தேவையான பொருள்கள்:
தயிர் – 1 கப்
வெங்காயம்
வெள்ளரிக்காய்
கேரட்
கோஸ் (உள்பாகம்)
தக்காளி
….
….
கறிவேப்பிலை
கொத்தமல்லி
பெருங்காயம்
கருப்பு உப்பு [काला नमक, Black Salt] – (விரும்பினால்)
உப்பு
தாளிக்க: எண்ணெய், கடுகு, பச்சை மிளகாய்.
செய்முறை:
-
வெங்காயம், தக்காளி, கோஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும்
-
வெள்ளரி, கேரட் போன்ற காய்களை துருவிக் கொள்ளவும்.
-
நறுக்கிய, துருவிய காய்கறிகள், பெருங்காயம் கலந்துவைத்துக் கொள்ளவும்.
-
பரிமாறும் நேரத்தில் தேவையான உப்பு, கருப்பு உப்பு (விரும்பினால்), கடைந்த தயிர் சேர்த்துக் கலக்கவும்.
-
சிறிது எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.
* தயிர் சாதத்திற்குச் சொன்னதைப் போலவே தயிர்ப் பச்சடிக்கும் தாளிக்கும்போது அதிக எண்ணெய் அல்லது கலங்கிய எண்ணெய் உபயோகிப்பது பச்சடியின் நிறத்தையும் தரத்தையும் கெடுக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொதுவாக மேத்தி சப்பாத்தி, புளியோதரை போன்ற உணவுகளுக்கு முடிந்தவரை எல்லா காய்களும் கலந்து செய்யலாம்.
வெஜிடபிள் பிரியாணி, புலவு போன்ற காய்கறிகள் உள்ள உணவிற்கு அதில் இல்லாத காய்களாக(வெள்ளரி, தக்காளி..) மட்டும் சேர்த்துச் செய்யலாம்.
ஏற்கனவே அதிகக் காரமாக உள்ள உணவிற்கு, இதில் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவை இல்லை.
தாளிக்காமல் கூட, தினமும் ஏதாவது ஒன்றிரண்டு பச்சைக் காய்கறிகளிலாவது தயிர்ப்பச்சடி செய்து கோடைக் காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

சனிக்கிழமை, பெப்ரவரி 23, 2008 at 1:59 பிற்பகல்
thayir pachadiyai parthale sapidanum pola irukku
சனிக்கிழமை, பெப்ரவரி 23, 2008 at 8:09 பிற்பகல்
இன்று மதியம் தான் தயிர் பச்சடி செய்து காய்கறிகள், பழங்கள் மட்டும் சாப்பிட்டு மதிய உணவை முடிக்கும் போது தயிர்ப்பச்சடி பற்றி நீங்கள் எழுதி இருக்கிறீர்களா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.சாயங்காலம் உங்கள் கிச்சனுக்கு வந்த போது தயிர்ப் பச்சடி செய்முறை இருந்தது.பரவாயில்லை. தாளிப்பதைத் தவிர மற்றதெல்லாம் சரியாகத் தான் செய்திருக்கிறேன்.:)
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 26, 2008 at 12:06 பிற்பகல்
Suba, நன்றி.
பிரகாஷ், தயிர்ப்பச்சடில இதுதான் எளிமையான பேச்சிலர்ஸ் பச்சடி. தாளிக்காமலும் செய்யலாம். இன்னும் அரைச்சல்ஸ், கரைச்சல்ஸ் எல்லாம் பின்னால வரும். மதியம் கறி, பழம் மட்டுமே சாப்பிடவேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடியோ?
திங்கட் கிழமை, April 7, 2008 at 3:19 பிற்பகல்
எப்பவுமே சமைத்த உணவுகளையே சாப்பிடுவதற்கு பதில், வாரம் ஒருமுறை அல்லது ஒரு நாள் முழுவதும் இயற்கை உணவை (காய்கறிகள், பழங்கள்,இளநீர்) சாப்பிட்டால் நல்லது என்பதற்காக இது போன்று முயற்சிப்பதுண்டு.
(இன்னிக்கு உகாதி.வீட்ல விருந்து சாப்பிட்டுட்டு தயிர்பச்சடி பத்தி பேச்சு வந்ததுல,உங்க கிச்சன எல்லாருக்கும் காண்பிக்கறப்போ (தான்) இந்தப் பச்சடிய (நெருக்கடியை)பாக்க நேர்ந்தது.)
சனிக்கிழமை, செப்டம்பர் 13, 2008 at 11:46 பிற்பகல்
it is very useful.