1.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 2 கப்
பயத்தம் பருப்பு – 3/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
எள் – 1 டீஸ்பூன்
உப்பு

செய்முறை:
- அரிசியைக் களைந்து, நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
- பருப்புகளை சிவக்க வறுத்து, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 2 கப் அரிசிமாவிற்கு, ஒரு கப் பருப்பு மாவு, உப்பு, எள், வெண்ணை சேர்த்து, நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
- முள்ளு முறுக்கு அச்சில் சின்னச் சின்ன ஒற்றை இழை முறுக்குகளாக 2 அல்லது 3 ஆகவோ, இரண்டு மூன்று இழை கொண்ட பெரிய முறுக்குகளாகவோ பிழிந்து, நிதானமான சூட்டில், திருப்பிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து, ஓசை அடங்கியது எடுக்கவும்.
* அதிகமாகச் செய்வதாக இருந்தால் தவணை முறையில் மாவைக் கலந்து செய்யவும்.
2.
3 கப் அரிசியையும்(ஊறவைக்காதது), 1 கப் உளுத்தப் பருப்பையும், 1 கப் பயத்தம் பருப்பையும் தனித் தனியாக வறுத்துக் கொண்டு, நைசாக அரைத்து, சிறிது சூடுபடுத்திய எண்ணெய், உப்பு, சீரகம், காரப் பொடி சேர்த்து முள்ளு முறுக்கு செய்யலாம்.
3.
அரிசி மாவு ஒரு கப், பொட்டுக் கடலை மாவு 4 கப் சேர்த்து, உப்பு, எள் கலந்து முள்ளு முறுக்கு செய்தால் கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
4.
4 கப் அரிசி, 3/4 கப் பயத்தம் பருப்பு, 3/4 கப் கடலைப் பருப்பை தனித் தனியாக லேசாக வறுத்து, மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டால் முள்ளு முறுக்கு, ரிப்பன், தட்டை, பஜ்ஜி கூட செய்யலாம்.
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 4, 2007 at 12:27 மு.பகல்
ஸ்ரீஜயந்தியை முன்னிட்டு ஸூப்பர் ஐடங்கள் பல ரிலீஸ் பண்ணியிருக்கீங்களே? எல்லவற்றிற்கும் ஸ்ரீஜயந்தி னு tag கொடுத்திருந்தீங்கனா சௌகரியமா இருந்திருக்கும்.
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 4, 2007 at 5:49 மு.பகல்
எல்லா ஸ்ரீஜயந்தி அயிட்டத்தையும் படிச்சுட்டு அதையே மனசுலே நைவேத்யமா நினைச்சுச்
சாமி கும்பிட்டாச்சு.
‘ப்ரியா குலாப் ஜாமூன் மிக்ஸ்’ ஒண்ணு வாங்கி இனிப்பு செஞ்சுட்டேன்.
இப்பெல்லாம் ரொம்பச் செய்ய முடியலை.
அனைவருக்கும் கி.ஜெ. வாழ்த்து(க்)கள்.
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 4, 2007 at 10:00 மு.பகல்
ஒரே நாள்ல 16 ரெசிப்பியா ? லீவுக்கு ஊருக்கு போறீங்களா ?
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 4, 2007 at 10:03 மு.பகல்
dear jai
vinayaka chathurthikky kozhukattai pls. (eppavum bayamurthra pandigaina adhu vinayaka chathurthithan. kozhukattai mel mavvu oru challenge) edhavadhu easy vazhi irrukka.
een monoottam illama verumane samayal kurripugal mattum? Pls monoottam ezhuthunga adhu illama uppu illadha madhiri irrukku.
செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 4, 2007 at 8:20 பிற்பகல்
போட்டோ எதுவும் காணோமே
புதன் கிழமை, செப்டம்பர் 5, 2007 at 1:21 பிற்பகல்
Hi Jayashree,
You have done a great job posting all posible recipes of Sri Jayanthi. Next year (pezhachchikadandha)I will try to make almost most of them. Your site will be my reference book for sure. Thank you very much for sharing such nice recipes. Very well done.
புதன் கிழமை, செப்டம்பர் 5, 2007 at 4:03 பிற்பகல்
Ramya, Thanks and welcome.
Srilatha, நான் விநாயக சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்யறதில்லை. வெளிக் கொண்டாட்டங்கள்ல அன்னிக்கு பிசியா இருந்துடுவோம். காலனி இப்பவே களை கட்டிடுச்சு. ஆனா எனக்குத் தெரிஞ்சதையும் சொல்றேன்.
Visitor, WPல ஸ்ரீஜயந்தின்னு தனியா tag கொடுக்க முடியுமா? அதுவும் categoriesல போயிடாதா? ஏற்கனவே அங்க எக்கச்சக்கம் இருக்கு. ஆனா பண்டிகைகளுக்கான குறிப்புகளை தனியா குறிக்கணும்னு ஒரு எண்ணம் இருக்கு. பொறுமை தான் இல்லை.
துளசி, எங்க வீட்டுலயும் குலாப் ஜாமூன் செஞ்சேன். அதோட மிச்ச சிரப்’பை பாயசத்துல விட்டுட்டேன்.
உங்களுக்கும் கி.ஜ வாழ்த்துகள்.
புதன் கிழமை, செப்டம்பர் 5, 2007 at 4:10 பிற்பகல்
கூம்ஸ், ஊருக்கெல்லாம் போகலை. கொஞ்சம் பெர்சனலா வேலை இருந்தது, அப்புறம் ஸ்ரீஜயந்தி வேலைகளும். அதனால முன்னாலயே ஸ்ரீஜயந்தி ரெசிபி எல்லாம் postdated ஆ பப்ளிஷ் செஞ்சுட்டுப் போயிட்டேன். இணையம் எல்லாம் படிக்காம ‘அலைபாயலையே கண்ணா’ன்னு இருக்கலாம்னு தான். : )
//ஒரே நாள்ல 16 ரெசிப்பியா//
ஒரே நாள்லயா சொல்லியிருக்கேன். மக்கள் அடிக்க வந்துடுவாங்களோன்னு ரெண்டு நாளா பிரிச்சு, (முதல் நாள் மதியம் 3:01 லேருந்து 3:11), இன்னொரு பேட்ச், ராத்திரி 12:01 லேருந்து 12:06- அது மறுநாள் கணக்கு) கொடுத்திருக்கேன். அப்புறம் கூட்டினா 16ஆ வருது? எண்ணக் கூட தெரியாதா, கூமூட்டை! கூமூட்டை!!ன்னு உங்களைத் திட்டக் கூட முடியாது. : )
புதன் கிழமை, செப்டம்பர் 5, 2007 at 4:20 பிற்பகல்
பாபா, உங்களை எப்படி மறந்தேன்? : ) அதே மாதிரி செய்யும்போது ஏனோ படம் எடுக்கணும்னும்னே தோணலை. நேத்தி செஞ்சதெல்லாம் மட்டும் எடுத்திருக்கேன். என் நெட் இணைப்பு சரியில்லையான்னு தெரியலை, Flickr ஏத்தாம படுத்துது. சரியானதும் போடறேன். ரெசிபி எல்லாம் முன்னாலயே ஏத்தினது. அப்ப எதுவும் செஞ்சிருக்கலை.
புதன் கிழமை, செப்டம்பர் 5, 2007 at 4:27 பிற்பகல்
Multiple tags இருந்தா, இருந்துட்டுப் போகட்டும்.
உம். தட்டைக்கு பட்சணங்கள் (அ) காரவகை மூலமா வந்து சேரலாம்.
பண்டிகைகள் – category ஒன்னு இருந்தா அதுக்குக் கீழே தீபாவளி, ஸ்ரீஜயந்தின்னு பல sub-categories create செஞ்சுக்கலாமே?
குறிப்பிட்ட நேரத்தில் எதைத் தேடுகிறோமோ அதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
புதன் கிழமை, செப்டம்பர் 5, 2007 at 4:29 பிற்பகல்
Nice to know about you through this blog. Very interesting recipes that too in our language. Nice recipes too. Have a good day. Viji
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007 at 2:50 மு.பகல்
ஸ்ரீஜெயந்திக்கு குலொப்ஜாமுனா? குலோப்ஜாமூன் சிரப்பை பாயசத்தில் விட்டது நீங்கதானா? இது ஜெயஸ்ரீக்கிட்ட எதிர்பார்க்காதது.
நான் சீடை (உப்பு, வெல்லம்), அக்காரவடிசலும் செய்தேன்.விடுமுறைங்கிறதால. சீடை சாப்பிடறதை விட அதை உருட்டி, சின்ன குச்சியால சின்ன ஓட்டை போட்டு,ஒவ்வொரு பேரா அடுக்கி அதான் சுவையானது.விநாயக்ருக்கும் இந்த வருஷம் அதிர்ஷ்டம், சனிக்கிழமை வர்ரதால:)
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007 at 9:46 மு.பகல்
Visitor, செஞ்சுடலாம். Sub category இல்லைன்னாலும் சும்மா பண்டிகைகள் மட்டும் இருக்கலாம். ஆனா இதுக்கு நிறைய பேருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். : (
Viji, நன்றி. //that too in our language.// சொன்னீங்களே, இது வார்த்தை. நீங்களெல்லாம் லேசா மெனக்கெட்டு தமிழ்ல எழுத வந்திருந்தீங்கன்னா, இந்த விபத்து நடந்திருக்காது. பீட்டர் தான் விடுவேன்னு பிடிவாதம் பிடிக்கறீங்க. அறுசுவை.காம் தவிர தொடர்ந்து தமிழ்ல சமையல் குறிப்புகள் யாரும் கொடுக்கறதில்லை.(தூயா மட்டும் கொஞ்சம் நம்பிக்கை தராங்க). ஆரம்பிச்சாலும் 10, 15 பதிவுகளோட நிறுத்திக்கறாங்க. அதான் நானெல்லாம்(எல்லாரும் கிண்டல் செஞ்சாலும் பரவாயில்லைன்னு
) கிளம்பிட்டேன். நீங்களாவது எழுதுங்களேன் தமிழ்லயும்.
பத்மா, என்னது இது, நான் ஏன் செய்யமாட்டேன்னு நினைச்சீங்க? எல்லா திரிசமன்களும் இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் செய்யப்படும். குலோப்ஜாமூன்ல அது ஊறினதுக்கப்பறமும் ஜீரா இருந்தா எங்களுக்குப் பிடிக்காது. அதனால மிச்சம் பாயசத்துக்கு. ஆனா வெனிலா எசன்ஸ் சேர்க்காம, ஏலப்பொடியே ஜாமூனுக்கும் சேர்த்திருக்கணும். அதே வித்யாசம்.
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007 at 5:35 பிற்பகல்
நீங்க இதுவரை போட்ட படங்கள்லயே, இன்னைக்கே இப்பவே திங்கணும்னு வெறுப்பேத்தினது இந்தப் படம்தான்.
சாதா முறுக்கு செய்யலையா?
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007 at 5:43 பிற்பகல்
எங்கவீட்ல பொரிகடலை (பொட்டுக்கடலை) பொடியும் அரிசு மாவும் போட்டு சாதா முறுக்கு செய்வாங்க. நான் செய்ததில்லை.
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007 at 5:52 பிற்பகல்
பிரேமலதா, இது என்ன பாராட்டா திட்டா? உண்மையில் இதைத் தான் மிகவும் கஷ்டப்பட்டு செய்தேன். ஒரு நேரத்தில் என் மிக்ஸியும் கிரைண்டரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தி விட்டன. மிக்ஸியில் மாவை பொடியாக்க முடியாமல்(ரவைப் பதத்தை தாண்டவே இல்லை) அரிசியை தண்ணீர் விட்டு அரைத்து, பருப்பு மாவைக் கலந்து செய்தேன். ஆனால் இதுதான் மிகுந்த சுவையாக வந்திருந்தது. அப்பமும்.
4ம் தேதி செய்தவை மட்டும் தான் படம் எடுத்தேன். அன்று செய்த குலோப் ஜாமூன், வடை எல்லாம் இங்கே குறிப்பு சொல்லியிருக்கவில்லை ஆதலால் ஏற்றவில்லை. படம் எல்லாம் போடவேண்டாம் என்று நினைத்து முதல் நாள் செய்தவைகளை எடுக்கவில்லை. முறுக்காகிய தேன்குழல் அதில் போய்விட்டது.
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007 at 6:03 பிற்பகல்
உங்கள் வீட்டு அத்தனை மெசின்களும் வேலை செய்யாமல் போகக் கடவ. (தண்ணீர் விட்டு எதுல அரைச்சீங்க? அதான் மிக்ஸி வேலை செய்யலையே).
தேன்குழலா.. அது ரெசிப்பி வேறமாதிரில்ல இருக்கு. எதுலயுமே பொரிகடலை மாவு போட்டு இல்லையே. அதோட, முறுக்கு மாதிரி இல்லாம சின்ன சின்னதா கடைல பார்த்திருக்கேன் தேன்குழல்னு பேர்ல.
உங்களோட முள்ளு முறுக்கும் முறுக்கு ஷேப்ல இல்லை. ஆனா, முறுக்குன்னு தெரியுது. நானும் இப்படித்தான் செய்தேன் ஒருமுறை. அரிசிமாவும் கடலைமாவும் மிளகாய்ப் பொடியும் கலந்து இதேமாதிரி புழிஞ்சு எடுத்துட்டேன். சாப்பிட்டுட்டு முறுக்கு டேஸ்ட் இல்லை ஆனா காரசாரமா இருக்குன்னு சொன்னாங்க வீட்டுக்கு வந்தவங்க. (பின்ன, நாம மட்ட்மே எத்தனை நாளுக்கு விவகாரமான ஆராய்ச்சிக்கு கிணிஎலியா இருக்கிறது. வர்றவங்களையும் உபயோகப் படுத்திக்கிறதுதான்!)
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007 at 9:44 பிற்பகல்
Hi Jayashree,
nice recipes and nice website. I also read your story at marathadi group which I really loved. I am also from Trichy near srirangam, loved to write in Tamil but dont know how to download fonts.(dont have much knowledge in computer).Anyway thanks for remainding me about Srirangam and for very good recipes.
சனிக்கிழமை, செப்டம்பர் 8, 2007 at 11:43 மு.பகல்
//தண்ணீர் விட்டு எதுல அரைச்சீங்க? அதான் மிக்ஸி வேலை செய்யலையே//
ஆமாம். ஆனால் மிக்ஸியில் அடியில் ஒரு பட்டன் இருக்கும், அதை அழுத்தினால் திரும்ப ஓடுமே. ஆனாலும் ரவைக்கு மேல் நைசாக அரைக்கவில்லை. அதனால் கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்தேன். அப்புறம் பருப்பு மாவு சேர்த்ததால், பிழிய சரியான பதமாகிவிட்டது.
எனக்குத் தெரிந்து இந்த மாதிரி நாள்களில் பொட்டுக்கடலை உபயோகித்ததில்லை. பொட்டுக்கடலை வீட்டில் நாமே உடைப்பது கொஞ்சம் கடினமான வேலை. அதற்காக நேரடியாக கடையில் வாங்கவேண்டியிருப்பதால் சேர்ப்பதில்லை என்று நினைக்கிறேன். (என் யூகம் தான்.) உண்மையில் ஸ்ரீஜயந்தித் தேன்குழலுக்கு உளுத்தம் மாவு இயந்திரத்தில் அரைத்துத் தான் செய்வார்கள். ஏற்கனவே கைமுறுக்கு வேறு காரமில்லாமல் செய்வதால் இதைச் செய்யவில்லை. வேறு நாளில் செய்யலாம் என்று விட்டுவிட்டேன்.
//உங்களோட முள்ளு முறுக்கும் முறுக்கு ஷேப்ல இல்லை.//
முறுக்கு என்பது உள்ளங்கை அளவுக்கு சின்னதாக வட்டமாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற பொதுப்புத்தியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சின்னச் சின்னதாக துணியில் பிழிந்து ஒவ்வொன்றாக எடுத்து எண்ணையில் 4,5 ஆகப் பொரிக்கும் பொறுமையும் நேரமும் இல்லாத, வழமையைக் கட்டுடைக்கும் பின் நவீனத்துவ பாணி, உழக்கை நேரடியாக எண்ணைக்கு நேராக நீட்டி ஒரே பெரிய வட்டமாக 20 நொடித் துளிகளில் பிழிந்து தள்ளுவது- சீர் முறுக்கு என்றும் சொல்லலாம்.
உங்கள் கல்லக்கண்டா நாயக் காணோம் பதிவும் படித்துப் புல்லரித்தேன்.
இந்தக் குறிப்பில் சொல்ல மறந்தது, கடைகளில் கிடைக்கும் அரிசிமாவை நேரடியாக உபயோகித்தால் முறுக்கு கட்டாயம் சிவக்கும். சல்லடை இல்லாவிட்டால் என்னைப் போல் சிறிது தண்ணீர்விட்டு அரைத்து பருப்பு மாவை மட்டும் அப்படியே அரைத்துச் செய்யலாம்.
ஸ்ரீஜயந்திக்கு மட்டும் தான் இப்படி. அல்லாத போது பொட்டுக் கடலை சேர்த்துச் செய்யும் பட்சணங்களே சுவையானவை; எனக்கும் பிடித்தமானவை. மேலே குறிப்பிலும் ஒன்று(#3) அப்படிச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் கவனிக்கவில்லை.
சனிக்கிழமை, செப்டம்பர் 8, 2007 at 11:46 மு.பகல்
uma kumar, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மரத்தடி வரை போய் கதை எல்லாம் படித்திருக்கிறீர்கள், ஆனால் கணினி தெரியாது என்று சொன்னால் எப்படி? ஏதாவது உதவி அல்லது என்ன உதவி வேண்டுமானாலும் என்னைத் தனிமடலில் கேட்கலாம். தெரிந்தவரை சொல்கிறேன். இல்லாவிட்டால் தெரிந்தவரைச் சொல்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 9, 2007 at 8:43 மு.பகல்
Jayashree, Namaskaaram!!!Neengal thamizhil eppadi ezhuthugirirgal? Ezhuthukku piragu kommbu varuvathu, padikka asaukariyamaga ulladu. Thanks for including my name in blogroll!
Bakshanangal nandraga ullana!
திங்கட் கிழமை, செப்டம்பர் 10, 2007 at 7:50 மு.பகல்
//ஆரம்பிச்சாலும் 10, 15 பதிவுகளோட நிறுத்திக்கறாங்க. அதான் நானெல்லாம்(எல்லாரும் கிண்டல் செஞ்சாலும் பரவாயில்லைன்னு ) கிளம்பிட்டேன்.//
ஜெயஸ்ரீ, உங்களை யார் கிண்டல் செய்கிறார்கள்? உங்கள் நண்பர்களாக இருந்தால் சும்மா உரிமையில் சீண்டுவதற்காக இருக்கலாம். பெண் சமையல்குறிப்பு எழுதினால் கேவலம் என்று(அதுவும் பெண்களே) நினைப்பதுகூட ஒருவித ஹிப்போகிரசி தான். ஆனால் உங்கள் எழுத்துநடைக்கும் கருத்துக்களுக்கும், சமையலோடு முடிந்துவிடாமல் நீங்கள் இன்னொரு தனி ப்லாக் ஆரம்பித்து பிற விஷயங்களையும் எழுதலாம் என்பது என் கருத்து. எனவே கிண்டல்களை எல்லாம் புறக்கணித்து மேலே தொடரவும்.
(எனக்கு முன்பெல்லாம் தமிழில் கமெண்ட் எழுதவே மலைப்பாக இருக்கும். இப்போது வேகம் கூடிவிட்டதை ஒப்புக்கொள்ள வேண்டும். நன்றி.)
திங்கட் கிழமை, செப்டம்பர் 10, 2007 at 12:16 பிற்பகல்
vijayram, அப்படி எல்லாம் கிண்டல் செய்ய விட்டுடுவோமா? யாராவது ஏன் சமையல் பதிவுன்னு கேட்டா நான் கேட்கற அடுத்த கேள்வி, “காலைல சாப்பிட்டாச்சா?” ஒருநாள் சாப்பாட்டைக் குறைச்சா யாராவது மாங்கு மாங்குன்னு வலைபதிய முடியுமா என்ன?
மக்கள் (நண்பர்களா அவங்க?) கிண்டல் செய்யறது நானெல்லாம் எல்லாம் தெரிஞ்ச மாதிரி இந்த சப்ஜக்ட்ல எழுதறேனேன்னு தான்.
//…நீங்கள் இன்னொரு தனி ப்லாக் ஆரம்பித்து…//
அதுசரி, இதைத் தான் எங்கூர்ல ‘பல்லில்லாக் கிழவனுக்கு டபிள் பொண்டாட்டி’ன்னு சொல்வாங்க.