நான் திருமணமாகி, மஹாராஷ்டிரா வந்தபோது, ஊருக்கு வந்து இறங்கியதும் ஊர்த்தலைவர் தன் வீட்டிற்குக் கூட்டிப்போய் கொடுத்ததிலிருந்து இந்த ஆலூ போஹா அறிமுகம். அதற்குப்பின் தொடர்ந்து யார் வீட்டிற்குப் போனாலும் எல்லா உணவுகளோடும் நிச்சயம் இது உண்டு. பத்தே நிமிடங்களில் தயாரித்து, ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொடுக்கப்படும் இந்த உணவின் சுவை என்னை அவ்வளவு ஈர்த்தது. இதற்காகவே அவர்கள் சூஜி கா அல்வா என்று கொடுக்கும் சர்க்கரைக் குறைவான ரவை கேசரியை மன்னித்திருக்கிறேன். ஆனால் எனக்கு என்னவோ அப்பொழுதெல்லம் எத்தனை பேரிடம் செய்முறை கேட்டும், செய்வதை கூடவே நின்று பார்த்தும், செய்யவே வந்ததில்லை. இனி ஆலூ போஹாவே வாழ்க்கையில் செய்ய முயற்சிக்கக்கூடாது என்று ரங்கமணி சத்தியம் வாங்கும் அளவுக்கெல்லாம் சொதப்பியிருக்கிறேன்.
மீண்டும் இரண்டரை வருடங்கள் முன்பு ஹாங்காங்கிலிருந்து மும்பையில் விடிகாலை 3 மணிக்கு இறங்கியதிலிருந்து எதுவும் ஓடவில்லை. விடிந்ததும் விடியாததுமாக பெண்ணுக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு ஓடிப் போய் அப்ளிகேஷன் வாங்கி, பள்ளிகள் பண்ணும் பாவனைகளை(இந்தியப் பள்ளிகளின் பாவனைகள் எனக்குப் புதிது; அதிர்ச்சி) செரிக்கமுடியாமல் டென்ஷனாகி… “எனக்குப் பசிக்கவேயில்லை. வேலை முடியறவரைக்கும் யாரும் கிட்டயே வராதீங்க,” என்று உட்கார்ந்துவிட்டேன். “அப்படியெல்லாம் உன்னை விட்டுடமுடியுமா? மஹாராஷ்டிரா உன்னை வரவேற்கிறது” என்று சொல்லிக்கொண்டே ஸ்கூல் கேண்டீனில் வாங்கிய ஆலூ போஹா தட்டை ரங்கமணி நீட்டியதும், ஒரே ‘நியாபகம் வருதே நியாபகம் வருதே…’. வித்யாசமாய் நிலக்கடலை எல்லாம் சேர்த்திருந்தார்கள்.
ஏன் இதைத் தயாரிக்க இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.
தேவையான பொருள்கள்:
சன்ன அவல் – 1 கப்
வெங்காயம் – 1 (பெரியது)
உருளைக் கிழங்கு – 1 (பெரியது)
பச்சை மிளகாய் – 2, 3
எலுமிச்சை – அரை மூடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல்
தாளிக்க:
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
நிலக்கடலை – 12, 15 (விரும்பினால்)
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
-
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
உருளைக்கிழங்கை தோல் சீவியோ சீவாமலோ(நான் தோலை நீக்குவதில்லை.) பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
-
அடுப்பை சிம்மில் வைத்து, அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
-
உருளைக் கிழங்கோடு, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
-
உருளை வதங்கும் நேரத்தில், அவலை நீரில் சில நொடிகளுக்குள் அலசி நன்கு வடியவிடவும். அதிகம் தண்ணீரில் அவல் ஊறிவிடக் கூடாது.
-
வடித்த அவலையும் சேர்த்து மென்மையாகக் கிளறிவிடவும்.
-
அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.
-
கேரட் துருவியில் தேங்காயை சன்னமாகத் துருவி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து பரிமாறவும்.
* உப்பு, மஞ்சள்தூளை முதலிலேயே சேர்த்தால்தான் அவலில் அவை சிரமமில்லாமல் முழுமையாகக் கலக்கும்.
* கெட்டி அவலிலும் செய்யலாம். கெட்டி அவல் 4,5 நிமிடங்கள் ஊறினால் சரியாக இருக்கும். ஆனால் சன்ன அவல் தண்ணீரில் அதிகம் இருந்துவிடாமல் உடனடியாக வடித்து அடுப்பில் சேர்த்துக் கிளறிவிடவேண்டும்.
இப்போதும், “ஆலூ போஹா என்று கேட்காதீர்கள், அவல் உப்புமா என்றேஏ க்கேட்டு வாங்குங்கள்!!” என்று டேபிளுக்கு வரும்போதே ரங்கமணி கிண்டலும் தங்கமினி ‘கிக்கிக்கி’ சிரிப்பும் இருக்கிறது. உண்மையிலேயே நன்றாக இருந்தாலும் எதோ குறைகிறது. தமிழச்சி கைக்கு இவ்வளவுதான் வரும் என்று அலம்பிக் கொண்டிருக்கிறேன்.

செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 5, 2008 at 3:08 பிற்பகல்
//நான் திருமணமாகி, மஹாராஷ்டிரா வந்தபோது, ஊருக்கு வந்து இறங்கியதும் ஊர்த்தலைவர் தன் வீட்டிற்குக் கூட்டிப்போய் கொடுத்ததிலிருந்து இந்த ஆலூ போஹா அறிமுகம்.//
ஒன்றரை வருட என் சாப்பாட்டில் பெரும்பங்கு வகித்திருக்கிறது இந்த போஹா!
// தமிழச்சி கைக்கு இவ்வளவுதான் வரும் என்று அலம்பிக் கொண்டிருக்கிறேன்.//
என்ன கொடுமைங்க இது சரவணன்!
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 5, 2008 at 5:46 பிற்பகல்
உங்க தலைப்பை பார்த்து என்னடா blog ஐடியா மாத்தி Pogo சேனல்பத்தி எதும் matter-o நினைச்சேன்//
“தங்கமினி” name superb Aaha Pogo dhaan
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 5, 2008 at 7:46 பிற்பகல்
// தமிழச்சி கைக்கு இவ்வளவுதான் வரும் என்று அலம்பிக் கொண்டிருக்கிறேன்.//
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 5, 2008 at 9:50 பிற்பகல்
எங்க ஊட்டுக்காரம்மா மஹாராஷ்ட்ரா போகாமலேயே இதை செய்வார்கள். நன்றாகவும் இருக்கும். எதுக்கும் இருக்கட்டூம் என உங்க ரெசிபியை பிரிண்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறேன்..
உங்க வலைப்பதிவைப் ப்பற்றி எனது நன்பர் ஒருவர் ஏழுதிய கமெண்ட் இது..
//Good morning Mr. Jeyakumar,
Thanks for your kind concern. I had been to Thalikkum Oosai. The comments are more nice than the recipes.
I will get back to you after reading your valaippoo. Nandri.
Sudh@//
புதன் கிழமை, பெப்ரவரி 6, 2008 at 9:21 பிற்பகல்
Hello Jash,
Ohhhhhhhh what a nice receipy so i can send this aallu Boha for my daughters school:-). Very nice to see in this picture. Ok done tomorrow and i ill tell u h it came. Bye bye good night by ur friend Ramakannan from Mysore
புதன் கிழமை, பெப்ரவரி 6, 2008 at 9:39 பிற்பகல்
Hello Jash,
I forget to tell u one thing because i know h to get the school seat in India because i suffer two years back I return from GULF. So nice receipy. Ur friend Rk
வியாழன், பெப்ரவரி 7, 2008 at 9:59 பிற்பகல்
மோகன்தாஸ்,
போஹாவைப் பாத்ததும் எனக்கு செம சகுனமா தெரிஞ்சது.
உஷா, நான் ஏதோ யதார்த்தமா தான் சொன்னேன். நிஜமாவே. அது எங்கவீட்டு பல வருட பழைய டயலாக்.
Adiya, தங்கமினி வீட்டுல அடிக்கற pogo கூத்தே தாங்கலை. இதுல நான் வேறயா/
வியாழன், பெப்ரவரி 7, 2008 at 10:07 பிற்பகல்
ஜெயகுமார்,உங்களுக்கும் உங்க நண்பருக்கும் நன்றி. நானும் நல்லாத்தாங்க செய்வேன். ஆனா ஏதோ ஒரு.. அந்த மஹாராஷ்டிர டச் மிஸ் ஆகும். அதைத்தான் சொல்லவந்தேன்.
அது போகட்டும்,
////எங்க ஊட்டுக்காரம்மா மஹாராஷ்ட்ரா போகாமலேயே இதை செய்வார்கள். நன்றாகவும் இருக்கும். எதுக்கும் இருக்கட்டூம் என உங்க ரெசிபியை பிரிண்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறேன்..////// \
இந்தத் தோரணையான விமர்சனத்தை நான் எங்கயோ பார்த்திருக்கேனே. நீங்க ‘அந்த’ இலக்கியவாதிக்கு ஏதாவது உறவா?
)
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 8, 2008 at 1:26 பிற்பகல்
Hi Jay Mam,
Have A Nice Day…
I tried ur Poha and Maida Dosa…It turned out very well.Wonderful recipes.I admire ur way of presentation. Its awesome.Pls do add a column for baby food recipes.It would be very much helpful for moms like me.
செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 12, 2008 at 5:39 பிற்பகல்
Amudha,
என் குழந்தை கொஞ்சம் எடையாக இருப்பாள். அதனால் அதிகம் அவளுக்கென பிரத்யேகமான உணவுகளை மருத்துவரை ஆலோசித்து தான் கொடுத்துவந்தேன். அப்படி ‘ச்சோசை’ என்று கேட்கும்போதெல்லாம் செய்துதருவதுதான் இந்தத் தோசை.
அதிகம் அரிசி, கொழுப்பு இல்லாமல் பருப்பு, காய்கறிகளே அதிகம் இருக்கும். சர்க்கரை இன்றுவரை எந்தப் பால் பானங்களிலும் சேர்ப்பது அவளுக்குப் பிடிப்பதில்லை. அப்படியே பழகிவிட்டாள். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சரியாக இருக்காது. ஆனாலும் எனக்குத் தெரிந்தவரை அவ்வப்போது சொல்கிறேன்.
வியாழன், பெப்ரவரி 14, 2008 at 12:29 பிற்பகல்
Thanks a lot Jay mam…My daughter is now 9 months old…I started solid foods to her…