பங்குனி உத்திர நாளில் பொதுவாக அக்கார அடிசில் அல்லது சர்க்கரைப் பொங்கல் தான் செய்வோம். ஸ்ரீரங்கத்தில் அநேகம் பேர் பெருமாள் தாயாரை சேர்த்தித் திருக்கோலத்தில் தரிசிக்கும் வரை எதுவும் சாப்பிடாமல், அதன்பின்னும் அன்று முழுவதும் இனிப்பான உணவு மட்டுமே உண்பார்கள்.
பங்குனி உத்திரத் திருநாள் குறித்து ஒரு பதிவு.
அர்ச்சனை செய்த கல்கண்டு அதிகமாகச் சேர்ந்துவிட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல், ஒருமுறை கொஞ்சம் தயங்கியே கல்கண்டு பாத் செய்துபார்த்து, பிடித்துப் போனதால் பொங்கல் செய்வதற்காகவே கல்கண்டு வாங்க ஆரம்பித்து விட்டேன். நிறைய திருமணங்களில் இந்தப் பொங்கலை இப்போது இரவு விருந்துக்குச் செய்கிறார்கள். சர்க்கரை, வெல்லத்தைவிட கல்கண்டு மிக வித்தியாசமான சுவையோடு கொஞ்சம் ராயலாக நன்றாக இருக்கும்.
தேவையான பொருள்கள்:
அரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
பால் – 1 கப்
கல்கண்டு – 2 கப்
நெய் – 1/2 கப்
கேசரிப் பவுடர்
முந்திரி
கிஸ்மிஸ்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்
குங்குமப் பூ.
செய்முறை:
- அரிசி, பருப்பைக் கழுவி, பாலும் தண்ணீரும் சேர்த்து 3 பங்கு இருப்பது போல் வைத்து, குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
- 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் கிஸ்மிஸ், முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலி அல்லது அடிகனமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீரோடு கல்கண்டையும் போட்டு, பாகு காய்ச்சவும். (முடிந்தவரை பெரிய சைஸ் கல்கண்டாக இருந்தால் உடைத்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் கரைவதற்குள் போரடிக்கும்.)
- ஏலப்பொடி கேசரிப் பவுடர் சேர்க்கவும்.
- பாகு லேசாக வந்தவுடன், பொங்கலை அழுத்தமாகக் கரண்டியால் ஓரளவு மசித்து, பாகில் சேர்க்கவும்.
- மீதி நெய்யையும் சேர்த்து, இறுகிச் சுருண்டு கெட்டியாக வரும்போது இறக்கவும்.
- நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ சேர்க்கவும்.
சூடாகச் சாப்பிட, சுவையாக இருக்கும்.
திங்கட் கிழமை, மே 14, 2007 at 1:08 பிற்பகல்
i find ur recipes to be good but cant read ur language……….pls change to english
வியாழன், மே 24, 2007 at 9:55 மு.பகல்
Shree, thanks for all your comments. I was wondering as to how you browsed these pages if you couldnt read Tamil. Well.. might be thro’ Adiya’s blog..
I am also thinking of translating recipes into English, though not in short future. Thanks for your visit and suggestion.
Adiya: Thanks. Hope you wont mind some small corrections…
//Akkaravadisal – “Finest form of Porridge” specially invented by Srivalliputhur renganayaki to srirangam renganathar.//
It is Srivilliputhur Andal.
Akkaram – sugar.
adisil – cooked rice.
//Thirukannamudhu – First time I seeing a grt8 respect, surname, potion or vita name amalgamated to a dish.. “Thiru” + “ Kanna “ + “Amudhu”//
It is “Thiru” + “ Kannal“ + “Amudhu”. kannal means karumbu or kaRkaNdu. Here it means sweet, I think. Amudhu – cooked rice offered to God.
//if u happen to visit trichy plz drop by to srirangam for crisp Akkaravadisal
.. esp u should have it after that night pooja ( after 9.00pm )..//
The item you get after 9.00 pm pooja in Srirangam temple is ‘aravanai’(அரவணை). It is not payasam, it is not akkaravadisal, it is not pongal even. It is slightly different from all the above- a special dish of srirangam temple. I will update the recipe after my next visit to srirangam.
Again, thanks for that post!
திங்கட் கிழமை, ஜூன் 4, 2007 at 5:21 பிற்பகல்
I want to know what is Aravanai’s recipe!
புதன் கிழமை, ஜூன் 6, 2007 at 10:39 மு.பகல்
C.Ravindran,
//I will update the recipe after my next visit to srirangam.//
Please send to-and-fro ticket for Srirangam. Thanks.
வியாழன், ஜூன் 28, 2007 at 10:19 பிற்பகல்
C.Ravindran,
அரவணை இங்கே.
திங்கட் கிழமை, ஆகஸ்ட் 27, 2007 at 3:03 பிற்பகல்
Namaskaaram jayasree.
I know tamizh very well but some how dislike the way it is typed in computers. I also belong to Srirangam. Even now so many relatives live there.
Akkaravadesil meaning has been explained beautifully. Nice knowing you.
செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 28, 2007 at 9:01 பிற்பகல்
Namaskaaram lathanarasimhan.
//I know tamizh very well but some how dislike the way it is typed in computers.//
இது ஏன்னு புரியலையே. உங்களுக்கு என்ன பிரச்சினை?
செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 28, 2007 at 9:43 பிற்பகல்
// lathanarasimhan Says:
I know tamizh very well but some how dislike the way it is typed in computers.//
I feel this is not the place for you to make such a sweeping comment. If you have your own PETER blog, please blow your trumpet there. I request Jsri to moderate such comments before publishing.
செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 28, 2007 at 10:09 பிற்பகல்
பாகீ சார்,
முதல் தடவை படிக்கும்போது எனக்கும் அப்படித்தான் திடுக்’குனு இருந்தது. ஆனாலும் எனக்கு இங்லீஷ் வேற அவ்வளவா தெரியாதா, அதான் கணினில தமிழ் வேற யாராவது தட்டறதே அவங்களுக்கு dislikeஆ, அல்லது அவங்களுக்கு மட்டும் தமிழ்ல தட்டறது dislikeஆன்னு புரியாததால அப்படியே விட்டிருக்கேன்.
இதுக்கெல்லாம் மட்டுறுத்தினா, கருத்துச் சுதந்திரக் காவலர்கள் காவடி எடுக்க மாட்டாங்களா?
எனக்கு மட்டும் தான் உரைக்குதோன்னு நினைச்சுட்டேன். உங்க பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 28, 2007 at 10:21 பிற்பகல்
பாலராஜன்கீதா & ஜெயஸ்ரீ,
எனக்கு அப்படித்தோணலை.
தமிழ்ல தட்டச்சுறதுன்றதே கடியா தோணுதுன்னு சொல்றார். பழக்கமின்மை ஒருகாரணம். language and spelling processing in the brainல ஒரு குழப்பநிலை உருவாகிறதால தமிழ்ல அடிக்கும்போது ஆங்கிலமும், ஆங்கிலத்தில் அடிக்கும்போது தமிழும்னு குழப்பம் வரும்போது நமது எண்ணவோட்டம் தடைப்படும்போது ஒரு disliking வருவது நார்மல். அடுத்து sentence structuringல பிரச்சினை, மொழியோட்டத்தில, எழுத்து நடையில-ன்னு இன்னும் பலப் பல பிரச்சினைகள் வரும்போது எதுக்குடா இந்த வம்புன்னு ஒரு சோர்வு வரும். இதுவே dislikingஆ மாறும். அதைத்தான் சொல்றார்னு நினைக்கிறேன்.
ஜெயஸ்ரீ, என்னாது இது சாரு மோரெல்லாம்.
செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 28, 2007 at 10:41 பிற்பகல்
பிரேமலதா,
அதை அவங்க சொல்லட்டும். அப்ப நானே விளக்கமா பதில் சொல்வேன். சோர்வெல்லாம் இல்லைங்கறதுக்கு நானே உதாரணம்.
//ஜெயஸ்ரீ, என்னாது இது சாரு மோரெல்லாம்.//
அது வந்து…
ஆனாலும் அநியாயத்துக்கு ஒவ்வொரு தடவையும் பாலராஜன்கீதா-ன்னு தட்ட கஷ்டமா இருக்கா, அதான் சுருக்கமா பாகீ. ஆனா புதுசா படிக்கறவங்க பாகீரதியோட சுருக்கம்னு நினைச்சுடக் கூடாதில்ல(இப்பவே அடிக்கடி அவரை பெண்ணுனு நினைக்கற குழப்பம் இணையத்துல நடக்குது.) அதுக்காக ‘சார்’. அதனால ‘சார்’ ஒரு gender reference க்காக.
மத்தபடி நானும் சாராவது மோராவது தான்.
எனக்கு பேசும்போது அதீத கோபம் வந்தாத் தான் யாரையாவது சார் போட்டுப் பேசுவேன். (நல்லா கேட்டுக்கங்கப்பா, நான் சார் போட்டு உங்களைப் பேசினேன்னா, ரொம்பக் கோபமா இருக்கேன்னு அர்த்தம்.) பாகீ சார், இது உங்களுக்கில்லை.
புதன் கிழமை, ஆகஸ்ட் 29, 2007 at 11:02 மு.பகல்
//சோர்வெல்லாம் இல்லைங்கறதுக்கு நானே உதாரணம்.//
எல்லோருக்கும் ஒரே அளவு தட்டச்சுத்திறன் இருக்கும்னு சொல்ல முடியாது. இந்த பின்னூட்டத்தை டைப் அடிப்பதற்கு எனக்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஆயிற்று. சோர்வாகத்தான் இருக்கிறது – ஆனாலும் முடித்து தமிழில் பார்க்கும்போது பெருமிதமாகவும், நிறைவாகவும் இருக்கிறது.
புதன் கிழமை, ஆகஸ்ட் 29, 2007 at 1:42 பிற்பகல்
I used to hate typing in Tamil (just ‘typing’, not the language) when I first started. Reasons are several. To explain one:
நான் ஏற்கனவே எழுதின இந்த (கீழே கொடுத்திருக்கேன்) வாக்கியத்தை எடுத்துக்கங்க:
//தமிழ்ல அடிக்கும்போது ஆங்கிலமும், ஆங்கிலத்தில் அடிக்கும்போது தமிழும்னு குழப்பம் வரும்போது நமது எண்ணவோட்டம் தடைப்படும்போது ஒரு disliking வருவது நார்மல்.//
இதுல
1.dislikingகிற ஆங்கில வார்த்தையை ஆங்கிலத்திலேயே எழுதிட்டேன்.
2. நார்மல்-ங்கிற ஆங்கில வார்த்தையை தமிழ்ல எழுதியிருக்கிறேன்.
‘நார்மல்’னு எண்ணவோட்டத்தில வரும்போது அதை தமிழாக்கம் செய்யணும்னா ‘சகஜம்’னு மண்டையில பல்ப் எரியணும். இல்லைன்னா, அடச்சே, அப்படியே தமிழ்ல எழுதுவோம்னு ஒரு சோம்பேறித்தனம் வரும்போது (எல்லோரும் ஜெயஸ்ரீ மாதிரி ‘சோம்பேறித்தனம்’-ங்கிற வார்த்தையை அகராதில நீக்கிட்டு வாழறவங்க கிடையாது, பிரேம்லதா மாதிரி சோம்பேறித்தனம்தான் வாழ்க்கையின் இலக்கணம்னு சில சொகுசுவாசிகளும் இருக்காங்க
. ), anyway coming to the point, ஒரு சோம்பேறித்தனம் வரும்போது நார்மல்-ங்கிற வார்த்தைக்கு இதுவரை
n o r m a l ங்கிற எழுத்துக்களை மட்டும் தேடிப்போய்ப் பழகிப்போன விரல்கள் னொர்மல்- னு தட்டச்சும். என்னைமாதிரி over confidence இருக்கிற சில மெத்தனவாதிகள் திருப்பி படிச்சுக்கூடப் பார்க்காமல் publish பண்ணிருவாங்க. பின்னாடி தெரியவரும்போது எம்பராஸிங்கா இருக்கும். ஒருவாட்டி, ரெண்டுவாட்டின்னா சாக்கு போக்கு சொல்லலாம். நிறயவாட்டி ஆகும்போது பிரேமலதான்னா spelling mistakeகு அப்படின்னு முத்திரை குத்தப் படும்போது, என்னாவாம் இப்போ-ன்னு பதிலுக்கு சண்டைக்குப் போனாலும், உள்ளுக்குள்ல தன்மேலேயே ஒரு எரிச்சல் கோபம் வரும். escapism route தேடும்போது, ஈஸியான வாழ்வான ஆங்கில தட்டச்சுக்கு மனசு தாவும்.
As I have mentioned above, there are seveal reasons. I have explained only one of them. Forgetting to toggle back and forth between English and Tamil key is another big one.
அஷ்டே.
all from my experience and my experience only. அஷ்டே.
Having said the above, I just browsed and noted that the commenter in question about whom we are discussing about is
a) a female (I have mistakenly addressed her as a he),
b) her reasons may be completely different from mine, and has every possiblity to be “hate language” too, but giving the benefit of doubt and from her words it seems it is to do with ‘typing’, not language.
c) I am in total agreement that it is your blog and you reserve the right to tell me to bugger off. Agreed and obeyed. Me buggering off NOW.
புதன் கிழமை, ஆகஸ்ட் 29, 2007 at 1:47 பிற்பகல்
Smileys were missed. Have them some.
Truely buggering off NOW.
வியாழன், ஆகஸ்ட் 30, 2007 at 9:33 பிற்பகல்
//சோர்வாகத்தான் இருக்கிறது – ஆனாலும் முடித்து தமிழில் பார்க்கும்போது பெருமிதமாகவும், நிறைவாகவும் இருக்கிறது//
Visitor, இதைத் தான் சொல்ல வந்தேன். அடிக்கணும்ங்கற எண்ணம் இருந்தா போதும். சிரமம் பெருசா தெரியாது. நான் ஒரே நாள் இரவுல, இணையத்துல தமிழ் இருக்கறது, தமிழ் தட்டறது, குழுமம்னா என்ன, எப்படி கடிதம் அனுப்பறாங்க, என்ன பேசறாங்கன்னு எல்லாம் தெரிஞ்சுகிட்டேன். தூங்கவே இல்லை. மறுநாள் காலைல முதல் கடிதம் அடிச்சேன். அப்புறம் எட்டுப் பக்கமும் என் கருத்துக்கும்(!) எனக்கும் மரத்தடிக் குழுமத்துல வந்த எதிர்ப்புல தவிர்க்கவே முடியாம பெரிய்ய பெரிய்ய கடிதங்கள்.. ஆனா ஒரு கை பாத்துடறதுன்னு முடிவோட இருந்தேன். : ) இப்ப சமத்தாயிட்டேன்னு வைங்க!
வியாழன், ஆகஸ்ட் 30, 2007 at 9:44 பிற்பகல்
பிரேமலதா, நீங்க சொன்ன மாதிரி அவங்களுக்கு என்ன பிரச்சினை, உண்மையிலேயே அவங்களுக்கு தமிழ்ல அடிக்க ஆர்வமிருந்தா, (ஆனா அடிக்கற ஸ்டைல் தான் சோர்வைத் தரதாயிருந்தா) நமக்குத் தெரிஞ்ச பிற வழிகளையும் அவங்க ஏற்கனவே முயற்சி செஞ்சிருக்கலைன்னா சொல்லலாமேன்னு தான் ‘என்ன பிரச்சினை’ன்னு கேட்டிருக்கேன்.
http://blog.ravidreams.net/?p=218
பலர் கஷ்டப்பட்டு பின்னால் உழைச்சு சில முயற்சிகள் செய்றாங்க. நாம போற போக்குல புறக்கணிக்காம, ஆர்வம் இருந்தா ஒரு முயற்சி செஞ்சு பாக்கலேமேங்கறதுதான் என் எண்ணம்.
மத்தபடி உண்மையிலேயே எப்படி இப்படிச் சொல்லலாம்னு கேள்வி கேட்கவோ, விரும்பாதவங்க யார் மேலயும் மொழிய வலிந்து ஏத்தற எண்ணமோ எதுவும் என்கிட்ட இல்லை.
வியாழன், செப்டம்பர் 13, 2007 at 5:48 பிற்பகல்
thaiyar satham sowkkiyamma.
?????
?????????
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 28, 2007 at 8:48 பிற்பகல்
Could you please tell me What is the tamil font name I need to use to view tamil pages..