இது விஜயதசமியன்று ஹயக்ரீவருக்காகச் செய்யப்படும் உணவு. மற்றும் பள்ளிக்கு புதிதாக குழந்தைகளை அனுப்பும்(வித்யாரம்பம்) நாளன்றும் செய்து ஹயக்ரீவரை வழிபடலாம்.
தேவையான பொருள்கள்:
கடலைப் பருப்பு – 1 கப்
பால் – 2 கப்
தேங்காய் – 1 மூடி
வெல்லம் – 1 கப்
நெய் – 1/4 கப்
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்
செய்முறை:
- கடலைப் பருப்பை சிறிது வறுத்து விட்டு குக்கரில் குழைவாக வேகவைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சி, வெல்லம், தேங்காய்ப் பால், மசித்த கடலைப் பருப்பு, பாதி நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும்.
- கலவை இறுகி அல்வா பதம் வந்ததும் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- மீதி நெய்யில் ஒடித்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.
* ஒரு கப் கடலைப் பருப்பிற்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கப் சர்க்கரை என்ற அளவில் சர்க்கரையிலும் செய்யலாம்.
-0-
திருவஹீந்திரபுரம்:
கடலூரிலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தலம். தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார்; கோயில் 108 திவ்ய க்ஷேத்திரங்களில்(நடுநாட்டுத் திருப்பதி) ஒன்று; கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகளால் புகழ்பெற்றவை என்றாலும் அதைவிட இங்கிருக்கும் ஆஷாட மலை (ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையாதலால், இந்த மலைக்கு மருத்துவ குணம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.) ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் மேலும் சிறப்புப் பெற்றவை.
இங்கே தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராகக் (ஞானத்திற்கான தெய்வம், சரஸ்வதிக்கே ஞானம் தந்தவர்) கண்டு அருளப்பெற்றவர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர். அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது.
தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார். ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம். விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.
இவர்களை வணங்கி நாமும் நமது நல்ல செயல்களைத் துவங்கலாம்!
வடகலை தென்கலை பேதங்களா, அதெல்லாம் நான் பார்த்ததேயில்லையே என்று சொல்லும் இளையவர்கள், அதெல்லாம் முந்தி, இப்ப போயே போச்! போயிந்தே, Its gone என்று சொல்லிக் கொண்டிருக்கும் முதியவர்கள் இங்கே சென்றுவரவும். :Lol:
((


ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2007 at 9:08 மு.பகல்
ஆஆ! 23!!!
கடைசி பத்தி,
((( சரியாகச் சொன்னீர்கள்.
திங்கட் கிழமை, அக்டோபர் 22, 2007 at 1:09 பிற்பகல்
jeyashree… enakku intha ” venthaya kazhi ” kindarathu patri oru pathivu podungalane… punniyamaha pogum..
திங்கட் கிழமை, அக்டோபர் 22, 2007 at 7:45 பிற்பகல்
நவராத்திரி கட்டுரைகள் எல்லாமே அருமை. ஹயக்ரீவர் கோவிலைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த கட்டுரை படித்ததும் கோவிலுக்கு கண்டிப்பாக போக ஆசைப் படுகிறேன். உக்காரை நன்றாக வந்தது.(செய்தவுடன் படத்தில் பார்த்தது போல் இல்லாமல் கொஞ்சம் சேர்ந்தாற்போல் வந்தது.வெல்லம் அதிகம் சேர்த்து விட்டேன் என்று நினைக்கிறேன்.அடுத்த நாள் மைக்ரோவேவ் செய்து சிறிது நெய் சேர்த்ததும் உதிர் உதிராக டேஸ்ட் பிரமாதம்). எல்லா பாராட்டும் உங்களுக்குதான்.
திங்கட் கிழமை, அக்டோபர் 22, 2007 at 9:39 பிற்பகல்
dear JM,
வடகலை தென்கலை பேதங்களா, அதெல்லாம் நான் பார்த்ததேயில்லையே என்று சொல்லும் இளையவர்கள், அதெல்லாம் முந்தி, இப்ப போயே போச்! போயிந்தே, Its gone என்று சொல்லிக் கொண்டிருக்கும் முதியவர்கள் இங்கே சென்றுவரவும். :Lol:
((
samayal-than nandraga seiyavum + ezhuthavum varum endru-parthal, podium (a) mudichhum nandraga poduvirgal…from above para.
yaean avalavuthuram…srirangathil illatha ottrumaiya?
sundaram
திங்கட் கிழமை, அக்டோபர் 22, 2007 at 10:47 பிற்பகல்
ஜெயஸ்ரீ,
வேறொரு பதிவில் என் கமெண்ட் ஏதாவது எடிட் செய்யப் பட்டதா?
உங்கள் வீட்டு கொலுப் படம் எங்கே?
செவ்வாய்க் கிழமை, அக்டோபர் 23, 2007 at 2:10 மு.பகல்
Very nice Navarathri Ninavualaigal. Good recipes given. Great job.
Suja
செவ்வாய்க் கிழமை, அக்டோபர் 23, 2007 at 12:29 பிற்பகல்
vijayram,
ஆமாம், உங்கள் பின்னூட்டம் எடிட் செய்ததை அங்கேயே சொல்லியிருக்கிறேன். நாங்கள் கொலு வைப்பதில்லை. அதனால் படம் இல்லை.
amutha, வெந்தயக் களியா? நான் கேள்விப்பட்டதில்லையே. இதற்கு வேறு ஏதாவது பெயர் இருக்கிறதா? மோர்க்களி தான் செய்வோம்.
Uma Kumar, மிக்க நன்றி. எப்படி இருந்தாலும் செய்த உடனே கொஞ்சம் சேர்ந்தாற்போல் தான் இருக்கும். ஆற ஆற தானே உதிர்ந்துவிடும்.
Suja Rajkumar, Thanks.
Sundaram sir, எனக்கு நன்றாக சமைக்க வரும், நன்றாக எழுதவரும் என்பது எப்படி உங்கள் எண்ணமோ அதே மாதிரி பொடிவைத்து, அல்லது முடிச்சுப் போட்டு எழுதுகிறேன் என்று சொல்வதும் உங்கள் எண்ணமே தான். ஆனால் அது உண்மை இல்லை. எனக்கு அது தேவையும் இல்லை. ஸ்ரீரங்கத்தில் சண்டை என்று நீங்கள் சொல்வது வேறு. இங்கு நடப்பது வேறு. நீங்கள் திருவஹீந்திரபுரம் மக்களைக் கேட்டாலும் இதை ஒத்துக் கொள்வார்கள். அவசியம் கேட்டுப் பாருங்கள்.
புதன் கிழமை, அக்டோபர் 24, 2007 at 4:42 பிற்பகல்
hello jayashree….thats great work..
iniya suvayay
naaval mattume kandavarku
ingu kangalukkum
suvayay…
manathirkum inimayay
keep it up good work..
sathya…
to make vendaya kali….
this is usually done when a girl attains puberty?…never mind anyone can take it during ulcers, have back pain or overall lowered level of health…
roast fenugreek seeds, (vendayam)till you get a fine aroma…cool and powder fine. add jaggery to boiling water decant or filter for mud particles. let it boil a little then add one or two teaspoon fenugreek powder…add ghee and eat one or two teaspoon or as per prescription
…
wonder if i was any help with the recepie…
sathya
புதன் கிழமை, அக்டோபர் 24, 2007 at 5:37 பிற்பகல்
நன்றி சத்யா. எங்கள் வீட்டில் வயிற்றில் அல்சர், அலோபதி (ஆங்கில) மருந்து (ஆண்டிபயாடிக்)சாப்பிடும் நாள்கள், ஜுரம் வந்த நாள்களில் புழுங்கலரிசியில் வெந்தயம் சேர்த்து அரைத்து மோர் விட்டு கஞ்சி மாதிரி செய்து தருவார்கள். இது நான் கேள்விப்படாதது. அமுதா கேட்கவிட்டு, இப்போது தான் ஒரு மங்களூர்காரரிடம் கேட்டு அறிந்துகொண்டேன். இதிலும் புழுங்கல் அரிசியும், கருப்பட்டியும்(வெல்லம் அல்ல) சேர்த்து செய்யவேண்டுமாம். செய்துபார்த்துவிட்டுச் சொல்கிறேன்.
வியாழன், அக்டோபர் 25, 2007 at 7:04 பிற்பகல்
//ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையாதலால், இந்த மலைக்கு மருத்துவ குணம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.//
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 28, 2007 at 1:51 பிற்பகல்
//
அதெல்லாம் முந்தி, இப்ப போயே போச்!
//
In T.Nagar, there is a publication “Azhvargal amudha nilayam” – which publishes sri vaishnava books. I have read some of their books such as “Guru paramparai vaibhavam”, “Mumukshupadi” etc..
To my wonder, they have published derogatory remarks of Swamy desikan (they refer him as “thoopil pillai”) – In the book “Guru paramparai vaibhavam” – they even went on to say that Desikan apologized after Perumal hit him with stick in his dreams for twisting the siddhanta – then he wrote Kshama shodasi as an apology! What a fabrication!
You know what, there is very less marriage connetions between ubhaya kalais.
funny enough!
Perhaps, I should have written this in email
)
புதன் கிழமை, அக்டோபர் 31, 2007 at 4:47 பிற்பகல்
ப்ரசன்னா,
) அப்படியா? நான் கேட்டதில்லை. அனுமார் ரொம்பத்தான் சிந்திட்டார் போல இருக்கு.
பொதுவாகவே மலைப்பகுதிகளில் மூலிகைச் செடிகள் அதிகம் இருக்கலாம். அழகர் கோயில் மலையில் ஒரு பகுதியை அரசே பூட்டி வைத்து வளர்த்து வருகிறது. அதை இப்படி எல்லாம் சொல்கிறார்களோ என்னவோ.
ஸ்ரீகாந்த், நீங்க நிறைய எனக்கு தெரியாத விஷயம் எல்லாம் சொல்றீங்க. என்னுடையது பட்டறிவுதான். படிப்பறிவு இல்லை, இந்த விஷயத்துல. ubhaya kalais அப்படீன்னா என்ன அர்த்தம்?
புதன் கிழமை, அக்டோபர் 31, 2007 at 10:19 பிற்பகல்
//
ubhaya kalais அப்படீன்னா என்ன அர்த்தம்?
//
Ubhaya means two or two ways (See: http://webapps.uni-koeln.de/cgi-bin/tamil/recherche)
Ramanuja siddhanta is called Ubhaya vedantam because it considers the tamil and sanskrit devotional hymns as pramana (or evidence).
See:
(http://en.wikipedia.org/wiki/Ramanuja)
Perumal is consorted by Ubhaya Nachiyars – meaning two nachiyars – Sri Devi and Bhu devi.
Ubhaya kalais – meaning two kalais – ‘then ‘and ‘vada ‘kalais. Thats all.
வியாழன், நவம்பர் 1, 2007 at 8:58 மு.பகல்
ஸ்ரீகாந்த், நீரே பெரியீர். நன்றி.
//You know what, there is very less marriage connetions between ubhaya kalais.//
அதெல்லாம் எங்க வீட்டுல தூள் தூள் ஆக்கியிருக்கோம் அந்தக் காலத்துலயே.
ஞாயிற்றுக்கிழமை, மே 18, 2008 at 12:12 பிற்பகல்
dear Mr. srikanth,
please post more about azhwars andtheir sihya parampara, and bout nathamunikal
வெள்ளிக்கிழமை, ஜூலை 11, 2008 at 11:34 பிற்பகல்
Hello Everyone,
In madurai, usually my grandma use to make Vendhaya Kali.. It is very healthy for everyone.. First soak a handful of vendhayam for 4 hours and grind them into paste and mix it with 2 cups of rice flour and also add 2 kuzhi karandi nalla ennai and some water too and keep it in the stove top and cook it .. and it will comes nicely like a ball.. sattiyila ottama kindanum.. for thottuka with vendhaya kali.. add some water and karrupati(not jaggery) and let it boil and it will have semi solid consistency and stop the stove and let it cool.. We usuall put a bowl a Vendaya kali and make a hole in the middle and add the karuppati charu and eat it.. My daughter, she is 13 now.. but her all time favorite .. Its healthy too..
Nandri, Jansi
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 10, 2008 at 1:53 பிற்பகல்
hoihoihoi
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 10, 2008 at 1:54 பிற்பகல்
Hoi…Ingoooiyala!!!! Give us the correct recipe for Vendhaya Kali…In fact, it’s a very tasty and delicious breakfast.
புதன் கிழமை, பெப்ரவரி 11, 2009 at 5:03 பிற்பகல்
Jansirani Prabakaran, நான் செஞ்சு எடுத்த படமெல்லாம் போச்சு. திரும்ப செஞ்சுதான் இங்க பதியணும். உங்க ரெசிபிக்கு நன்றி.
Hoi, இப்பதைக்கு Jansirani சொல்லியிருக்கறதை வெச்சுக்குங்க.
புதன் கிழமை, மே 6, 2009 at 3:06 பிற்பகல்
For Vendhaya Kali, Alternate method, Soak 1 glass of parboiled rice and 1/4 cup of Vendhayam for 6 hours.. (overnight is fine). Grind it both together (if more grind methi first) with sufficient water, idli consistency.
In a thick pan (cooker bottom makes a good container) add the grinded mixture and keep on stirring, sprinkle water as it gets very thick, till when you touch the mixture with wet hand, nothing sticks.
Serve it with jaggery or Karrupati and sesame oil
வியாழன், ஜூலை 23, 2009 at 2:37 பிற்பகல்
What jansi told that is exactly venthaya kali.
In our area use to make like that only.
Senthil kumar.P
Virudhunagar