தேவையான பொருள்கள்:
கோதுமை – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெல்லம் – 350 கிராம்
தேங்காய் – 1 மூடி
ஏலத்தூள்
எண்ணெய்
செய்முறை:
- கோதுமை, உளுத்தம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.
- இவற்றுடன் வெல்லம், தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்து இட்லி மாவுப் பதத்தில் எடுக்கவும்.
- ஏலப்பொடி கலந்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
* அப்பக் குழியிலும் செய்யலாம்.
* உளுத்தம் பருப்பு சேர்ப்பதால் மென்மையாக இருக்கும்.
திங்கட் கிழமை, அக்டோபர் 15, 2007 at 1:22 மு.பகல்
புனர் ஜென்மம் எடுக்க வச்சதுக்கு நன்றி.
நவராத்திரிப் பண்டிகைக்கு அன்பான வாழ்த்து(க்)கள்.
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 24, 2008 at 11:28 பிற்பகல்
hello there(mami)
thank u
i searched for this for past one week.
i glad to see ur site ,bcas we are from srirangam
can i get recipes for karunai gilanku masiyal
&
morkulambu for dwadesi paranai,porrichuvita saramuthu(rasam)
thank u
geetha.s(london)