* நண்பர் ஸ்ரீகாந்த் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடல்கள் குறித்து எழுத இருக்கிறார் என்று தெரிகிறது. ஆர்வமுள்ளவர்கள் இங்கு சென்று படிக்கலாம். http://bhakthi.wordpress.com/
* நண்பர் மதுரபாரதி திருவெம்பாவை பாடல்களுக்கு விளக்கம் அளிக்க இருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் இங்கு சென்று படிக்கலாம். http://mozhi.blogspot.com/
-0-
எழுத்தாளர் மாலதி சதாரா– ஏராளமான எழுத்துத் தகுதிகளுக்கும் அப்பால் முக்கியமாக “திருப்பாவை பிரவசனம் பண்ணுவதுண்டு. அது என் ஆன்மா” என்று சொல்லிக்கொண்டவர் இரண்டு வருடங்கள் முன்பு ராயர் காப்பி கிளப்பில் தொடர்ந்து 30 நாள்களும் திருப்பாவைப் பாடல்களுக்கான அக, புற ஆழ்ந்த அர்த்தங்களை எளிமையான நடையில் அழகாக எடுத்துவைத்தார். இரா.முருகன் அவர்களால் குழுமத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அம்மடல்கள் குழுமத்துக்குள்ளேயே கண்டுபிடிக்க முடியாமல் போய்விடக் கூடாதென்பதற்காக தனியாக எடுத்துவைத்துக் கொள்ள நினைத்தேன். அவற்றை இங்கேயும் கொடுத்திருக்கிறேன். ஆர்வம் இருப்பவர்கள், நேரமும் இல்லாவிட்டாலும் முடிந்தபோதோ அல்லது தேவையான பொழுதோ சுலபமாக சுட்டியைப் பிடித்து, படித்துக்கொள்ள வசதியாக பாடலும் சுட்டிகளும் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
நன்றி: மாலதி, ராகாகி.
எழுத்தாளர் இரா.முருகன் அறிமுகத்தோடு
முன்னுரை (1)–> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10407
முன்னுரை (2) –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10408
01. மார்கழித் திங்கள் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10409
02. வையத்து வாழ்வீர்கள் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10410
03. ஓங்கி யுலகளந்த –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10411
04. ஆழிமழைக் கண்ணா –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10413
05. மாயனை மன்னு –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10415
06. புள்ளும் சிலம்பின –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10425
07. கீசுகீசென் றெங்கும் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10433
08. கீழ்வானம் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10436
09. தூமணி மாடத்துச் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10439
10. நோற்றுச் சுவர்க்கம் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10443
11. கற்றுக்கறவை –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10449
12. கனைத்திளங் கற்று –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10471
13. புள்ளின்வாய் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10485
14. உங்கள் புழைக்கடை –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10489
15. எல்லே! இளங்கிளியே! –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10509
16. நாயகனாய் நின்ற –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10523
17. அம்பரமே தண்ணீரே –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10536
18, உந்துமதகளிற்றன் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10549
19. குத்துவிளக்கெரிய –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10559
20. முப்பத்து மூவர் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10567
21. ஏற்றக்கலங்கள் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10575
22. அங்கண்மா ஞாலத்து –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10577
23. மாரிமலை –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10578
24. அன்றுஇவ் வுலகம் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10587
25. ஒருத்திமகனாய் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10600
26. மாலே! மணிவண்ணா! –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10628
27. கூடாரைவெல்லும் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10638
28. கறவைகள் பின்சென்று –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10643
29, சிற்றஞ்சிறுகாலே –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10661
30. வங்கக்கடல் –> http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10661

திங்கட் கிழமை, December 17, 2007 at 10:35 மு.பகல்
மாலதி அவர்கள் மறைந்தது எனக்கு தெரியாது… இப்போதுதான் தெரிய வந்தது. அதிர்ச்சியாக இருந்தது.
நானும் அவரது திருப்பாவை உரையை படித்து இருக்கிறேன். அவர் ஆழ்ந்து அனுபவித்து மிக எளிமையாக புரியும்படியாக எழுதியிருக்கிறார்.
மற்றபடி நான் எழுத முயற்சிப்பதெல்லாம் மார்கழி பனிக்காக அங்கங்கே ஒதுங்கியபோது காதில் விழுந்தது. எதோ எழுதணும் என்ற ஆசை அவ்வளவுதான். ‘அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும் – சீறியருளாதே!” என்று வேண்டிக்கொண்டு துணிச்சலாக ஆரம்பித்தாகி விட்டது.
நேற்று திருப்பதி போய்விட்டு முப்பது பாசுரங்களையும் ஜீயர் சேவிக்க நின்று கேட்டு தரிசித்து வந்தேன். எந்த தவறிருந்தாலும் அவனே திருத்திப் பணிகொள்வன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
திங்கட் கிழமை, December 17, 2007 at 10:56 மு.பகல்
http://www.anyindian.com/product_info.php?products_id=13313
புத்தகமாக வந்திருக்கிறது.
திங்கட் கிழமை, December 17, 2007 at 11:12 மு.பகல்
ரொம்ப நன்றி ஜெ.
இதைத்தான் தேடிக்கிட்டு (???) இருந்தேன்.
திங்கட் கிழமை, December 17, 2007 at 11:31 மு.பகல்
அக்கா நன்னி!
திங்கட் கிழமை, December 17, 2007 at 5:15 பிற்பகல்
நன்றி. தேசிகனும் அருமையாக எழுதி இருக்கிறார் என்ற்ற் நினைவு. அவர் பதிவுகளில் படித்திருக்கிறேன்.
திங்கட் கிழமை, December 17, 2007 at 11:11 பிற்பகல்
முதலில் மதுமிதா அக்கா,
இப்போது ஜெயஸ்ரீ அக்கா
ஒரு
யூனிவர்சல் ப்ரதர்
ஆயிட்டு வரார் மோகனதாசு.
விவாதம் என்ற பெயரில்
பெண்களிடம் கெடுத்துக்கொண்ட பெயரை
மீட்டெடுக்கும் முயற்சியா
சமீபத்தில் சந்தித்த
அழகிய இளம்பெண்ணொருத்தியின்
அந்தரங்க ஞானோபதேசமா
போகப் போகத் தெரியும்
செவ்வாய்க் கிழமை, December 18, 2007 at 6:50 மு.பகல்
ஒருபக்கம் திருப்பாவை பரமபக்தி கோஷ்டியிலும் இருந்து கொண்டு இன்னொரு பக்கம் பெரியார் ஆஹா ஓஹோ என்று சொல்கிறவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிற கோஷ்டியிலும் இருப்பவர்களைப் பற்றி ஆண்டாள் ஏதும் பாடியிருக்கிறாரா? நிஜமாகவே தெரிந்து கொள்கிற ஆசைதான்.
செவ்வாய்க் கிழமை, December 18, 2007 at 12:27 பிற்பகல்
பி.கே.எஸ், நேற்றுதான் பையன் தன்னை நாத்தீகவாதி என்று அறிவித்துக் கொண்டானே, இன்றைக்கு “நன்றி அக்கா” என்றும் பாசுரம் போட்ட ஜெயஸ்ரீக்கு நன்றி சொல்கிறானே என்று நானும் ஒருபின்னுட்டம் போடலாம் என்று இருந்தேன்.
))))))))
நன்றி
செவ்வாய்க் கிழமை, December 18, 2007 at 12:37 பிற்பகல்
ஜெயஸ்ரீ அக்கா,
நான் உங்கக்கிட்ட சொல்லியிருந்த ரகசியத்தை பிகேஎஸ்ஸும் உஷாவும் கேக்குறாங்கன்னு சொல்லிடாதீங்க.
நாம ஆண்டாள் பற்றி பேசி ஒரு, ஒரு மாதம் இருக்குமா?
செவ்வாய்க் கிழமை, December 18, 2007 at 8:45 பிற்பகல்
உஷாஜி, Atheist or Pious as situation demands to show the presence and put forward one’s own interests என்று நான் எழுதிய பின்னூட்டம் ஒரு யுனிவர்சல் பின்னூட்டம். பலருக்கும் பொருந்தக் கூடியது.
அது தம்பி மோகன்தாசுக்கும் பொருந்தலாம் என்று நீங்கள் நினைத்தால் அது என் எழுத்து வன்மையின் வெற்றி
. – பி.கே. சிவகுமார்
செவ்வாய்க் கிழமை, December 18, 2007 at 9:25 பிற்பகல்
ஜெயஸ்ரீ அக்கா உண்மையச் சொன்னாங்கன்னா பிகேஎஸ், உஷா நீங்க இரண்டுபேரும் பயங்கர கடுப்பாய்டுவீங்க என் மேல.
ம்ஹூம் என் வாயைக் கிண்டுறீங்க நான் சொல்லமாட்டேன் ரகசியத்தை.
செவ்வாய்க் கிழமை, December 18, 2007 at 10:32 பிற்பகல்
துளசி நன்றி மாலதிக்கு.
தேசிகன் முந்தின வருஷங்கள்ல எழுதியிருக்காரு. போனவருஷமே 7, 8 நாள் ஏதோ உவமையா எடுத்துப் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துட்டாரு. கேட்டுப் பாக்கலாம்.
ஸ்ரீகாந்த், நீங்களாவது வெளிய வந்து பனிக்கு ஒதுங்கி கேட்டிருக்கீங்க. நாங்களெல்லாம் பனிகொட்டுதுன்னு வெளியவே வரலை. திருப்பதி ஜீயரோட தரிசனம். ம்…
அப்றம் மரத்தடில சின்னக்கண்ணனுக்கு சொன்னதுதான் உங்களுக்கும். சமுத்தரத்துல மேல்பாகம், அடிஆழம்னெல்லாம் இல்லை. எல்லாமே சமுத்திரம்தான். அதுதான் திருப்பாவை விளக்கத்துக்கும். தைரியமா தொடர்ந்து எழுதுங்க. நல்லாவரும். அப்படியே கீழ இருக்கறதை நீங்களும் தேசிகனும் படிக்காதீங்க.
செவ்வாய்க் கிழமை, December 18, 2007 at 10:35 பிற்பகல்
பத்மா,
ஸ்ரீகாந்த், தேசிகன், எ.அ.பாலா,…. இவங்க எல்லாம் ஆண்கள். அதனால அந்த வகைல இருக்கும்.
ஆனா மாலதி ஒரு பெண்ணா ஃபுல்ஃபார்ம்ல இருக்கும்போது எழுதினது.
படிச்சா வித்யாசம் தெரியும். திருப்பாவையை பக்தி இலக்கியமாவே சொல்லலை. நீராட்டல் பறை நாராயணன் பேரை அங்கங்க சொல்றதெல்லாமே கூட குட்டீஸ் வட்டத்துல சொன்ன குழூஉக்குறின்னு ஒரு போடு போட்டு கொண்டுபோயிட்டாங்க. தயவுசெய்து படிச்சுப் பாருங்க.
முதல்தடவை படிக்கும்போது எப்படி உணர்ந்தேனோ இப்பவும் அப்படியே இருக்கு.
செவ்வாய்க் கிழமை, December 18, 2007 at 10:36 பிற்பகல்
சிவா,
எனக்கு ஒன்னு புரியலை. அடிப்படையா இந்தப் பின்னூட்டமே நீங்க போட்டதான்னு சந்தேகமா இருக்கு.
பெரியாரைப் பாராட்டினவங்க திருப்பாவை விரும்பிப் படிக்கக் கூடாதா? இப்படிச் சொல்லி சொல்லிதான் தமிழ்நாட்டுல பக்தி இலக்கியமாகூட ஆழ்வார் பாசுரங்கள் பெரிய அளவுல கவனிக்கப்படாம போயிடுச்சு. தமிழை வளர்க்கறதா சொல்றவங்க எல்லாம் இதைப் புறக்கணிச்சு மிச்சத்தைத் தான் பேசறாங்க. இப்பத்தான் மருத்துவரய்யாவுக்கு வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனைத் தெரிஞ்சிருக்கு. ஊட பூந்து யாரும் கெடுத்துடாம இருக்கணும்.
இரண்டாவது, பெரியார் அடிப்படை நோக்கத்தை நான் மிகவும் மதிக்கறேன். ஆனா அவரது பெரும்பாலான செயல்வடிவத்தை அல்லது அதை எழுதியிருக்கற எந்தப் பதிவுலயாவது போய் நான் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்த மாதிரி எனக்கு நினைவில்லை. வரவர ஆதாரம் இல்லாம என்மேல புகார்கள் எழுதறது அதிகமாயிடுச்சு. நீங்களுமா?
சரி போகட்டும். உங்க மோகனதாசக் கவிதை அருமை. ஆனா பொருட்குற்றம் இருக்கு.
///
முதலில் மதுமிதா அக்கா,
இப்போது ஜெயஸ்ரீ அக்கா
ஒரு
யூனிவர்சல் ப்ரதர்
ஆயிட்டு வரார் மோகனதாசு.
////
இதை நான் கடுமையா ஆட்சேபிக்கறேன்.
கல்தோன்றா மண்தோன்றா மூத்த
மரத்தடி தோன்றிய காலத்துலேருந்தே
மோகனதாசு என்னை அக்கான்னு தான்
கூப்பிட்டுகிட்டிருக்காரு.
தம்பி கடிதங்களுக்கு subject பாத்தீங்கன்னா, “அக்கா ஒரு விஷயம்!”, “அக்கா இரு டவுட்டு!” இப்படித்தான் இருக்கும். (எனக்கும் ஒரு தம்பி இருக்கானே, பாதி தூங்கறவளை எழுப்பி, என்னடீ செய்ற இந்த நேரத்துல, ஹவுஸ்வைஃபா லட்சணமா தூங்கி ரெஸ்ட் எடுக்கலாமில்ல? தூங்கு!”ன்னு அட்வைஸ்.)
அதனால சொல்லவரது என்னனா,
முதல்ல ஜெயஸ்ரீ அக்கா
இப்போது மதுமிதா அக்கா.
நமக்கும் வரலாறு ரொம்ப முக்கியம்.
///விவாதம் என்ற பெயரில்
பெண்களிடம் கெடுத்துக்கொண்ட பெயரை
மீட்டெடுக்கும் முயற்சியா////
இது சாத்தியம்னு நம்பறீங்களா?
எனக்கென்னவோ மீட்கவே முடியாத
அளவுக்கு டோட்டல் டேமேஜ்னு தான் தோணுது.
இதுல கூட்டாளி ஆசிப்பு. தேறுமா இந்த கேஸ்?
////சமீபத்தில் சந்தித்த
அழகிய இளம்பெண்ணொருத்தியின்
அந்தரங்க ஞானோபதேசமா
போகப் போகத் தெரியும்///
இது வேறயா? மோகனா(நன்றி: லஷ்மி),
ஏழெட்டு ஈ-நாத்தனார்கள் இணையத்துல இருக்கோம்னு அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டீங்களா? தலைதெறிக்க ஓடீடுவாங்க.
உஷா, மோகன்தாஸ் நாத்திகவாதி. ஜெய்ஸ்ரீ அக்கா எழுதவரணும்னு சாமி கும்பிடற நாத்திகவாதி. பாவம் நாத்திகம்!
மோகன்தாஸ், நீங்க ஆண்டாள் பத்தி கடிதம் எழுதி இந்த நிமிஷத்தோட 48 நாள் 2 மணி, 5 நிமிடம் 20 நொடி ஆறது.
)
செவ்வாய்க் கிழமை, December 18, 2007 at 11:30 பிற்பகல்
//இது வேறயா? மோகனா(நன்றி: லஷ்மி),//
அக்கா,
பிகேஎஸ் இதை ஒரு விஷயமா செய்துக்கிட்டு வர்றார்
எங்க அம்மாவுக்கு ப்ராமிஸ் செய்து கொடுத்திருக்கேன், அவங்க பார்க்கிற பொண்ணைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று.
இது போல் கிளம்பும் புரளிகளை நம்பவேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
புதன் கிழமை, December 19, 2007 at 6:42 மு.பகல்
ஜெ, என் எழுத்தோட வன்மை ரொம்பவும் அதிகமோ. எல்லாரையும் தன்னைச் சொல்றாரோன்னு யோசித்துப் பதிலெழுத வைக்குதோ
உங்களை நினைத்துச் சொல்லப்பட்டதில்லை அது. தம்பி மோகனதாசையும் நினைத்துச் சொல்லப்பட்டதில்லை. மற்றபடிக்கு, நான்தான் எழுதியிருப்பேனா என்ற சந்தேகமே வேண்டாம். நான் இப்படி என்கிற பிம்பங்களை உடைப்பதும் எனக்குப் பிடித்தமான வேலையே. மக்கள்ஸ்க்கு வாழ்க்கையில் ஒரு எதிர்பார்ப்பைக்கூடத் தரவில்லையென்றால் எப்படி? பெரியாரைப் பாராட்டினவங்க திருப்பாவையை விரும்பிப் படிக்கக் கூடாதா என்று கேட்டிருந்தீர்கள்? பேஷா படிக்கலாம். ஏழாவது மனிதன் படத்தின் டைரக்டர். பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. பக்கா நாத்திகர். ஆழ்வார்களைப் பற்றிப் படம் எடுத்திருக்கிறார். இதெல்லாம் எனக்கும் தெரியாதா என்ன
ஆனால், நான் சொல்ல வந்தது, நீங்கள் புரிந்து கொண்டது இல்லை. உள்ளுக்குள் திருப்பாவை கோஷ்டியாக இருந்து கொண்டு, ஊருக்குள் பெரியாரியவாதிகளாகவும், பெரியாரியவாதிகளை அண்டிப் பிழைக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களைப் பற்றிப் பொதுவாக எழுதிய லேசான நையாண்டி அது. (இதைப் படித்துவிட்டு யாராவது நண்பர் ரோசாவிடம் சென்று நான் அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று சொல்லப் போகிறார்கள்
அவரைச் சொல்லவில்லை. அவரை நிஜப் பெரியாரியவாதி என்றே இதுவரை நினைத்து வருகிறேன்.) இந்த அளவுக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும் என்றால், எழுதாமலே இருந்திருப்பேன். அடுத்த பதிவுக்குப் போவோம். ஜூட். – பி.கே. சிவகுமார்
புதன் கிழமை, December 19, 2007 at 7:42 மு.பகல்
அந்தரங்கமா ஒரு பொண்ணுகிட்ட பேசிட்டு, அம்மா சொல்ற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கறது அதைவிட மோசமாச்சே மோகனா. (ஏதோ என்னாலானது!)
ஆனா திருப்பாவைல உங்களுக்கு என்ன சந்தேகம் வந்ததுன்னு நான் பொதுவுல சொல்லலையே..
புதன் கிழமை, December 19, 2007 at 7:50 மு.பகல்
சிவா,
(((
எனக்கும் முதல்ல புரியலை. ஆனா எல்லாரும் சேர்ந்து என்னை குழப்பி திசைதிருப்பிட்டாங்க. அதான் கொஞ்சம் ரொம்பவே குழம்பிட்டேன். சாரி.
புதன் கிழமை, December 19, 2007 at 10:13 மு.பகல்
//அந்தரங்கமா ஒரு பொண்ணுகிட்ட பேசிட்டு, அம்மா சொல்ற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கறது அதைவிட மோசமாச்சே மோகனா. (ஏதோ என்னாலானது!)
ஆனா திருப்பாவைல உங்களுக்கு என்ன சந்தேகம் வந்ததுன்னு நான் பொதுவுல சொல்லலையே..
//
அக்கா விளையாடாதீங்க, அதுக்குள்ள பர்ஸனல் மெயில் வருது இரண்டு பெண்களின் வாழ்க்கையைக் கெடுக்கக்கூடாது அம்மாவிடம் பேசு, வேண்டுமானால் நான் பேசட்டுமா என்று
.
பிகேஎஸ் போல் இல்லாமல் நீங்க சொன்னா விளையாட்டா நினைக்க மாட்டாங்க எல்லாரும்.
புதன் கிழமை, December 19, 2007 at 11:47 மு.பகல்
எப்படியோ பழம் நழுவிப் பால்ல விழுந்து, தேன்ல விழுந்து அதுவும் நழுவி நேரா வாய்ல விழுது.(சகிக்குமா இந்த ரெசிபி?!) பின்ன என்ன, சரின்னு சொல்லிட்டு என்னை மாதிரி எட்டி இருந்து வேடிக்கை பாருங்க.:)அடுத்த வலைப்பதிவு மாநாட்டுல இதையும் சாதனையா சொல்லிக்கலாம்.
புதன் கிழமை, December 19, 2007 at 2:26 பிற்பகல்
//எங்க அம்மாவுக்கு ப்ராமிஸ் செய்து கொடுத்திருக்கேன், அவங்க பார்க்கிற பொண்ணைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று.// இது போல நிறைய பேரை பாத்திருக்கோம் தம்பி நாங்கல்லாம்….
ஜெயஸ்ரீ, சூர்யா கூட சினிமால நடிக்க வரும் முன்னாடி அம்மாக்கு இப்படி ஒரு சத்தியம் பண்ணி கொடுத்துட்டுதான் வந்ததாவும், அதுனாலயே ஜோ ப்ரபோஸ் பண்ணினப்ப ஆரம்பத்துல தான் தயங்கினதாவும் ஒரு பேட்டில சொல்லியிருந்தார்.
புதன் கிழமை, December 19, 2007 at 9:21 பிற்பகல்
//ஆனா திருப்பாவைல உங்களுக்கு என்ன சந்தேகம் வந்ததுன்னு நான் பொதுவுல சொல்லலையே.. //
இது ஒன்னுதான் நீங்க இன்னும் சொல்லலை.
//அது ஒரே பொண்ணோட வாழ்க்கையா இருக்கட்டுமே, எதுக்கு ரெண்டுன்னு பாக்கறாங்க. //
பாருங்க கடைசியில் இங்க இன்டர்நெட்டில் வந்து பார்த்துட்டு யாரும் பொண்ணு கொடுக்கமாட்டேன்னு சொன்னாங்கன்னு வையுங்களேன் அப்புறம் நீங்கதான் பொண்ணு பார்த்து தரணும் இப்பவே சொல்லிட்டேன்
//இது போல நிறைய பேரை பாத்திருக்கோம் தம்பி நாங்கல்லாம்…//
கிளம்பிட்டாங்கய்யா, உங்களையும் லிஸ்டில் சேர்த்திட வேண்டியதுதான்.
சனிக்கிழமை, December 22, 2007 at 7:29 பிற்பகல்
திருப்பாவை சுட்டிகளுக்கு மிக நன்றி.
மார்கழிக் கோலத்தில் பூசணிப் பூவை
பழக்கப்பட்ட மனம் தேடுகிறது.
திங்கட் கிழமை, December 24, 2007 at 10:05 மு.பகல்
lakshmirajagopal, அவங்கங்க அம்மா சம்மதத்தோட தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னாலும் ஏதோ பரவாயில்லைன்னு சொல்லலாம். அவங்க பார்க்கற பெண்ணைத்தான்… இந்த மாதிரி அம்மாவுக்கு சத்தியம் செய்துகொடுக்கற அபத்தமெல்லாம் இந்திய(அல்லது தமிழ்க்?) கலாசாரச் சொத்து. ஒன்னும் சொல்றதுக்கில்லை.
திங்கட் கிழமை, December 24, 2007 at 10:10 மு.பகல்
பிரகாஷ், அது மார்கழிக்குப் போட்ட கோலம் இல்லை. வேற எதுக்கோ நான் போட்டது, என் பெண் எடுத்த ஃபோட்டோ. எப்படி எந்தக் கோணத்துலேருந்து பாத்தாலும் கோணலாவே தெரியுதுன்னும் புரியலை. அதைப் போடும்போது நாய் குறுக்க குறுக்க ராஜநடை போட்டு, (செல்லம் கொஞ்சறாங்களாம்!) நான் அழிச்சதுமட்டும் நினைவிருக்கு. மார்கழிப்பூ இங்க கிடைக்கலையே. பசுஞ்சாணியும் தான்.
திங்கட் கிழமை, December 24, 2007 at 3:26 பிற்பகல்
யக்கா, பின்னாடி அந்த வாலெல்லாம் வேணாம். லக்ஷ்மின்னே கூப்பிடுங்க போதும். முதல் தரம் டிஸ்பிளே நேம் சரியா செலக்ட் பண்ணலை போலிருக்கு. அதான் First name, Last name எல்லாத்தையும் சேத்து நீட்டி முழக்குது வோர்ட்பிரஸ். இப்போ சரி செஞ்சுட்டேன்.
திங்கட் கிழமை, December 24, 2007 at 4:49 பிற்பகல்
லக்ஷ்மி,
) அப்படியே ஆகுக!
நீங்க வலைப்பதிவு லக்ஷ்மியா? அப்படி இருந்தா பதிவோட சுட்டியும் கொடுங்களேன். (கொஞ்சம் கடி வேலைதான்.) பொதுவா என் பதிவுக்கு வெளிலேருந்தும் நிறைய பெண்கள்(!) கருத்துவைப்பாங்களா, அப்படி யாரோன்னு நினைச்சுட்டேன். பாவம், தம்பி மோகனாவும் யாரோன்னு நினைச்சு திரும்ப ஒருதடவை உங்களை லிஸ்ட்ல ஏத்திட்டாரு.
திங்கட் கிழமை, December 24, 2007 at 10:55 பிற்பகல்
அக்கா, எனக்கு அந்த சந்தேகம் இல்லை.
பர்ஸ்ட் நேம் மட்டும் கொடுத்திருந்தாலே சந்தேகப்பட்டிருக்க மாட்டேன். இதில் கூட மற்ற பெயரும் இருந்ததால் சந்தேகமே இல்லை.
நான் லிஸ்டில் சேர்க்கிறேன் என்று சொன்னது, எனக்கு பெண் பார்த்துத் தரும் லிஸ்டில்!
புதன் கிழமை, December 26, 2007 at 7:06 பிற்பகல்
//நீங்க வலைப்பதிவு லக்ஷ்மியா? // ஆமா, அதே லக்ஷ்மிதேன்… கூடிய விரைவில் சுட்டி இணைச்சுடறேன் ஜெயஸ்ரீ.
//நான் லிஸ்டில் சேர்க்கிறேன் என்று சொன்னது, எனக்கு பெண் பார்த்துத் தரும் லிஸ்டில்!//
என்னது? உங்களுக்கு பொண்ணு பாக்கறதா? மோகனா, பெண் பாவம் பொல்லாதது. நான் அதை ஏத்துக்கத் தயாரில்லை. பொய் சொல்ற பாவம் கம்பேரிட்டிவ்லி சின்னதுதான். அதுனால இனி எல்லா இடத்திலும் இந்த திருச்சி மோகன் தாஸுக்கு அப்புறம்தான் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியே அப்படின்ற மாதிரி வேணும்னாலும் எழுதித் தள்ளிடறேன், சரியா?
வியாழன், December 27, 2007 at 8:41 பிற்பகல்
//பர்ஸ்ட் நேம் மட்டும் கொடுத்திருந்தாலே சந்தேகப்பட்டிருக்க மாட்டேன்.//
///இந்த திருச்சி மோகன் தாஸுக்கு அப்புறம்தான் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியே..///
காந்தி ஆணாதிக்கவாதின்னு இணையத்துல விவாதம் ஓடிகிட்டிருக்கும்போது இதுல ஏதோ உள்குத்து இல்ல?
புதன் கிழமை, ஜனவரி 14, 2009 at 12:33 பிற்பகல்
இந்தப் பதிவை இப்ப தான் பார்க்கிறேன், பதிவை விட பின்னூட்டங்கள் தான் அமர்க்களமா இருக்கு
//ஸ்ரீகாந்த், தேசிகன், எ.அ.பாலா,…. இவங்க எல்லாம் ஆண்கள். அதனால அந்த வகைல இருக்கும்.
//
ஏதோ என் பேரை passing -ல குறிப்பிட்டு இருக்கீங்க போல!
திருப்பாவைப் பதிவுகள் எழுதறதுல ஆணாதிக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சுன்னு நினைக்கிறீங்க போலத் தெரியுது