாய்க் கிழமை, April 1, 2008 at 10:10 மு.பகல்
மிக அருமை… உங்க வலைப்பூ, நீங்க எழுதற ஸ்டைல், தேர்ந்து எடுத்து இருக்கற குறிப்புகள் எல்லாம் அமோகம்… எனக்கும் ஊர் ஸ்ரீரங்கம் தான், ஆனா அங்க வளரலை. கோடை விடுமுறைக்கு வருஷா வருஷம் போறது தான். இருந்தும் உங்க நவராத்திரி நினைவலைகள் எல்லாம் ரொம்பவே ரிலேட் பண்ணிக்க முடிஞ்சுது
ஏனோ சுஜாதாவோட எழுத்து நினைவு வருது, ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நீங்க ஏதும் சுஜாதாக்கு எதிர் கட்சினா தாளிச்சுடாதீங்க!
ஒரு சின்ன ரிக்வெஸ்ட் என்னன்னா, நீங்க இன்னும் கொஞ்சம் விபரமா எழுதணும்- அதாவது எத்தனை விசில் விடணும்னு கூட சொல்லணும் என்னை மாதிரி கத்த்க்குட்டிக்கு!
முடிஞ்சா சொல்லுங்க அதையும்… என்னிக்கும் எழுதுவதை விட வேண்டாம் என்பது அடியேன் கோரிக்கை.
செவ்வாய்க் கிழமை, April 1, 2008 at 10:49 மு.பகல்
//நீங்க ஏதும் சுஜாதாக்கு எதிர் கட்சினா தாளிச்சுடாதீங்க!
//
ROTFL
//அதாவது எத்தனை விசில் விடணும்னு கூட சொல்லணும் என்னை மாதிரி கத்த்க்குட்டிக்கு! //
நான் இதை வழிமொழிகிறேன்.
)
செவ்வாய்க் கிழமை, April 1, 2008 at 11:55 மு.பகல்
Ambi, Concord சேவை சும்மா கொதிக்கவெச்ச தண்ணில 5 நிமிஷம் போட்டு மூடிவெச்சாலே போதும். அதை நேரடியா அடுப்புல கொதிக்கவெச்சா மாவாகாம என்ன ஆகும்?
MTR கொதிக்கவைக்கணும். உங்களுக்கு பிரச்சினை இல்லாம நல்லா வரும்.
அப்றம் எதுக்கு ROTFL? புதசெவி.
செவ்வாய்க் கிழமை, April 1, 2008 at 11:57 மு.பகல்
Hema, நன்றி. சேவைல விசிலே இல்லையே. மற்ற பதிவுகள்ல சொல்றீங்களா? ஏற்கனவே சின்ன சின்ன விஷயம் எல்லாம் விலாவாரிய கதையா எழுதறேன்னு என்மேல குற்றச்சாட்டு இருக்கு.
சரி பாக்கறேன்.
//என்னிக்கும் எழுதுவதை விட வேண்டாம் என்பது அடியேன் கோரிக்கை.//
அதுசரி, எழுத ஆரம்பிச்சா தானே நிறுத்த முடியும். நான் அந்த தப்பெல்லாம் செய்யறதாயில்லை.
நீங்க எங்கயாவது எழுதறீங்களா? உங்க பேர் நான் இணையத்துல எங்கயும் பாத்ததில்லை. பின்ன எப்படி இவ்ளோ சரளமா தமிழ் தட்டச்சு?
புதன் கிழமை, April 2, 2008 at 11:21 மு.பகல்
[...] இருக்கும். அதே மாதிரி செய்யப்படும் அரிசி சேவை வகைகளுக்கும். ** எலுமிச்சை, புளியோதரை [...]
ஞாயிற்றுக்கிழமை, April 27, 2008 at 8:16 பிற்பகல்
ஜெயஸ்ரீ அக்கா ! உங்கள் தளம் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனால் நான் கத்துக்குட்டி. அம்மாவிடம் இருந்து சமையல் கத்துக்கிட்டிருக்கேன். நண்பர்களும் சாப்பிட்டு மயங்கி விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
நானும் ஒரு பேச்சிலர் தளம் ஆரம்பிச்சிருக்கேன். உங்க தளத்துக்கு இணைப்பும் கொடுத்திருக்கேன்.