முதலில் இந்தச் சாதாரண கூட்டுகளை எழுத வேண்டுமா என்று நினைத்து கொஞ்சம் சோம்பேறித்தனத்தால் எழுதாமல் இருந்தேன். திடீரென்று எதையுமே விடாமல் எழுதித் தள்ளிவிடவேண்டும் என்று தீவிரம் வந்திருப்பதால்
) இதுவும்…
இனி இதைவிட சப்பைக் குறிப்புகளும் வரலாம்.
இது அதிக மசாலா சேர்க்காத கூட்டு.
தேவையான பொருள்கள்:
புடலங்காய் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
உப்பு
கொத்தமல்லித் தழை
வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2, 3
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
தேங்காய் – 1/2 மூடி
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை
செய்முறை:
- புடலங்காயை உள்ளே விதை முற்றலாக இருந்தால் நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, விரும்பினால் வாசனைக்கு ஒரு பச்சை மிளகாய் தாளிக்கவும்.
- நறுக்கிய புடலங்காயை, தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடிவைத்து வேகவைக்கவும்.
- நன்றாக வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் நீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு சேர்ந்தாற்ப்போல் இருக்குமாறு இறக்கவும்.
- நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
* இதே முறையில் கோஸ், பீன்ஸ், பீட்ரூட், கொத்தவரங்காய், அவரைக்காய் போன்ற காய்களிலும் செய்யலாம். எல்லாவற்றையும் விட கீரையில் செய்தால்(எந்தக் கீரையும்) மிகுந்த சுவையாக இருக்கும்.


வெள்ளிக்கிழமை, December 7, 2007 at 9:18 பிற்பகல்
இதை நான் Ghost write பண்ணலாமா?
வெள்ளிக்கிழமை, December 7, 2007 at 9:21 பிற்பகல்
//திடீரென்று எதையுமே விடாமல் எழுதித் தள்ளிவிடவேண்டும் என்று தீவிரம் வந்திருப்பதால்
) இதுவும்…
இனி இதைவிட சப்பைக் குறிப்புகளும் வரலாம்.//
இதற்கு ஒரு பெரிய வெடிச்சிரிப்பைப் பிடித்துக் கொள்ளுங்கள்.(அதாவது கற்பனை செய்து கொள்ளுங்கள்)
வெள்ளிக்கிழமை, December 7, 2007 at 9:34 பிற்பகல்
Hello jayashri,
Just one hour back i didn’tsaw this kuttu. Ok well so u started to write about TANJURE style. Fine today dinner over so tomorrow i ill make it. Then i told my chitti to see this website. She saw and she phoned me ohhhhhhhh what a nice website she told me. Ok jayashri expecting ur more receipy ur friend RK
வெள்ளிக்கிழமை, December 7, 2007 at 10:07 பிற்பகல்
ஜெயஸ்ரீ,
உங்கள் தக்காளி கூட்டு()முந்தைய பதிவை பார்த்து வேறு வகை தக்காளி கூட்டு அடுத்து போடுவீர்கள் என்று இருந்தேன். நான் ரொம்ப நாட்களாக இந்த ரெசிபியை தேடிக்கொண்டிருந்தேன். எங்க ஹாஸ்டலில் இந்த கூட்டை போடுவார்கள். ஆனால் திக்காக இருக்கும். அந்த கூட்டு செய்வதற்க்காக தக்காளிக்காய் வாங்கி ஒவ்வொரு முறையும் ரெசிபி கிடைக்காமல் பப்பு (ஆந்திரா) செய்து விடுவேன். இதுதான் அந்த கூட்டு என்று நினைக்கிறேன். செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி.
சனிக்கிழமை, December 8, 2007 at 1:07 மு.பகல்
ஜெயஸ்ரீ, முதல் படத்தில் உள்ள கூட்டின் பெயர் என்ன ? (அல்லது அதில் உள்ள காய்கறியின் பெயர் என்ன ?)
சனிக்கிழமை, December 8, 2007 at 2:49 மு.பகல்
வரப்போறது சமையல் குறிப்பு. அதுல என்ன சப்பைக் குறிப்பு, கலைநயம் மிகுந்த குறிப்புன்னு பாகுபாடு
நாலுநாள் ரூம்புல அடைச்சு வைச்சிப் பட்டினியிலே காஞ்சவங்களுக்கு சப்பைக் குறிப்புக்கும் கலைக்குறிப்புக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன? நீங்களே ஏன் அதைச் சொல்லி சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கறீங்க.
)
சனிக்கிழமை, December 8, 2007 at 9:42 பிற்பகல்
மோகன்தாஸ், Ghost ரைட்டலாம். வெடிச்சிரிப்பு என்ன வெடி? ஊசிவெடியா ஆட்டம் பாமா?
ramakannan, இது தஞ்சாவூர் சமையலா? ரொம்ப சாதாரணமா இருக்கே. நாங்களெல்லாம் பலகாலமா செஞ்சுகிட்டிருக்கோம்.
சிவா, வாஸ்தவம் தான்.
)
பாகீ, படத்துல எலிக்குட்டி சோதனை செஞ்சா பேர் தெரியுமே. என்ன கூட்டு இதுன்னு கேட்டு இப்படி அவமானப் படுத்தறீங்க என் பொண்ணு மாதிரி?
(