தேவையான பொருள்கள்:
கோதுமை – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 4, 5
தேங்காய் – 1 மூடி
உப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
எண்ணெய்
செய்முறை:
- கோதுமை, உளுத்தம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.
- இவற்றுடன் பச்சை மிளகாய், தேங்காய், பெருங்காயம், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்து இட்லி மாவுப் பதத்தில் எடுக்கவும்.
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
* அப்பக் குழியிலும் செய்யலாம்.
* உளுத்தம் பருப்பு சேர்ப்பதால் மென்மையாக இருக்கும்.
* தண்ணீரைக் குறைத்துக் கொண்டு இரண்டு கரண்டி தயிர் சேர்த்து அரைத்தால் சுவையாகவும், உள்ளே குழலாகவும் இருக்கும்.
* ஒன்றிரண்டு பச்சை மிளகாய்களை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால் சாப்பிடும்போது மேலும் சுவையாக இருக்கும். குழந்தைகள் கவனம்.
நவராத்திரி நாயகி: ஆட்கொண்ட தாய் மீனாட்சி – மீனாட்சிசங்கர் (மீனாக்ஸ்)