தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காயம்
தேங்காய்
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு.
செய்முறை:
- பருப்புகளை ஊறவைத்து காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
- மெலிதாகக் கீறிய தேங்காய்த் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும்.
- எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கலக்கவும்.
- வாணலியில் நன்றாக எண்ணை காய்ந்ததும் சிறு கரண்டியால் எடுத்துவிட்டு மிதமான தீயில் இருபக்கமும் சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.