தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய் – 1/2 கிலோ
பயறு – 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3, 4
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:
-
துவரம்பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
-
விரும்பினால் தட்டப்பயறை ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். (கத்தரிக்காய்க்கு கொத்துக்கடலையும் நன்றாக இருக்கும். பயறு வகை எதுவும் சேர்க்காமலும் செய்யலாம்.)
-
கத்திரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
-
நறுக்கிய கத்தரிக்காயை தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.
-
முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது, வேகவைத்த பயறு சேர்த்து, தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு கொதிவிடவும்.
-
வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
-
நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
* இதே முறையில் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரங்காய், அவரைக்காய், புடலங்காய் போன்றவற்றிலும் விரும்பினால் காய்க்குப் பொருத்தமான பயறு சேர்த்தோ, சேர்க்காமலோ செய்யலாம்.

சனிக்கிழமை, December 22, 2007 at 7:32 பிற்பகல்
Nice.
1/2 கிலோ கத்தரிக்காய் சாதாக் கூட்டை பக்க உணவாக எத்தனை பேருக்குப் பறிமாறலாம் என்று சேர்த்திருந்தால் என்னைப் போன்ற கற்றுக்குட்டிகளுக்கு அளவு புரிபடும்.
திங்கட் கிழமை, December 24, 2007 at 10:25 மு.பகல்
பிரகாஷ், இதற்குமுன்னும் யாரோ இப்படி எழுதச் சொன்னார்கள். பொதுவாக சமையல் குறிப்புகளில் அப்படித்தான் குறிப்பார்கள். ஆனால் எனக்கு இது சரியாகத் தெரியவில்லை அல்லது சொல்லவரவில்லை. 4 பேருக்கு என்று பொதுவாகச் சொன்னால், அவர்கள் யார், எந்த வயதினர், என்ன அளவு சாப்பிடுவார்கள் என்று ஏதாவது கணக்கு இருக்கிறதா? பொதுவாக அவரவர் வீட்டிற்கு என்ன அளவு வாங்குகிறோமோ அதை இந்த முறையில் செய்வதுதான் சரி.
புதன் கிழமை, ஜனவரி 2, 2008 at 5:27 பிற்பகல்
Madam,
I keep seeing your receipes and trying at home.This “Kootu” is it same as Pulippu kootu. I am not seeing tamarind in the list.
Please do clarify me. Puli illaiamaiyum panna mudiyuma ????
வெள்ளிக்கிழமை, ஜனவரி 4, 2008 at 12:51 பிற்பகல்
Priya, புளி இல்லாமலும் செய்யலாம். புளிக் கூட்டு இனிமே வரும்.