நன்றி: பிரேமலதா. (இடையில கலர்ஃபுல்லா பேசியிருக்கறதெல்லாம் நானே.)
[யெக்கா, உப்புச்சார்ல கருவாடு போடணும். உங்களுக்கு ஒத்துவராது. ஒருவேளை மருவிய உப்புச்சார் கருவாடு இல்லாம வலம் வருதோ என்னமோ. கிடைச்சா அனுபவிங்க. சாகறதுக்கு முன்னாடி அனுபவிக்க வேண்டிய ஒன்று. ரெம்பநாள் வெஜிடேரியனிசம் கடைபிடிச்ச காலங்கள்ல கூட கருவாட்டை எடுத்துப்போட்டுட்டு உப்புச்சாரை மொக்கு மொக்குன்னு மொக்கிருக்கேன். கருவாடு இல்லாட்டி உப்புச்சார் உப்புச்சாரே கிடையாது. (உங்களுக்கு கொடுத்துவைச்சது அவ்வளவுதான்) இருந்தாலும் மருவிய உப்புச்சார் கிடைச்சா கண்டிப்பா விடாதீங்க.]
மருவிய உப்புச்சார்: (கருவாடு மைனஸ்) :)
1.
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை
தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்
செய்முறை:
- புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
- சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். (ஒரு பேப்பரில் வைத்து மைக்ரோவேவ் அவனில் ஒரு 20 அல்லது 30 விநாடிகள்(மட்டும்) வைத்து எடுத்தால் கையோடு தோல் வந்துவிடும். தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்தும் சுலபமாக உரிக்கலாம். ஆனால் சுவை சற்றே வேறுபடும். எப்படி இருந்தாலும் ரங்கமணியை இதற்கு எதிர்பார்ப்பதில்லை என்பதே மேட்டர்.)
- பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். [இன்னும் கை எரியுது.
தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை துடைத்துக் கொள்ளவும்.] - அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து புளிக் கரைசலைச் சேர்க்கவும். [பிரேமலதா, நீங்களோ திருமலையோ கடுகு எல்லாம் தாளிக்கவே சொல்லலையே. இதுக்கு அதெல்லாம் கிடையாதா? ஆனா நான் செஞ்சேன்.]
- மேலும் 2 டீஸ்பூன் எண்ணை சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கவும்.
-0-
2.
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
கொண்டைக் கடலை – 1/2 கப்(காய்ந்தது)
பச்சை மிளகாய் – 6, 7
சின்ன வெங்காயம் – 25
கத்தரிக்காய் – 4, 5 (பச்சை, பிஞ்சு என்றால் நன்றாக இருக்கும்.)
மஞ்சள் தூள்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணை.
தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம்.
செய்முறை:
- புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
- சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். (மேலே சொல்லியுள்ளபடி செய்யலாம்.)
- பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். [மேலே உள்ள குறிப்பைப் பார்க்கவும்.]
- கத்தரிக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் (மண்சட்டி என்றால் நன்றாக ஒரேமாதிரியாக வறுக்கலாம்) போட்டு (எண்ணையில்லாமல்) வறுக்கவும். இதிலேயே ஓரளவு நன்றாக வெந்துவிடும்.
- அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணையைச் சுடவைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
- அத்துடன் பயறு, புளிக்கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும். புளிக்கலவையை ஊற்றியபின் கரண்டி போடமல் இருக்கவேண்டும். பயறு வேகாதாம். (வறுத்த பயறு புளிக்கலவையில் வேகவேண்டும். வறுபட்டதினால் சீக்கிரம் வெந்துவிடும். குக்கரில் வேகவைக்கத் தேவையில்லை.) [நான் கொஞ்சம் நம்பிக்கை இல்லாம எதுக்கும் இருக்கட்டும்னு கொண்டைக்கடலையை ஒரு விசில் குக்கர்ல வெச்சுட்டேன். சாரி!]
- தேவையான அளவு உப்பு போட்டு, மேலும் சிறிது எண்ணையை ஊற்றவும்.
- பயறு வெந்ததும் (கரண்டி போடமல் தெரிந்து கொள்ளவேண்டுமாம்!), புளி நன்றாகக் காய்ந்ததும் இறக்கிவிடவும்.
* மண்சட்டியில் செய்தால் சுவையாக இருக்கும்.
* கத்திரிக்காய்க்குப் பதில் தனியாக வெண்டைக்காய் மட்டும் போட்டும் செய்யலாம்.
மேட்ச் ஃபிக்ஸிங் கார்னர்:
சாதம், கிண்டிய உருண்டைச் சோறு, சோளச் சோறு, கேப்பைக்களி (சோளச் சோறுக்கும் கேப்பைக் களிக்கும் செய்வதானால் அரிசிமாவைக் கரைத்து புளிக் கலவையில் சேர்க்க வேண்டும். சிறிது மிளகாயும் புளியும் அதிகமாயிருக்க வேண்டும், to compensate for the dulling effect caused by அரிசிமாவு.)
சின்னவயதில் அம்மா செய்ததையும் அக்கம் பக்கத்தில் செய்ததையும் காது வழி ஞானத்தையும் வைத்து மேலே உள்ளதை எழுதியிருக்கிறேன். அம்மாவுக்கு சோளச் சோறும் கேப்பக் களியும் சரியா வராது. அதனால் எங்கள் வீட்டில் சாதம் தான் பெரும்பாலும். அக்கம் பக்கத்தில் சோளச் சோறும் உப்புச்சாரும் என்றால் எனக்கு ஸ்பெஷல் அழைப்பு வரும். அங்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவேன். கேப்பைக் களிக்கு மகிழிக் கீரைதான் சரியான மேட்ச் என்பதால், கேப்பைக் களியுடன் உப்புச்சார் வைக்கும்போது என்னை ஸ்பெஷலாக அழைக்க மாட்டார்கள், நானாகக் கண்டுபிடித்தால் மட்டுமே கிடைக்கும். இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது யாராவது சோளச் சோறு (கேப்பைக் களியெல்லாம் கிடைக்குமென்ற நம்பிக்கையேயில்லை) செய்கிறார்களா என்று கேட்டுப் பார்த்தேன். இல்லையென்று பதில் வந்துவிட்டது. சோளச்சோறு இல்லையென்றால் உப்புச்சாரும் அதிகமாக நடமாடாது. I will be surprised if anyone still makes it anymore in our street in our village. மத்த தெருக்களைப் பற்றி எனக்குத் தெரியாது. (பிரேமலதா நல்லா இருந்தது. அதே முக்கியமான மேட்டர்.)

சனிக்கிழமை, ஆகஸ்ட் 18, 2007 at 1:23 பிற்பகல்
jeyashree and premalatha are my cookery queens….
btw does anyone of you know how to cook with those soy protein chunks. vaangi vaiththadhu ennaye parkudhu..enna pannanum theriyala
சனிக்கிழமை, ஆகஸ்ட் 18, 2007 at 3:27 பிற்பகல்
ஹரன்பிரசன்னா, நானே கடுப்புல இருக்கேன். உங்களுக்கு வாய்ல வாஸ்து சரியில்லை. போனாப் போறதுன்னு இந்தத் தடவை உங்க பின்னூட்டத்தை மட்டுறுத்திட்டேன். பொழச்சுப் போங்க! (ஆண்டவா, பகைவனுக்கு(ம்) அருளும் நன்னெஞ்சை எனக்கு ஏன் கொடுத்த?)
Seetha,அந்த chunks எல்லாம் எப்பயாச்சும் கொஞ்சம் அளவு கொறைச்சலா இருந்தா மட்டும்தான் போடறது. அதோட ஸ்பெஷாலிட்டியே அதை எந்த உணவுல போட்டாலும் அதோட சுவையை, மணத்தை எடுத்துக்கும். அதாவது அதை மட்டும் தான் விளம்பரங்கள்ல சொல்லியிருப்பாங்க. சும்மா சொல்லக் கூடாது, சுவையா ஒரு மாதிரி கச் கச்னு கடிக்க நல்லா இருக்கும் தான். ஆனா அதோட சேட்டை என்னன்னா, அது தன்னோட சப்பை சுவை, மணத்தையும் அந்த உணவுக்கும் கொடுத்திடும்,
“எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி” மாதிரி. அதனால ரொம்ப traditional பண்டங்கள்ல நான் போட மாட்டேன். இந்த சப்பாத்தி பூரிகளுக்கு இஷ்டம் போல மசாலா செய்யும்போதெல்லாம் போடலாம்.
எந்த உணவுப் பண்டமா இருந்தாலும்,*குழம்பு, கூட்டு, மசாலா இப்படி…) ஒரு சின்ன கைப்பிடி chunks கொதிக்கிர வெந்நீர்ல உப்புப் போட்டு ஊறினதும், நல்லா அலசி, உணவுல சமைக்கும்போது நேரடியா போட்டுடுங்க. அவ்ளோதான் உங்க வேலை முடிஞ்சது. எதுல போடலாம், எதுல தவிர்க்கலாம்னு அப்புறம் நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க. All the best!
சனிக்கிழமை, ஆகஸ்ட் 18, 2007 at 6:40 பிற்பகல்
thank you. innikku uppuchar . kondaikadalai illa ,so, kanja pattani potten. pravayilllai.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 18, 2007 at 7:48 பிற்பகல்
@ஜெயஸ்ரீ,
எனக்குக் கண்ணுல கண்ணீர் வருது.
@premalatha are my cookery queens
நீங்க உருப்பட்டாப்லதான்! என்னப் பத்தி அதிகம் தெரியாது போலிருக்கு. Best of luck with your cooking!.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 18, 2007 at 9:29 பிற்பகல்
premalatha are my cookery queens//
))))))))))))))
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 19, 2007 at 3:24 பிற்பகல்
உஷா, உங்களுக்குப் பொறாமை.
சீதா, கொண்டைக்கடலை கிடைக்கல ஆனா சின்ன வெங்காயம் கிடைச்சுதா? Any way, good luck with your cooking. You need it.
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 19, 2007 at 4:03 பிற்பகல்
///உஷா, உங்களுக்குப் பொறாமை. ///
உஷா வெட்டி ஒட்றதுலயும், சிரிக்கறதுலயும் என்ன கஞ்சத்தனம்?
) முழு வாக்கியத்தையும் ஒட்டிப் போட்டே சிரிச்சிருக்கலாம். இதை வன்மையா கண்டிக்கறேன்னு தான் சீதாவுக்கு சொல்ல வந்தேன். சரி, பிரேமலதா பேரயும் கோத்துவிட்டிருக்காங்களேன்னு சும்மா இருந்துட்டேன்.
))
பிரேமலதா, வெங்காயம் உரிக்கத்தான் சுலபமா வழி சொல்லியிருக்கேனே. அப்புறம் ஏன் கண்ணுல கண்ணீர்?
சீதா, புளியோட சேர்ந்து சுவை கொடுக்கறது மொச்சை, கொண்டைக் கடலை(வெள்ளை கொண்டைக் கடலை இல்லை, ப்ரௌன் தோல்) மாதிரி பயறுகள் தான். அதுலயும் இந்தக் குழம்பு ஒரு 5 மணி நேரம் கழிச்சு ஊறி, பயறு ரொம்பவே நல்லா இருந்தது. பட்டாணி, புளி சேர்க்காத வகைகளுக்குத் தான் சுவை சேர்க்கும். ஆனா உங்க முயற்சியை பாராட்டியே ஆகணும். அடுத்த தடவை கிடைச்சா இது ரெண்டுல ஒன்னைப் போட்டு செஞ்சு பாருங்க. உங்களுக்கு ஏதாவது ஐடியா தோணினா எங்களுக்கும் சொல்லுங்க.
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 19, 2007 at 6:09 பிற்பகல்
ஜெ, அதீதமாய் சிரிப்பு பொங்கிவந்ததால், எக்கசக்க சிரிப்பான் போட்டுட்டு ஓடிட்டேன். பிரேமின்
பிரேம்ஸ் லிங்க் ப்ளீஸ், சீதாவுக்கு மட்டுமல்ல,
மிளகு குழம்பு ஞாபகத்துக்கு வந்துவிட்டது
நானும் இன்னும் ஒரு தடவை படிக்கத்தான்.
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 19, 2007 at 11:51 பிற்பகல்
1. மிளகுக் குழம்பு
ஏன் கஞ்சத்தனம்,
2. ஆப்பிள் சாதத்தையும் சேர்த்தே படிங்க.
திங்கட் கிழமை, ஆகஸ்ட் 20, 2007 at 5:40 மு.பகல்
ennoda repertoire romba kammi.unga blog ellam parththuthaan samaikkiren.romba naal thaniyaave irundhuttadhale samaiyal paththi kavalaipadavillai. ippo thevainnu vandhdhale idhelam kathtukiren. but, i must say vendhayakuzhambu was good.it was too cold to go to the supermarket , so didnot have kadalai.chinna vengayam ,frozen packet irundhadhu.
வியாழன், ஆகஸ்ட் 23, 2007 at 12:59 பிற்பகல்
பச்சை மிளகாயைக் கீறி சின்ன வெங்காயத்தோடு புளித் தண்ணீரில் சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும்.
இதைப் பார்த்ததும் எனக்கு பச்சைப்புளி ரசம் ஞாபகம் வந்தது.
புளி – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 4, 5
சின்ன வெங்காயம் – 5, 6
மஞ்சள் தூள்
கொத்துமல்லி
உப்பு – தேவையான அளவு
ரசப்பொடி:
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 2 தேக்கரண்டி
பெருங்காயம் – உங்க தேவைக்கேற்ப.
அம்மி (அ) கொட்லா? வில் அரைக்கவும்.
பச்சை மிளகாயையும் சின்ன வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் ரசப்பொடியை புளித் தண்ணீரில் (2 கப் / 400 மிலி) சேர்த்து நன்கு நொறுங்கப் பிசையவும். கொத்துமல்லியை கிள்ளிப் போட்டால் ரசம் தயார்! நோ தாளித்தல்.
நன்கு பிசைந்த சுடு சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ரசத்தை விட்டுப் பிசைந்து semi-solid கன்சிஸ்டன்சி வந்தபின் சாப்பிட வேண்டும்.
வியாழன், ஆகஸ்ட் 23, 2007 at 1:46 பிற்பகல்
மஞ்சள் தூள் கிடையாது. Important: No heating/boiling also for the பச்சைப்புளி ரசம்.
திங்கட் கிழமை, ஆகஸ்ட் 27, 2007 at 11:51 மு.பகல்
Visitor, படிக்க நல்லா இருக்கு. கத்திரிக்காய் கொத்சு செய்வோம் நாங்க பச்சைப் புளில. இதுவும் செஞ்சு பார்க்கறேன். நன்றி.
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2007 at 12:17 மு.பகல்
I am planning to use your recipes for all Naivedyams.
Enna thidir Enu vengayam ella add panna cholrel (uppuchar item iL)?
Can I use vellarikai instead?
Thanks though for the recipe so far.
Krishna
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2007 at 8:44 மு.பகல்
krishna, Thanks.
உப்புச்சார்ல வெங்காயம் நான் சேர்க்கச் சொல்லலை. அதோட ரெசிபியே அப்படித்தான் பிரேமலதா சொல்லியிருக்காங்க. நல்லாவும் இருந்தது.
வெங்காயத்துக்குப் பதில் வெள்ளரிக்காயா??!!
சும்மா வெ’னாவுக்கு வெ’னான்னு எடுத்துப்பீங்களா? அப்ப வெ’ண்டைக்காய் கூட யூஸ் பண்ணலாமே : )
கிட்டத்தட்ட 1999ல ‘என் சுவாசக் காற்றே’ங்கற படத்துல கூட ஒரு பாட்டு.. (அரவிந்த்சாமியும் இஷா கோபிகரும் டாக்.. டாக்னு நல்ல ரிதமோட காதல் நயகரா பாட்டுக்கு ஒரு அழகான நடனம் ஆடுவாங்களே ஒருவரை ஒருவர் தொடாம, அந்த நடனத்துக்கு என்ன பேர்? வாவ்! அற்புதமான பாடல்கள், ஜோடி!)
“உன்மேல் உருவான ஆசைகள் என் அன்பே..
அந்த வெங்காய விலை போல இறங்காதது!”
அப்படீன்னு பாட்டெல்லாம் எழுதற அளவுக்கு வெங்காயம் கைல பிடிக்க முடியாத விலை வித்தது. அப்ப ஒரு விசேஷத்துல ஒரு சமையல்காரர் சொன்ன குறிப்பு, வெங்காயத்துக்கு சமமான மாற்று முட்டைகோஸ். வெங்காயம் சேர்க்கமுடியாத சமயங்கள்ல கோஸை மெல்லியதா, நீளநீளமா நறுக்கி நான் உபயோகிச்சிருக்கேன், சரியா இருக்கும்.
ஆனா சின்ன வெங்காயத்துக்கு பெரிய வெங்காயமே சரியான மாற்று கிடையாதுங்கறதும் என் கருத்து தான்!
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 31, 2007 at 11:21 பிற்பகல்
ஐயோ,
தெரியாமல் வெள்ளரிகாய் சொல்லிட்டேன். அதுகு இப்படியா?
மிகவும் மன்னிக்கவும்.
ரசித்தென் உங்க வாழை பழத்தில் ஊசி பதிலை.
கோப படமாலிருந்தால் ஒர் வின்ணப்பம்:
உங்க சமையலில் கொஞ்ஜம் கடுகை குறைக்கலாம்.
மத்தபடி:
more of Divya Desam recipes please. So far Azhakar and SriRangam only I saw. — Thanks. Krishna
புதன் கிழமை, செப்டம்பர் 5, 2007 at 2:41 பிற்பகல்
krishna,
வாழைப்பழத்துல ஊசி எல்லாம் இல்லை. லைட்டா தான் சொன்னேன்.
//கோப படமாலிருந்தால் ஒர் வின்ணப்பம்://
எனக்கு கோபம் வந்த மாதிரி நடிக்கத் தான் முடியும். அவ்ளோ சீக்கிரம் எல்லாம் வராது.
//உங்க சமையலில் கொஞ்ஜம் கடுகை குறைக்கலாம்.//
உன் சமையல்ல கொஞ்சம் உப்பைக் குறை, உனக்கு வர ரோசம் தாங்கமுடியாததா இருக்குன்னு தான் எல்லாரும் சொல்வாங்க. நீங்க என்ன புதுசா கடுகைச் சொல்றீங்க? கடுகு நல்லதில்லையா உடல்நலத்துக்கு, ஏதாவது பிரத்யேகக் காரணம் இருக்கா? இருந்தா சொல்லுங்களேன்.
தமிழ்ல புதுசா தட்டறீங்களா? ரொம்ப அழகா இருக்கு மழலை மாதிரி.
வியாழன், செப்டம்பர் 6, 2007 at 9:47 பிற்பகல்
Thanks a lot for the “attakAsamAnA” recipes for sRI Jayanthi. Eagerly waiting for Kozhukattai recipe as well.
Kadukai kuraika sonnathu – unga reply mail for uppu charu, Ennai (not oil) poRichitinga. oRe poriyara suthaam dhan! ethuku unGa samayalarayil ivaluvu kuduku enru appady ezhuthinen. Athanalathan.
Engalukum kAalam (not Abdul Kalaam) varuum nalla Tamilil type adika. Athuvaraikum kettukarela.
regards,
Krishna
Later oRe utharal enda ipadi
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007 at 10:10 மு.பகல்
Krishna, பின்னூட்டத்துல கூட ரொம்ப சம்பிரதாயமா இருந்துடக் கூடாதேன்னு தான், உரைநடைத் தமிழ்ல இல்லாம பேச்சுத் தமிழ்ல பதில் சொல்றேன். என்ன, கொஞ்சம் தேவைக்கதிகமா பேசுவேன், அதுக்காக கடுகு பொரியற மாதிரின்னு சொல்வீங்களா? (இப்படிச் சொல்றது நீங்க முதல் ஆள் இல்லைன்னு வைங்க.) நான் என்னவோ சாதாரணமாத் தான் பேசறேன். ஆனா இதை எல்லார்கிட்டயும் வேற சொல்லிகிட்டே இருக்கவேண்டி இருக்கு. என் தமிழுக்கு அவ்ளோ சிறப்பு.
//Engalukum kAalam (not Abdul Kalaam) varuum nalla Tamilil type adika.//
சுமாரான தமிழா இருந்தாலும் பரவாயில்லை, தமிழ்லயே அடிங்க.
சனிக்கிழமை, செப்டம்பர் 8, 2007 at 3:38 மு.பகல்
The highlight or uniqueness of your portal is this தினசரி paychu tamil பாணி தான். அதை மட்டும் மாத்திக வேனாம். கூட்டதுக்கு வரவஙக இப்படி என்னை போல் கல்லு தான் போடுவஙக without any positive contribution.
Please continue in your characterestic style.
Appathan thalikara osai kekkum