போட்டிக்கு வந்திருந்த புகைப்படங்களைப் பார்த்தேன். மிரட்டலாக இருக்கின்றன.
எனக்கு தொழில்நுட்பம் எதுவும் தெரியாது. உணவுக்கு பதிவு வைத்துக் கொண்டு அந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றால் கொஞ்சம் அபத்தமாக இருக்கும் என்பதால் நானும்..
முடிந்த வரைக்கும் போட்டிக்காக புதிதாக படம் எடுத்து அனுப்பப்பாருங்கள்,ஏற்கெனவே எடுத்திருக்கும் படங்களில் இருந்து எடுத்து அனுப்பினால் பொதுவாக அவ்வளவாக பொருந்தி வராது.
நண்பர்களுக்கு: எனக்கு நேரமில்லை.
( எடுத்தவைகளும் மனதிற்குப் பிடிக்கவில்லை. அதனால் பழைய பதிவுகளிலிருந்தே எடுத்துப் போடுகிறேன். அவர்கள் ஒத்துவராது என்று சொல்லவில்லை. அவ்வளவாகப் பொருந்தி வராது என்று தான் சொல்லியிருக்கிறார்கள். சொன்ன மாதிரி கலந்துகிட்டேன். ஆளை விடுங்க!
தக்காளி ரசம்: பதிவு
உணவுப் பொருள்கள் என்றால் என்னைப் பொருத்தவரை, உணவு எந்த வண்ணத்தில் இருக்க வேண்டுமோ, இருக்கிறதோ அதே மாதிரி புகைப்படத்திலும் இருந்தால் சரியான புகைப்படம் என்றே எடுத்துக் கொள்கிறேன். உணவுப் படங்களுக்கு அதுவே மிக முக்கியம், அப்பொழுது தான் சாப்பிடும் ஆவல் வரும். அதனால் அதற்கு மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அக்கம்பக்கத்தில் இன்னும் கொஞ்சம் prop வைத்து அழகாக எடுக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் எனக்கு நேரம் ஒத்துவருவதில்லை.
இயல்பான வண்ணங்கள் என்பதைத் தவிர என்னுடைய எல்லாப் படங்களிலிருந்தும் இந்த இரண்டு படங்களை மட்டும் தேர்வு செய்யக் காரணம், ரசம் இருக்கும் அந்த நசுங்கிய ஈயப் பாத்திரமும், தவலை இட்லி இருக்கும் scrtach விழுந்த அந்தத் தட்டும் இன்னும் கொஞ்சம் ஹோம்லி உணர்வைத் தருவதால். உணவுக்கு அந்த உணர்வும் முக்கியம் தானே.
இதுபோன்ற தடயங்கள் அவரவர் வீட்டிற்கென்று சில பிரத்யேக நிகழ்வுகள், நினைவுகள், கதைகளை வைத்திருக்கும். அம்மா வீட்டிற்குப் போனால் இன்னமும் நான் சின்ன வயதிலிருந்து சாப்பிட்ட அந்த தட்டையே சாப்பிட எடுத்துக் கொள்வேன். மனம் நிறைந்த உணவுக்கு இதுவும் முக்கியம்.
நடுவர்களுக்கு: I repeat, இவை போட்டிக்காக எடுத்த படங்கள் அல்ல. அந்தந்தப் படங்களுடன் அதற்கான முந்தைய பதிவுகளின் சுட்டியையும் சேர்த்த கொடுத்திருக்கிறேன். படங்களில் க்ளிக்கினால் Flickerல் அதனை பெரிய அளவிலும்(All sizes) பார்க்கலாம்.
இந்தப் போட்டியால் கொஞ்சம் குறிப்புகள் தெரிந்துகொண்டேன், நன்றி.
தவலை இட்லி: பதிவு
Rasam Art நன்றி: “ஓசை” செல்லா.



புதன் கிழமை, அக்டோபர் 10, 2007 at 9:08 மு.பகல்
01. ஹோம்லி உணர்வு என்றால் என்ன?
02. ஈயத்தில் சமைக்கலாமா?
03. தவலை இட்லி என்றாலே இட்லிவடை போட்ட படம்தான் நினைவுக்கு வருகிறது. அது போட்டியில் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்?
புதன் கிழமை, அக்டோபர் 10, 2007 at 10:28 மு.பகல்
super photos. rasam kudikkanum pola irukku.
புதன் கிழமை, அக்டோபர் 10, 2007 at 12:48 பிற்பகல்
I liked your snaps though; Even I believe that for foodie blogs snaps should be more natural than those artificial touches. But seeing other blogs, sometimes I feel, mine are not very good..and sometimes I don’t publish the recipe and wait to make the dish once again. I liked the rasam snap very much. It is crystal clear like the rasam itself. I can see almost all the ingredients in it
புதன் கிழமை, அக்டோபர் 10, 2007 at 12:54 பிற்பகல்
முதல் படம் அருமை.வாழ்த்துக்கள்
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12, 2007 at 2:30 மு.பகல்
வணக்கம் ஜெயஸ்ரீ! நலமா?
நீண்ட நாட்களாகிவிட்டது!
ரசம் சூப்பர் – தக்காளியும் மிளகும் சேந்து வர்ற வாசனை…. ஹும்! எச்சிலூறுகிறது
ரெண்டாவது இட்லியா? வெண்ணிற இட்லியைத் தவிர இம்மாதிரி வண்ணத்தில் பார்த்ததேயில்லை. தோசைக்கும் இட்லிக்கும் பிறந்தது மாதிரி இருக்கிறது
ரசம் சொட்டும் முதல் படம் அருமை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12, 2007 at 10:25 மு.பகல்
photo “pazani”, vizhiyan,
நீங்களெல்லாம் இல்லைன்னா இங்க வந்திருப்பீங்களா? நானே உங்க பதிவுகளைப் பார்த்துட்டு, இது வேற உலகம்னு பயந்தடிச்சு ஓடி வந்துடுவேன். நன்றி.
Ramya, நன்றி. ஆனா உங்க பக்கத்துலயும் படங்கள் மிக அழகாகவே இருக்கின்றன; சமீபத்து ஸ்ரீஜயந்தி ப்டம் வரை.
அடப்பாவி சுந்தர், நீங்க போட்டில இல்லைன்னு நினைச்சு சேர்ந்துட்டேன்.
( சுனாமியா வந்திட்டீங்க. ரிசல்ட் வரட்டும், அப்றம் பேசிக்கறேன். தவலை இட்லி ரொம்ப அந்தக் காலத்து(பாட்டியோட பாட்டியெல்லாம் செஞ்ச) உணவு. நல்லா இருக்கும்.
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12, 2007 at 10:30 மு.பகல்
//01. ஹோம்லி உணர்வு என்றால் என்ன?//
யாருக்குத் தெரியும்?
//02. ஈயத்தில் சமைக்கலாமா?//
சின்னக் குழந்தை புத்தகம் படிக்கற மாதிரி சும்மா படம் மட்டும் பார்க்காம, பதிவை முழுசாப் படிங்க. கடைசில அதைச் சொல்லியிருக்கேன்.
//03. தவலை இட்லி என்றாலே இட்லிவடை போட்ட படம்தான் நினைவுக்கு வருகிறது. அது போட்டியில் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்?//
அதை ஏன் நினைவுப் படுத்தறீங்க?
( அது ஒரு துன்பியல் சம்பவம்.
(( அந்தாள்(இட்லிவடை) மட்டும் யாருன்னு தெரியட்டும்,அப்புறம் இருக்கு.
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 14, 2007 at 2:13 மு.பகல்
ரசம் நல்லாயிருக்குங்க!
புதன் கிழமை, அக்டோபர் 17, 2007 at 1:51 பிற்பகல்
jayashree, the rasam picture was very good.. please look forward for the comments post in PiT blog.
வியாழன், அக்டோபர் 18, 2007 at 3:51 பிற்பகல்
Hi jayashree,
http://tech.ph.groups.yahoo.com/group/photos-blog/photos/view/81e6?b=1
ungaloda photo just bit of post photo work by chella..
anbudan
iyappan
செவ்வாய்க் கிழமை, அக்டோபர் 23, 2007 at 8:31 மு.பகல்
நட்டு, யாத்திரீகன் ஐயப்பன் நன்றி. ஐயப்ஸ், அந்தச் சுட்டி எங்கேயும் அழைத்துச் செல்லவில்லையே. ஆனால் செல்லா மாற்றிய புகைப்படம் பார்த்தேன். அருமை.