நன்றி: எழுத்தாளர் ராமசந்திரன் உஷா.
பத்து நிமிடங்களுக்கு மேல் உட்காரமுடியாமல் முதுகுவலியால் கஷ்டப்பட்டாலும் தொலைப்பேசியியில் குறிப்பைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷாவிற்கு நன்றி. அவர் விரைவிலேயே நலம்பெற்று இன்னும் பல நல்ல குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நம்புவோம்.
பிசிபேளாவிற்கு– ஏற்கனவே கவிஞர் ஹரன்பிரசன்னா என் பிசிபேளாக் குறிப்பைப் படித்து
, சரியாகவே இருப்பதாகச் சொல்லிவிட்டாலும்– எழுத்தாளர் உஷா, தன்னுடைய சிறப்புக் குறிப்பை இன்னும் அனுப்பவில்லை என்பதை இந்த வேளையிலே நினைவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
தேவையான பொருள்கள்:
தக்காளிக்காய் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- தக்காளிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
- அத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளிக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- வறுத்த பருப்புக் கலவையை, கொத்தமல்லித் தழை சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
* வறுத்த கலவையோடு ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி அரைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தால் சட்னி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு திரும்பத் திரும்ப என்ன சட்னி என்று யோசிக்கவைக்கும். இது வீட்டில் இன்று ஹிட் ஆனது.

வியாழன், டிசம்பர் 13, 2007 at 2:26 பிற்பகல்
துவையலுக்கும் சட்னிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
வியாழன், டிசம்பர் 13, 2007 at 7:07 பிற்பகல்
hello jsh,
Ramakannan here. 2days back i saw that pudalangai thugayal i made also i got nice appreciation from Husband. It was soooooooooooo good. Today’s special tomato chatni tomorow . so expecting ur next one ok ur friend RK
வியாழன், டிசம்பர் 13, 2007 at 10:21 பிற்பகல்
உங்கள் தக்காளி கூட்டுக்கு தக்காளிக்காய்க்கு பதில் பசலை கீரை போட்டு செய்தேன்.(இன்னும் தக்காளிக்காய் வாங்க வில்லை).ரொம்ப நன்றாக வந்தது. நன்றி.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 12:07 மு.பகல்
உங்கள் தக்காளிக்காய் கூட்டுக்குத் தக்காளிக்காய்க்குப் பதில் சிக்கன் போட்டுச் செய்தால் நன்றாக வருமா? உங்களின் அடுத்த ரெசிப்பியை எதிர்பார்க்கிறேன். சரியா. உங்கள் நண்பன், பிகேஎஸ்.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 12:09 மு.பகல்
//துவையலுக்கும் சட்னிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? //
)
சிற்றிதழுக்கும் வெகுஜன இதழுக்கும் உள்ள வேறுபாடுதான்
நவீனகவிதைக்கும் வாரமலர்க் கவிதைக்கும் உள்ள வேறுபாடுதான்.
என்னடே கேள்வி கேட்கறீங்க. கேள்வியில் ஒரு ஆழம் வேணாம்.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 6:55 மு.பகல்
பிரசன்னா, ஆழமான கேள்விகளுக்குச் சில உதாரணங்கள் தருகிறேன். பார்த்துவிட்டுக் கேட்க பழகவும்.
1. வெல்லம் கிடைக்கவில்லை. வெல்லத்திற்குப் பதில் சர்க்கரை சேர்க்கலாமா?
2. அந்தக் காய் கிடைக்கவில்லை. இந்தக் காய் சேர்க்கலாமா?
3. உங்கள் ஊரில் அது கிடைக்கிறதா? எப்படி? எங்கள் ஊரில் கிடைப்பதேயில்லையே.
4. எப்படி இவ்ளோ ரெசிப்பி தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. தினமும் எங்க வீட்டில் உங்க சமையல்தான் போங்க. எது போட்டாலும் சாப்பிடுற எங்க வீட்டுக்காரர் இது வித்தியாசமா இருக்கே எங்கே புடிச்சேன்னு கேட்டாருன்னா பார்த்துக்கோங்களேன்.
5. ரெசிப்பி எல்லாம் தீர்ந்த பிறகு என்ன பண்ணுவீங்க? (ஹம். ரெசிப்பி டிரை பண்றதால வர்ற வயிற்றுக் கோளாறுகளுக்கு நிவாரணம் தர மருத்துவப் பகுதி ஆரம்பிப்பாங்க என்ற பதில் தெரிந்தாலும் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்!)
ஜெயஸ்ரீயும் மற்றவர்களும் பிய்த்துப் பெடலெடுப்பதற்கு முன், எஸ்கேப்..
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 9:49 மு.பகல்
சிவா,
))
அவங்க, நான் இலக்கியம் பக்கம் எல்லாம் போய் நாசம் பண்ணிடுவேனோங்கற பயத்துல என்னை இங்கயே இருக்க வைக்க இப்படி எழுதறாங்க.
உங்களுக்குப் பயம், இவளை ஏத்திவிட்டு இவ்ளோ பின்னூட்டம் வருதே, இவ சமையல்கட்டுலயே செட்டில் ஆயிடுவாளோன்னு.
எப்படி இருந்தாலும் நான் இருக்கற மாதிரிதானே நான் இருப்பேன்.
ரெண்டு பதிவு போட்டும் இலக்கியவாதிகள் இன்னும் அடங்கலையாக்கும். இருங்க இன்னிக்கு இன்னும் கொஞ்சம் பெரிய்ய லெவல்ல வரேன்.
)))
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 2:18 பிற்பகல்
ஒரு ஐரிஷ்காரன் இங்க எங்கள green tomato chutney கேட்டு படாத பாடு படுத்திக்கிட்டிருக்கான். இந்தியாவுக்கு (தமிழ்நாட்டுக்கு) வந்திருந்தபோது சாப்பிட்டதா சொல்றான். எங்க சாப்பிட்டான்னு தெரியல. உங்க வீட்டுக்கோ உஷா வீட்டுக்கோ வந்திருப்பானோ?
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 6:05 பிற்பகல்
பி.கே.எஸ்,
சிக்கன் என்ன. தாராளமாய் ஊர்வன, பறப்பன, ஓடிவன எதை வேண்டுமானாலும் பிடித்துப் போடலாம். சாப்பிட போவது நீங்க தானே
பிரேம்ஸ்,
தமிழ் நாட்டை விட்டு வந்து இருபத்தி ஓரூ வருஷம் ஆச்சு. இதுல ஐரீஷ் காரன் எங்க வந்தான்?
பிரசன்னா,
சட்னி என்றால் தொட்டு கொள்வது, துவையல் என்றால் சாதத்துடன் கலந்து சாப்பிடுவது. துவையலையும் தொட்டுக் கொள்ளலாம், ஆனால் சட்னியை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் நல்லா இருக்காது.
ஜெ,
த.காய் ரெசிபிக்கு முன்னால் அரைமணி நேரமும், பின்னால் அரைமணி நேரமும் இலக்கிய சர்ச்சைகளில் முழ்கி முத்தெடுத்தோமே அதை எல்லாம் லேசாக கூட சொல்லாமல், வெறும் ரெசிபி சொன்னதாய், சொல்லி என் எழுத்தாளினி இமேஜ்ஜை நாஸ்தி
ஆக்கிவிட்டீங்களே
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 6:38 பிற்பகல்
//.காய் ரெசிபிக்கு முன்னால் அரைமணி நேரமும், பின்னால் அரைமணி நேரமும் இலக்கிய சர்ச்சைகளில் முழ்கி முத்தெடுத்தோமே அதை எல்லாம் லேசாக கூட சொல்லாமல், வெறும் ரெசிபி சொன்னதாய், சொல்லி என் எழுத்தாளினி இமேஜ்ஜை நாஸ்தி
ஆக்கிவிட்டீங்களே //
அதானே! வேறு சிலருக்கு மட்டும் அப்புடியொரு பில்டப்பு நடந்துச்சு, பெண்குலம்னா ரெசிப்பியோட நிறுத்திக்கணுமா? ஒரு பெண் இலக்கியவாதிகூட இலக்கிய சர்ச்சை நடந்ததை சொல்லாம பெண்குலம் ரெசிப்பிக்கு மட்டுமே லாயக்கு என்று கட் செய்த ஜெயஸ்ரீ-க்கு எதிராக குரல் கொடுக்குறேன்.
“புடலங்காய்” என்று பதில் வருமென்று பட்சி சொல்லுவதால் முன்கூட்டியே அதையும் அவுட் பண்ணி (ஆன்ஸர் அவுட் பண்றது), வேறு ஒரு பதிலைத்தருm கட்டாயத்துக்கு உள்ளாக்குகிறேன்.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 7:36 பிற்பகல்
// உங்களுக்குப் பயம், இவளை ஏத்திவிட்டு இவ்ளோ பின்னூட்டம் வருதே, இவ சமையல்கட்டுலயே செட்டில் ஆயிடுவாளோன்னு. //
இது… இதுதான் ஜெயஸ்ரீ. A Mind Reader. No Kidding.
//ரெண்டு பதிவு போட்டும் இலக்கியவாதிகள் இன்னும் அடங்கலையாக்கும். இருங்க இன்னிக்கு இன்னும் கொஞ்சம் பெரிய்ய லெவல்ல வரேன்.//
அராஜகம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க. ஆனாலும் அப்பப்போ உங்களை இலக்கியத்திற்கு இடம்பெயர்க்கக் கலாய்க்க வருவோம் கிண்டல்களுடன். ஊதுற சங்கை ஊதி வைப்போம் என்று.
நாஞ்சில்நாடன் அரைக்கீரையைப் பற்றிச் சொன்னதை எடுத்துப் போட்டதைப் படித்தேன். நன்றி.
எழுத்தாளினி உஷா வேற உங்ககிட்ட சமையல் மட்டும் பேசல, இலக்கியமும் பேசினேன்னு சொல்றாங்க. உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே ஒரு ஸ்டாம்ப் இருக்கு. இணையத்தில் தமிழோ இலக்கியமோ குப்பையோ வளர்க்கிற யாரையோ குழிபறிக்கத் திட்டம் போட்டீங்கன்னு சீக்கிரமே யாரும் உங்க ரெண்டுபேரைப் பத்தியும் இங்கேயேகூட அனானியா எழுதலாம்னு பட்சி சொல்லுது. ரெடியாகிக்குங்க அதை EnSoy பண்ண.
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 9:43 பிற்பகல்
உங்களைக் குழுமத்தில் எழுத வைத்தால் பிரசன்னாவுக்குப் பரிசு என்று ஒரு தகவல் போக, ஜெயஸ்ரீயை குழுமத்தில் எழுதாமல் வைத்திருப்பதற்குக் கொடுக்க வேண்டிய பரிசை முதலில் கொடுங்கள் என்று பிரசன்னா கேட்டதாக வதந்திகள் உலவுகின்றன. ஆதலால், பிரசன்னாவுக்குப் பரிசு போகாமல் இருக்கவாவது அங்கே ஒரு சப்பைக்குறிப்புகள் நிறைந்த ரெசிப்பியையாவது போட்டு வைக்கவும்
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 10:28 பிற்பகல்
PKS,
)
சனிக்கிழமை, டிசம்பர் 15, 2007 at 7:19 பிற்பகல்
பி.கே.எஸ் அண்ணாச்சி, எப்படி கண்டுப்பிடிச்சீங்க? இலக்கியவாதின்னு பெயரை வெச்சிக்கிட்டு சமையல் குறிப்புகள் போட கூடாதுன்னு திட்டிக்கிட்டே இங்கிட்டு வந்து எல்லாத்தையும் படிச்சிட்டு, பின்னுட்டமும் போடுராங்க.அதனால நானும் இனி சமையல் குறிப்புகள் போடலாம் என்று இருக்கிறேன்.
சனிக்கிழமை, டிசம்பர் 15, 2007 at 7:22 பிற்பகல்
ஐய்யயோ பி.கே.எஸ்! முக்கியமானது விட்டு போச்சு. அந்த இலக்கியவாதி, அவரூ பிளாக்குல தாளிக்கும் ஓசைக்கு லிங்கும் கொடுத்தவரூ.அவரூ பேரூ “பி” யில் ஆரம்பித்து “னா” வில் முடியும். குறிப்புகள் போதுமில்லையா?
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 16, 2007 at 1:11 பிற்பகல்
Uma kumar, இந்த மசாலா எந்தக் கூட்டுக்கும் நல்லா இருக்கும். அதனால கீரைக்குப் பொருந்தினது ஆச்சரியமில்லை. தேங்காயெண்ணைல தாளிச்சுப் பாருங்க. இன்னும் அள்ளும்.
உஷா, இந்த வலைப்பதிவு முழுக்க நிறைய இடங்கள்ல ஜெயமோகனோட குறிப்புகள் இருக்கு. ரா.கி.ரங்கராஜன், சு.ராவோடதெல்லாம் கூட இருக்கு. அதுக்காக அவங்க இலக்கியத்துல சமையல்மட்டும் தான் சொல்லியிருக்காங்கன்னு சொல்லி இமேஜ் நாஸ்தி செஞ்சுட்டேன்னு அர்த்தமா? நாம ஃபோன்ல சமையல் குறிப்பு மட்டும் பேசிட்டு வெச்சிட்டோம்னு சொன்னா நம்பற அளவுக்கு மக்கள் தான் இருக்காங்களா? நிறைய இலக்கியத்துல மூழ்கி முத்தெடுத்து, இடைல பவழமா
இதையும் எடுத்தோம்னு சப்டெக்ஸ்டா சொல்லியிருக்கேன். நாம பேசின இலக்கியப் பகுதியை உங்க பதிவுல போடுங்க. இது ச.கு பதிவு. இங்க இதுமட்டும் தான். அதைவிட, ‘பசிச்சா கவிதை சாப்பிடுவேன், கட்டுரையைக் கரைச்சுக் குடிப்பே’ன்-கற இலக்கியவாதிகளும் எப்படி ரெசிபில ஃபுல்ஃபார்ம்ல இருக்காங்கன்னு சொல்லவேண்டிய நெருக்கடி எனக்கு இருந்ததில்ல..? ஆமா, நீங்க பசிச்சா என்ன சாப்பிடுவீங்க? (புலி பசிச்சாலும் கவிதை சாப்பிடாதுன்னு தெரியும்.)
பிகேஎஸ், ஏற்கனவே எழுதினாலும் எழுதாட்டாலும் அதுக்காக ஏதாவது ஒரு பார்ட்டிகிட்ட பரிசு என்ன வாங்கணும், அதுல எனக்கு எவ்வளவு கட்டிங் எல்லாம் ரெண்டுபேரும் பேசி முடிவுசெஞ்சுட்டோம், இனிமே இதுல ஒன்னும் செய்ய முடியாது.
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 16, 2007 at 1:13 பிற்பகல்
பிரேமலதா,
) புடலங்காய் இல்லை பூசணிக்காய்; போதுமா? பெண்கள்னா ரெசிபி மட்டும் தான் பேசுவாங்கன்னு நினைக்கற மாதிரி எழுதலை. ஆனா சமையல் எழுதினதாகவோ சொன்னதாகவோ சொன்னாலே ஏன் மற்ற பெண்களுக்கு தன்னை மட்டப்படுத்தி எழுதினதா ஒரு கோபம் வருது? அப்ப சமைக்கற வேலை மட்டம்னு நாம பெண்களே சொல்றமோன்னு ஒரு சந்தேகம். அப்படி இருந்தா ஆண்களும் அப்படி நினைக்கறதை தப்பு சொல்லமுடியுமா? எங்க வீட்டுல(மாமியார் வீட்டுலயும் சேர்த்து) ஆண்களோ, இணையத்துக்கு வெளில இருக்கற ஆண் நண்பர்களோ நிச்சயமா அப்படி நினைக்கலை. அதனால எனக்கு தப்பா தெரியலை.
தக்காளிக்காயே இப்பத்தான் ஒரு மாசமா கிடைக்குது. இதுல எங்க ஐரிஷ்காரனுக்கு ஆக்கிப் போடறது?
//அதானே! வேறு சிலருக்கு மட்டும் அப்புடியொரு பில்டப்பு நடந்துச்சு,///
சுத்தம்!!
அவருக்கு நடந்ததுக்குப் பேரு பில்டப்பா? என் தமிழ் அவ்ளோ மோசமாவா இருக்கு?
திங்கட் கிழமை, டிசம்பர் 17, 2007 at 8:26 மு.பகல்
உஷாக்கா, (வயசாயிட்டுல்ல, எனக்குத்தான் சொல்றேன்) சிறுகதைக்கும் குறுநாவலுக்கும் – நாம இலக்கியவாதின்றதால இப்படித்தானே பேசிக்கணும்? சட்னி துவையல்னா, சே சே – நீங்க சொன்ன விளக்கம் நல்லாவே புரிஞ்சது. இவ்ளோ மெனக்கெட்டு நீங்க பதில் சொன்னதுதான், ரொம்ப புல்லரிக்கது. இன்னும் சில சந்தேகங்கள் – கிட்டத்தட்ட நான் இங்க கேட்டிருக்கிற மாதிரி அதே ஆழத்தோட – இருக்கு. நிச்சயமா கேட்டு பதில் வாங்கிக்கறேன்.
பிரேமலதா, ஏன் m னு திடீர் ஆங்கிலத்துல வந்திருக்கு? சரி பாருங்க. சரியான்னு பாருங்க. நன்றிங்க.
செவ்வாய்க் கிழமை, டிசம்பர் 18, 2007 at 2:46 பிற்பகல்
//பிரேமலதா, ஏன் m னு திடீர் ஆங்கிலத்துல வந்திருக்கு? சரி பாருங்க. சரியான்னு பாருங்க. நன்றிங்க.//
haranprasanna, நன்றி.
//பதிலைத்தருm கட்டாயத்துக்கு //
பதிலைத்தருன் கட்டாயத்துக்கு – னு type ஆகி இருந்துச்சு. அதைக் கவனிச்சேன். ஆனா, இடையிலேயே alt+1 போட்டு ஆங்கிலத்துக்கு மாறிட்டதைக் கவனிக்காம ன்-ஐ எடுத்துட்டு mஐப் போட்டுட்டு click செய்துட்டேன். பின்னர்தான் கவனித்தேன்.
நன்றி again.
செவ்வாய்க் கிழமை, டிசம்பர் 18, 2007 at 10:29 பிற்பகல்
உஷா, துவையலுக்கு சட்னிக்கும் என்ன வித்யாசம் சொல்லாலாம்னு நான் என்சைக்ளோபீடியா(பில்டப்) எல்லாம் புரட்டிகிட்டிருக்கும்போது சும்மா நச்’சுனு ஒரு வரில அடிச்சிருக்கீங்க. எழுத்தாளினி எழுத்தாளினிதான்.
நிஜமாவே வெகுஜன இதழுக்கும், சிற்றிதழுக்கும் உள்ள வித்யாசம், தினமலர் கவிதைக்கும் நவீன கவிதைக்குமுள்ள வித்யாசம் எல்லாம் அந்தந்தத் துறைல பேசும்போது இங்க இதைக் கேட்டா என்ன? அம்மிவெச்சு அரைச்ச அழுத்தமான கேள்விதான்.
வியாழன், டிசம்பர் 20, 2007 at 11:11 மு.பகல்
பாகீ,
நான் சொன்னது பிழை கண்டுபிடிக்க அல்ல. அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை. இன்னும் வலையில் வளர வாழ்த்துகிறேன்.
பிரேமலதா, நான் கேட்டதை மறக்கவும். நன்றி.
வியாழன், டிசம்பர் 20, 2007 at 6:32 பிற்பகல்
பிரசன்னா,
இதுக்கெல்லாம் கோபப் பட்டா தினமும் நான் தற்கொலைதான் பண்ணிக்கனும். அத்தனை பிழை விடுவேன்.
I am fine with your pointing out my mistake. it was fine really.
சனிக்கிழமை, அக்டோபர் 4, 2008 at 9:27 மு.பகல்
//
ramachandranusha சொல்வதென்னவென்றால்:
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 14, 2007 at 6:05 பிற்பகல்
ிரசன்னா,
நிஜமாவே வெகுஜன இதழுக்கும், சிற்றிதழுக்கும் உள்ள வித்யாசம், தினமலர் கவிதைக்கும் நவீன கவிதைக்குமுள்ள வித்யாசம் எல்லாம் அந்தந்தத் துறைல பேசும்போது இங்க இதைக் கேட்டா என்ன? அம்மிவெச்சு அரைச்ச அழுத்தமான கேள்விதான்.
சட்னி என்றால் தொட்டு கொள்வது, துவையல் என்றால் சாதத்துடன் கலந்து சாப்பிடுவது. துவையலையும் தொட்டுக் கொள்ளலாம், ஆனால் சட்னியை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் நல்லா இருக்காது.
//
//
உஷா, துவையலுக்கு சட்னிக்கும் என்ன வித்யாசம் சொல்லாலாம்னு நான் என்சைக்ளோபீடியா(பில்டப்) எல்லாம் புரட்டிகிட்டிருக்கும்போது சும்மா நச்’சுனு ஒரு வரில அடிச்சிருக்கீங்க. எழுத்தாளினி எழுத்தாளினிதான்.
//
அப்ப துவையல்ல தண்ணி விட்டு கரைச்சா அது சட்னியா?????
நல்லாவா இருக்கும்?????