தேவையான பொருள்கள்:
சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் (அல்லது தேங்காயெண்ணெய்)
பூரணம் செய்ய:
உளுத்தம் பருப்பு – 1 கப்
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு
செய்முறை:
சொப்பு:
- முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்.)
- வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
- மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து, காயவிடக் கூடாது.
பூரணம்:
- உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு இவற்றைக் கழுவி, தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
- காய்ந்தமிளகாய், இஞ்சி, காயம், உப்பு சேர்த்து அதிகம் நீர் விடாமல் கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதை எண்ணெய் தடவிய இட்லித் தட்டுகளில் வைத்து வெயிட் போடாமல் இட்லிகளாக (பருப்பு உசிலிக்குச் செய்வதுபோல்) 12லிருந்து 15 நிமிடங்களுக்கு குக்கரில் வேகவைத்து இறக்கவும்.
- வெளியே எடுத்து, இட்லிகள் ஆறியதும் லேசாக உதிர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, பொடித்துக் கொள்ளவும். (மிக்ஸியில் சுற்றுவதற்கு முன் நன்றாக ஆறியிருக்க வேண்டும் என்பது முக்கியம்.)
- அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிது வதக்கி உதிர்த்த பூரணத்தில் சேர்க்கவும். (பச்சை மிளகாய் வாயில் அகப்படக் கூடாதென நினைப்பவர்கள் ஒரு பச்சை மிளகாயை, மாவு அரைக்கும்போதே சேர்த்து அரைத்துச் கொள்ளலாம். ஆனால் அகப்பட்டால் சுவையாக இருக்கும்.)
கொழுக்கட்டை:
- ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- சிறிது நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு, பலகையில் கையால் உள்ளங்கை அளவு வட்டங்களாகச் செய்யவும்.
- 2 டீஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து அரை வட்டமாக மூடி, ஓரங்களைக் கையால் அழுத்தி ஒட்டவும். இனிப்புக் கொழுக்கட்டையில் பிளந்தால், பாகு உருகி வெளியே வந்துவிடுவது போல் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்பதால் இதில் அதிகம் மெனக்கெடத் தேவை இல்லை.
- செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது அதிகம் பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.
* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.
* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள்
, அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.
* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த பஜ்ஜிமாவில் தோய்த்து, போண்டோ மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.
* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்குச் சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.


செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 11, 2007 at 6:13 பிற்பகல்
கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் உப்பு ரெண்டுமே) ஷேப்லாம் வேறமாதிரி இருக்கே. traditional முறையில் பிடிப்பது கஷ்டமா?
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 11, 2007 at 7:24 பிற்பகல்
ஒரு கஷ்டமும் இல்லை. மாவும் பூரணமும் செய்யற முறை இதுதான். அதை வெச்சு யாருக்கு என்ன traditionஓ அது மாதிர ஷேப்ல செஞ்சுக்கலாம். இந்த மாவு நல்லா இழுபடும், பிரச்சினை இல்லாம. இதையே மைதா மாவுல செஞ்சா வெஜிடபிள் ரோல்ஸ் எல்லாம் கூட செய்யலாம்.
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 11, 2007 at 8:52 பிற்பகல்
//மாவும் பூரணமும் செய்யற முறை இதுதான். //
முதல்முறையாக நான் இப்படி பார்க்கிறேன். அதான்.
//traditionஓ// என் கோனார் உரை: எப்பவும் செய்வது போல், பழைய முறைப் படி. that is all.
//வெஜிடபிள் ரோல்ஸ் எல்லாம் கூட //
ஸோக்கு!
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 11, 2007 at 9:39 பிற்பகல்
திரும்பவும் உமா. உங்கள் இமெயில் விலசம் தெரியாததால் நானே கணவரின் உதவியுடன் டவுன்லொட் செய்து மெதுவாக டைப் செய்கிறேன். (இன்னும் sri அடிக்க தெரியலை). நன்றி. கொழுக்கட்டை ரெசிபி சூப்பர். நான் ஸ்டோரில் வாங்கிய மாவில் செய்வேன். இம்முறை உங்கள் ரெசிபிதான் சதுர்த்திக்கு. வேகமா டைப் செய்ய வந்ததும் நிறைய பின்னூட்டம் போட போறேன்!
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 11, 2007 at 10:33 பிற்பகல்
திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்த வருடம் தான் வினாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்யப்போகிறேன். அதன் செய்முறையை படங்களுடன் விளக்கியதற்கு மிக்க நன்றி.
புதன் கிழமை, செப்டம்பர் 12, 2007 at 9:32 மு.பகல்
uma kumar, சமத்து. Press s and r for sri. வேகமா தட்ட வந்ததும் இன்னும் ஆலோசனை/மாற்றங்கள் இருந்தா சொல்லுங்க. அதைவிட நிங்க சொந்தமா என்னன்னவோ செய்யலாம். மொதல்ல உள்ள வாங்க. உங்க ஏரியாவே தனியா ஆக்கிக்கலாம்.
Subaina, welcome. ஹாப்பி தலை விநாயகர் சதுர்த்தி!
புதன் கிழமை, செப்டம்பர் 12, 2007 at 9:38 மு.பகல்
பிரேமலதா ‘எப்பவும் செய்யறது போல’ கொழுக்கட்டை பின்ன வேற எப்படி இருக்கும்னு தெரியலையே.
//வெஜிடபிள் ரோல்ஸ் எல்லாம் கூட //
ஸோக்கு!
ஐயோ, ஸோக்கு இல்லை. பிராமிஸ். என் பொண்ணு வருட இறுதில தன் வகுப்பு ஃப்ரெண்ட்ஸைக் கூப்பிட்டுக் கொடுக்கற பார்ட்டிகளுக்கெல்லாம் செஞ்சிருக்கேன். முதல்லயே ரோல்ஸ் செஞ்சு ஃப்ரீசர்ல வெச்சுட்டு, பார்ட்டி அன்னிக்கு கடைசில பத்தே நிமிஷத்துல பொரிக்கலாம். வெஜிடபிள் ரோல்ஸ் குட்டீஸ் ஃபேவரைட்.
மஹாராஷ்டிரால தான் விநாயகர் சதுர்த்தி ரொம்ப ஆடம்பரமா நடக்கும். இவங்க செய்ற கொழுக்கட்டைகளையும் எண்ணைல பொரிச்சு தான் செய்வாங்க.
புதன் கிழமை, செப்டம்பர் 12, 2007 at 9:46 மு.பகல்
Hello Jai
Neyar viruppam niraiverinathukku nanrigal pala.Apparam vegetable roles patthi podunga pls.
வியாழன், செப்டம்பர் 13, 2007 at 4:42 பிற்பகல்
hi madam
unga receipies ellame supera iruku.. I have tried so many.. iniki actualla naan vanthathe kozhukattai pathi potu irupeenganu thaan.. thanks.. naan arisi mava machinelernthu podichi vachi iruken…so athu thaan seiyanum..
Thanks
வியாழன், செப்டம்பர் 13, 2007 at 5:48 பிற்பகல்
Hi Jayashree,
I have read many of your recipes. I tried some recipes. It came out very well. But the only problem is that i end up cooking more quantity.
You specify the ingredients as no of cups in the blog. It will be of great help if you could post the picture of the cup you use for your cooking.
Naan idli milagai podi 1 cup panna poi 3 cup pannitten. appuram enna ellarkkum konjam dharmam panni acchu.
சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007 at 2:13 மு.பகல்
//..i end up cooking more quantity.
You specify the ingredients as no of cups in the blog//
1 cup is approximately 200 ml or about 8 fluid oz. you can buy standard measuring jar calibrated in cups or oz or litres. again these are approx. only. for the purpose of cooking.
திங்கட் கிழமை, செப்டம்பர் 17, 2007 at 3:52 பிற்பகல்
ஜெயஷ்ரீ,
ஸாபுதனா செய்ய தெரியுமா?இப்பொ ஒரு அட்டெம்ட் அடிச்சிட்டு ஹல்வா மாதிரி இருக்கு.எனக்கு சந்தேகம்.ஜவ்வரிசிஐ கழுவினாலே ஒரு மாதிரி ஊறிப்போகுதே?
இப்பொ நான் செய்த்ததை எப்படி முழுங்க்கப்போறேனோ?
தமிழ் டைப் அடிக்க கத்துகிட்டது சந்தோஷமா இருக்கு
திங்கட் கிழமை, செப்டம்பர் 17, 2007 at 3:58 பிற்பகல்
மற்ற வழிப்போக்கர்கள் எப்பத்தான் தமிழில் பின்னூட்டம் போடப் போகிறார்களோ? ஹும்…
சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007 at 1:25 பிற்பகல்
Mrs.Prasanna, நன்றி. நல்லா வந்ததா? இங்க மிஷின்ல கோதுமைதான் அதிகம் அரைப்பாங்க. அதனால நான் அரிசிமாவு அரைக்கக் கொடுக்கறதில்ல. அதென்ன பேர், dubukudisciple?
Seetha, சாபுதானா ஜயராமனும் கேட்டிருந்தாரு. இங்க கொஞ்சம் சொல்லியிருக்கேன். செஞ்சு பார்த்து சொல்லுங்க.
//தமிழ் டைப் அடிக்க கத்துகிட்டது சந்தோஷமா இருக்கு// எனக்கும் Seetha.
visitor, வழிப்போக்கர் ஆ(க்)கியாச்சா? யாரையும் வற்புறுத்தறதுல எனக்கு விருப்பம் இல்லை. விரும்பறவங்களுக்கு உதவலாம். அவ்ளோதான். என் தெரிந்த நண்பர்களே கேட்க மாட்டேங்கறாங்க.
சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007 at 1:32 பிற்பகல்
Eshwari, நீங்க தனிமடலும் எழுதியிருந்தீங்கல்ல? சாரி, உடனே பதில் எழுத முடியாம போயிடுச்சு.
இட்லி மிளகாய்ப் பொடி 1 கப் செஞ்சா எப்படி 3 கப் ஆகும்?
அதுல மிளகாய் தவிர கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, எள் எல்லாம் சேர்க்கறோமில்ல, பின்ன ஆகாதா? உங்களுக்கு மொத்தமே ஒரு கப் பொடி போதும்னா, அந்த அளவுக்கு குறைச்சலா எடுத்துக்குங்க. கப் அளவு சொல்றதெல்லாம் மற்ற சாமான்கள் எவ்வளவு சேர்க்கணும்னு ஒரு ratio தெரிஞ்சுக்கத் தான். மத்தபடி எவ்வளவு செய்யணும்ங்கறது அவரவர் தேவை, விருப்பம், வசதி. ஆனா அதை ஏன் விநியோகம் செஞ்சீங்க? உரல்ல இடிக்காம, மிக்ஸில அரைக்கற மிளகாய்ப் பொடி சிறிது நாள் கழிச்சு தான் இன்னும் சுவையா இருக்கும். 4, 5 மாசம் வரை கூட வெச்சு உபயோகிக்கலாம். ஹாங்காங் மும்பை humidity அதிகம் இருக்கற இடங்கள், அதனால ஃப்ரிட்ஜ்ல வெச்சு 2 தவணையா எடுத்து உபயோகிப்பேன்.
நான் சாதரணமா கடைகள்ல விக்கற கப் அளவுகளைத் தான் உபயோகிக்கறேன். அதை எல்லாம் படத்தோட ஒரு தனிப் பக்கத்துலயே போட்டிருக்கேன்.
thiyagarajan நன்றி.
திங்கட் கிழமை, செப்டம்பர் 24, 2007 at 10:10 மு.பகல்
Thiyagarajan and Jayashree:
Thank you
புதன் கிழமை, ஆகஸ்ட் 20, 2008 at 4:37 மு.பகல்
Hi Jayashree,
Dont have tamil fonts. So, instead of spoiling with ‘Tanglish, I’m using English. I’m a Tamil Iyengar. It’s been a year since I came to USA. And after coming here, I am dying to eat staunch south-indian foods. I’m not a expert like you but just a decent cook.
I came upon your blog accidentally after googling for rice sevai. Great site with awesome mouth-watering recipes…..!!
Please, post MORE recipes. I tried some of them and I loved it. MY REQUEST here is for Upma Kozhukattai…..PLEASE post the recipe. Thank you.
புதன் கிழமை, பெப்ரவரி 18, 2009 at 10:19 பிற்பகல்
Charulatha, thanks.
உப்புமா கொழுக்கட்டை என்று அரிசி உப்புமாவில் செய்வதைச் சொல்கிறீர்களா? ஆமாம் என்றால்.. http://mykitchenpitch.wordpress.com/2007/02/07/arisi-uppumaa-2/ இங்கே பார்த்துக் கொள்ளலாம். இதை கொழுக்கட்டையாக செய்து எடுத்த படமும் வைத்திருக்கிறேன். போடுகிறேன்.