ஒரு கார உணவோடு குறிப்புகளை முடித்துக் கொள்ளலாம் என்றால் முடியவில்லை. “நம்ம தமிழ் மக்களுக்கு காஜு கத்லி, மைசூர்பாக் தவிர வேற ஒன்னும் தெரியாதா” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கும் கவிஞர் கனிமொழி கருணாநிதிக்கு இந்தக் குறிப்பு சமர்ப்பணம். :) தீபாவளி வாழ்த்துகள் கனிமொழி!
தேவையான பொருள்கள்:
ரசகுல்லா:
பால் – 1 லிட்டர்
எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர்
சர்க்கரை – 400 கிராம்
மைதா – 25 கிராம்
ரோஸ் எசன்ஸ் – 2, 3 துளிகள்
தண்ணீர் – 2 லிட்டர்
ரசமலாய்:
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
ஏலப் பொடி
முந்திரி, பிஸ்தா, பாதாம் – தலா 4
குங்குமப் பூ
செய்முறை:
ரசகுல்லா:
- ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, நன்றாகக் கொதிவரும்போது ஒரு மூடி எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் கலக்கவும்.
- உடனே பால் திரிந்துவிடும். இந்தப் பாலை, ஒரு மெல்லிய துணி அல்லது பனீர் வடிகட்டியில் கொட்டி, வாயைக் கட்டித் தொங்கவிடவும். எதற்கும் பனீர் மூட்டையையும் ஒரு முறை குழாயடியில் நீட்டிக் கழுவினால் வினிகர் அல்லது எலுமிச்சையின் வாசனை போய்விடும்.
- இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து சக்கை(பனீர்) மட்டும் நிற்கும்.
- இந்தப் பனீருடன் மைதா மாவைச் சேர்த்து, சுமார் 15 நிமிடங்கள் நன்றாகப் பிசைந்து, சுமார் 10லிருந்து 15 சம உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- சர்க்கரையுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரை கரைந்து, நன்றாகக் கொதிக்கும் போது, ஒரு டேபிள்ஸ்பூன் பாலை விடவும். அழுக்கு இருந்தால் நுரைத்துக் கொண்டு மேலே வரும். அதை நீக்கவும்.
- இப்போது அடுப்பை நன்றாக எரியவிட்டு, ரோஸ் எசன்ஸ் சேர்த்து, மெதுவாக பனீர் உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் போடவும்.
- 5 நிமிடங்கள் கொதித்த பிறகு, அதில் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விடவும். இதனால் கொதி அடங்கி மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்.
- மீண்டும் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விட்டு கொதிக்கவிடவும். இப்படியே 5,6 முறை செய்வதற்குள் ரசகுல்லாக்கள் நன்றாக ஊறி மேலே வந்திருக்கும். (ஒரேயடியாக கொதி நிலையிலேயே வைத்தால் தனியாகப் பிரிந்துவிடும்.)
- அடுப்பிலிருந்து இறக்கி, பாகிலிருந்து ரசகுல்லாக்களை தனியாக எடுத்து ஃபிரிட்ஜில் குளிரவைக்கவும். அல்லது சிரப்புடனே ஃப்ரிட்ஜில் குளிர வைத்து சாப்பிடலாம்.
ரசமலாய்:
- 2 முந்திரிப் பருப்பை பொடியாக்கிக் கொள்ளவும். .
- ஒரு லிட்டர் பாலை அரை லிட்டராகக் கொதிக்க வைத்துக் கொள்ளவும். கறந்த பாலாக இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் பாக்கெட் பாலே உபயோகிக்கலாம்.
- பாதி கொதிக்கும் போதே சர்க்கரை, ஏலப் பொடி, முந்திரி விழுது சேர்த்துக் கொள்ளவும்.
- பால் குறைந்து, அரையளவு ஆகி, லேசாகத் திரிதிரியாக வர ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்து விடவும்.
- ரசகுல்லாக்களை நீரை ஒட்ட வடித்து ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். (ரசகுல்லா உருண்டையாகச் செய்யலாம். ஆனால் ரசமலாய் செய்ய இருப்பதானால் லேசாக கைநடுவில் வைத்து அழுத்தி சிறிது தட்டையாக ஆக்கிக் கொள்ளவும்.)
- குறுக்கிய பாலைச் சேர்த்து, மேலாக பொடிப் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள், குங்குமப் பூ தூவி, குறைந்தது 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
வாழ்த்துகள் சொல்லாத, சொல்ல விரும்பாத, சமூக, அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!!



வியாழன், நவம்பர் 8, 2007 at 1:02 மு.பகல்
//சமூக, அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!! //
ஆஹா…. இப்படியெல்லாம் உண்டா…?
உங்களுக்கும், உங்கள் குடும்பம்,உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
ஒரு சிறு புள்ளி
வியாழன், நவம்பர் 8, 2007 at 6:34 மு.பகல்
Happy Deepavali.
வியாழன், நவம்பர் 8, 2007 at 7:49 மு.பகல்
தீபாவளி வாழ்த்துக்கள்
வியாழன், நவம்பர் 8, 2007 at 8:26 மு.பகல்
சந்தோஷமான தீபாவளிக்கு வாழ்த்துக்கள்
வியாழன், நவம்பர் 8, 2007 at 1:25 பிற்பகல்
ஜெயஷ்ரீ, மைசூர்பா செய்ரேன்னு மைசூர்ஹல்வா செய்திருக்கேன்.ஆனால் உங்க பதிவைப்படிக்கலின்னா இது கூட செய்திருக்கமாட்டேன்.அம்மா இவ்வளவு கஷ்ட்டப்பட்டாளா?படிக்கிறதும் வேலை செய்றதுமே தேவலை போல இருக்கே.
என்னுடய சமயல் ப்ரதாபங்களை சொன்னபோது அப்பாவுக்கு ஏக சந்தோஷம்??!!!!
சரி நான் என்ன தப்பு சென்சேன்னு தெரியலை.நெய் அப்படியே தனியா வந்தது!!!!
anyway i had a goodtime. god bless you for all the trouble you take in writing your blog.
வியாழன், நவம்பர் 8, 2007 at 4:11 பிற்பகல்
பதிவருக்கும் மறுமொழியிட்டவர்களுக்கும் மற்றோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
வியாழன், நவம்பர் 8, 2007 at 8:25 பிற்பகல்
Happy Deepavali wishes JG.
regards,
Krishna
வெள்ளிக்கிழமை, நவம்பர் 9, 2007 at 4:23 மு.பகல்
இனிய தீபாவளி வாழ்த்துகள். இவ்வளவு recipe போட்டீங்க , தீபாவளி மருந்து(லேகியம்) மட்டும் போடவேயில்லையே
சனிக்கிழமை, நவம்பர் 10, 2007 at 1:49 மு.பகல்
ஜெயஸ்ரீ,
தீபாவளிக்கு முந்திரி கேக் செய்தேன். நன்றாக வந்தது. நன்றி. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 11, 2007 at 12:23 மு.பகல்
தீபாவளி வாழ்த்துகள்
வியாழன், நவம்பர் 15, 2007 at 10:35 பிற்பகல்
ப்ரசன்னா, சொக்காயி, பிரேமலதா, krishna, uma kumar, bsubra உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. கணினிப் பிரச்சினையால் உடனே பதில் சொல்லமுடியவில்லை. மன்னிக்கவும்.
துளசி, பாவம் அவங்களுக்குத் தான் ஏதோ பிரச்சினை; வாய்வரை வந்த வாழ்த்தை வெளில சொல்ல முடியாம தவிக்கறாங்க, அதுக்காக நாமளும் அவங்களை அப்படியே விட்டுட முடியுமா?
Seetha, எங்கப்பாவுக்கு அதெல்லாம் வருத்தம். இன்னமும் எங்க வீட்டுலயும் நண்பர்களும், ‘இந்தப் பதிவுக்குப் பின்னால ஒரு கூட்டமே இருக்குமா இருக்கும், நான் தனியாள் இல்லை’ன்னு சொல்லிகிட்டிருக்காங்க. யாரும் நம்பத் தயாரில்லை.
மைசூர்பாவுக்கு அடுத்த முறை நெய் 2 பங்கு மட்டும் விட்டுப் பாருங்க. கடலைமாவால கூட இந்த வித்தியாசம் நடக்கலாம். அதிகமான நெய்யை, தட்டை சாய்ச்சு வெச்சு வடிச்சிருந்தா, அல்வா மாதிரி ஆகியிருக்காது. நான் அவ்ளோ நெய் விட்டும், எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு என் மைசூர்பா ‘எதுவுமே’ நடக்காத மாதிரி கமுக்கமா இருந்திடுச்சே.
ஜெயஸ்ரீ, தீபாவளி மருந்து, மரத்தடில சின்னக் கண்ணன் கேட்டு நான் போட்டிருந்தேன்; இப்ப யார் கடைல சாமான் எல்லாம் வாங்கி செய்யப் போறாங்கன்னு விட்டுட்டேன். அடுத்த தடவை சேர்த்துடலாம்.
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2007 at 3:51 பிற்பகல்
Dear jayashree,
I am ramakannan from mysore.I saw ur all receipies. Very nice to see. Especially ur rasagulla and rasamalai. I plan to make next week because my daughters exams going so i ill try. Anyway ur receipies very nice But forget to right about mysorepagu. I made for devali It came very nice like ur receipy. Thanks and write more receipy ur friend Ramakannan……….please publish my commants
புதன் கிழமை, நவம்பர் 21, 2007 at 7:36 பிற்பகல்
மிகவும் அழகான ரெசிபி. நான் ரசகுல்லா பிரஷர் குக்கர் முறையில் செய்தேன். அதுவும் நன்றாக இருந்தது. நீங்கள் சொன்னதையும் ட்ரை செய்து பார்கிறேன். Neat recipe.
வியாழன், நவம்பர் 22, 2007 at 3:38 பிற்பகல்
ramya, பிரஷர் குக்கர் முறையா? நான் கேட்டதே இல்லையே. Link இருந்தா தாங்களேன்.
வியாழன், நவம்பர் 22, 2007 at 10:42 பிற்பகல்
http://aargeeskitchen.wordpress.com/2007/06/20/rasgulla/
please check above link for rasgulla recipe. I had found it online. But forgot from where exactly. After having a baby, I am forgetting everything. Adhanaal thaan, reliance fresh post-il neengal pottirundha mudhal snap-i , post padikkum mummuraththil marandhu vittaen
திங்கட் கிழமை, நவம்பர் 26, 2007 at 10:30 மு.பகல்
ரம்யா, அதைக் கொதிக்க வைக்கறது மட்டும் வித்யாசமா இருக்கு. நான் செஞ்சு பாக்கறேன். சுலபமா இருந்தா நல்லதுதான். நன்றி.
சனிக்கிழமை, December 29, 2007 at 10:32 பிற்பகல்
ரசகுல்லா செய்தேன் உங்கள் படத்தில் உள்ளது போல் வரவில்லை.
உங்கள் படத்தில் இருப்பது பக்கத்துக் கடையில் வாங்கி வீட்டு அடுப்பில்ல் கொதிக்க வைத்ததாக இருக்குமோ?
எப்பொழுதும்போல் அளவுகள் கடைபிடிக்கப் படவில்லை. 1. மைதாமாவு கூட ஆகி இருக்கலாம், சீனி கூஊஊஊடியே போச்சு. இவ்ளோதான் நான் பண்ணிய பிறழ்வு. (தப்பெல்லாம் கிடையாது). உருண்டைகள் வெள்ளையாய் இல்லை. உருண்டைகள் மேலே வரவேயில்லை. ஆகையால் நிறய நேரம் வேகவைத்தேன். இப்போ குளிர்சாதனப் பெட்டியில் இருக்கிறது ஐட்டம். சாப்பிட்டுப் பார்த்து சொல்கிறேன் எப்படி இருக்கிறதென்று. இப்பொழுதுதான் கின்னிஎலியின் சத்தம் கீழே கேட்கிறது. வீட்டிற்கு வந்துவிட்டது கின்னிஎலி. சாப்பிட்டபின் என்ன வெர்டிக்ட் என்று கேட்டுச் சொல்கிறேன்.
*கின்னிஎலி = பாலன்.
சனிக்கிழமை, December 29, 2007 at 10:42 பிற்பகல்
வெர்டிக்ட்: “என்னா கொழுக்கட்டை இது”?
திங்கட் கிழமை, December 31, 2007 at 12:19 பிற்பகல்
பிரேமலதா,
மைதாமாவு, பனீர் விலகாம ஒட்டிச் சேர்க்கத்தான். நல்லா பிசையணும். ஆனா அதிகம் சேர்த்ததால சுவைதான் கொஞ்சம் குறையும். பெரிய வித்யாசம் இருக்காது. ஒருவேளை ஒரேயடியா அதிகமா சேர்த்துட்டீங்களா?
சர்க்கரை அதிகம் ஆனாலும் வேகாம இருக்க ஒரு காரணமும் இல்லை. முடிஞ்சா ரம்யா சொல்லியிருக்கற பிரஷர் குக்கர் முறைலயும் செஞ்சு பாருங்க. நான் இன்னும் செய்யலை.
ரசகுல்லா வெள்ளையா இருக்கும்னு யார் சொன்னது. நான் மிக்ஸர் செஞ்சுகிட்டிருக்கும்போது பாதில தான் இட்லிவடை பதிவு படிச்ச பாதிப்புல இதையும் செய்ய ஆரம்பிச்சேன். வீட்டுல இருந்தது பாக்கெட்பால் அதுவும் பசும்பால். அதனால இளம் மஞ்சள் நிறத்துலதான் இருந்தது. இருக்கும். (டிவில காண்பிக்கற பிரியாணி மட்டும் எப்படி நல்ல வெள்ளையா இருக்கு, உன்னோடது ஏன் இப்படி இருக்குன்னு கோவிந்த் கேக்கற அடாவடித்தனம்தான் நியாபகம் வருது.)
///உங்கள் படத்தில் இருப்பது பக்கத்துக் கடையில் வாங்கி வீட்டு அடுப்பில்ல் கொதிக்க வைத்ததாக இருக்குமோ?////
அவசரத்துல ரசகுல்லா மட்டும் செய்யலாம்னு தான் நினைச்சேன். நேரம் இருந்ததால, எனக்கு ரசகுல்லா பிடிக்காததால, தொடர்ந்து ரசமலாய் ஆக்கிட்டேன். அதனால தட்டையாக்காம விட்டுப் போச்சு. கடையில ரசமலாய் தட்டையா இருக்கும். பதிவுக்காக படம் எடுத்துட்டு ஃப்ரிட்ஜில வெச்சு மறுநாள் தீபாவளியன்னிக்கு காலைல சாப்பிடும்போது சஸ்பென்ஸா வெளில எடுத்தா கோவிந்தும் அதே கேள்வி..
“ஏன் வீட்டுல ஒரு ஸ்வீட்டும் செய்யலை?”
உங்களையெல்லாம்….
கடைகள்ல இப்பத்தான் ஆசிர்வாத் ரசகுல்லா மிக்ஸ் கிடைக்கறதா ஸ்நேகா ஆண்ட்டி விளம்பரம் வருது. இன்னும் மும்பைக்கு வரலை. அதுல ரசமலாய்க்கு பாலே சேர்க்காம சொல்றாங்க. அது ரசகுல்லா இல்லையோ. எனக்குத் தெரியலை.
அம்மாகிட்ட கிச்சனைக் கொடுத்திருந்தீங்களே, இடைல என்ன ஆச்சு? கொழுக்கட்டைன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர். இதுக்கே இன்னும் 4 நாள் வந்தது வரட்டும்னு நீங்களே சமைச்சுப் போடுங்க.