சின்ன வயதில் திரைப்படங்களுக்குப் போயிருக்கிறேன். கதை காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால் படம் முடிந்ததும் கடைசியில் கருப்பு வெள்ளையில் ஒரு கொடி சட்டெனெ திரையில் விழும். எல்லோரும், எழுந்து நிற்க ‘ஜன கன மண’ பாடுவார்கள். எப்போது இந்தப் பழக்கம் நின்றது என்றோ, அதைவிட முக்கியமாக ஏன் நின்றது என்றும் எனக்குச் சரியாக சொல்லத் தெரியவில்லை.
[ஹாங்காங்கில் இந்தியக் குழந்தைகளை வாரம் ஒருமுறை இணைத்து சில உருப்படியான விஷயங்களைச் செய்துகொண்டிருந்தோம். (தெரிந்த குழந்தைகள் தெரியாத குழந்தைகளுக்கு செஸ் போன்றவற்றின் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுப்பது, படித்த புத்தகங்களை ஒருவருக்கொருவர் மாற்றிப் படிப்பது, படித்துக் காட்டுவது, போட்டிகள்... இப்படி. நான் போகத் தொடங்கியபோது, நிகழ்ச்சி முடிந்ததும் தேசியகீதம் பாடச் சொல்லலாம் என்று சொன்னேன். "But why?" என்ற கேள்வி வந்தது. அந்த டோக்கனை வைத்துத் தானே குழந்தைகளை சந்திக்க வைக்கிறோம். Why not? எதிர்பார்த்தபடியே இந்தியாவிலிருந்து இடையில் போயிருந்த குழந்தைகள் தவிர பல குழந்தைகளுக்கு அந்தப் பாடலே தெரியவில்லை. இதெல்லாம் பெற்றோரைப் பொருத்த வரை பள்ளியில் சொல்லித் தரவேண்டியது என்ற எண்ணம் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. இத்தனைக்கும் இவர்களது பள்ளி அந்தந்த நாட்டுக் கொடி, கீதம், கலாசாரம், உணவு எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும், தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற பள்ளி.]
வலைப்பதிவர் பட்டறையில் ஆரம்பத்திலோ முடிவிலோ தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார்களா என்று ஒரு நண்பரை சும்மாத் தான் கேட்டேன். “நான் கவனிக்கவில்லை. நீயெல்லாம் வளரவே மாட்டியா?” என்று திருப்பிக் கேட்டார்.

இந்த ஞாயிறன்று adlabs திரையரங்கில் ஜாக்கி சான் படம் சென்றிருந்தோம். விளம்பரங்கள் டிரெயிலர்கள் எல்லாம் முடிந்து அதிரடிக்குத் தயாராக வசதியாக உட்கார்ந்தால், மெயின் படம் ஆரம்பிப்பதற்கு முன் “Please stand up for National Anthem” என்று ஒரு ஸ்லைடு. சுதாரித்து முடிப்பதற்குள் எல்லாரும் எழுந்து தேசிய கீதம். இந்த mall சமீபத்தில் தான் திறந்திருக்கிறார்கள். ஆனால் மும்பையின் எல்லா அரங்குகளிலும் இந்த வழக்கம் உண்டா சரியாகத் தெரியவில்லை. அல்லது நான் தாமதமாகப் போய் கவனிக்கவில்லை. (இன்று வேறு ஒரு அரங்கிற்குப் போகிறேன். கவனிக்க வேண்டும்.)
திரையரங்குகளுக்குத் தேவையா என்று சொல்லத் தெரியவில்லை. நம் மாநிலத்தில் மட்டும் தான் இந்த வழக்கம் இல்லையா? அல்லது மும்பையில் மட்டும் தான் இருக்கிறதா?
புதன் கிழமை, ஆகஸ்ட் 15, 2007 at 8:57 மு.பகல்
திரைப்படங்களின் முடிவில் ஜனகனமன ஒலிபரப்பும்போது, மக்கள் நிற்காமல் வீட்டிற்குச் செல்வதிலேயே குறியாக இருந்தனர். இது தேசிய கீதத்தை அவமதிப்பதுபோல இருந்ததால், இனி இதுபோன்ற தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிபரப்பத் தேவையில்லை என அரசு சொல்லிவிட்டது – என்று படித்திருக்கிறேன்.
புதன் கிழமை, ஆகஸ்ட் 15, 2007 at 12:56 பிற்பகல்
இங்கேயும் நிறையப்பேருக்கு நியூஸி தேசியகீதம் தெரியலைன்னு போனவாரம்தான்
டிவியில் சொல்லிக் கொடுத்தாங்க
படம் முடிவில் போடாம ஆரம்பத்தில் போட்டால் எல்லாரும் வேற வழி இல்லாமல்
பாடுவாங்க.இல்லே?
புதன் கிழமை, ஆகஸ்ட் 15, 2007 at 8:23 பிற்பகல்
i have seen this in karur thinappa motion picture theathre. rather than national anthem “neeradhum kadala….” song played.
i strongly feel nationalism, patriotism should be embedded in schools, family rather in amusement/entertainment areas. Objective of that place is not solved.
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 17, 2007 at 9:41 மு.பகல்
ப்ரசன்னா, Adiya,
நேற்று மாதுங்காவில் ஒரு அரங்கிற்குச் சென்றிருந்தேன். படம் ஆரம்பிப்பதற்கு முன் கணவரையும் பெண்ணையும் உள்ளே போகச் சொல்லிவிட்டு, ஒரு காபி சாப்பிட்டுவிட்டு நுழையலாம் என்று நினைத்தேன். அப்போது தான் ஒரு அரங்கச் சிப்பந்தி கதவின் கைப்பிடியில் ஒரு போர்டை மாட்டி விட்டுப் போனார். காபி குடித்துக் கொண்டே ஒரு நோட்டம்- “குடித்துவிட்டு கலாட்டா செய்பவர்கள் (உன்னைத் தான் சொல்றாங்களோ – ரங்கமணி,), பெண்களை கிண்டல் செய்வது(இது உன்னைத் தான் – நான்), விசிலடிப்பது (இது உன்னைத்தான்மா – பெண்), ஆர்ப்பாட்டம் செய்வது போன்ற காரணங்களுக்காக வெளியேற்றப்படுவர்” என்பது போல் தமிழில் ஒரு வாக்கியம். ஏன் இப்பொழுதுதான் மாட்டுகிறார்கள் என்றால் மற்ற நேரக் காட்சிகள் எல்லாம் வேறு வேறு மொழி.. நம் மொழி மக்கள் தான் அப்படியா அல்லது அவைகளுக்கும் அந்தந்த மொழியில் மாட்டினார்களா என்று தெரியாது.
உள்ளே நுழைந்து என் மக்கள் எங்கே என்று தேடலாம் என்றால் முடியவில்லை. எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். ஜன கன மன ஓடிக் கொண்டிருந்தது. ஒரு கைக்குழந்தையின் சிணுங்கல் தவிர ஒரு சின்ன சத்தம், அசைவு கூட இல்லை. அப்புறம் படம் ஆரம்பித்தபின் விசிலும், பேப்பர் குப்பையும், ஆரவாரமும் காட்சிக்குக் காட்சி பட்டை கிளப்பியது கூட்டம் என்பது வேறு விஷயம்.
இப்போது மக்கள் அதிகம் மாறியிருக்கிறார்கள், பொது நாகரிகம் தெரிந்திருக்கிறார்கள் (அட்லீஸ்ட் இந்த மாதிரி விஷயங்களில்), சினிமாவுக்கும் தேசிய கீதத்திற்கும் வித்யாசம் தெரிந்திருக்கிறது என்பது என் எண்ணம்.
Adiya, திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள் போன்றவை தான் எந்த ஜாதி, மத பேதங்களும் இல்லாமல் மக்கள் கூடுமிடம். பள்ளி தவிர்த்து இந்த மாதிரி இடங்களிலும் (கட்டாயப் படுத்தத் தேவையில்லை.) அரங்க நிர்வாகிகள் விரும்பினால் வைத்துக் கொள்ளலாம்/ வைக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.
துளசி சொல்வது போல், மும்பையில் செய்வது போல், கிளம்பும்போது போடாமல், படம் ஆரம்பிக்கும் முன் செய்யலாம்.
இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள்(!), படத்தில் வரும் எத்தனையோ சம்மதமில்லாத காட்சிகளை சகித்துக் கொள்வது போல் இதையும் சகித்துக் கொள்ளலாம், அல்லது கதவுக்கு வெளியே நின்றுவிட்டு, கீதம் முடிந்து, படம் துவங்கும்போது உள்ளே வரலாம்.
திங்கட் கிழமை, ஆகஸ்ட் 20, 2007 at 9:50 பிற்பகல்
I agree with you. I am able to appreciate your point.
செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 21, 2007 at 2:03 பிற்பகல்
உண்மைதான்,
மும்பையில் பெரும்பான்மை திரையரங்குகளில் படம் ஆரம்பிப்பதற்கு முன் தேசியகீதம் போடுவார்கள்.
அந்த தமிழ் அறிவிப்பு, மலையாளம், தெலுங்குப் படங்களுக்கும் அந்தந்த மொழிகளில் போடுவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன்
)
ஹிந்தி எனக்கு அந்தளவுக்கு வாசிக்கத் தெரியாது
செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 21, 2007 at 9:25 பிற்பகல்
Ram, Abul Thanks.