கடுப்பு வலியைப் போக்கும் கண்டத்திப்பிலி என்பது வழக்கு. மழை அல்லது சீதோஷ்ண மாற்றங்கள், மிகுதியான வேலை போன்ற காரணங்களால் வரும் உடல் வலி, காய்ச்சல், தொண்டைக் கட்டு போன்ற அறிகுறிகளுக்கு இந்த ரசம் மிகவும் சிறந்த மருந்து.
ஸ்ரீகாந்த், மேலதிகத் தகவல்கள், குறிப்பில் மாற்றங்கள் இருந்தால் உங்கள் அம்மாவிடம் கேட்டு இங்கே சொல்லவும்.
தேவையான பொருள்கள்:
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
நெய்
வறுத்து அரைக்க:
கண்டத்திப்பிலி – 8, 10 குச்சிகள்
சதகுப்பை – 2 டீஸ்பூன் (விரும்பினால்)
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
காய்ந்த மிளகாய் – 2
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை.

செய்முறை:
- திப்பிலி, சதகுப்பை, மிளகாய், துவரம் பருப்பு, மிளகு, சீரகத்தை தனித் தனியாக, நன்கு சிவக்க நெய்யில் வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- புளியை நீர்க்கக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், லேசாக நசுக்கிய பூண்டுப் பல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- புளி வாசனை போனதும், அரைத்த விழுதைப் போட்டு, கொதித்ததும்(இந்த நேரத்தில் நல்ல வாசனை வரும்.), தேவையான தண்ணீர் மேலும் சேர்த்து விளாவவும்.
- நிதானமான தீயில் பொங்கிவரும்போது இறக்கவும்.
- ஒரு டீஸ்பூன் நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
* மற்ற ரசம் மாதிரி தெளிவாக இல்லாமல் கொஞ்சம் கலங்கி கெட்டியாகத் தான் இருக்கும்.
* திப்பிலி என்று பொதுவாகக் குறிப்பதைவிட கண்டத்திப்பிலி என்று சொல்வதே வசதி. ஏனென்றால் அரிசித் திப்பிலி என்றும் ஒரு மருந்துப் பொருள் (கருப்பாக மிளகுவகை மாதிரி) இருக்கிறது.
* சதகுப்பைக்குப் பதில் 10 அரிசித் திப்பிலியும் சேர்த்துக் கொள்ளலாம்.
* பொதுவாக இதில் தக்காளி சேர்ப்பதில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் இரண்டு தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
சூடான சாதத்தில், சுடச் சுட இந்த ரசத்தை விட்டுச் சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள பருப்புத் துவையல். இத்துடன் வேறு உணவுகள், தயிர் சாதம் போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

வியாழன், ஆகஸ்ட் 30, 2007 at 7:25 மு.பகல்
Jsri, தாளித்த உடனே ஆவி பறக்க புகைப்படம் எடுத்ததுபோல் தெரிகிறது. தயவு செய்து அதுபோலச் செய்வதைத் தவிர்த்து புகைப்படக் கருவியின் லென்ஸைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
வியாழன், ஆகஸ்ட் 30, 2007 at 7:56 மு.பகல்
Gracieus! .
Should be easy to do for anybody.
Here are my amma’s comments:
* பூண்டு, சதகுப்பை பிடிக்காதவர்கள் சேர்க்கத்தேவை இல்லை. Anyway, பூண்டு சேர்த்தால் additional taste.
* கறிவேப்பிலை சேர்ப்பதும் வழக்கம்.
* பெருங்காயம் இரண்டு தடவை சேர்க்க வேண்டுமா?
* எண்ணை தேய்த்து குளித்த அன்றைக்கும், உடல்வலி உள்ளவர்களுக்கும் இந்த ரசம் ஆறுதலை கொடுக்கும்.
My comment:
)
* உப்பு சேர்க்க வேண்டாமோ? (ஆமாம், அடுப்பைக்கூடத்தான் பற்றவைக்க வேண்டும்
Cheers (with rasam),
Srikanth
வியாழன், ஆகஸ்ட் 30, 2007 at 9:55 பிற்பகல்
பாகீ, ஆமாம்.
ஆனா ஆவி லென்ஸ் பக்கம் அடிக்காம எதிர்ப்பக்கம் தான் போய்கிட்டிருந்தது. கொஞ்சம் தள்ளி இருந்துதான் எடுத்தேன். ஆனாலும் உங்க அக்கறைக்கு, அறிவுரைக்கு நன்றி. நினைவு வெச்சுக்கறேன்.
வியாழன், ஆகஸ்ட் 30, 2007 at 10:06 பிற்பகல்
* பூண்டு, சதகுப்பை பிடிக்காதவர்கள் சேர்க்கத்தேவை இல்லை. Anyway, பூண்டு சேர்த்தால் additional taste.
ஆமாம். நான் தினமுமே ரசத்துல பூண்டு போடற ஆளு. ஆனா விலக்கறவங்க அதுக்காக கவலைப்பட வேண்டாம், அதே நான் சொல்ல வந்தது.
* கறிவேப்பிலை சேர்ப்பதும் வழக்கம்.
தாளிச்சிருக்கேனே. ஒருவேளை அரைச்சு விடறதுலயே சேர்க்கணுமோ?
* பெருங்காயம் இரண்டு தடவை சேர்க்க வேண்டுமா?
நன்றி.
திருத்திட்டேன்.
My comment:
* உப்பு சேர்க்க வேண்டாமோ? (ஆமாம், அடுப்பைக்கூடத்தான் பற்றவைக்க வேண்டும் )
ஹே ஸ்ரீகாந்த்,…இது ரொம்ப ஓவர். நான் உப்பு சேர்த்திருக்கேன். டிங் டிங் டிங்.
வியாழன், ஆகஸ்ட் 30, 2007 at 10:20 பிற்பகல்
ஏங்க, ஏதாவது உடம்புக்கா. ஓரே பத்திய சமயலா கலக்குறீங்க. துகையல், திப்பிலி-ரசம் எல்லாம் போய் நல்லா சமயல் ஐடங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன். இதுவும் நல்ல ஒரு ரெசிபிதான். ஆனா, என்னவோ எனக்கு திப்பிலி ரசம்னா அலர்ஜி, பிடிக்கிறதில்லை.
வியாழன், ஆகஸ்ட் 30, 2007 at 10:46 பிற்பகல்
ஜயராமன், உடம்புக்கெல்லாம் ஒன்னுமில்லை.
திப்பிலி ரசம் மழைக்காலம்னு நானே நிறைய செஞ்சுட்டேன். ஆனா ஸ்ரீகாந்த் கேட்டதால இங்கயும் போட்டேன்.
தேங்காய்த் துவையல்.. அக்கம்பக்கம் மக்கள் வரலஷ்மி விரதம் செஞ்சதுல தேங்காய் ரொம்ப சேர்ந்திடுச்சு.
ரெண்டு நாளா தேங்காய் அரைச்சுவிட்டுதான் குழம்பே. ரெசிபி வந்துகிட்டே இருக்கு.
//நல்லா சமயல் ஐடங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.//
எது நல்ல ஐட்டம்னு நீங்க தான் ஏதாவது ஆலோசனை சொல்லுங்களேன். தெரிஞ்சா எழுதறேன். இல்லை மக்கள்கிட்ட கேட்டாவது தெரிஞ்சுக்கறேன். தினம் என்ன சமைக்கறதுன்னு யோசிக்கறதே கடுப்பா இருக்கும். இப்ப என்ன சமையல் போடறதுன்னு வேற யோசிக்க வேண்டியிருக்கு.
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2007 at 10:37 மு.பகல்
//// எது நல்ல ஐட்டம்னு நீங்க தான் ஏதாவது ஆலோசனை சொல்லுங்களேன். தெரிஞ்சா எழுதறேன்.////
என்னங்க அம்மணீ இப்படி ஒரு சாப்பாட்டுராமன்கிட்ட போய் கேட்டுட்டீங்க. ம்ம்ம்ம், என்ன சொல்ல? உங்களுக்கு ஜவ்வரிசி உப்புமா பொலபொலன்னு பண்ணதெரியுமா. (எங்க வீட்டுக்காரி இதுல ஹோப்லஸ், ஸ்ஸ்ஸ்). கருணைக்கிழங்கு பிட்லை, மட்டர் சூடா, பைனாப்பிள் ரசம், டோக்லா, மோர்க்கூழ், இலையடை, பீர்க்கங்காய் புளிக்கூட்டு, சக்கவரட்டி. இதையெல்லாம் ஏற்கனவே போட்டுவிட்டீர்களா என்று தெரியவில்லை. சட்டென்று ஆபிஸில் தோன்றியது இது. மீதி நிறைய இருக்கு.
வெள்ளிக்கிழமை, நவம்பர் 7, 2008 at 6:58 பிற்பகல்
kalakitenga ponga.nanum oru srirngathuaasamithan