அன்னிக்கு ரங்கமணி ஆபீசுக்கு ‘சும்மா’ லீவ். இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் எனக்கு அத்திப் பூத்த மாதிரி எப்பவோ கிடைக்கற வாய்ப்பு. விடலாமா? நேத்தி, நாம நாளைக்கு D’Mart shopping போகலாமான்னு கேட்ட அம்மணிகிட்டயே, “நோ நோ நாளைக்கு கோவிந்த் லீவ். (தரோவ வேலை வாங்கிக்கணும்) நான் வரலைனு சொல்லி வெச்சிருந்தேன்.
“SBOA ஸ்கூல்கிட்ட Reliance Fresh திறந்து பத்து நாளாச்சு. இப்ப போய் பாத்துட்டு வந்துரலாம். சண்டேன்னா கூட்டமாயிருக்கும்.”
“சான்ஸே இல்லை. இன்னிக்கு முழுக்க நான் ரிலாக்ஸ்டா இருக்கப் போறேன். டிவி பாக்கணும். நிறைய படிக்கணும். என் பொண்ணு வந்ததும் அவளோட விளையாடணும். உனக்கு குக்கர் கேஸ்கட் போடறது, தெச்ச ஜாக்கெட் வாங்கிட்டு வர்றது, பிஞ்ச செருப்பு தெச்சு வாங்கறதுக்கெல்லாம் என் லீவை வேஸ்ட் பண்ண முடியாது.”
ஆண்களால பெண்கள் மனசைப் படிக்க முடியாதுன்னு யார் சொன்னது?
“தேவை இல்லை. தாரளமா செய்ங்க. எனக்கென்ன? ஆனா ஃப்ரிட்ஜ்ல காய் சுத்தமா இல்லை. நாளைக்கு ஆபீசுலேருந்து வரும்போது நீங்களே ராத்திரி ஒம்போது மணிக்கு மேல ஒரு வாரத்துக்கான காய் வாங்கிட்டு வாங்க.”
வெச்ச குறி தப்பலை. காய்கறிங்கற வார்த்தை எப்படி ஆளை அசைக்கும்னு தான் இவ்ளோ வருஷமா பாத்துகிட்டிருக்கேனே. இந்தியாவின் கடைக்கோடிக்கே ஊர் சுத்தப் போனாலும் புஸ்தகங்களுக்கு அடுத்தபடியா அல்லது அதுக்குச் சரியா ஃப்ரெஷ் காய்கறிகளைப் பார்த்தா பரபரக்கும் ஜீவன்; எப்படியெல்லாம் பார்த்து பார்த்து வாங்கணும்னு பழக்கியிருக்கும் மாமியார்(வாழ்க!); ஆன காரணங்களால இத்தனை வருஷமாகியும் எனக்கு இன்னும் காய் வாங்கத் தெரியாமலே போச்சு. (தக்காளி மட்டும் வாங்குவேன். இதைச் சொன்னால் எங்கம்மாவே என்னடீ இப்படி இருக்கன்னு அதிர்ச்சியாறா.) நம்ப அவங்களோட கூடவே போய், சும்மா பையை வெச்சுகிட்டு பராக்கு பாக்க வேண்டியதுதான். அவங்களே வாங்கி வாங்கிப் போடுவாங்க. “கொஞ்சம் நீயும் வாங்கக் கத்துக்கலாமில்ல?”ன்னு சொல்றது காதுல கேட்காத தூரத்துல வாகா நிக்க வேண்டியது.
அதைவிட முக்கியமா பெரிய பெரிய வேலை எல்லாம் சலிக்காம செய்ற எனக்கு, சில சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்யப் பிடிக்காது. அதுல முக்கியமானது வாங்கிவந்த காயைப் பிரிச்சு ஃப்ரிட்ஜ்ல வைக்கறது, ராத்திரி பழம் நறுக்கரது… தலைவர் இருக்கும்போதே வாங்கிட்டா அவரே அதை கையோட பொறுப்பா செஞ்சுடுவாரு. அதனால சண்டேனா ரெண்டுல முக்கியமான ஒன்னு காய்கறி வாங்கறதுதான். இதுல இன்னொரு வசதி. தினம் தினம் கத்திரிக்காயா, முள்ளங்கியா மாதிரி குற்றச்சாட்டே எங்க வீட்டுல எழுந்ததில்லை. ஏன்னா, வாங்கறது நான் இல்லையே.
ப்ரிட்ஜ்ல இருந்தா சட்டில வரும். அவ்ளோதான் பதில்.
“காய்தானே. அதுக்கு ரிலயன்ஸ் எல்லாம் வேண்டாம். காயெல்லாம் ஏசில சுருங்கி இருக்கும். நம்ப மார்க்கெட்லயே ஃப்ரெஷ்ஷா வாங்கலாம்.” ப்ரோக்ராம்ல ட்விஸ்ட்.
மார்க்கெட்ல அததுக்குன்னு தனித்தனி கடைகள் வைச்சிருக்கோம். கீரை, பயறுகள், இங்லீஷ் காய்கறிகள், கிராமத்திலேருந்து வர நாட்டுக் காய்கறிகள், பழங்கள் இப்படி. ஒருவாரம் போகலைன்னாலும் வாடிக்கை மறந்ததும் ஏனோன்னு விசாரிப்பாங்க.
“இல்லை, சும்மா எட்டிப்பார்த்துட்டு மார்க்கெட்டுக்கே போயிடலாம்.”
ஒருவழியாக அடம்பிடிச்சு கிளம்பிப் (அடுத்த திருப்பம் தான்.) போனா, வாசல்ல கும்பல் கும்பலா மக்கள் நின்னுகிட்டிருந்தாங்க. கடை சரியாப் பத்து மணிக்குத் தான் திறப்பாங்களாம். இன்னும் 5 நிமிஷம் இருந்தது. என்ன மக்களோ! நான் பிசினஸ் செஞ்சா காலைல எழுந்ததும் எதுக்கும் கடையைத் திறந்துட்டுதான் பல்லையே தேய்ப்பேன். இத்தனை நேரத்தில் மார்க்கெட்ல பாதி வாங்கி முடிச்சிருக்கலாம். ரங்கமணி உச்’ கொட்ட ஆரம்பிச்சாச்சு. கொஞ்சம் தள்ளி ஒரு கும்பல் தமிழ்ல பேசறது விட்டு விட்டுக் கேட்டுது. திடீர்னு ஒரு வண்டி வந்து நிஜமாகவே ஃப்ரெஷ்ஷா காய்கறிகள் இறங்க ஆரம்பிச்சதும் பக்கத்து முகத்துல பல்பு. மீ ரிலாக்ஸ்.
கடை திறந்ததும் சொல்லி வைச்சது மாதிரி எல்லோருமே காய்கறிகள் பக்கம் தான் போனாங்க. காய்கறிகள் உண்மையிலேயே நன்னா இருந்தது. எனக்குத் தான் மார்க்கெட் மாதிரி சும்மா நிக்க முடியாம பிளாஸ்டிக் பைகளைக் கிழிச்சுக் கிழிச்சுக் (ஏதோ என்னாலான ஹெல்ப்பீஸ்) கொடுக்க வேண்டியதாகிப் போச்சு. பரவாயில்லை.
வந்திருந்தவங்கள்ல பெரும்பாலானவங்க தமிழர்களா மட்டுமே இருந்ததோட காரணம் எனக்குப் புரியலை. அலுவலக நாளா இருந்ததால பலர் ஹவுஸ்வைஃப், ரிட்டயர்ட் இந்த வகையறாவில் தான் இருந்திருப்பாங்க. இரண்டு மாமிகளும் ஒரு மாமாவுமா வந்த ஒரு குடும்பம் அநியாயத்துக்கு குறுக்கும் நெடுக்குமாக ஓடி, கத்திக் கலக்கிண்டிருந்தாங்க.
“இந்த நாமக் கத்திரிக்காய் அரைக் கிலோ வாங்கலாமோடீ?” பொறுக்கி எடுத்துண்டு எதிர்ப்பக்கம் நின்ன மனைவியைக் கேட்டார். பெண்கள் ரெண்டுபேரும் பீன்ஸ் பொறுக்கிண்டிருந்தாங்க.
“ஐயோ சமத்தே, உங்களை யார் அந்த வேலையெல்லாம் சொன்னது? (பக்கத்திலிருந்த பெண்ணிடம்) வீட்லயே விட்டுட்டு வரலாம்னு சொன்னேனே கேட்டியா? (திரும்ப மாமாகிட்ட) நாமம் போட்ட கத்திரிக்காய் காரலா இருக்கும். நீளக் கத்திரிக்காய் தான் வாங்கணும், நீங்க சித்த சும்மா இருங்கோளேன், நான் பாத்துக்கறேன்”, மாமி கத்திச் சொன்னதுக்கு அந்தப்பக்கம் தமிழ் தெரிஞ்ச அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தாங்க. அதாவது அத்தனை பேருக்குத் தமிழ் தெரிஞ்சிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. தவிர்க்கவே முடியாம நானும் ரங்கமணியும் ஒருத்தரையொருத்தர் பார்த்து சிரிச்சுண்டோம். பொதுஇடத்துல புருஷனை ஒரு போடு போடறதெல்லாம் எவ்ளோ சுகமான விஷயம். நாகரிகம்ங்கற பேர்ல நாம இழந்ததுதான் எவ்வளவு?
இப்பல்லாம் ஸ்ரீரங்கத்துலயே இந்த சீன் எல்லாம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. மாமாவைப் பாத்து அலுத்துண்டே மாமிகள் தாலிச்சரட்டுல தாயர் மஞ்சள் காப்பைத் தேய்ச்சுக்கறதெல்லாம்…. சரி விடுங்க. அவர் கொஞ்சம் தயங்கி திரும்ப தான் எடுத்ததை எல்லாம் மொத்தக் காய்கறியில சேர்த்தார்.
திடீர்னு கோவிந்த், “ஏன் இவ்ளோ கொஞ்சமா தக்காளி வாங்கியிருக்க, போதுமா?ன்னு ஆச்சரியமா (வாங்கத் தெரிந்த ஒரே காய்ங்கறதால வஞ்சனை இல்லாம குறைஞ்சது 2 கிலோவாவது வாங்குவேன்.) கேட்டதுக்கு அதைவிட ஆச்சரியப்பட்டேன். நான் எதுவுமே இதுவரைக்கும் கறிவேப்பிலை தவிர எங்க கார்ட்ல எடுத்துப் போடலை. அப்போலேருந்து சும்மா வேடிக்கைதான் பாத்துகிட்டிருந்தேன். அப்பத்தான் ரெண்டுபேரும் கவனிச்சோம், நடுவுல இருக்கற எங்க கார்ட்ல அந்த மாமி வேகவேகமா காய்களைக் குவிச்சுகிட்டிருக்கறதை. “இது எங்களொடதுங்க” ன்னு ரங்கமணி அரைக்காலே முக்கால் டெசிபள்ல மாமிகிட்ட சொன்னது எனக்கே பாவமா இருந்தது. அதைக் கூட பாத்துக்காம என்ன செஞ்சுகிட்டிருக்க அப்டீங்கற மாதிரி திரும்பி என்னைப் பாத்ததை நான் பாக்கலை.
“நான் இங்க இருக்கேன்டீ!” மாமா எங்கோ தள்ளி அவங்களோட கார்ட்டைப் பிடிச்சுண்டு, நெஞ்சை நிமிர்த்திண்டு (அல்லது அப்படி நினைச்சுண்டு ) சொன்னதும், மாமி (தன் தவறை மறைக்க) அவரை முறைச்சதும், என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. என்னோட தலையாயப் பிரச்சினை பொது இடத்தில் இப்படி அடக்க முடியாம சிரிப்பு வர்றதுதான். தலையை வேற எங்கயாவது பருப்புகள் ஷெல்ஃபுல புதைச்சுக்கலாம், பாவம் அவங்க தப்பா நினைக்கப் போறாங்கன்னு நினைச்சு அங்கேருந்து ஓடிப் போய், அப்றம் தனியாச் சிரிச்சா வேற யாராவது வேற மாதிரி நினைக்கப் போறாங்களேன்னு திரும்ப ரங்கமணியோட வந்து ஒட்டி நின்னுகிட்டேன்.
மாமி தானே தன் பக்கம் கார்ட்டை வெச்சுகிட்டாங்க. மாமா சிரமப்பட்டு ஒரு 5 கிலோ எண்ணெய் டின்னைக் கொண்டுவந்து தங்களோடதுல வெச்சுட்டு தள்ளிப் போய் நின்னார். ஐயோ, எதுக்கு எண்ணெய் எல்லாம் எடுக்கறேள், அதுவும் இவ்ளோ பெருசு, சித்த சும்மாத் தான் இருங்கோளேன்” ன்னு மாமி திரும்ப கத்த, கனஜோரா, “அது உனக்கு வண்டி அடையாளத்துக்கு வெச்சிருகேன். எல்லாம் வாங்கி முடிச்சதும் அதை இங்கயே வெச்சுட்டு பாக்கிக்கு மட்டும் பில் போடலாம்” மாமா சொல்ல, “புத்திசாலி!!” ங்கற மாதிரி மாமி ஒரு பார்வை. இல்லையா பின்ன?
இப்படி வேடிக்கை பார்த்ததுல நம்ப ஆளு பூசணிக்காய், பீட்ரூட் எல்லாம் அடுக்கறதை கவனிக்கலை. திடீர்னு பாத்து, இதெல்லாம் இருக்கு, வேண்டாம்னு சொன்னதுல செம காண்டு.
“இருக்கா? பின்ன காய்கறியே இல்லைன்னு சொன்னியே?”
“ப்ரிட்ஜ்ல காய்கறியே இல்லைன்னா சொன்னேன்? காய்கறியே சுத்தமா இல்லைன்னு தான் சொன்னென். சமைக்கும்போது அலம்பிட்டு சமைக்கணும்.” இவ்ளோ கேவலமான ஜோக்கை எல்லாம் சொல்லி பொது இடத்துலதான் சின்ன முறைப்போட தப்ப முடியும். “காய்கறின்னு சொல்லாம சும்மா கடையைப் பாக்க கூப்டா வருவீங்களா? அதான்.”
அப்படியும் கணிசமா தேத்தி எடை போடற இடத்துல எக்கச்சக்க நேரம். அதுக்கு இருந்ததே 2 பேர். அதுலயும் ஒருத்தங்க ரொம்பப் புதுசு போல.(கடை திறந்தே 10 நாள் தான் ஆகுது. அதுலயும் பழசு புதுசு.) “தீதீ!” ன்னு இன்னோரு பெண்ணை எல்லாத்துக்கும் கூப்டு சந்தேகம் கேட்டுக் கேட்டு எடை போட்டதுல ரங்கமணி கடுப்பாகி, சந்தேக நிவர்த்திப் பெண்ணோட க்யூலயே கொஞ்சம் பெருசா இருந்தாலும் பரவாயில்லைன்னு திரும்ப நின்னாரு. குழந்தை ஸ்கூல்லேருந்து வந்துடப் போகுதேன்னு முகத்துல கவலையான கவலை. அவங்க ஆனாலும் அநியாயத்துக்கு, வாங்கின எலுமிச்சை, பூண்டு, இஞ்சிக்கெல்லாம் தனித்தனியா பைபோட்டு, பில் ஒட்டி.. “எப்படி திரும்ப பிளாஸ்டிக் பை டாமினேட் செய்ய ஆரம்பிச்சிடுச்சு பாம்பேல, சை!”
அப்படியே மற்ற செக்ஷனையும் பாக்கலாம்னு ஒரு சின்ன ரவுண்ட். வழக்கமா இந்த மாதிரி டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள்ல இருக்கற அதே எவர்சில்வர் பாத்திரங்கள், crockery, பிளாஸ்டிக்.. குழந்தை ஸ்கூல்லேருந்து வந்துடும்னு பிண்ணனி இசை ஒலிச்சு(விரட்டிக்)கிட்டே இருந்தது. வேகமா பாத்துட்டு பில்போடற இடத்துக்கு வந்தா 4, 5 மெஷின் இருந்தாலும் ரெண்டு மிஷின் தான் வேலைல இருந்தது. எல்லாரும் பரபரத்துகிட்டே இருந்தாங்க கடைக்காரங்களை. எல்லா மெஷின்லயும் பில் போட்டா என்னன்னு எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்ன காரணமோ அவங்ககிட்ட பதில் இல்லை. பாவம்.
புதுசா யாராவது தொழில் தொடங்கினா அவங்களை உற்சாகப் படுத்தணும்னு உடனே அங்க ஆஜராகிற நம்ப ரங்கமணிகூட அன்னிக்கு பொருந்தாம படுத்தினதுதான் ஆச்சரியம். ஹோட்டல்ல சரியா பரிமாறலைன்னாலே, ‘பாவம், புது ஹோட்டல், புது ஸ்டாஃப், வேலை கிடைச்ச சந்தோஷத்துல இருக்காங்க. கொஞ்ச நாள்ல செர்வ் பண்ண பழகிடுவாங்க, நாமதான் என்கரேஜ் செய்யணும், விட்டுப் பிடிக்கணும்னு எனக்கே கீதோபதேசம் செய்ற ஆள், ரிலையன்ஸ்ங்கரதாலயோ (அப்படி இருந்தாலும் அந்தப் பணியாளர்கள் புதுசுதானே பாவம்) அல்லது பொண்ணு நினைப்புலயோ அன்னிக்கு நெருப்பு மேல டான்ஸ். உலகத்துல எங்கயும் காய் வாங்கினா இவ்ளோ நேரம் ஆகாது, நீ இரு நான் போறேன்னு ஒரே பொலம்பல். தொணப்பு தாங்காம ரங்கமணியை வெளில நிக்கச் சொல்லி, பணத்தை வாங்கிண்டு, நானே பில்போட்டு வாங்கிவரதா சொல்லிட்டேன்.
பக்கத்து லைன்ல ஒரு பொண்ணு ரங்கமணியையே மிஞ்சற அளவுல என் குழந்தை ஸ்கூல் பஸ் வந்துடும்னு குதிச்சுகிட்டிருந்தாங்க. வாங்கின சாமான்களைப் பாத்தா நறுக்கி பேக் செஞ்சிருந்த பாகற்காய், முருங்கைக்காய் வகையறா. அட அம்மணிகளா? என்னதான் அவசர யுகம்னாலும் பாகற்காய் முருங்கை எல்லாம் நறுக்க முடியாத அளவு அல்லது நறுக்க நேரம் எடுக்கற அளவு கஷ்டமான காய்களா? என்னிக்கி நறுக்கி என்னிக்கி பேக் செஞ்சதோ.
அதுக்குள்ள என் க்யூல இருந்த மாமாவுக்கு 300 ரூபாய்க்கு இறுநூத்து சொச்சம் போக பாக்கி சில்லறை கொடுக்க அவங்ககிட்ட இல்லை. கொஞ்சம் சில்லறை வெச்சுகிட்டு கல்லா திறக்க மாட்டாங்களா? எனக்கு ஆச்சரியமா இருந்தது. அவரோட ரூபாய் நோட்டை வெச்சுகிட்டு அந்தப் ஆள்(பையன்?) பேய் முழி முழுச்சிகிட்டிருந்தாரு. இவங்க எல்லாம் எப்ப செட்டில் பண்ணி என் முறை வருமோன்னு யோசிக்கும்போதே என் கைல இருந்த 500 ரூபாய் பல்லிளிச்சுது. கட்டினவன் கூட வர தைரியத்துல கைப்பை(கிரெடிட் கார்ட்) எடுத்துவராம இருந்திட்டேன். உங்க கார்டுல வாங்கிடலாம்னு சைகை செஞ்சு ரங்கமணியை திரும்ப உள்ள கூப்பிட்டேன்.
உள்ள வந்து, உச்சு கொட்டி, எப்படித்தான் குழந்தையைப் பத்தி கவலைப்படாம இருக்கியோங்கற புலம்பல் என் காதுக்குள்ள விழறதுக்குள்ள பக்கத்து க்யூலேருந்து வீல்’னு ஒரு சத்தம். தொடர்ந்து அந்தப் பொண்ணு மராத்தில மானாவாரியாகத் திட்டிண்டிருந்தாங்க. அந்த மெஷினும் எந்தக் காரணத்தாலோ பாதியிலேயே இயக்கத்தை நிறுத்தியிருக்கு. அந்த ஆள் அதோட சைடுல எல்லாம் தட்டிக்கிட்டிருந்தாரு. ஸ்கூட்டரைப் போல பிளேனையும் லேசா சாய்ச்சு ஸ்டார்ட் செய்யலாம்னு சொல்ற ஜோக் தான் ஞாபகத்துக்கு வந்தது. என் குழந்தை வந்திருக்கும்னு அழற நிலைக்கு அந்தப் பெண் போயிட்டாங்க.
“பரவாயில்லை, இன்னும் தாய்மை சாகலை நாட்டுல” ரங்கமணியோட முணுமுணுத்த கமெண்ட்டுல என் ஈகோ இடறிவிழுந்தது. எனக்கு என் பொண்ணு ஸ்கூல்லேருந்து வர நேரம் தெரியும். இன்னும் அரை மணி நேரம் இருக்கு. ஒரே ஒருநாள் வீட்டுல இருக்கறவங்க எல்லாம் இவ்ளோ அலப்பறது கொஞ்சம் அதிகம்.
“அவங்க குழந்தை எல்கேஜியா இருக்கும். உங்க பொண்ணு சீனியர் பசங்களையே அடிச்சு, கீழ தள்ளிட்டு, ஊர்வம்பை விலைக்கு வாங்கிகிட்டு வரா. ஒருநாள் வரும்போது கதவு பூட்டியிருந்தா எப்படி பிஹேவ் பண்ணனும்னு இந்த சிச்சுவேஷனும் தான் கத்துக்கட்டுமே, இப்ப என்ன போச்சு? இந்த ப்ரொகிராம் நான் போட்டதால தானே இவ்ளோ ஆர்பாட்டம். இதே நீங்க கூப்பிட்ட இடத்துல இப்படி லேட்டாகியிருந்தா பேசியிருப்பீங்களா? உங்களுக்கும் மத்தவங்க மாதிரி நறுக்கின காயும், நாளுநாள் பழசுல குழம்பும் ஊத்தினாத்தான் சரியாவீங்க. ஐயோ பாவம்னு வாழைப்பூ வாங்கி, மடல் மடலா எடுத்து, கை கறையானாலும் பரவாயில்லைன்னு ஒவ்வொண்ணுக்கா கள்ளன் ஆய்ஞ்சு, மணிக் கணக்கா திருத்தி, பருப்பு ஊறவெச்சு அரைச்சு, வேகவெச்சு, உதுத்து, வாழைப்பூ பருப்புசிலி செஞ்சு போடணும்னு நினைக்கறேனில்ல, எனக்கு இதெல்லாம் தேவைதான்…. .”
என்னாலயே என் ஃப்ளோவை நிறுத்தவும் முடியலை; தங்குதடையில்லாத என் தமிழ்ல ஆச்சரியப்படாம இருக்கவும் முடியலை. நிறுத்தினபோது (“ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:”) எனக்கு முன்னால இருந்தவங்க பில். இன்னொரு லைனும் எங்களுக்குப் பின்னாலயே திட்டிண்டே வந்து நின்னாங்க.
எனக்கு முன்னால பில் போட்டவங்க 3 ஃப்ளேவர்ல ஃபாமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கியிருந்தாங்க. பாத்தா, ஒவ்வொண்ணுக்கா மிஷின்ல காமிச்சு விலை மட்டும் கேட்டு (170, 180, 175) எது இருக்கறதுக்குள்ள விலை குறைவா இருக்கோ அதை பில் போடச் சொல்லி, மீதி ரெண்டையும் வைக்க உள்ள போனபோது எனக்கே வாழ்க்கை வெறுத்தது. வீட்டுக்குப் போய்ச்சேருவோமான்னு இருந்தது. பின்னால நின்னவங்க எல்லாம் அவங்களை சத்தம் போட்டாங்க. அட ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடறவங்க பிடிச்ச ஃப்ளேவர வாங்காம அஞ்சு பத்துக்கு கணக்குப் பாக்கற மனவியல் எனக்குப் புரியலை. (இதை எழுதும்போது Mint ங்கற business newspaperல பெரிய பெரிய பிஸ்தாக்கள் எல்லாம் எப்படி எல்லா இடத்துலயும் பேரம்பேசி மட்டுமே வாங்கறாங்கன்னு 4 நாள் முன்னால வந்த கட்டுரை (When MRP equals minimum retail price) நியாபகம் வருது. டயானாவுக்கு Dodi Fayed பாரிஸ்ல வாங்கின so called engagement மோதிரம் ( “Tell me yes” ring) பேரம் பேசி வாங்கினாருன்னா, அப்புறம் இதெல்லாம் என்ன தப்பு? And you and I end up paying full price ன்னு கட்டுரையாளர் புலம்பியிருந்தாரு.
ஒருவழியா அவங்க பணம் கொடுத்து, இவங்க மிச்சம் எப்படியோ திரட்டிக் கொடுத்து, ஹை ஜாலி, எங்க முறை. காய்கறிக்கு கார்டு யூஸ் பண்றதெல்லாம் ரொம்ப ஓவர்னு சொன்னதை காதுல வாங்காம வேகமா சாமான்களை எடுத்துவெச்சேன். பருப்பு, வேற சில சாமான்களும் வாங்கியிருந்தேன். பில் வந்ததும், கார்டை மிஷின்ல தேய்ச்சு,(கடவுளே, அந்த மிஷினும் வேலை செய்யணும்) பில்லுல கையெழுத்து வாங்க… பேனா… இல்லை.
உங்ககிட்ட பேனா இருக்கான்னு எங்களையே திருப்பிக் கேட்டாங்க. அப்புறம் அவங்களுக்குள்ளயே ஒருத்தரையொருத்தர் கேட்டு இல்லைன்னு சொல்லிண்டாங்க. ரங்கமணி என்னைப் பாத்த போது நான் அந்தப் பக்கம் ஒரு குழந்தையை மும்மரமா கொஞ்சிண்டிருந்தேன். குழந்தைகளைப் பாத்தா கொஞ்சாம இருக்க முடியுமா சொல்லுங்க?
எப்படியோ கடைக்குள்ள சாமான் எடுத்துகிட்டிருந்த ஒருத்தர் கிட்ட இருந்த பேனாவை வாங்கிக்கிட்டு வந்து கடைப் பணியாளர் கொடுக்க (அவர் பயந்து பின்னாலயே வந்து கையெழுத்துப் போட்டதும் கையோட வாங்கிப் போயிட்டாரு.) ஒருவழியா கிளம்பும்போது அவங்க கைகொடுத்து, மெம்பர்ஷிப் கார்டுக்கு ஒரு ஃபாரமும், ஒரு அரைக்கிலோ சர்க்கரை இலவசமாயும் கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டு வீடுவந்து சேர்ந்த போது ஸ்கூல் பஸ் வந்து நின்னுது. சுபம்.
* காய்கறிகள் காலைல பத்துமணிக்கே போனா ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு. D’Mart ல எப்பவுமே ஏசில சுருங்கின காய்கள்தான். அதனால காய்கறி மார்க்கெட்ல தான் வாங்குவோம். ஆனா மார்க்கெட்ல கிடைக்காத பல காய்கள் (வாழைப்பூ வெறும் ரூ.5.44 க்கு.), ஒரே காய்ல பல வெரைட்டி (கத்திரிக்காய், தக்காளி, அவரை…) எல்லாம் கிடைக்குது. (வாழைத்தண்டுக்கும் ஏற்பாடு பண்ணுங்கப்பா. ரொம்ப மிஸ் பண்றேன்.) முக்கியமா எடை நிச்சயமா மார்க்கெட்ல வாங்கறதை விட நிறைய வித்யாசம்.
* பழங்கள் மார்க்கெட்டைவிடவே குறைவோன்னு எனக்கு ஒரு எண்ணம். பைனாப்பிள்(எனக்குப் பிடிச்ச பழங்கள்ல இரண்டாது இடம்) வாரா வாரம் நான் பொறுக்கிக் கொடுத்தா தோல்சீவி, பேக்பண்ணி ரூ.25க்கு ஒரு கிழவர் கொடுப்பாரு. அதைவிடவே கொஞ்சம் பெரிய பழம் 16 ரூபாய்க்கு. கத்தியால பேராவூரணித் தேங்காயே உடைக்கறவ நான். நானே தோல்சீவ ஆரம்பிச்சா வாரம் 9 ரூபாய் மிச்சம்.
* துவரம் பருப்பு இதுவரைக்கும் நான் வாங்கின எல்லா இடங்களையும் விட ரொம்ப சிறப்பா இருந்தது. உளுந்து ஏகப் போடுவான். பொதுவா எல்லா மளிகைச் சாமான்களுமே D’mart க்கு சமமா அல்லது அதைவிட சிறப்பாவே இருந்தது. சாம்பார், ரசப் பொடி செய்ய எல்லாம் ஸ்பெஷலா சாமான் வாங்கிண்டு வந்தேன். விலையை இனிமேதான் பொருத்திப் பாக்கணும். ஆனா தரமான சுவையான சாமான்களுக்காக எனக்கு மாச பட்ஜட்ல சில நூறுகள் அதிகமான பரவாயில்லை.
* இலவசமா கொடுத்த சர்க்கரை நல்லா இல்லை. அண்ணாச்சி கடை சர்க்கரையும். ஆனா காசு கொடுத்து வாங்கினது, D’Mart சர்க்கரை மாதிரி கல்கண்டா இருந்தது.
* ட்ரை ஃப்ரூட்ஸ் வகைல பிற கடைகள்ல கிடைக்காத சில டூட்டி ஃப்ரூட்டி, தர்பூஸ், கர்பூஸ் விதை எல்லாம் கூட கிடைச்சது. அல்வா செய்ய வெள்ளரி விதை கிடைக்கலை. (ஸ்ரீரங்கத்துல செட்டியார்கள் வீட்டுல, பெண்கள் சும்மா இருக்கும்போதெல்லாம் இந்த விதையை உரிச்சுகிட்டிருப்பாங்க. ஆனா எங்க கிடைக்கும்னு தெரியலை.)
0
# முக்கியமா அரிசியும் டீயும் இவங்க தயாரிப்பு இன்னும் வாங்கி உபயோகிக்கலை. அரிசியை ரங்கமணியும் (என்னதான் குழம்பு ரசம், காய் எல்லாம் நல்லா சமைச்சாலும் அடிப்படைல சாதம் நல்லா இருந்தாதான் சமையல் ருசிக்கும்னு பெரிய நம்பிக்கை), டீ பரவாயில்லைன்னாவது எங்கவீட்டுல வேலை செய்ற அம்மணியும் சொன்னாங்கன்னா தான் இன்னும் நம்பிக்கை கூடும். இது ரெண்டும் நடக்கறது கொஞ்சம் கஷ்டம்.
# காய்கறிகளைப் பொறுக்கி, அதுக்கு எடை போட அதிக நேரம் எடுக்கறது, பில் போடற மிஷின் மக்கர், பாக்கி சில்லறை இல்லாதது, பேனா இல்லாதது (இந்த முறை நான் போனபோதும் பேனா இல்லை, நான் கொண்டு போயிருந்தேன்.) எல்லாம் என்னை மாதிரி நாலுபேர் திரும்பத் திரும்பச் சொன்னா சரி செஞ்சுடுவாங்க. இந்த ஞாயிற்றுக் கிழமை (கொஞ்சமே) கொஞ்சம் வேகம் அதிகம் தான்.
# மெயின் கடைத்தெருவுலயோ அல்லது குடியிருப்புகள் பக்கத்துலயோ இல்லாம ஸ்கூல், லேடீஸ் ஹாஸ்டல் கிட்ட இருக்கறது கொஞ்சம் அபத்தமா இருக்கு. அதுக்குப் பக்கத்துல எந்த ஷாப்பிங்கும் செய்ய முடியாம திரும்ப வேண்டியிருக்கு.
# நாங்க முந்தி இருந்த வீட்டுக்கு அடுத்த காம்பவுண்டே D’mart. 3 மாடிக் கட்டிடமா மிகப் பிரம்மாண்டமா வந்து, கிடைக்காத பொருளே இல்லைன்னு நிலைமை. அங்க எந்தப் பொருளும் கண்ணை மூடிகிட்டு இருக்கற இடம் தெரிஞ்சு எடுக்கற அளவுக்கு பழகிட்டேன். ஆனா ரிலையன்ஸ் என்னவோ ரொம்பச் சின்ன இடமா இருக்கு. இனி, மேல மாடி கட்டினாத்தான் அதிகமா வைக்க முடியுங்கற நிலைமைல இப்பவே பல வீட்டுபயோகப் பொருள்கள், நான் தொடர்ந்து வாங்கற Lizol (citrrs fragrance), fabric conditioner எல்லாம் இல்லவே இல்லை. அதனால இது முழுமையா ஷாப்பிங் செய்ய ஏத்த இடம் இல்லை. இப்போதைக்கு பெரிய அளவுல வளர முடியும்னும் தோணலை. Nerul மக்கள் D’Mart தான் அந்த வகைல தேர்ந்தெடுப்பாங்க.
# இன்னமும் பச்சரிசி, இட்லி அரிசிலேருந்து, வெத்தலை, வாழையிலை, கனுவுக்கு மஞ்சள் கொத்து, இதோ வரப்போற கார்த்திகைக்கு பொரி வரைக்கும் நம்பளோட வழமையான பல தேவைகளுக்கும்,
சொக்காயிக்கு படம் காட்ட மினுக்கு வத்தலா, வரவழைச்சுடுவோம், அதென்ன திருநெல்வேலில அப்பக் கொடி, அதளக்காய் வத்தலா, தாமரைத்தண்டான்னு கேட்டுப் பாக்கறேன்னு பத்து ரூபாய் சாமானுக்கெல்லாம் மெனக்கெடத் தயாரா இருக்கவும்,
பஞ்சாப் கோதுமையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தா (தேவைப்பட்டா சோயாவும் நாமே சொல்ற அளவு சேர்த்து) மிஷின்ல அரைச்சுக் கொண்டுவந்து கொடுக்கவும், (ஒருதடவை மிஷின்ல அரைச்சு உபயோகிச்சவங்க, கம்பெனி கோதுமை மாவு எப்பவும் வாங்க மாட்டாங்க.)
“சாம்பார்ப்பொடிக்கு விரளி மஞ்சள் வாங்க மறந்திட்டீங்களா, ஏன் வெயில்ல அலையறீங்கக்கா, தலைவலி வரும், தம்பிகிட்ட இப்பவே கொடுத்தனுப்பறேன்”
“இல்லை, எதிர்ல ஐயப்பன் கோவில் வாசல்ல பூவும் வாங்கணும், நானே வரேன்”
“அட, என்ன பூ, எவ்வளவுக்குன்னு சொல்லுங்க, கையோட வாங்கிவாரச் சொல்லுதேன், வேற என்ன வேணுங்க்கா”
போன்ற பேங்க் ஆஃப் இந்தியா [சேவையைக் கடந்த நேசமிகு உறவுகள்
] மாதிரி விஷயங்களுக்காகவும் இன்னும் அண்ணாச்சிகளையும் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கு.
பிற்சேர்க்கை:
வாழைத் தண்டும் கிடைக்குது.
அதுவும் வெறும் ரூ.5.38 க்கு.
கருப்பு உளுத்தம் பருப்பு(தோல் பருப்பு) ஊறவெச்சு 24 மணி நேரம் ஆகியும் தோல் பிரியலை; நனைச்ச தண்ணில கருப்புச் சாயம்.
பேக் செஞ்ச எல்லா மளிகைச் சாமான்களுமே Reliance Value, Reliance Select -ன்னு இரண்டு தரத்துல இருக்கு. முன்னது RV பாக்கெட்ல தமிழும் சேர்த்து 8 மொழிகள்ல அச்சிடப்பட்டு கொஞ்சம் விலை தரம் இரண்டுலயுமே குறைவாவும், பின்னது RSelect 4 மொழிகள்ல மட்டும்(தமிழ் இல்லை) அச்சிடப்பட்டு மிகக் குறைந்த விலை வித்யாசத்துல ஆனா மிகச் சிறந்த தரத்தோட இருக்கு. காரணம் தெரியலை. (உதாரணம் கடலைப் பருப்பு RV – கிலோ ரூ.58, RSelect – கிலோ ரூ. 60. தரத்துல பெரிய வித்யாசம்.)
-0-
Nerul Times: இந்த ஞாயித்துக்கிழமை, வீட்டுக்கிட்ட இருக்கற ATM போய் அப்படியே எதிர்ல இருந்த பிரபல நெருள் சனீஸ்வரன் கோயிலுக்குப் போனா அங்க நோட்டீஸ் போர்டுல சனிக்கிழமை உபயதாரர் பேர் அழிக்காம இருந்தது. இந்தக் கோயில் ரொம்பப் பிரபலம். சனிக்கிழமை பூஜை எல்லாம் பெரிய அளவுலயும், அதிகக் கூட்டமாவும் இருக்கும். போர்டுல இருந்த உபயதாரர் சச்சின் டெண்டுல்கர்!





புதன் கிழமை, நவம்பர் 21, 2007 at 2:40 பிற்பகல்
.SBOA ஸ்கூல்கிட்ட Reliance Fresh திறந்து பத்து நாளாச்சு. இப்ப போய் பாத்துட்டு வந்துரலாம்
சண்டேன்னா கூட்டமாயிருக்கும்……..”
அன்பு ஜயசஸ்ரீ நீங்கள் இருப்பது சென்னை அண்ணா நகரா? நம்ம பேட்டை!ஜாலிதான் போங்க!enjoy
நடைப்பிரவாகம் நன்றாக இருந்தது. தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்.
அன்புடன்
” கமலா
புதன் கிழமை, நவம்பர் 21, 2007 at 3:57 பிற்பகல்
செல்லம் செல்லம் செல்லம் செல்லம்!
என்னமா எழுதிட்டடா. நீ நீ புதுசா பதிவு ஆரம்பிச்ச பாரு, அப்ப நானே இது தேறாதுனு நினைச்சேன் தேறாதுனு நினைச்சேன். ஆனா ஐய்யோ கண்ணுல ஒத்திக்கற மாதிரி எழுதற. கண்ணுல ஒத்திக்கற மாதிரி எழுதற. சும்மா கண்ணுல ஒத்திக்கற மாதிரி படம் போடற. நான் என்ன நினைக்கறேன்னா உனக்கு சமையல் ஷாப்பிங் எல்லாம்தான் நல்லா செய்ய வருது. சும்மா சூப்பரா எழுத வருது. அதை மட்டும் செய்யேன். எதுக்கு வேண்டாத அரசியல் எல்லாம்?
/////அதைவிட முக்கியமா பெரிய பெரிய வேலை எல்லாம் சலிக்காம செய்ற எனக்கு, சில சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்யப் பிடிக்காது./////
அதுதான் அதுதான் எனக்கும். நீ பெருசு பெருசா பதிவு போடு. பிடிக்குது. சின்னச் சின்னதா அரசியல் செய்ற பாரு, அத நிறுத்திக்க. ரசகுல்லா செய்யி. ரசமலாய் செய்யி. கனிமொழிக்கு வாழ்த்து எதுக்குடா செல்லம்?
நீ நீ எவ்ளோ வேணா பெரிய பெரிய பதிவா போடு. ஆனா கண்ட கண்ட பதிவுல போய் கண்ட கண்டவனுக்கு கமெண்ட்டுல வக்காலத்து வாங்கி வெச்சிருக்க. அதெல்லாம் நீ ஏன் செய்ற? நீ செய்யக் கூடாது.
புதன் கிழமை, நவம்பர் 21, 2007 at 7:52 பிற்பகல்
மிகவும் ரசித்து படித்தேன். ரொம்ப natural – ஆக எழுதி இருக்கிறீர்கள். எல்லோருடைய கணவரும் இப்படி தான் இருப்பார்களோ? அல்லது எல்லா ஆண் மக்களும் இப்படித்தான் இருப்பார்களோ? படிக்க ரொம்ப ச்வாரsயமாக இருந்தது. நீங்கள் கடைசி வரை வாங்கினீர்களா என்று ஆவலுடன் படித்து கொண்டிருந்தேன். என் கணவராக இருந்தால் பையை அப்படியே வைத்து விட்டு , என்னை ஒரு முறை முறைத்து , எப்பொழுதோ அங்கிருந்து கிளம்பி இருப்போம். உங்கள் கணவருக்கு பொறுமை அதிகம்
புதன் கிழமை, நவம்பர் 21, 2007 at 9:05 பிற்பகல்
ஒரு நாள் லீவு போட்டுவிட்டு படிக்கவேண்டும். படித்துவிட்டுச் சொல்கிறேன்!
புதன் கிழமை, நவம்பர் 21, 2007 at 9:21 பிற்பகல்
<>
<>
??? இதுக்கு என்ன அர்த்தம். கொஞ்சம் விளக்குங்க.
வியாழன், நவம்பர் 22, 2007 at 12:01 மு.பகல்
ஜெயஸ்ரீ எத்தனை நாள் வைச்சு எழுதினீங்க இவ்வளவு பெரிய பதிவை.
ரிலையன்ஸ் ப்ரஷ்ஷா no comments, நாங்கள் ரிலையன்ஸ் பெட்ரோலியம் ஸ்டாக் வைத்திருப்பேன் ஆனால் ரிலையன்ஸ் ப்ரஷ்ஷை ஒத்துக்க மாட்டேன்
சும்மா சொல்லலை அவர்கள் இதற்கு பின்னால் செய்யும் சதியும் அரசியலும் இங்கே தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
//ஆண்களால பெண்கள் மனசைப் படிக்க முடியாதுன்னு யார் சொன்னது? //
இதைத் தேவைப்பட்டால் உபயோகித்துக் கொள்கிறேன் வேறு இடங்களில்.
//ஒரு நாள் லீவு போட்டுவிட்டு படிக்கவேண்டும். படித்துவிட்டுச் சொல்கிறேன்! //
அதுசரி!!!(!!! இதுக்கும் அர்த்தம் கேட்கக்கூடாது பழமொழி சொன்னா அனுபவிக்கணும் கேள்வி கேட்கக்கூடாது !!! ???
இதெல்லாம் பழமொழி மாதிரி)
வியாழன், நவம்பர் 22, 2007 at 12:18 மு.பகல்
[...] Posted by பிரேமலதா on November 21, 2007 பாம்பேல புதுசா திறந்திருக்கிற ரிலயன…. [...]
வியாழன், நவம்பர் 22, 2007 at 5:13 மு.பகல்
நான் போட்ட கமெண்ட் எப்படி பின் நவீனத்துவ கமெண்ட்டாக வந்தது எனத் தெரியவில்லை. சரியான ரியலிஸ கமெண்ட் இப்போது!
//நாகரிகம்ங்கற பேர்ல நாம இழந்ததுதான் எவ்வளவு?//
//உளுந்து ஏகப் போடுவான்//
??? இதுக்கு என்ன அர்த்தம் கொஞ்சம் விளக்குங்க.
வியாழன், நவம்பர் 22, 2007 at 10:05 மு.பகல்
//அதுசரி!!!(!!! இதுக்கும் அர்த்தம் கேட்கக்கூடாது பழமொழி சொன்னா அனுபவிக்கணும் கேள்வி கேட்கக்கூடாது !!! ??? இதெல்லாம் பழமொழி மாதிரி)//
மோகன், தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டுச்சான்ற மாதிரி எப்படி எப்படி எங்கெல்லாம் பதில் கிடைக்குது பாருங்க!
)
வியாழன், நவம்பர் 22, 2007 at 10:45 மு.பகல்
நிறய ப்ளாஸ்டிக் தெரியுது ஜயஷ்ரீ.அது தான் வருத்தம். அப்புறம் கீரைக்கார அம்மா, பழவண்டிக்காரர் எல்லாம் கூட பாவம். எது சரி ,தப்பு ன்னு சொல்ல தெரியல.நான் இருக்கிறது சின்ன ஊர். இங்க சேஃவ் வே ப்ரபலம். ஆனா உள்ளூர் காய்கரிகாரர் குழந்தைகளுக்கு வாழப்பழம் குடுப்பார். அவர் சமீபத்தில செத்தபோ ஃயுனெரலுக்கு நிறய பேரு போனாங்க.
வியாழன், நவம்பர் 22, 2007 at 3:44 பிற்பகல்
kalyanakamala, நான் மும்பைல இருக்கேன்.
ramya, thanks. நீங்க யாரும் பதறக்கூடாதுன்னு தானே “கண்டேன் கற்பினுக்கணியை” மாதிரி முதல்லயே வாங்கின பையை படம் போட்டிருக்கேன். ரங்கமணி பொறுமை எல்லாம் ஒன்னுமில்லை. நான் எனக்கு வேலை ஆகிறவரைக்கும் அந்தப் பக்கம் காதுகொடுக்காம இருந்துடுவேன். அவ்ளோதான்.
கதம்பமாலை thanks. பிரேமலதா, கட்டுரையோட கடைசில அவ்ளோ செண்ட்டி அடிச்சுருக்கேனே அண்ணாச்சிக்கு, படிக்கலையா? ஆனா என்ன செய்யறது?
( இதெல்லாம் காலத்தின் கட்டாயம். அவருக்கு சமீபத்துல மூணாவதா ஒரு பையன் பிறந்திருக்கானாம். யாரோ பெரியவர், ‘உனக்கென்ன, எல்லாருக்கும் நெருள்லயே ஒரு கடையை ஆரம்பிச்சுக் கொடுத்துடுவ, ஓஹோன்னு வந்துடுவாங்க’ன்னு சொன்னாரு.. “ஐய, இந்தப் பொழப்பே பசங்களுக்குக் கிடையாது. எல்லாரையும் பெருசா படிக்கவைப்பேன்’னு சொன்னாரு. அதுதான் நடக்க வேண்டிய மாற்றம்.
Seetha, பிளாஸ்டிக் பத்தி நானே கட்டுரைல சொல்லியிருக்கேன். மத்தபடி கீரைக்கார அம்மா, பழக்காரர்,….. வளர்ந்து வர வேகத்துல இதெல்லாம் தவிர்க்கவே முடியாதது. இதுக்காக ஒவ்வொருவரையா அணுகினா எவ்வளவு நேரம், விரயம்? பெருநகரங்கள்ல (இவங்களை எல்லாம் காலனிக்குள்ள அனுமதிக்கவே மாட்டாங்க.) இருக்கறதால பொதுவாவே இந்த மாதிரி மாதாந்திர, வாராந்திர, under one roof ஷாப்பிங் தான் எங்களுக்கு வசதி. மத்த செண்டிமெண்ட்ஸ் நான் ஒத்துக்கறேன்.
வியாழன், நவம்பர் 22, 2007 at 3:45 பிற்பகல்
ப்ரசன்னா, மோகன்தாஸ், உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல என்ன நடக்குது? எங்களுக்கும் சொல்லலாமில்ல.
ப்ரசன்னா, ‘போடுவான்’னா, இட்லி தோசைக்கு அரைக்கும்போது, உளுந்து அரைச்சு வர மாவுக்குப் பேரு. அது அங்க வாங்கின பருப்புல நிறைய வந்தது. ஆக்சுவலா நிறைய கண்டுதுன்னு தான் சொல்வோம்.
இந்த வார்த்தை இதுக்கு முன்னால நீங்க கேட்டதில்லையா, ஆச்சரியமா இருக்கு.
வியாழன், நவம்பர் 22, 2007 at 3:53 பிற்பகல்
மோகன்தாஸ் தம்பி, சொன்னா நம்புங்க. முந்தாநாள் மதியத்துக்கு மேலதான் ஒரே வேகத்துல எழுதித் தள்ளினேன். நேத்தி காலைல ஏத்தினா, என் கணினில பதிவு தெரியவே இல்லை. என்னென்னவோ செஞ்சு பார்த்துட்டேன். ஆனா மக்கள்கிட்டேயிருந்து பின்னூட்டம் மட்டும் வருது. அப்ரூவ் செய்யவும் முடியாம குழம்பிப் போய் போயிட்டேன். விசாரிச்சா slow net connectionஆம். ஒருவழியா ராத்திரிதான் நானே பார்த்து பிழை எல்லாம் திருத்த முடிஞ்சது. நீங்க அதுக்கப்புறம் தானே படிச்சீங்க?
//அவர்கள் இதற்கு பின்னால் செய்யும் சதியும் அரசியலும் இங்கே தேவையில்லை..//
தேவையில்லைன்னெல்லாம் எதுவும் இல்லை. நீங்க சொல்லலாம். இந்தப் பதிவுக்கு அசுரத்தனமான பின்னூட்டங்களும் வருமோன்னு நினைச்சே தான் எழுதினேன்.
ஆனா இந்தப் பதிவு, ஒரு கன்ஸ்யூமரா, லோயர் மிடில்கிளாஸ் ஹவுஸ்வைஃபா, என் அனுபவத்தை, எண்ணங்களை, லாப நஷ்ட கணக்கைத் தான் எழுதியிருக்கேன். இங்கயெல்லாம் வாங்கிட்டு, வேற முகம் பொதுவுல போட்டுக்க முடியுமா?
வியாழன், நவம்பர் 22, 2007 at 3:55 பிற்பகல்
//நான் என்ன நினைக்கறேன்னா உனக்கு சமையல் ஷாப்பிங் எல்லாம்தான் நல்லா செய்ய வருது. சும்மா சூப்பரா எழுத வருது.//
அண்ணே/அக்கா,
நான் எதுசெஞ்சாலும், எந்தத் துறைல செஞ்சாலும் கொஞ்சமாவது உருப்படியா செய்யணும்னு மெனக்கெட்டு தான் செய்வேன். சண்டை போட்டாக் கூட தீவிரமா சண்டை போடற ஆள் நான். பிசினஸ் செஞ்சா பல்லுகூட விளக்காம காலைல கடையைத் திறந்திடுவேன்னு கட்டுரைல சொல்லியிருக்கேனே பார்க்கலையா? அதென்னா சமையல் ஷாப்பிங் தான் செய்யவும் எழுதவும் வரும்னு சொல்லிட்டீங்க. என் எழுத்துத்திறமையை காண்பிக்க இந்தப் பதிவு இல்லை. என் டைரிக் குறிப்புகளை மெதுவா சேமிக்க மட்டும்தான். சரியாச் சொன்னா, “ஏன் பாவம் சமையல் குறிப்பு எழுதப் போயிட்ட?”ன்னு ஆளாளுக்கு என்னவோ நான் ரொம்ப கீழிறங்கிப் போயிட்ட மாதிரி கேக்கறதைப் பார்த்து தான் சோர்ந்துபோயி அங்கங்க வண்டி மக்கர் பண்ணுது. மத்தபடி என் “உயரம்” என்னன்னு எனக்கே தெரியும்.
///சின்னச் சின்னதா அரசியல் செய்ற பாரு, அத நிறுத்திக்க.///
ஏதோ பொன் வைக்கற இடத்துல பூ வைக்கறேன். கூடாதா?
///ரசகுல்லா செய்யி. ரசமலாய் செய்யி. கனிமொழிக்கு வாழ்த்து எதுக்குடா செல்லம்?///
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. நம்ப முதலமைச்சர் குடும்பம் நோன்புக் கஞ்சி மட்டும் குடிக்கப் போறாங்கன்னு ஆளாளுக்கு மாஞ்சு போறாங்க. அவர் தெளிவா சொல்லிட்டாரு, என்னைக் கூப்பிடறாங்க போறேன், இந்துப் பண்டிகைக்கும் கூப்பிட்டா போவேன்னு. அதான் முத பத்திரிகை நான் வெச்சேன்.
கனிமொழிக்கு தீபாவளி மேல எல்லாம் வெறுப்பு இல்லையாம், அதுக்கு வர ஸ்வீட்ஸ்ல ஒரே காஜு கத்லி, மைசூர்பாகா இருக்கறதுதான் பிடிக்கலையாம், அதிரசம், பெங்காலி ஸ்வீட்ஸ் எல்லாம் நம்ப மக்களுக்கு செய்யவே தெரியாதான்னு ஒரே ஃபீலிங். பாவம். அதான், ஏதோ எனக்குத் தெரிஞ்சதை செஞ்சேன். அது என் கடமை இல்லையா?
///ஆனா கண்ட கண்ட பதிவுல போய் கண்ட கண்டவனுக்கு கமெண்ட்டுல வக்காலத்து வாங்கி வெச்சிருக்க. அதெல்லாம் நீ ஏன் செய்ற? நீ செய்யக் கூடாது.///
அதுல பாருங்க, இப்பல்லாம் சமயத்துல நான் சொல்றதையே நான் கேக்கறதில்லை. கண்ட கண்டவங்களும், சாரி, காணாத நீங்களெல்லாம் சொல்லி நான் கேப்பேனா? போங்க, போய் உங்க வேலையைப் பாருங்க.
அப்றம், பிரகாஷ்ராஜ் தனிமனிதரா ரொம்ப நல்லவராம். பாவம் அவர் பேரைக் கெடுத்துடாதீங்க.
வியாழன், நவம்பர் 22, 2007 at 4:16 பிற்பகல்
//ப்ரசன்னா, மோகன்தாஸ், உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல என்ன நடக்குது? எங்களுக்கும் சொல்லலாமில்ல.//
ஜெயஸ்ரீ அது ஒரு காமெடிக் கதை, நான் ஏகமா கண்ணடிப்பதாகவும் ஏற்கனவே கண்ணாடி இதில் நிறைய கண்ணடிச்சா எனக்குத்தான் கேடுன்னு நினைச்சு பிரசன்னா பக்கத்தில் ஒரு கேள்வி கேட்டிருந்தார், அடிக்கடி ; )(;)) ஏன் போடுறீங்கன்னு.
நேரா பதில் சொன்னா அப்புறம் என்னாகுறது. அப்படியே விட்டுட்டேன் இன்னிக்கு உங்கக்கிட்ட, போடுவான் என்றால் என்னன்னு கேக்குறதுக்கு பதிலா! தவறுதலா(;)
//??? இதுக்கு என்ன அர்த்தம் கொஞ்சம் விளக்குங்க.// என்று கேட்டுவைக்க, எனக்கு கிடைத்த கேப்பில் நான் த்ரீ வீலர் ஓட்டினேன்.
என்ன அர்த்தம் என்று சொல்ல நான் ‘பம்மல் கே(உவ்வ…)சம்மந்தத்தை’ இழுத்து தெருவில் விட்டேன். அவ்வளவே புரியுதா?
வியாழன், நவம்பர் 22, 2007 at 4:17 பிற்பகல்
//நீங்க அதுக்கப்புறம் தானே படிச்சீங்க?
//
இல்லை முன்னமே படிச்சேன், அப்பா அம்மா டீச்சருங்க அப்படிங்கிறதால முதல்ல தப்புத்தான் கண்ணில் படும். ஆனால் எப்பப்பாரு சொல்லிக்காட்ட மாட்டேன். அதுவும் நீங்க ரீஸன் சொல்லியபிறகு நிச்சயமாக மாட்டேன்.
வியாழன், நவம்பர் 22, 2007 at 4:22 பிற்பகல்
யக்கா, என்னமோ தாளிச்சிக் கொட்டிக்கிட்டு இருக்கீங்கன்னு இந்த பக்கம் வராம இருந்துடேன்.
இனி ரெகுலரா வந்துடரேன்.
)
கதம்பமாலையில பார்த்துட்டு வந்தா, அவங்க அவங்க ரூமு போட்டு யோசிச்சி கமெண்டு எல்லாம்
தாராங்க
பி.கு பதிவ மட்டும் படிக்க இல்லே
வியாழன், நவம்பர் 22, 2007 at 10:08 பிற்பகல்
—ஒரு நாள் லீவு போட்டுவிட்டு படிக்கவேண்டும். படித்துவிட்டுச் சொல்கிறேன்!—
அதே
வெயிட்டீஸ்
வியாழன், நவம்பர் 22, 2007 at 10:59 பிற்பகல்
எங்க ஊர் சப்ஜி மண்டி போறமாதிரி ஒரு உணர்வு. உரையாடலும் அப்பாடியே. அந்த கூட்டமும், கத்தி பேசும் உரையாடலும் எனக்கு ஒத்துக்காது. அதனால இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கறிகாய் ஷாப்பிங் எல்லாம் தலைவரோடதுதான்.
உங்க பதிவ படிக்கவே பயமாய் இருக்கு, நிறைய ஒற்றுமை.
வெள்ளிக்கிழமை, நவம்பர் 23, 2007 at 12:25 மு.பகல்
[...] இருந்தேன். ஆனா, இன்னிக்கு ஜெயஸ்ர், ரிலையன்ஸ் பிரெஷ் பத்தி எழுத…் அவங்களுக்குப் பின்னூட்டமாகத்தான் [...]
வெள்ளிக்கிழமை, நவம்பர் 23, 2007 at 12:26 மு.பகல்
ஜெ!,
நல்ல இடுகை. உங்களுக்குப் பின்னூட்டமாக எழுதத் தொடங்கி அதைக் கடிதமாக மாத்தி இப்ப தனி இடுகையாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன்.
http://mathy.kandasamy.net/musings/archives/2007/11/22/833
-மதி
திங்கட் கிழமை, நவம்பர் 26, 2007 at 10:39 மு.பகல்
மோகன்தாஸ் கண்ணடிக்கக் கூடவா பிரச்சினை பண்றாங்க. அப்படீன்னா கவிதை எழுதுவேன்னு கேப்ல ப்ளேன் விட்டுப் பாருங்க.
நான் என்னை ஏதாவது கேள்விகேட்டா அப்படித் தான் செய்யறது. இப்பல்லாம் நான் எது செஞ்சாலும் கேள்வியே இல்லை.
உஷா,
என்னவோ எல்லாரும், அநேகமா ஆண்கள், என் பதிவை சமையல் குறிப்புக்காக படிக்கறேன்னு சொல்றதே கேவலம் மாதிரி, குறிப்புக்காக இல்லை, உங்க நடைக்காக (ஆமாம் பெரிய திஸ்ர நடை) படிக்கறேன்னு சொல்லிப்பாங்க. சிலர் அதுகூட இமேஜ் போயிடும்னு, ஓ இப்பத்தான் பாக்கறேன்னு சொல்லிப்பாங்க.
) நீங்க தான் வித்யாசமா, ஆனா உண்மையா, நான் தாளிக்கறதைப் படிக்க இல்லை, என்னை எல்லாரும் தாளிக்கறதைப் படிக்கன்னு சொல்றீங்க.
(( ஹ்ம். வாழ்க!
bsubra லீவ் கிடைச்சுதா? எடுக்காதீங்க. எப்படியும் பதிவைப் படிக்க முடியாம வீட்ல வேலை விரட்டும். இல்லைன்னு சொன்னா பொய்.
என்னோடா ஆச்சரியமே இங்க எப்படி இவ்ளோ ஆண்கள் கணினியைக் கட்டிக்கிட்டு அழறாங்கன்னு தான். என் கணவரை நான் அனுமதிச்சிருக்க மாட்டேன்.
ஒருவேளை இங்க எல்லாரும் அலுவலகத்துல தான் செய்றாங்களோ.
பத்மா, ஆனா சத்தம் இல்லாத இடம் இந்தியாவுல எங்க இருக்கு? இருந்தா அங்க போய் அஞ்சு நிமிஷம் இருக்கணும் போல இருக்கு. அதுக்கு நீ முதல்ல அஞ்சு நிமிஷம் பேசாம இருக்கணுமேன்னு எங்க வீட்ல சொல்வாங்க. அதுவும் சரிதான்.
மதி, எப்படியோ உங்களை ஒரு பெண்டிங் பதிவை எழுதவெச்சிருக்கேன். தேவைப்பட்டா பின்னர் இதுபத்தி வேற கோணத்துல விரிவா எழுதறேன். தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன். இந்தப் பதிவுலயே ஓரளவு எல்லாம் sub-text ஆ சொல்லிட்டேன்.
திங்கட் கிழமை, நவம்பர் 26, 2007 at 10:25 பிற்பகல்
//உஷா, என்னவோ எல்லாரும், அநேகமா ஆண்கள், என் பதிவை சமையல் குறிப்புக்காக படிக்கறேன்னு சொல்றதே கேவலம் மாதிரி, குறிப்புக்காக இல்லை, உங்க நடைக்காக (ஆமாம் பெரிய திஸ்ர நடை) படிக்கறேன்னு சொல்லிப்பாங்க. //
பிறகு உங்க பதிவு படிச்சு சமையல் தெரிஞ்சுக்கவா படிக்கறாங்கன்னு நினைக்கறீங்க?
செவ்வாய்க் கிழமை, நவம்பர் 27, 2007 at 5:08 பிற்பகல்
மதியின் இடுகை ப(பி)டிச்சி வந்தேன்..இங்க பார்த்தா ஒரு பெரிய கும்பலே இருக்கு
எப்பவும் தாளிக்காம அப்பப்ப பின்/முன் தாளிதங்களையும் பகிருங்க..நல்ல இடுகை
புதன் கிழமை, நவம்பர் 28, 2007 at 11:21 மு.பகல்
ப்ரசன்னா,
)))
நான் பொதுவாத் தான் சொன்னேன். சமையல் குறிப்பே மரத்தடில எழுதக் கூடாதுன்னு சொன்னவங்க (பொதுவுல எல்லாரையும் சொன்னாலும் செல்வநாயகிக்கு கடிதமே எழுதியிருக்கீங்க) எல்லாம் சமையல் பதிவாகவே இருந்தாலும் என் பதிவுக்கு வந்து, படிக்கறாங்கன்னா, அது என் தமிழுக்குக் கிடைச்ச பெருமையா நினைக்கறேன். :பில்டப்:
அய்யனார், நன்றி. நீங்க இங்க எனக்கு பதில் அனுப்பின சமயம், நான் உங்க பதிவை (திரைவிமர்சனம்) படிச்சுக்கிட்டிருந்தேன். உங்க பேரைப் பாத்ததும் பதிவு படிக்கறதால பிரமையோன்னே நினைச்சேன்.கிள்ளிப் பாத்தா (பக்கத்துல இருக்கறவங்களைத் தான்!) வலிச்சது.:)
புதன் கிழமை, நவம்பர் 28, 2007 at 8:48 பிற்பகல்
—பிறகு உங்க பதிவு படிச்சு சமையல் தெரிஞ்சுக்கவா படிக்கறாங்கன்னு நினைக்கறீங்க?—
நான் ஃபோட்டாக்களுக்காகவும் படிக்கறேன். பண்ணத் தெரியாவிட்டால் பார்க்கத்தான் முடியும்னு; சொல்ல வந்தாலும், செஞ்சாலும் செரிக்கமுடியாதபடி நெய்ப்பற்றும் அதிமதுரமும் கலந்த பதார்த்தங்களை தரிசிப்பதற்கே பாக்கியம் செஞ்சிருக்கணும்
வியாழன், நவம்பர் 29, 2007 at 1:12 பிற்பகல்
//நான் பொதுவாத் தான் சொன்னேன். சமையல் குறிப்பே மரத்தடில எழுதக் கூடாதுன்னு சொன்னவங்க (பொதுவுல எல்லாரையும் சொன்னாலும் செல்வநாயகிக்கு கடிதமே எழுதியிருக்கீங்க) எல்லாம் சமையல் பதிவாகவே இருந்தாலும் என் பதிவுக்கு வந்து, படிக்கறாங்கன்னா, அது என் தமிழுக்குக் கிடைச்ச பெருமையா நினைக்கறேன். :பில்டப்: //
ஆம். செல்வநாயகி சமையலும் எழுதினார். அதற்கே நான் சொன்னேன். ஆனால் நீங்கள் சமையல் மட்டும் எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள். என்னத்த சொல்ல? ரெண்டு நாள் சமைக்கும்போது உப்பு அதிகமா போச்சுன்னா இப்படி சமையலை மட்டும் எழுதுறது நின்னுடும், நமக்கு வர்றதைத்தானே எழுதணும்ங்கிறதுதானே அடிப்படை விதி! அப்படி நடக்கட்டும். உடனே சமையலைப் பத்தி எழுதினா கேவலமா என்று வராதீர்கள். நான் அதைச் சொல்லவில்லை. அதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். எழுத திறமையும் ஆசையும் இருப்பவர்கள் வெறும் சமையல் என்று போனால், அதைச் சொல்லத்தான் வேண்டும். ஆனால் நாம் என்று அடுத்தவர் சொல்வதைக் கேட்கிறோம்! So, Go Ahead!!!
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007 at 9:48 மு.பகல்
bsubra, நன்னி. வெறும் குறிப்பு மட்டும் ஏத்தினா போதும்னா தினம் பத்து பதிவா தட்டி ஏத்தி 1000 பதிவைத் தாண்டியிருப்பேன். உங்களை மாதிரி படம் மட்டும் பாக்கற பாப்பாக்களுக்காகத் தான் இவ்ளோ நாள் எடுக்குது.
ப்ரசன்னா,
//ரெண்டு நாள் சமைக்கும்போது உப்பு அதிகமா போச்சுன்னா இப்படி சமையலை மட்டும் எழுதுறது நின்னுடும்,..//
அடப்பாவமே, சமைக்கும்போது உப்பு அதிகமானா எழுதறதை ஏன் நிறுத்தணும்? உப்பு அதிகமானாலும் சமைச்ச பண்டத்தை வீணாக்காம எப்படி சமாளிக்கலாம்னு இன்னும் 4 குறிப்பு சேர்த்து எழுதறதுதான் விடா முயற்சி. சரியா வரலைன்னு விட்டுட சமையல் ஒன்னும் எழுத்தோ பிற விஷயங்களோ இல்லை. நல்லா வந்தாலும் வராட்டாலும் அன்றாடம் நான் செய்ற முக்கிய வேலை இதுதான். கடுமையான தலைவலி வரப்போறது தெரிஞ்சாலும் அடுத்த அரைமணிக்குள்ள அன்றைக்கு முழுமைக்குமான சாப்பாட்டை தயார் செஞ்சு வைச்சுட்டு மருந்து சாப்பிட்டு தூங்கற ஆள் நான். அடுத்த வீட்டுல எழவு விழுந்தா கூட எல்லாரும் அழுதாலும் வேடிக்கை பார்த்தாலும், ஐயோ பொணத்தை எடுத்ததும் மத்தவங்களுக்கு பசிக்குமே, குளிச்சு வந்ததும் முதல்ல காஃபி தரணுமேன்னு குடம் குடமா காபி கலக்கற ஆள் நான். இந்தத் துறைலதான் நான் அநேகமான நேரம் இருக்கேன். உலகத்துல எது நடந்தாலும் நடக்காட்டாலும் நாலு மணி நேரத்துக்கு ஒரு தடவை தவறாம எனக்குப் பசிக்குது. அதனால எனக்கு வரலைன்னு நான் தப்பவே முடியாது.
///?நமக்கு வர்றதைத்தானே எழுதணும்ங்கிறதுதானே அடிப்படை விதி!///
அப்படி எல்லாம் எல்லாரும் யோசிச்சா இப்படி ஆளாளுக்கு கதை கவிதைன்னு எழுதக் கிளம்புவாங்களா?
தனக்கும் எழுத வரதாகவும், அல்லது எழுதி எழுதியாவது வளரமுடியுங்கற நம்பிக்கைலயும் தானே எழுதறாங்க. அதான் நானும் தேற முடியுதான்னு பாக்கறேன்.
ஏற்கனவே பலதடவை சொல்லிட்டேன், என் எழுத்துத் திறமையைக் காண்பிக்கவும், கருத்துக் கடலைத் திறந்துவிடவும் இந்தப் பதிவை ஆரம்பிக்கலை. என் சமையல் குறிப்பு டயரியை இங்க மாத்தறேன். என்ன, அதே ஃபார்ம்ல வேக வேகமா ஏத்தமா, கொஞ்சம் படமெல்லாம் போட்டு, மானே தேனே பொன்மானே எல்லாம் சேர்த்து நிதானமா ஏத்தறேன். அவ்ளோதான். யாருக்காகவும் இல்லாம இது என் சொந்த உபயோகத்துக்காக மட்டும் தான். அதனால யாருமே படிக்காட்டாலும் தொடர்ந்து ஏத்துவேன்.
சமையல் பதிவை இக்னோர் பண்ணுங்க. உங்க கருத்துப்படி நான் இணையத்துல எழுதலைன்னே எடுத்துக்கலாம். அதுதான் உண்மை. அதுக்காக ‘பாவம், சமையல் குறிப்பு எழுதப் போயிட்டா’ன்னு சொல்றவங்களைப் பார்த்து நானும் பரிதாபப்படத்தான் முடியும்.
///ஆனால் நாம் என்று அடுத்தவர் சொல்வதைக் கேட்கிறோம்! So, Go Ahead!!!///
அது!! வாழ்த்துகளுக்கு நன்றி.
சொல்ல விட்டுப் போனது— நான் பதிவுதான் சமையலுக்கு வெச்சிருக்கேன். மத்தபடி எல்லாவிதமான பதிவுகளும், எல்லாத் தளங்களும் படிச்சுகிட்டுதான் இருக்கேன். என்ன எழுதறேங்கறதைவிட என்ன படிக்கிறேங்கறது எனக்கு முக்கியமாக இருக்கு. அதனால பெண் சமையல்கட்டோடு அடங்கிடணுமா, blah blah ன்னெல்லாம் யாரும் வரத் தேவை இல்லை.
சனிக்கிழமை, டிசம்பர் 8, 2007 at 12:51 பிற்பகல்
///நான் பொதுவாத் தான் சொன்னேன். சமையல் குறிப்பே மரத்தடில எழுதக் கூடாதுன்னு சொன்னவங்க (பொதுவுல எல்லாரையும் சொன்னாலும் செல்வநாயகிக்கு கடிதமே எழுதியிருக்கீங்க) எல்லாம் சமையல் பதிவாகவே இருந்தாலும் என் பதிவுக்கு வந்து, படிக்கறாங்கன்னா, அது என் தமிழுக்குக் கிடைச்ச பெருமையா நினைக்கறேன்////
வேறெந்த உரையாடலோ, விவாதமோ சில முன் அனுபவங்கள் காரணமாக சில இடங்களில் செய்ய ஆர்வமில்லை என்றாலும் இங்கே என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிக்கு மட்டும்(அதுவும் அது சரியான விதத்தில் நடந்தது நடந்தபடி குறிப்பிடப்படாத காரணத்தால் மட்டும்) சில விளக்கங்களை வாசிப்பவர்களுக்காக எழுதுகிறேன்:-
நான் “மரத்தடி” குழுமத்தில் எப்போது எழுதிக்கொண்டிருந்தேன்?, எப்போது அங்கு எழுதுவதை நிறுத்தினேன்? பிறகும் அங்கு திரும்ப எழுதப் போகவேண்டாம் என எதனால் தீர்மானித்தேன்? என்பதையெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருப்பதிலும் பிரியமில்லை என்பதாலும் முடிந்தவரை சுருக்கமாக:-
அங்கு நான் எழுதத் தொடங்கியபோது கிறுக்கிக் கொண்டிருந்தவை கொஞ்சம் கவிதைகள், சட்டம் பற்றிய சிலரின் சந்தேகங்களுக்கு மிகச் சிலசமயங்களில் எதோ எனக்குத் தெரிந்த விளக்கங்கள், “எது ஆன்மீகம்?” என்றொரு பெயரிட்டு என் சில எண்ணங்கள், பிறகு நான் விரும்பி நேரமெடுத்துத் தட்டச்சி அக்குழுமத்தில் இட்ட ஒரு பகுதி. அப்பகுதி நான் அறிந்து வைத்திருந்த, தமிழகத்திலிருந்து இந்திய விடுதலைக்குப் பங்களிப்புச் செய்த பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகள்.
அந்தக் குறுங்கால அனுபவத்தில் குழுமத்தில் நான் விரும்பி வாசித்த கவிதைகளில் பிரசன்னாவுடையதும் அடக்கம். அப்படிப் பிடித்த கவிதைகள் சிலவற்றிற்கு அவை இடப்பட்டு மிகத்தாமதமாக நான் வாசித்திருந்தபடியாலோ அல்லது வேறு சில காரணத்தாலோ எழுதியவர்களுக்குத் தனிமடலிட்டுச் சொன்னதுமுண்டு. அப்படிச் சில முறை நாந்தான் அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அவற்றிற்குப் பதில் மடல்களாக அவரிடமிருந்து வந்தவைதான் அவரால் எனக்கென்று எழுதப்பட்டவை. ஒரேயொரு முறை அவராக எனக்கு எழுதியது அந்தப் பெண் விடுதலைப் போரளிகளின் வாழ்க்கைக் குறிப்புகளை நான் இட்டது பற்றிச் சில கேள்விகளோடு ஒரு மடல். இவற்றை ஏன் சொல்லிக்கொண்டிருக்கிறேனென்றால் நான் மரத்தடியில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் என் கவிதைகள், எழுத்துக்கள் மீதும் தன் நியாயமான கருத்துக்கள், விமர்சனங்களைத் தனியாகக் கடிதம் எழுதிச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய தேவையின்றி பொதுவிலேயே சொல்லத் தயங்காதவரும், சொன்னவரும் பிரசன்னா என்பதையும், அவற்றை ஏற்றுக்கொள்வதில் எனக்கும் அவரோடு ஒன்றும் பிரச்சினை இருந்ததில்லை என்பதையும் சுட்டிக்காட்டவே.
அவ்வகையிலேதான் பிரசன்னா இவ்விமர்சனத்தைக்கூடக் கடிதம் எழுதிச் சொல்லும் தேவையின்றிப் பொதுவிலேயே வைத்தார். மரத்தடியிலே ஏதோ ஆண்டுவிழாக் கொண்டாட்டமென்று போய்க்கொண்டிருந்த காலகட்டத்தில் அப்போது அங்கே ஓனராக இருந்தவரும், என்னைத் தனிமடல்களில் மரத்தடியிலிருந்து அதிகமாகத் தொடர்புகொண்டவருமான மதிகந்தசாமி ஒரு மடலிட்டு “எப்போதாவது எழுதிக்கொண்டிருக்கும் நீங்களும் இக்கொண்டாட்டத்திற்காக ஒருநாளுக்கு முழுக்கப் பொறுப்பெடுத்து நிறைய இடுகைகள் இடவேண்டும். வழக்கமான உங்கள் இடுகைகள் தவிர்த்து நீங்கள் விரும்பிச் செய்யும் சமையல் பதார்த்தங்கள்வரை குறிப்புகளோடு எழுதிச் சொல்லுங்கள். ரசிக்கலாம், கொண்டாடலாம் (என்னையல்ல, ஆண்டுவிழாவை) என்று கேட்டார். அவருக்காக எழுதியது அங்கே ஒரு சமையல் குறிப்பு.
பிறகு தொடர்ந்தும் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் பல சமையல் குறிப்புகள் பலராலும் இடப்பட்டுத் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்தபோது மொத்தமாக ஒரு விமர்சனத்தில் அவை பற்றி எழுதிய பிரசன்னா “ஆன்மீகம் என்று எழுதிக்கொண்டிருந்தவரும் சமையல் குறிப்பைத் தவறாமல் போட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார் எந்தத் தனிமடலிலும் அல்ல, பொதுவிலே.
அவ்விமர்சனம் என்னைக் கவர்ந்ததாலும், அச்சமயத்திலே கிடைத்த சொற்பநேரத்திலே தட்டச்சி இட்டுக்கொண்டிருந்த சுதந்திரப் போராட்டப் பெண்களிலேயே இன்னும் இரண்டுபேரைத் தட்டச்சி இட்டிருக்கலாமோ என்று எனக்கு நானே கேட்டும்கொண்டதாலும் பிரசன்னாவிற்கு அவ்விமர்சனத்தையும் சுட்டி நன்றியும் சொல்லி ஒரு மடலை நாந்தான் அனுப்பினேன். அதற்கான பதிலாகவே வழமைபோல் அவரிடமிருந்து மடல் வந்தது. அவ்வளவுதான். மரத்தடியிலே நான் எழுதுவதை நிறுத்தியிருந்த பிறகும்கூட அவர் வலைப்பக்கத்திலே எனக்குப் பிடித்த அவர் கவிதைகளுக்கு நான் பின்னூட்டமிட்டதுண்டு. நான் வெளியில்வந்தபிறகு என் பக்கத்திற்கு எதற்காகவும் இன்றுவரை வந்திருக்காதவர் அவரென்றாலும்கூட நாளையோ பிறகோ சந்திக்க நேர்ந்தால் மீண்டும் அவரிடம் பேச எனக்கு அவரின் மரத்தடிக் கவிதைகளிலிருந்தேகூட மிச்சமும் இருக்கிறது.
இதிலே ஒருவரிடமிருந்து, நான்கு வருடங்களுக்கு முன் இன்னொருவருக்கு அவர் மடலிட்ட விவரங்கள், எதற்காக மடலிட்டார் என்ற காரணங்கள் எல்லாம் பொதுவிலேயன்றித் தனியாகக் கேட்டு வைத்திருந்து தன்னோடு அம்மடல் குறித்து எதுவும் பகிர்ந்திருக்காத இன்னொருவரின் பெயரைக் குறிப்பிட்டுப் பொதுவிலே அதை எழுதவேண்டிய அவசியமிருப்பதாய்க் கருதி எழுதுபவர்கள் குறைந்தபட்சம் அந்த இன்னொருவரிடம் செய்தியைச் சரிபார்த்துக்கொண்டபிறகு மட்டுமே எழுதும் அக்கறை பெறலாம். அது இயலாதபோது தவிர்க்கலாம்.
இந்தப் பின்னூட்டத்திற்கு வழங்கப்படும் இடத்திற்கும், வாசிப்பவர்களுக்கும் நன்றி. இதற்குப் பதில் விளக்கங்களோ, அல்லது, இடவசதி கருதி வேறெங்கிருந்தோ இங்கு வந்தோ அல்லது இங்கிருந்து படித்துக்கொண்டுபோய் வேறெங்காவதோ ஏதாவது எழுதப்பட்டாலும்கூட இதைத் தொடரும் உத்தேசமெதுவும்கூட இல்லை.
சனிக்கிழமை, டிசம்பர் 8, 2007 at 10:01 பிற்பகல்
செல்வநாயகி, (ஒருவரை அட்ரஸ் செய்து கூட எழுதக்கூடாத அளவுக்கு உங்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு யாரையாவது பேர் சொல்லி அழைத்தால்தான் பேசவே வரும். சகித்துக் கொள்ளவும்.)
//ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் பல சமையல் குறிப்புகள் பலராலும் இடப்பட்டுத் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்தபோது மொத்தமாக ஒரு விமர்சனத்தில் அவை பற்றி எழுதிய பிரசன்னா “ஆன்மீகம் என்று எழுதிக்கொண்டிருந்தவரும் சமையல் குறிப்பைத் தவறாமல் போட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார் எந்தத் தனிமடலிலும் அல்ல, பொதுவிலே.//
அதே அதே. அது பொதுவில் வந்த மடல் என்பதால் மட்டும் தான் இங்கே குறிப்பிட்டேன். (உங்கள் இருவரின் தனிமடல் விவகாரங்களில் தனிநபர் கருத்துகளில் எனக்கு அக்கறை ஆர்வம் எதுவும் இல்லை.) பலர் அவரை எதிர்த்து சமையல் குறிப்புகள் போட்டனர். எனக்கு நினைவுதெரிந்து சமையல் குறிப்பைப் பார்த்தால் எனக்கு பிபி எகிறுகிறது என்று அவர் எழுதியிருந்ததற்கு குண்டான் ப்ரியா, நிவாரணமாக இஞ்சி துவையலே குறிப்பு கொடுத்து, பிபிக்கு நல்லது என்று சீண்டியிருந்தார். தொடர்ந்து ப்ரசன்னா சொல்வதற்காகவே எதிர்த்து இன்னும் பலர் எழுதிக்கொண்டிருந்ததும் நினைவில் இருக்கிறது.
ஆனால் ப்ரசன்னா அந்தக் கடிதத்தில் ஆன்மிகம் தட்டும் கைகள் என்று உங்களையும், ஜேஜே சில குறிப்புகள் பற்றி தட்டிய விரல்கள் என்று சுந்தரையும் மட்டுமே பெயர் சொல்லிக் குறித்திருந்தார். பெண் என்பதால் உங்கள் பெயரை மட்டும் நான் உபயோகித்துக் கொண்டதைத் தவிர(சுந்தரைக் குறித்திருந்தாலும் பிரச்சினை ஆகியிருக்காது என்பது வேறுவிஷயம்.) வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. மேலே முற்றிலும் நகைச்சுவைக்காக எழுதிய பின்னூட்டம் மட்டுமே. நான் பொதுவாக எப்பொழுதும் நெற்றியைச் சுருக்கி வரிவரியாய் கோடுகள் வருமாறு யாரைப் பற்றியும் யோசிப்பதில்லை. அதிலும் பொதுவில் வந்த கடிதத்துக்கெல்லாம் தனியில் அவர்களிடம் விபரங்கள் கேட்டு விசாரித்து தான் அடுத்தவர் எழுதவேண்டும் என்ற அளவுக்கு இணையத்தில் எதிக்ஸ் இருக்கிறது என்று… ஏற்கனவே ஒவ்வொரு காதிலும் மூன்று இடங்களில் குத்தி தோடுகள் போட்டிருக்கிறேன். இனியும் தாங்காது.
செல்வநாயகி, ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்– மரத்தடியின் நல்ல விஷயங்கள் மற்றும் என் நண்பர்கள் என்று நினைப்பவர்கள் விஷயங்களை மட்டுமே என் பக்கங்களிலும் நான் எழுதும் இடங்களிலும் நினைவு கூர்ந்து எழுதுவேன். அல்லாதவை எனக்கான தனிப்பட்ட அனுபவப் பாடங்கள். எனக்குள் மட்டும் இருக்கும்.
உங்களை தவறாகப் புரிந்துகொண்டேனோ என்று கடந்த வருடங்களில் பலமுறை நினைத்திருக்கிறேன். பிரச்சினை இல்லாமல் உங்களைப் புரிந்துகொள்ள உதவிய இந்தப் பின்னூட்டத்திற்கு நன்றி. மீண்டும் வராமல் இருக்க ஆவன செய்வேன்.
///இதற்குப் பதில் விளக்கங்களோ, அல்லது, இடவசதி கருதி வேறெங்கிருந்தோ இங்கு வந்தோ அல்லது இங்கிருந்து படித்துக்கொண்டுபோய் வேறெங்காவதோ ஏதாவது எழுதப்பட்டாலும்கூட இதைத் தொடரும் உத்தேசமெதுவும்கூட இல்லை.///
அவ்வளவிற்கெல்லாம் வெட்டியாய் யாருக்கும் இங்கே நேரமில்லை. குறைந்தபட்சம் எனக்கு.
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 9, 2007 at 4:40 மு.பகல்
//நான் வெளியில்வந்தபிறகு என் பக்கத்திற்கு எதற்காகவும் இன்றுவரை வந்திருக்காதவர் அவரென்றாலும்கூட நாளையோ பிறகோ சந்திக்க நேர்ந்தால் மீண்டும் அவரிடம் பேச எனக்கு அவரின் மரத்தடிக் கவிதைகளிலிருந்தேகூட மிச்சமும் இருக்கிறது.//
நான் உங்கள் வலைப்பக்கத்தை வாசித்திருக்கிறேன். கருத்துகள் எதையும் பகிர்ந்துகொண்டதில்லை. நான் கருத்து சொல்லும் வலைப்பதிவுகள் மிகமிகக் குறைவே. நீண்ட விவாதத்திற்கு நான் தயாராக இல்லை. மேலும் எனக்கு விவாதத்திறனும் இல்லை. என் கருத்தைச் சொன்னால் என் வேலை முடிந்துவிட்டது என்கிற எண்ணம் மட்டுமே இருக்கிறது. என் கணிப்பில் உங்கள் வலைப்பதிவு பெரும் விவாதத்திற்குரிய களமாகவும் அமைந்துவிட்டது. அதனால் நான் என் வாசிப்போடு நிறுத்திக்கொள்கிறேன். பொதுவான ஒரே ஒரு கருத்து ஒன்று இருந்தது, உங்கள் தமிழ் அடைந்திருக்கும் மாற்றம். ஒரு வரவழைத்துக்கொண்ட கடினம் உங்கள் எழுத்தில், பின்னூட்டங்களில் காணக் கிடைத்தது. அதைச் சொல்லலாமா என்று கூட யோசித்தேன். பின்பு அது எப்படி எதிர்கொள்ளப்படும் என்கிற சங்கடம் ஒரு பக்கமும், பலர் உங்கள் எழுத்து நடையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை வியந்து பாராட்டிக்கொண்டிருந்தது ஒரு பக்கமும் நினைவில் வர, அதையும் சொல்லவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் சொல்லி விட்டேன். உங்களுக்கான உங்கள் நடையை நீங்கள் பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. இது ஒரு பார்வையாளனின் கருத்து என்கிற அளவில் மட்டும் பார்க்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அறிவுரையோ இன்னபிறவோ அல்ல. நன்றி.
உங்களை சந்திக்க நேர்ந்தால் உங்களிடம் பேச எனக்கும் எவ்வித சங்கடங்களும் இல்லை. உங்களிடம் மட்டுமல்ல, யாரிடமும் பேச எனக்கு எந்த சங்கடமும் இல்லை. வலைப்பதிவுலகில் நடக்கும் விமர்சனங்கள், முன் தீர்மானங்கள், பின் முடிவுகள், முத்திரைகள் – எவற்றையும் நான் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டதில்லை. இதை எத்தனை பேர் நம்புவார்கள் என்பதைப் பற்றிய கவலையும் எனக்கில்லை.
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 9, 2007 at 5:53 மு.பகல்
///செல்வநாயகி, (ஒருவரை அட்ரஸ் செய்து கூட எழுதக்கூடாத அளவுக்கு உங்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு யாரையாவது பேர் சொல்லி அழைத்தால்தான் பேசவே வரும். சகித்துக் கொள்ளவும்.)///
அட அட அட……
அருமை…அட்டகாசம்….. இதெல்லாம் எதிர்பார்த்தே இருந்தேன். உங்களின் இந்த உயரிய…… எனக்கெல்லாம் கடைப்பிடிக்கத் தெரியாத அற்புதப் பண்புநலன்களையெல்லாம் மரத்தடியிலேயே நான் தனிப்பட்ட அளவிலே அறிந்துகொண்டவள் என்பதால் இப்போது இதைக் கேட்டுப் புல்லரிக்கவில்லை. எனவே தயக்கமில்லாமல் புதிதாக இங்கே இதை வாசிப்பவர்களுக்கு “யாருக்கு என்ன பண்பில்லை? எனக்கு அவை எப்படி நிறைய இருக்கிறது?” என்றெல்லாம் இன்னும்கூட எடுத்துவிட்டிருக்கலாம்.
///அது பொதுவில் வந்த மடல் என்பதால் மட்டும் தான் இங்கே குறிப்பிட்டேன்///
//ஆனால் ப்ரசன்னா அந்தக் கடிதத்தில் ஆன்மிகம் தட்டும் கைகள் என்று உங்களையும், ஜேஜே சில குறிப்புகள் பற்றி தட்டிய விரல்கள் என்று சுந்தரையும் மட்டுமே பெயர் சொல்லிக் குறித்திருந்தார்.////
எழுதுகிற எல்லாவற்றுக்குமே எங்களைப் போன்றவர்கள் கேள்விகேட்கும்போது உங்களின் அகராதியில் வேறு பொருள்கள் என்று விளக்கங்கள் வரும் என்பதும் பழகிவிட்டதால் இதுவும் எதிர்பார்த்ததுதான்:))
///உங்களை தவறாகப் புரிந்துகொண்டேனோ என்று கடந்த வருடங்களில் பலமுறை நினைத்திருக்கிறேன். பிரச்சினை இல்லாமல் உங்களைப் புரிந்துகொள்ள உதவிய இந்தப் பின்னூட்டத்திற்கு நன்றி. மீண்டும் வராமல் இருக்க ஆவன செய்வேன்.///
மறுபடியும் முதல் பத்திதான் இதற்கும் பதில். கூடுதலாகச் சொல்லவேண்டுமென்றால் யாரையும் எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ள யாருக்கும் உரிமை இருக்கிறது. எனவே என்னை நீங்கள் இதுவரை எப்படிப் புரிந்திருந்தீர்கள்? இப்போது எப்படிப் புரிதலைச் சரியாக்கிக்கொள்ளப்போகிறீர்கள் என்ற கருமத்திலெல்லாம் எனக்கும் அக்கறையில்லை.
வரவேண்டாமென்றுதான் இருந்தேன். ஆனால் “பெயர் சொல்லி அழைத்து மட்டுமே எதையும் பேசுவேன் நான்” என்று உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை அள்ளிவிட்டுக்கொண்டும்
அது அடுத்தவருக்கு இல்லை என்பதை வாசிப்பவர்களுக்குப் புரியவைத்துக்கொண்டும் இருந்தீர்களா? அதான் என் வெட்டியான நேரத்தில் மீண்டும் கொஞ்சநேரம் வந்தேன்.
இப்படியெல்லாம் இப்ப வெட்டியா இல்லாத உங்க அருமையான நேரத்துல உட்கார்ந்து பதில்சொல்லவேண்டிய நிலைமை உங்களுக்கும் பிரசன்னாவுக்குமான பேச்சுக்கு இடையே அங்கே அடைப்புக்குறியிட்டு யார் பெயரை எழுதலாம் என்று நெற்றி சுருங்காமல் நீங்கள் யோசித்து எழுதாமலிருந்தால் எதற்கு வரப்போகிறது? அவரவருக்கென்று இணையத்தில் இடம் இருக்கவே செய்கிறது. போய்க்கொண்டிருக்கலாம் இணைகோடுகளாகவோ, எதிரெதிர்த் திசைகளிலோ……
நவம்பர் 28 இலே எழுதப்பட்ட ஒன்றை மிகவிரைவாக டிசம்பர் 7 இலேயே பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவு எனக்கெல்லாம் வெட்டியான நேரம் நிறைய உண்டென்பதால் மீண்டும் மீண்டும் இங்கே ஒரு வாரமோ, மாதமோ என்ற கணக்கில் அதிவிரைவாக வந்து நெற்றியில் வரிவிழ யோசித்து யோசித்து எழுதிக்கொண்டிருப்பேன் என்று உறுதியெதுவும் அளிக்காமலே நகர்கிறேன் இம்முறை. என்னையறிந்த நண்பர்கள் இதற்காகப் பொறுத்தருள்க:))
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 9, 2007 at 12:24 பிற்பகல்
செல்வநாயகி,
///நான் “மரத்தடி” குழுமத்தில் எப்போது எழுதிக்கொண்டிருந்தேன்?, எப்போது அங்கு எழுதுவதை நிறுத்தினேன்? பிறகும் அங்கு திரும்ப எழுதப் போகவேண்டாம் என எதனால் தீர்மானித்தேன்? என்பதையெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருப்பதிலும் பிரியமில்லை என்பதாலும் முடிந்தவரை சுருக்கமாக:-////
///அருமை அட்டகாசம்… இதெல்லாம் எதிர்பார்த்தே இருந்தேன். உங்களின் இந்த உயரிய…… எனக்கெல்லாம் கடைப்பிடிக்கத் தெரியாத அற்புதப் பண்புநலன்களையெல்லாம் மரத்தடியிலேயே நான் தனிப்பட்ட அளவிலே அறிந்துகொண்டவள் என்பதால் இப்போது இதைக் கேட்டுப் புல்லரிக்கவில்லை.///
ஒருவரை கருத்தால் அடிக்காமல் இந்த மாதிரி பொதுவில் வார்த்தைகளால் சுழட்டி சுழட்டி, அடுத்தவர் ஊகங்களுக்கு அளிப்பது போல் எழுதுவதை வேறு இடங்களில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அல்லது இங்கும் அப்படித்தான் என்றாலும் தொடர்ந்து நீங்கள் மட்டும் அதைச் செய்துகொள்ளலாம். இணையத்தில் யார் சொல்வதற்காகவும் நாம் எழுதுவதில்லை என்பதைப் போலவே யார் சொல்லியும் யாரும் நிறுத்துவதும் இல்லை, இதை செல்வநாயகிக்கு இனிமேல்தான் சொல்லவேண்டிய தேவை இல்லை.
மற்றபடி மாமியாரிடமே நல்லபெயர் வாங்கியதில்லை என்பதைக்கூட பொதுவில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னைச் சுற்றி ரத்தமும் சதையுமாக நான் காணும் மனிதர்களுக்கே கொடுக்காத முக்கியத்துவத்தை இணையத்திற்குக் கொடுத்து என்னையும் என் பண்புநலன்களையும் இனிமேல் தான் இங்கே ஏற்றிக்கொள்ளவேண்டிய தேவை எதுவும் எனக்கு இல்லை. அதனால் என் “பண்புநலன்”களை நீங்கள் அறிந்துகொள்ளும்படி பொதுவிலே தான் சொல்லியிருப்பேன். அல்லது தனிப்பட ஏதாவது நடந்திருந்தால் அது மரத்தடி நிர்வாகக் குழுவினர் அனைவரும் படிக்கும்படியான குழுமத்தில் இட்ட பின்பே நடந்திருக்கும்– உங்களுக்கு மரத்தடியின் பொருட்டு நான் எழுதிய கடைசி தனிமடல் (நிர்வாகக் குழுவில் அனைவருக்கும் அந்தக் கடிதம் நான் எழுதியதில் சம்மதம் இல்லையென்றபோதும்.) உள்பட. நான் மரத்தடிக்கு செலவழித்த நேரங்களில் டாட் காமுக்குச் செய்தது போக பாதிநேரம் இப்படித்தான் கழிந்திருக்கிறது. நான் விலகும்போது எல்லாவற்றையும் ஆவணப்படுத்திவிட்டுத் தான் வெளியே வந்தேன். நிர்வாகக் குழுமத்தில் நடந்த உரையாடல்களை எதன்பொருட்டும் நான் பகிர்ந்துகொள்ளத் தயாரில்லை. உங்களுக்கு அங்கிருந்து யாராவது சரியாகவோ தவறாகவோ எடுத்துச் சொல்லும் நல்லவர்கள் மரத்தடி நிர்வாகக் குழுவினரில் இருந்திருந்தால்[ வாழ்க!
] அதை நீங்கள் எப்படியும் எங்கும் எழுதிக் கொள்ளலாம். என் பண்புநலனை விளக்கிச் சொல்லலாம்.
பொதுவில் வந்த ஒரு விஷயத்தை எழுதி அதற்குமேல் என்னை ஏற்றிச் சொல்லி “:பில்டப்:” என்று போட்டுக்கொண்டால் அது நகைச்சுவை என்றுதான் நான் நினைத்துவந்திருக்கிறேன். பில்டப்பை எடிட் செய்துவிட்டு நான் அப்படித்தான் குதிப்பேன் என்றால் அவசியம் செய்யுங்கள். அதற்காக, எத்தனையோ பேருடைய- இறந்தவர்களையும் சேர்த்து– கட்டுரைகளையும் கருத்துகளையும் எடுத்து பொதுவில் போட்டு அவரவர் தாக்கி எழுதிக்கொண்டிருக்கும் இணையத்தில், பொதுவில் வந்த இந்த ஒற்றைவரியை, அதுவும் சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவரிடமே மீண்டும் குறிப்பிடுவதற்குக் கூட, உங்கள் இருவருக்குள் அந்தப் பொதுமடலுக்குமுன் தனிமடலில் நடந்த விபரங்களை எல்லாம்கூட உங்களிடம் நான் ஒருமுறை தனிமடலில் அதற்குமுன் விசாரித்துவிட்டுத்தான் எழுதவேண்டும் என்ற அபத்தத்தை மட்டும் செரிக்க முடியவில்லை. நீங்கள் என்னைப் புரிந்துகொண்டதைப் போலவே விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை நானும் புரிந்தே வந்திருக்கிறேன் என்பதால் ஆச்சரியம் எதுவும் இல்லை.
மற்றபடி நீங்கள் கடைசிவரியில் சொல்லியிருப்பதுபோல் எல்லாருக்குமே இங்கே அறிந்த அறியாத, நம்பும் நம்பாத, வேண்டிய வேண்டாத நண்பர்கள் வட்டம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்டு. (அப்படி ஒன்று இல்லை என்றாலும் குறைந்துவிடாது என்றாலும்.)
உங்களுக்குச் சொல்லவும், என் பண்புநலனை இனி புதிதாய் ஏற்றவும் எதுவும் இல்லை. உங்கள் குறித்த கருத்து எதுவும் என்பக்கங்களில் இனி வராது. ஆட்சேபணை என்றால் இங்கும் நீக்கிவிடச் சம்மதம். போய்வாருங்கள்.