”தாயார் சன்னதியில் தரிசனம் முடித்துக்கொண்டு திரும்புகையில் மடைப்பள்ளிப் பிரசாதக் கடையில் சுறுசுறுப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல் கேட்டேன். தீர்ந்துவிட்டது என்றார்கள். புளியோதரை இருந்தது. வாங்கிக் கொண்டேன். ஒரு சிறிய தொன்னைப் புளியோதரை ஆறரை ரூபாய். ஆனால் அமிர்தம் தான். திருவல்லிக்கேணி கோவிலில் சர்க்கரைப் பொங்கல் தான் ரொம்ப விசேஷம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதைத் தூக்கியடிப்பதாக இருக்கிறது புளியோதரை. இதுவரை ருசிக்காதவர்கள் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.”
ஒருமுறை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஆசை அடங்காமல் மீண்டும் கோயில் உள்வரை போய் வாங்கிச் சாப்பிட்டேன். பிரசாதம் எல்லாம் கொஞ்சமாகத் தான் சாப்பிடவேண்டும் என்று பக்கத்திலிருந்தவர்கள் செய்த நக்கலை எல்லாம் அலட்சியம் செய்து எண்சாண் உடம்புக்கு நாவே பிரதானம் என்று செயல்பட்டேன். விலை கொஞ்சம் அதிகம் என்று தோன்றியதும் உண்மை. மேலே உள்ள வரிகளைப் படித்தபோது நான் தனியாள் இல்லை என்று ஒரு பெருமை.
கீழே இருக்கும் சமையல் குறிப்பைச் சொல்லி இருப்பவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு. சம்பத் என்பவர். அவருக்கு நன்றி!
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்
செய்முறை:
- புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
- புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
- நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
- எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
- பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
- 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
- மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
- சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
- பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.
சனிக்கிழமை, பெப்ரவரி 24, 2007 at 7:41 மு.பகல்
காரத்துக்கு மிளகுப்பொடி மட்டும்தானா ?
சனிக்கிழமை, பெப்ரவரி 24, 2007 at 11:34 மு.பகல்
ஆமாம். மிளகு மட்டும் தான்’ங்கறது தான் முக்கியம். அதனால தான் தயாரா 200 கிராம் மிளகைப் பொடிசெய்யச் சொல்லியிருக்கேன். நாம கலக்கற சாத்தத்துக்கு அவ்வளவு தேவை இருக்காது. ஒரு உஷாருக்குத் தான். ஐயோ, கோயில் பிரசாத வாசனையே அந்தப் பொடில தான் இருக்கு.
வெள்ளிக்கிழமை, மார்ச் 2, 2007 at 6:58 பிற்பகல்
வாவ், ஜெஸ்ரீ நீங்களா? எள் சாதம் செய்ய கூகுளில் தேடிக்கிட்டு இருக்கும்பொழுது இதைப் பார்த்தேன்.
செவ்வாய்க் கிழமை, மார்ச் 13, 2007 at 8:22 மு.பகல்
// எள் சாதம் செய்ய கூகுளில் தேடிக்கிட்டு இருக்கும்பொழுது//
உஷா, ‘விண்வெளிக்கே போனலும் வெண்டைக்காய் கறிக்கு ரெசிபி எழுதுவியா, யார் கொத்தமல்லி சட்னியை எல்லாம் நெட்ல தேடிப் படிச்சு செய்யப் போறாங்க?’ன்னு ஒரு நண்பர்(?!) ரொம்பத்தான் சதாய்ச்சுட்டாரு. நான் கூட ஆமாவான்னு கடையை மூடிடலான்னு நினைச்சுட்டேன். உங்க பின்னூட்டம் அவருக்கு சமர்ப்பணம்.
முத முத வந்திருக்கீங்க, உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் ரெசிபி போடறேன், கொஞ்சம் டயம் கொடுங்க.
செவ்வாய்க் கிழமை, மார்ச் 13, 2007 at 9:15 மு.பகல்
வாவ், ஜெஸ்ரீ நீங்களா? கருவாடு என்று கூகுளில் தேடிக்கிட்டு இருக்கும்பொழுது உங்க வலைப்பதிவை பார்க்க முடியவில்லை. ஏற்பாடு செய்யவும்.
செவ்வாய்க் கிழமை, மார்ச் 13, 2007 at 11:03 மு.பகல்
தேடிக் களைத்தவர்,
உங்க வருகைக்கு நன்றி.
நான் எப்பவும் சொல்றது தான், “செஞ்சுட்டாப் போச்சு!”
இங்க..
)
வியாழன், ஜூன் 28, 2007 at 11:05 பிற்பகல்
we wantthis recipes in english.pls help me
சனிக்கிழமை, செப்டம்பர் 8, 2007 at 12:58 மு.பகல்
Makkale, konjam karuvaattu kolambu eppadi vakkaradhu.. somebody help me pls.. Yedho unarchi vasapattu karuvaada India la irundhu eduthukittu vandhuten… donno how to do..adhu marubadiyum fish aaradhukulla kedacha nalla irukkum… ippave danks….address kuduthaa kolambu parcel confirm…
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 9, 2007 at 3:52 பிற்பகல்
//address kuduthaa kolambu parcel confirm…//
http://www.keetru.com/recipes/non_veg/karuvattu_kuzhambu.php
வியாழன், மார்ச் 13, 2008 at 4:26 பிற்பகல்
Yr blog is a treasure house of ethnical cookery. With your humourous add on comments, the receipe and process makes an interesting reading.
திங்கட் கிழமை, April 28, 2008 at 2:00 மு.பகல்
i am searching for the recipe for mysore rasam. can u please put it in the blog.
thanks
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 6, 2008 at 5:40 மு.பகல்
do you know how to make karuvaadu?
சனிக்கிழமை, செப்டம்பர் 20, 2008 at 4:58 மு.பகல்
Hi Jaysree
Oru nimisham unga blog padichittu….. appadiya flash back nyabagamthan… wov… Receipe sonna vidham excellent, thanks to Mr.Sampath and romba romba thanks to you.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 30, 2009 at 8:23 மு.பகல்
Madam,
ennaku konjam sadarana sambar vagaigal matrum
sambar podi saivadu eppadi enru tamilil solluga
புதன் கிழமை, பெப்ரவரி 11, 2009 at 5:00 பிற்பகல்
Dalit Raj: எனக்குத் தெரியாதே. என் சமையல் அறிவு ரொம்பக் குறைச்சல்.
Ramesh: thanks சம்பத் அவர்களுக்கு மட்டும்.
g.veni: சாம்பார்/குழம்பு பிரிவுல க்ளிக்கினா வரும். samayal.com உங்க சொந்த வலைப்பக்கமா?
புதன் கிழமை, பெப்ரவரி 11, 2009 at 5:11 பிற்பகல்
பாகீ, நன்றி.
thanks venkat.
sukanya: http://mykitchenpitch.wordpress.com/2007/08/29/mysore-rasam/
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 13, 2009 at 7:45 மு.பகல்
Hi,
The recipe sound great. You should post them on Samukam.com social network in the Tamil recipe/food section.
Best,
Thiru
வியாழன், ஜூன் 11, 2009 at 11:36 மு.பகல்
Nice!
ஆமாம், நாங்கள் நல்லெண்ணெய் ஊற்றுவதில்லை, சன் ப்ளவர் ஆயில் தான். என்ன செய்வது?
திங்கட் கிழமை, ஜூன் 22, 2009 at 4:48 மு.பகல்
milagu varukkanama
செவ்வாய்க் கிழமை, ஜூலை 7, 2009 at 8:31 பிற்பகல்
கோவிலில் செய்யும் புளியோதரை மாத்திரம் தனி மணத்தோடும், சுவையோடும் இருக்கும். அதன் ரகசியம் இதுதானா ?
மேலும் ஒரு விண்ணப்பம் : அய்யராத்து வத்தக் குழம்பு செய்வது எப்படி என்ற விளக்கத்தையும் எழுதி விடுங்களேன். புண்ணியமாப் போகும்
வெள்ளிக்கிழமை, ஜூலை 10, 2009 at 11:57 பிற்பகல்
Do you taste the Srinangam Puliyotharai. Super O Super Nothing to compare.
புதன் கிழமை, செப்டம்பர் 30, 2009 at 4:03 பிற்பகல்
very nice manni, shall i call u like this very use ful sight nice iyangar receips keep it up