தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பெரியது)
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
கிராம்பு – 3, 4
பிரிஞ்சி இலை – 1
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம்
செய்முறை:
- பயத்தம் பருப்பை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சேர்த்து முக்கால் பதத்திற்கு மட்டும் வேகவைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை மெலிதாக அரிந்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், கிராம்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
- பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த பருப்பும் உப்பும் சேர்த்து தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
- மிகத் தளர்வான பதத்தில் ஆனால் சேர்ந்தாற்போல் வந்ததும், கரம் மசாலாத் தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- ஒரு டீஸ்பூன் நெய், மல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
* அநேகமாக ஹோட்டல்களில் பரிமாறப்படும் ‘தால்’ இந்த முறையிலேயே தான் இருக்கும். விரும்பினால் சில துளிகள் எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ளலாம்.
* கரம் மசாலாத் தூள் விரும்பாதவர்கள் மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
* பொதுவாக எந்த ‘தால்’ வகையிலும் மிளகாய்த் தூளை பருப்பு வேகவைக்கும்போதே சேர்த்தால் ‘தால்’ அதிகம் நிறம் மாறாமல் இருக்கும். இறுதியில் சேர்த்தால் மஞ்சள் நிறம் கலங்கி இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சூடான நெய் கலந்த சாதம், சப்பாத்தி வகைகள்…

திங்கட் கிழமை, அக்டோபர் 8, 2007 at 4:07 மு.பகல்
வெங்காயம், பூண்டு இல்லாமல், வெறும் தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாயோடு முடித்துக் கொள்வது தான் என்னுடைய வழக்கம். சப்பாத்திக்கு சுலபமான சைட் டிஷ்.
திங்கட் கிழமை, அக்டோபர் 8, 2007 at 2:26 பிற்பகல்
அட சொக்காயி, ரொம்ப நாள் கழிச்சு!
ஆமாம், வெங்காயம் இல்லாமலும் செய்யலாம். ஒரிஜினல் பருப்பு மணம் அதுல தான் வரும். இரண்டாவது வகைல இதைச் சொல்லியிருக்கேன். ஒரே பதிவா போட்டிருந்தா இந்தப் பிரச்சினை இல்லை. ப்ரசன்னா வாய்க்கெல்லாம் பயந்து…
திங்கட் கிழமை, அக்டோபர் 8, 2007 at 10:06 பிற்பகல்
பின்னூட்டம் மட்டும் தான் ரொம்ப நாள் கழிச்சு இடறேன்.. மத்தபடி பதிவெல்லாம் அப்பப்ப படிச்சுண்டுதான் இருக்கேன். சமையல் கட்டு நன்னாவே களைகட்டறது. weldone.
செவ்வாய்க் கிழமை, அக்டோபர் 9, 2007 at 5:00 மு.பகல்
hi friend
i saw your dishes in flickr site, they r really yummy, i want to try them but i can’t understand the language , can u help me?pleeee
thanks,
goldy
செவ்வாய்க் கிழமை, அக்டோபர் 9, 2007 at 8:50 மு.பகல்
Friend goldy! for that, you need to learn Tamil, a South Indian language.
Thanks.