தேவையான பொருள்கள்:
இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
பெருங்காயம்
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
-
இஞ்சியைத் தோல்சீவி, நன்றாகக் கழுவி, சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
-
இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிதுநேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
-
தேங்காயைத் துருவல், புளி, பச்சைமிளகாயைக் கலந்து ஆறவைக்கவும்
-
ஆறியதும், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
* வழக்கமாகச் சொல்வதுதான் என்றாலும்– காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும். கல் உப்பு உபயோகிப்பது இன்னும் சுகம்.
* இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.
* விரும்பினால் அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.
* பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்லும்போது தேங்காயையும் நன்கு வதக்கியே அரைத்து எடுத்துச் செல்லலாம். சீக்கிரம் கெடாது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நல்லெண்ணெய் கலந்த சாதம், தயிர் சாதம், பொங்கல், உப்புமா….


வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 15, 2008 at 9:58 பிற்பகல்
jayashri, all your recepies are too good, i’m a new visitor to your website and really very impressed..Keep it going
திங்கட் கிழமை, பெப்ரவரி 18, 2008 at 1:23 பிற்பகல்
சனிக்கிழமை காலை சாப்பாட்டுக்கு இஞ்சித் துவையல்தான்.மற்றும் பீன்ஸ் கறி.மிஞ்சிய துவையல் இரவு இட்லிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாகவேயிருந்தது.
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 19, 2008 at 11:20 மு.பகல்
Suba நன்றி.
மதுரைக்காரரே, சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தீர்களா? அப்பத்தான் இஞ்சித் துவையல் இன்னும் சூப்பரா இருக்கும். பொதுவா துவையலுக்கு பருப்புக் கூட்டுதான் செய்வோம். இட்லிக்கு இஞ்சித் துவையலா? கலக்கறீங்க. எப்படியோ நல்லா இருந்தா சரி.
புதன் கிழமை, பெப்ரவரி 20, 2008 at 10:20 பிற்பகல்
நேயர் விருப்பம் நிறைவேற்றிய ஜெயஸ்ரீ க்கு ந்ன்றி. இன்னும் செஞ்சு பாக்கல. வீட்ல சொல்லி செய்ய சொல்லிச் சாப்டனும்.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 22, 2008 at 11:41 மு.பகல்
ஐயப்ஸ், செய்யச் சொல்லி சாப்பிடாட்டி, நீங்களே செஞ்சு அசத்தலாமில்ல. இது என்ன கஷ்டமானதா? பெண்ணியம் எல்லாம் இல்லை. இல்லவே இல்லை. சும்மா ஒரு சேஞ்ச் இருக்குமில்ல குடும்பத்துக்கும்.
திங்கட் கிழமை, பெப்ரவரி 25, 2008 at 11:10 பிற்பகல்
செய்யப் போனா திட்டு விழும். ஒரு வேலைக்கு ஒன்பது வேலை வெச்சுட்டு போவீங்கன்னு.
btw, மத்த சமையல் சின்ன சின்னதா செஞ்சு தருவேன். ஒரு நாளைக்கு விருந்து சமைச்சுப் போடணும். சீரியஸா சொல்லணும்னா… after all இது கூட செய்யலைன்னா i cant be called “Husband”
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 26, 2008 at 11:41 மு.பகல்
ஐயப்ஸ், இந்த சாக்கையே என்னும் எவ்வளவு காலம் தான் சொல்லிகிட்டிருப்பீங்க ஆண்கள்? ஒரு சேலஞ்சுக்கு ஒரு வேலைகூட மிச்சம்வைக்காம தொழில்சுத்தமா செய்யக் கத்துகிட்டா என்ன?