தேவையான பொருள்கள்:
இஞ்சி (நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் -நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 2, 3
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள்டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணெய், கடுகு.
செய்முறை:
-
இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
-
ஆறியதும், மிக்ஸியில், தேவையான உப்பு, பெருங்காயம், சேர்த்து அரைக்கவும்.
-
அத்துடன் சிறிது நீர்சேர்த்து நறுக்கிய இஞ்சி, தேங்காய்த் துருவல், புளி, வெல்லம் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
-
ஒரு டீஸ்பூன் எண்ணெயி.ல் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
* நான் வெல்லம் சேர்ப்பதில்லை. சுவையாகவே இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொதுவாக தோசைகள், உப்புமா, பொங்கல் வகைகளுடன் சேரும் என்றாலும் வழமையாக ஆந்திர பெசரட்டுடன் பரிமாறப் படுகிறது. தயிர் சாதத்திற்கு மிகப் பொருந்தும்.

திங்கட் கிழமை, பெப்ரவரி 11, 2008 at 2:44 பிற்பகல்
நன்றி ஜெயஸ்ரீ.. கூடவே இஞ்சித் துவையல் பத்தி போடுங்களேன்
திங்கட் கிழமை, பெப்ரவரி 11, 2008 at 2:49 பிற்பகல்
சொல்ல மறந்துட்டேன். வெளிச்சம் கம்மியா இருக்கறப்ப போட்டோ எடுத்திருக்கீங்க போல.. கை அசைஞ்சது தெரியறது
.. சட்னிய நல்லா பாக்க முடியல
திங்கட் கிழமை, பெப்ரவரி 11, 2008 at 9:07 பிற்பகல்
Jayashree, going crazy after your blog. I too tried this chutney without adding jaggary for curd rice. It came out very well. But may I know what is the difference between inji thugaiyal and inji chutney? I like thugaiyal too. Where can I get that recipe?
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 12, 2008 at 5:46 பிற்பகல்
ஐயப்ஸ்,
((
நான் எடுக்கற எல்லா படமுமே அதிகாலைல, இருட்டுல, அவசரத்துல, கைநடுக்கத்துல(இப்ப குளிர்லயும் மும்பை நடுங்குது!), ஆவிபறக்கும்போது ப்பூ ப்பூன்னு ஊதி, அரைவேக்காட்டுத்தனமா எடுக்கறதுதான். இஞ்சிச் சட்னி சரியா வரலைன்னு நீங்க ஆச்சரியப்படறீங்க. எப்படி மத்ததெல்லாம் சரியா வருதுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு. சரி விடுங்க, இன்னொருநாள் இந்தச் சட்னி செய்யும்போது படத்தை மாத்திடலாம். ஆனா இந்தத் திட்டம் இந்தப் படத்துக்கு மட்டும்தான். பப்பு புலுசுக்கு இல்லவே இல்லை.
இஞ்சித் துவையல் செஞ்சுடலாம்.
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 12, 2008 at 5:49 பிற்பகல்
vidhya,
பொதுவா துவையலுக்கும் சட்னிக்குமான வித்யாசம் இங்க இருக்கு.
அதுதவிர சட்னிக்கு தாளிப்போம். துவையலுக்கு இல்லை.
இஞ்சி சட்னி பொதுவா விருந்தாளிகள் வரும்போது, வீட்டு விசேஷங்களின் போது ஊறுகாய்க்கு மாற்றா அல்லது ஊறுகாயோட சேர்த்து இன்னொரு உணவா தொட்டுக்கொள்ள பரிமாறலாம். ஊறுகாய் சேர்க்காதவங்களுக்கு உபயோகமா இருக்கும். ஒரு ஹெவி உணவுக்கப்புறம் கடைசில தயிர்சாதத்தோட இஞ்சி நல்ல ஃபினிஷ். நாவுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம்.
இஞ்சி துவையலுக்கும் இஞ்சி சட்னிக்கும் அதே மாதிரி அதிக வித்யாசம் இல்லை. அதையும் உபயோகிக்கலாம். ஆனா வீட்டுல சாதா நாள்கள், திதி நாள்கள் தவிர மேலே சொல்லியிருக்கற விருந்து, விசேஷ நாள்கள்ல எங்க வீட்டுல துவையல் செய்றதில்லை. பொதுவா எல்லார் வீட்டுலயும் அப்படித்தான்னு நினைச்சுகிட்டிருக்கேன். அதனால சட்னி.
சனிக்கிழமை, அக்டோபர் 4, 2008 at 9:14 மு.பகல்
ஏதோ உங்கள மாதிரி நாலு பேர் சமையல் பதிவு எழுதற புண்ணியத்தால வெரைட்டியா நாலு ஐட்டம் கிடைக்குது மிக்க நன்றி ஜெயஸ்ரீ.