நன்றி: ச.திருமலை
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
காய்கறி.
தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்.
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5, 6
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
அரிசி – 1 டீஸ்பூன்.

செய்முறை:
- புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயம், மிளகு, எள், அரிசி இவைகளை வாணலியில் எண்ணெய் விடாமல் நன்றாக ஆனால் கருகாமல் வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- கத்தரிக்காய், வெண்டைக்காய் அல்லது பாகற்காய் மாதிரி ஏதாவது ஒரு காய் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாகற்காயாக இருந்தால் நன்றாக எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து, புளி நீரைச் சேர்க்கவும்.
- காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பொடியையைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
* இதில் மோர் சேர்த்தால் அது மோர் உப்புச்சார்.
புதன் கிழமை, ஆகஸ்ட் 8, 2007 at 6:14 பிற்பகல்
antha karuppu aadu paavakkai ingke eppadi vanthathu?
புதன் கிழமை, ஆகஸ்ட் 8, 2007 at 7:12 பிற்பகல்
திருமலை, கலரைப் பாத்து நான் பயந்துட்டேன், காரம் அதிகமோன்னு. சூப்பர். இதையும் பிரேமலதா சொல்லியிருக்கற வெந்தயக் குழம்புல இருக்கற தேங்காயும் சேர்த்து திருநெல்வேலிக் குழம்புன்னு ஒன்னு அடிக்கடி செய்வேன். சொல்றேன்.
ப்ரசன்னா, நீங்க எழுதியிருக்கற பின்நவீனத்துவக் கவிதை ஒன்னும் புரியலையே. 8->
புதன் கிழமை, ஆகஸ்ட் 8, 2007 at 9:49 பிற்பகல்
ப்ரசன்னா,
கத்தரிக்காய், வெண்டைக்காய் அல்லது ***பாகற்காய்*** மாதிரி ஏதாவது ஒரு காய் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாகற்காயாக இருந்தால் நன்றாக எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
))
வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து, புளி நீரைச் சேர்க்கவும்.
***காய்***, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
புதன் கிழமை, ஆகஸ்ட் 8, 2007 at 9:59 பிற்பகல்
எச்சூஸ் மீ, இங்க என்ன நடக்குது?
புதன் கிழமை, ஆகஸ்ட் 8, 2007 at 10:59 பிற்பகல்
ஜெயஸ்ரீ நன்றி. நானும் உப்புச்சார் சாப்பிட்டு ஒரு பத்து வருடங்கள் இருக்கும். பிட்டலை பற்றி ஏற்கனவே எழுதிவிட்டீர்களா?
அன்புடன்
ச.திருமலை
வியாழன், ஆகஸ்ட் 9, 2007 at 8:39 மு.பகல்
இதே நாளில் பாகற்காய் கறி பற்றி எழுதியிருந்தீர்கள். பொதுவாகவே பொறியல் செய்யும்போது பயன்படுத்தும் காயை குழம்பிற்கும் போட்டுப் பயன்படுத்துவார்கள், அட்ஜஸ்ட் செய்யும் நோக்கத்தில். அப்படிச் செய்தால், குழம்பில் வரும் அந்தக் காய்தான் கருப்பு ஆடு!
பாலராஜன் அதற்குள் ஏகப்பட்ட நட்சத்திரங்களுடன் பின்னூட்டிவிட்டார்!
வியாழன், ஆகஸ்ட் 9, 2007 at 9:09 மு.பகல்
திருமலை இன்னும் பிட்லை எழுதலை. பத்து வருஷமா செய்யாமலே ஆனா அளவெல்லாம் சரியா எழுதியிருக்கீங்களே, உண்மையைச் சொல்லுங்க, என்னை மாதிரி அம்மா டைரி தானே?
ப்ரசன்னா, நேத்தி பயங்கரமா கசப்பு மட்டுமே சாப்பிடற மூடு. ரசமும் பாகற்காய்ல வெக்கலாமான்னு நினைச்சேன். அப்புறம் எனக்குப் பிடிச்ச ரசமே சாப்பிடாம இருந்திட்டேன்.
(((
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 10, 2007 at 12:20 மு.பகல்
விதம் விதமான வடை ரெசீப்பீக்களுக்கு நன்றி இந்த வாரம் ஏதாவது முயற்சி செய்து பார்க்கிறேன். ஊரில் இருந்து வந்து விட்டார்கள் என்றால் சப்பாத்தி தவிர வேறு எதையும் கண்ணில் காட்ட மாட்டார்கள். உங்கள் பதிவில் படங்களைப் பார்த்து சாப்பிட்ட மாதிரி திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்
)
அன்புடன்
ச.திருமலை
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 10, 2007 at 5:12 பிற்பகல்
//க நா சு ஒரு வாய் நல்ல காப்பி குடிப்பதற்காக பல கி மீ தூரம் நடந்து போவாராம் நல்ல ஹோட்டலைத் தேடி.//
ரொம்ப சரி. நான் ஸ்ரீரங்கத்துல இருக்கும் போதெல்லாம் எங்கப்பா என்னை காலைல நாலரை மணிக்கு எழுப்பி பஸ் ஸ்டாண்டு காந்தி சிலை(பெரியார் சிலைன்னும் வெச்சுக்கலாம்) கிட்ட இருக்கற ஒரு இடத்துக்கு காபி சாப்பிட அழைச்சுப் போவார். பிறந்தாகம் வந்தாக்கூட நாலரை மணிக் கூத்துன்னு எங்கம்மா திட்டுவாங்க.
BTW, குழம்பு ரொம்ப சுவையா இருந்தது. ‘வரவர சுமாரா(?) சமைக்க ஆரம்பிச்சுட்ட’ன்னு கோவிந்த் கமெண்ட். ரெசிபி நீங்க கொடுத்ததைச் சொன்னதும், ஜகால்டி.
வரவர எல்லாரும் சமைக்க ஆரம்பிச்சு குடும்பத்துல சண்டை ஏற்படுத்தறாங்களேன்னு புலம்பல்.
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 10, 2007 at 11:46 பிற்பகல்
ஜெயஸ்ரீ
எனக்கு இந்தக் குழம்பு அவ்வளவாக ருசிக்காததால் வீட்டில் எப்பொழுதாவதுதான் செய்வார்கள். அதனால் என் மனைவியிடம் ஒரு முறை ரிசீப்பீயைக் கேட்டு சரிபார்த்துக் கொண்டு அனுப்பினேன்.
உணவுகளைப் பற்றியோ ருசி ரசனையைப் பற்றியோ எழுதினால் ஒரு விதக் கவுரவக் குறைவு என்பதனாலோ என்னமோ பல எழுத்தாளர்கள் அந்த ரசனையைத் தொடுவதில்லை. தி ஜா ரா சங்கீதத்தைப் பற்றி எழுதியது போலவே காஃபியைப் பற்றியும் மிகுந்த ரசனையோடு எழுதியிருப்பார். கும்பகோணத்தில் சொம்பில் குடிக்கும் காஃபி பற்றி தனது மோகமுள்ளில். எவ்வித லஜ்ஜையும் இல்லாமல் சாப்பாட்டைப் பற்றி அற்புதமாக எழுதுபவர் லா ச ர. அதிலும் தனது பாற்கடலில் ரயிலில் பிரயாணம் செய்த பொழுது எதிர் சீட்டாரிடம் சாப்பிட்ட விதத்தையும், ஹோட்டல் வைத்திருக்கும் எதிர் வீட்டுக்காரர்கள் கொடுக்கு உணவுகள் பற்றியும் அவர் எழுதியவற்றைக் கட்டாயம் படிக்க வேண்டும். ஆதி காலத்தில் வந்த கமலாம்பாள் சரித்திரத்தில் அந்தக் காலத்து 5 நாள் திருமணத்தில் வரும் சாப்பாடு பற்றி குறிப்புகள் இருக்கும். கன்னட பைரப்பா தன் நாவல்களில் சாப்பாட்டுகளைப் பற்றி சளைக்காமல் எழுதுபவர். தற்பொழுதைய எழுத்தாளர்களில் சாப்பாட்டைப் பற்றி விலாவாரியாக எழுதுபவர் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடன் கதைகளில் வரும் உணவு வகைகளைத் தொகுத்தாலே அது ஒரு தனி ரெசிப்பீ புத்தகமாக அமையும், அவரும் அது போன்ற ஒரு புத்தகத்தை எழுதப் போவதாகக் குறிப்பிட்டிருந்தார். புத்தகம் வந்து விட்டதா என்பது தெரியவில்லை. நாஞ்சில் நாடனின் எழுத்துக்களில் அறுசுவை என்று தனியாக ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம்தான்.
ஆம், காப்பிக்காகவும் நல்ல உணவுக்காகவும் பல மைல் தூரம் நல்ல ரசிகர்கள் எப்பொழுதுமே தேடிச் சென்று கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் சுவையான சாப்பாடு அல்லது பதார்த்தங்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே பிரத்தியோகமாக இருக்கும். திருவனந்தபுரத்தில் நல்ல சாப்பாடு கிடைக்கும் இடம் ரயில்வே ஸ்டேஷன் காண்டீன் தான். அது போல நான் இருக்க நேர்ந்த பல ஊர்களிலும் தேடிச் சென்று சாப்பிடப் போன இடங்கள் பல உண்டு.
ஆனால் இப்பொழுதெல்லாம் நாம் ரசித்தது எதுவானாலும் அது இசையாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, உணவாக இருந்தாலும் சரி பொதுவில் எழுதவே தயக்கமாக இருக்கிறது. நமது ரசனைகள் ஜாதியோடு முடிச்சுப் போடப் பட்டு உடனடியாக வக்கிரம் பிடித்த விமர்சனங்களை கொண்டு வந்து விடுகின்றன. முன்பெல்லாம் மதுரையில் உள்ள ருசியான உணவகங்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன். இப்பொழுது அப்படிப் பட்ட விஷயங்களைப் பகிரவே தயக்கமாக உள்ளது. அதனால் ஒத்த ரசனையுள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்
அன்புடன்
ச.திருமலை
திங்கட் கிழமை, ஆகஸ்ட் 13, 2007 at 2:33 பிற்பகல்
//நமது ரசனைகள் ஜாதியோடு முடிச்சுப் போடப் பட்டு உடனடியாக வக்கிரம் பிடித்த விமர்சனங்களை கொண்டு வந்து விடுகின்றன.//
திருமலை, இது உண்மை. அந்த மாதிரி பின்னூட்டங்களை அநாகரிகமான முறைல சொல்லியிருந்தா நான் மட்டுறுத்திடுவேன். ஆனா அதைத் தாண்டியும் புரிஞ்சுக்கற நண்பர்களும் இணையத்துல இருக்கவே செய்றாங்க.
திங்கட் கிழமை, ஆகஸ்ட் 13, 2007 at 3:47 பிற்பகல்
I have different and opposite opinion, but not interested in saying it.
திங்கட் கிழமை, மார்ச் 23, 2009 at 6:30 பிற்பகல்
[...] http://top10samayal.wordpress.com/2009/02/12/bitter-guard-kuzhambu/ http://mykitchenpitch.wordpress.com/2007/08/08/uppuchchaar-1/ [...]