தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1/2 கிலோ
சின்ன கொத்துக்கடலை – 50 கிராம்
தேங்காய் – சிறிது
வறுத்துப் பொடிக்க
எண்ணை – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2 கப்
கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
முழு கருப்பு உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கோதுமை – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விரை – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
தாளிக்க
எண்ணை, கடுகு, நிலக்கடலைப் பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை:
- வறுத்துப் பொடிக்கச் சொல்லியுள்ள அனைத்துச் சாமான்களையும் எண்ணையில் சிவக்க வறுத்து, நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். மிளகாய் கமறாமல் இருக்க சிட்டிகை உப்பு சேர்த்து வறுக்கவும்.
- புளியை, கெட்டியாகக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.
- சாதத்தை உதிர் உதிராக வடித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் பரத்தி, 2 டீஸ்பூன் நல்லெண்ணை விடவும். சாதம் மேலும் ஒட்டாமல் இருக்கும்.
- வாணலியில் எண்ணை விட்டு நன்கு காய்ந்ததும், அதில் கொத்துக்கடலையைப் போடவும். படபடவென பொரியும்.
- பொடிப்பொடியாகக் கீறிய தேங்காய்த் துண்டுகளையும் அதனுடன் போட்டு, சிவக்க வறுத்து, சாதத்தில் கொட்டவும்.
- கொஞ்சம் எண்ணையில் கடுகு, நிலக்கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதையும் சாதத்தோடு சேர்க்கவும்.
- இப்போது புளிக்காய்ச்சலையும் சாதத்தில் சேர்த்து, தேவையான அரைத்த பொடி, நல்லெண்ணை விட்டு நன்றாகக் கிளறி பரிமாறவும்.
* மிகுந்த மணத்தோடு வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும். சாப்பிடும்போது, சின்ன கொத்துக்கடலையும் தேங்காய்த் துண்டுகளும் சுவாரசியமான இடையூறு.
* இது மேல்கோட்டையில் செய்வதாக இருந்தாலும் கன்னட மக்கள் வழக்கமாக எல்லாவற்றிலும் சேர்க்கும் வெல்லத்தை(கொடுமைங்க!) இதில் சேர்க்காமல் இருப்பதே இதன் கூடுதல் சிறப்பு.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொரித்த அப்பளம், வடாம், சிப்ஸ் வகை, தயிர்ப் பச்சடி வகைகள்.
செவ்வாய்க் கிழமை, December 4, 2007 at 8:07 பிற்பகல்
hello madam,
Ramakannan from mysore. But madam dont tell about our kanadiga’s they r so good. {i il tell in kanada…….ellruve ollevaru avaru ellanuve chennagi madutharee baree bella cherstharee ashtee}can u under stand meaning is all of them r good people only they ill add vellam in their cooking. So tomorrow morning i ill make this puliogare. madam write more receipies and expecting ur more receipies ur friend ramakannan from mysore.
வெள்ளிக்கிழமை, December 7, 2007 at 9:42 மு.பகல்
ramakannan, நான் கன்னட மக்களை நல்லவங்களா கெட்டவங்களான்னு எதுவும் சொல்லலை. ஆனா அவங்க சமையல்ல எனக்குப் பிடிக்காத அம்சம் இருந்தா, சொல்லத்தான் செய்வேன். இது என் சமையல் குறிப்பு பதிவு. இங்க அநேகமா என், என் குடும்பத்தினரின் சுவையை ஒட்டித் தான் கருத்துகள் இருக்கும். அது தமிழ்நாட்டுக் காரங்களுக்கே கூட ஒத்துவராம இருக்கலாம். அவங்க கருத்தை அவங்க சொல்லலாம். அதுக்கு மேல நான் எதுவும் செய்ய முடியாது.
புதன் கிழமை, செப்டம்பர் 3, 2008 at 4:57 பிற்பகல்
SUPER…!!!!
வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2009 at 2:47 மு.பகல்
dear madam,
thanks for ur recipe. could u help nri single guys like me by giving out a simple recipe for mixed rice without any need of fresh ingredients or mixie (like usage of red chillies instead of green chilles, and choice of vegetables avaulable in local market) thanks and cheers, pls keep up the good work. c ya.
செவ்வாய்க் கிழமை, December 8, 2009 at 12:14 பிற்பகல்
dear madam
as per your menu please add milaghu and black ellu that also willgive some additional flavour and taste.
and also please fry the tamarine also fried as a dry in the oil and make all the ingredientces which you have mentioned in your list and make as powder whenever you required stirrit in water and boiled use as ready made puliyodharai
and tell me your comment