தேவையான பொருள்கள்:
முழு உளுந்து – 2 கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்.
செய்முறை:
- மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
- உளுந்தைக் நீரில் கழுவி, 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டும் ஊறவைக்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல், சாதாரணமாக வடைக்கு அரைப்பதை விடவே அதிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அதில் உடைத்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்துப் பிசையவும்..
- வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, எண்ணை தடவிய இலை அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரில் தட்டையாகத் தட்டி, நடுவில் துளை இட்டு, காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயில் நன்கு பொரித்தெடுக்கவும்.
* அரைத்து அதிக நேரம் வைத்திருந்தால் நிறம் மாறிவிடும். உடனே செய்துவிட வேண்டும்.
* சாப்பிட தட்டை மாதிரி கடினமாக இருக்கும். பலநாள்களுக்குக் கெடாது.
* துளை வழியாக நூலில் மாலையாகக் கட்டி அனுமாருக்குச் சாற்றலாம்.
வியாழன், ஆகஸ்ட் 9, 2007 at 6:30 பிற்பகல்
//However you may pl tell the recipe ‘cause I like the “spices” you add when writing the recipe (more than the recipe) !! (hope u are recovered from exam fever//
Thanks a bunch, but your “spices” were missing.still exam fever I guess?
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 10, 2007 at 1:42 பிற்பகல்
oh wow! thank you so much Jaya shri! I’m gonna try all these types. Thank you so much.-Nila
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 10, 2007 at 4:11 பிற்பகல்
Thiyagarajan, பரிட்சை முடிஞ்சாலும் எனக்கு ஜுரம் இருக்கு.
எழுதற மூடெல்லாம் எனக்கு எப்பயாவது தான் வரும். Thanks.
நிலா, இது எதுவும் நீங்க சொன்ன வடையா இருக்காதுன்னு நினைக்கிறேன். திருவானைக்காவில் வடை அடுத்த தடவை போகும்போது தான் கேட்டுப் போடணும். வடைகள்ல திருப்பதி வடை தான் விசேஷம்.
புதன் கிழமை, ஆகஸ்ட் 15, 2007 at 8:37 மு.பகல்
Hi,
can you please let me know how much is 1 cup ulutham paruppu in grams?
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 17, 2007 at 8:24 மு.பகல்
Bhavya, சில சமயம் பருப்பைப் பொருத்து மாறுபடலாம். அதனால கப் அளவு சொல்றது சுலபமா இருக்கு. என்னோட பருப்பு கிட்டத் தட்ட 200 கிராம் இருக்கு. அதாவது ஒரு கிலோ பருப்புல 5 கப் இருக்கு.