தேவையான பொருள்கள்:
காலிஃப்ளவர் – அரைக்கிலோ
உருளைக் கிழங்கு – 2 (பெரியது)
பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி (விரும்பினால்)
வெங்காயம் – 1 (பெரியது)
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 4 பல்
தனியாத் தூள் – 2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கசுரி மேத்தி – 1 டீஸ்பூன் (कसुरी मेथी, Kasuri Methi -விரும்பினால்)
எலுமிச்சைச் சாறு – சில துளிகள் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
தாளிக்க: எண்ணெய், சீரகம்.
செய்முறை:
-
உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
காலிஃப்ளவரை சற்றே பெரிய துண்டுகளாகப் பிரித்துக் கொள்ளவும்.
-
இஞ்சி பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளிக்கவும்.
-
பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து சிறிது வதக்கவும்.
-
வெங்காயம் சேர்த்து, பொன்னிறமானதும், தக்காளி, காலிஃப்ளவர் துண்டுகள், வேகவைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்க்கவும்.
-
மேலே தனியாத் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.
-
காலிஃப்ளவர் வெந்து நீர் வற்றும்வரை அவ்வப்போது திறந்து, கிளறிவிடவும்.
-
விரும்பினால் இறக்குமுன் கரம்மசாலா, கசுரி மேத்தி(कसुरी मेथी, Kasuri Methi) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
-
எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை நறுக்கிக் கலந்து பரிமாறவும்.
* கரம் மசாலா சேர்க்க விரும்பாதவர்கள் அதற்குப் பதில் மிளகாய் அல்லது மிளகாய்த் தூள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தேங்காய் சாதம், சீரக சாதம் போன்ற சாதம் வகைகளுக்கு உபயோகிக்கலாம்.
சப்பாத்தி வகைகளுக்கு மிகவும் பொருந்தும்.

சனிக்கிழமை, பெப்ரவரி 16, 2008 at 9:27 மு.பகல்
hi jayasree,
unga samayal pathivu ellame romba nalla irukku especially unga comments.
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 19, 2008 at 3:12 மு.பகல்
தலைப்பு Aloo Gobhi அல்லது Aloo Gobi ன்னு இருக்கணுமோ ?
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 19, 2008 at 11:47 மு.பகல்
ஜெயஸ்ரீ, இது முக்கியமான விஷயம். மாற்றிவிட்டேன். இனி கவனமாக இருப்பேன். நன்றி.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 22, 2008 at 1:29 மு.பகல்
அன்பு ஜெ,
ரொம்ப நாளாவே அடிபட்டுக்கிட்டு (விழுந்து விழுந்து) படிச்சிட்டு இருக்கேன் உங்க பதிவ. எப்ப படிச்சாலும் உத்தரவாதமா உடனே பசி வந்துரும். இன்னும் செஞ்சு பார்க்கத்தான் சான்ஸ் இல்லை (அம்மா இந்தியாவிலேர்ந்து விசிட்டிங்). பொறாமையா இருக்கு பதிவையும், அதோட விஸ்தீரணத்தையும் பார்த்து. கலக்குங்க.
By the way, ingredients ல சொல்லிருக்கீங்களே – அது கசூரி (காய்ஞ்ச) மேத்தி, கஸ்தூரி மேத்தி இல்லை. ரொம்ப சன் டிவி சீரியல் பார்க்கறீங்களோ?
ப்ரியத்துடன் ப்ரியா
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 22, 2008 at 11:59 மு.பகல்
ப்ரியா,
அன்பு ஜெயஸ்ரீ, ப்ரியத்துடன் ப்ரியா, திஸ்கி எழுத்துரு(நான் யுனிகோடுக்கு மாத்தினேன்) எல்லாம் பாத்து புல்லரிப்பாப் போச்சு. எப்படி இருக்கீங்க? இணையம்- தமிழ்ப்பதிவுகள்- என் பதிவு படிக்கறீங்கறதே பெரிய செய்தி. திருத்துவீங்கன்னா நிறைய தப்புவிடலாம்.
அது கசூரி கூட இல்லை, கசுரிதான். நாங்க வழக்குல அதுகூட சொல்றதில்லை. சூகா மேத்திதான். திருத்திட்டேன். இனி இந்தமாதிரி வார்த்தைகளை ஆங்கிலம் ஹிந்திலயும் கொடுக்கறது நல்லது. ஏன் கஸ்தூரின்னு அடிச்சேன்னு எனக்கே தெரியலை. சன் டிவி சீரியல்ல அப்படி சொல்வாங்களா? சீரியல் எல்லாம் நேரம் நினைவுவெச்சு பாக்கறதும் தொடர்கதை படிக்கறதும் ஒருகலை. எனக்கு அது ரெண்டுமே வரலை.:( சமீபமா என் கசின் தொல்லை தாங்காம ‘காதலிக்க நேரமில்லை’ பாக்க ஆரம்பிச்சு ஒரு வாரத்துல 3 நாள் மறந்துட்டேன்.
என் சீரியல் அறிவு அவ்ளோதான்.
அம்மா விசிட்டே பெரிய பொறாமைச் செய்திதான்.