நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் புளிக்காய்ச்சலையும், புளியோதரைப் பொடியையும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான பக்குவத்தில் தயாரிக்கப் பட்டால் இவை ஆறு மாதங்கள் ஆனாலும் கெடாது.
தேவையான பொருள்கள்:
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 150 கிராம்
காய்ந்த மிளகாய் – 15
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கல் உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணை – 1/2 கப்
புளியோதரைப் பொடி தயாரிக்க
காய்ந்த மிளகாய் – 15லிருந்து 20
தனியா – 3 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு
புளியோதரை கலக்க
உதிராக வடித்த சாதம்
புளிக்காய்ச்சல்
புளியோதரைப் பொடி
மஞ்சள் பொடி
நல்லெண்ணை
பச்சைக் கருவேப்பிலை
நிலக்கடலை
வெந்தயம்
கடலைப் பருப்பு
உளுத்தம் பருப்பு
முந்திரிப் பருப்பு
வெள்ளை எள்
செய்முறை:
புளிக்காய்ச்சல்:
- முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து, உப்பு சேர்த்துக் கரைத்து, வடிகட்டவும்.
- அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, முழு மிளகாய் வற்றலை நன்கு வறுத்து, பின், கடுகு, சீரகம் பொரித்து புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து, நிதானமாகக் கொதிக்கவிட்டு, நன்கு கிளறிவிட வேண்டும்.
- பாதி கொதிக்கும்போது பச்சை வெந்தயத்தையும் சேர்க்கவும்.
- தளதளவென சப்தத்துடன் கொதித்து இறுகி, எண்ணை மேலே வரும் சமயம் புளிக்காய்ச்சல் தயார். அடுப்பை அணைத்து, நன்கு ஆறியவுடன், பாட்டிலில்* எடுத்துவைக்கவும்.
புளியோதரைப் பொடி:
- அடுப்பை சிம்’மில் வைத்து வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- சிறிது எண்ணை விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.
- அதிலேயே காய்ந்தமிளகாய், தனியாவை நன்கு வறுத்து எடுக்கவும்.
- ஆறியதும், எல்லாச் சாமான்களையும் மிக்ஸியில் நைசாகப் பொடித்து எடுத்துவைக்கவும்.
புளியோதரை கலக்கும் விதம்:
- ஒரு பெரிய தாம்பாளத்தில் நன்கு சூடான, உதிர் உதிராக வடிக்கப்பட்ட சாதத்தை பரவலாகக் கரண்டியால் எடுத்துப் போடவும்.
- அதன்மீது மஞ்சள் பொடி, பச்சைக் கறிவேப்பிலையைப் பரவலாகத் தூவி, நல்லெண்ணையையும் பரவலாகச் சேர்த்து அப்படியே நன்கு ஆறவிடவும்.
- பின், தேவையான புளிக்காய்ச்சலை சாதத்தில் போட்டு, சாதம் குழையாமல் உடையாமல் மெதுவாகக் கரண்டியால் அல்லது கைவிரல்களால் (கையால் அல்ல) கலக்கவும்.
- எண்ணையில் நிலக்கடலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், முந்திரிப்பருப்பு, எள் வறுத்து புளியோதரையில் சேர்க்கவும்.
- கடைசியில் திட்டமான அளவு, புளியோதரைப் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
- எள், தாளிக்கும்போது சேர்க்காமல், வறுத்து, பொடித்தும் கடைசியில் சேர்த்தால் மிகுந்த வாசனையோடு சுவையாக இருக்கும்.
- உப்பு, சர்க்கரை, ஊறுகாய் மற்றும் உப்போ சர்க்கரையோ சேர்த்த மசலாக்களை பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் டப்பாக்களில் வைப்பது உடலுக்குத் தீங்கானது. இவைகளை எப்பொழுதும் கண்ணாடி பாட்டில்களிலேயே வைக்கவும். உள்ளேயே ஸ்பூன் போட்டு வைப்பதாக இருந்தால் மர ஸ்பூன் மட்டுமே உபயோகிக்கவும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொரித்த அப்பளம், வடாம், சிப்ஸ் வகைகள், மெலிதாகத் தட்டப்பட்ட உளுந்து வடை (ஆஞ்சநேயர் கோயில் வடைமாலை), …

புதன் கிழமை, மார்ச் 14, 2007 at 3:20 பிற்பகல்
அன்புடையீர்
சாதிகளை ஒழிக்க போராடுகிற நாம், குறிப்பிட்ட சாதியின் பெயரில்
உணவு மெனுக்களை குறிப்பிட வேண்டாமே!?
Plz contact me
eMail – genius3z@yahoo.com
Cell No – 988 499 255 0
வியாழன், மார்ச் 15, 2007 at 6:35 மு.பகல்
புளியோதரை மணம் கம்மென்று அடிக்கிறது.
இங்கு ‘பாட்லெக்’கில் எங்கள் புளியோதரைதான்
அடிபிடியென்று போகும்! மேட்ச் ஃபிக்சிங்’ கார்னரில் பொட்டுக்கடலை துவையலை மறந்து
விட்டீர்களே!!!!
வியாழன், மார்ச் 15, 2007 at 6:41 மு.பகல்
புளியோதரை மணம் கம்மென்று அடிக்கிறது.
இங்கு-யூஸ்-ஸில் ‘பாட்லெக்’கில் எங்கள் புளியோதரைதான் அடிபிடியென்று போகும்!
மேட்ச்ஃபிக்சிங் கார்னரில் பொட்டுக்கடலை
துவையலை மறந்துவிட்டீர்களே!!!
வியாழன், மார்ச் 15, 2007 at 1:05 பிற்பகல்
எழுத்தாளர் ஒளிர்ஞர், உங்கள் கருத்துக்கு நன்றி.
வசம்பை பிள்ளை வளர்ப்பான் அல்லது பேர் சொல்லாதது என்று சொல்வார்கள். அதுமாதிரி ஆகிவிட்டதா ஐயங்கார் என்ற வார்த்தை? எனக்கு அப்படித் தோன்றவில்லை. நீங்களே வேறு பெயர் இருந்தால் சொல்லுங்கள்.
வியாழன், மார்ச் 15, 2007 at 1:07 பிற்பகல்
நானானி, நன்றி. பொட்டுக் கடலை துவையல் தெரியவில்லையே. தனிமடலிலோ, பொதுவிலோ பகிர்ந்து கொள்ளுங்கள். இங்கும் ஏற்றிவிடலாம்.
செவ்வாய்க் கிழமை, மார்ச் 4, 2008 at 10:04 பிற்பகல்
Hi Jayashree,
Basic question thaan – ellam rice variety recipes (your blog, vikatan and others)le, ’sadhathai uthir uthira vadithu kollavum’ nnu one linele potturaanga – anaal ange thaan recipeyouda twiste irukkunu naan nenaikkiren!
Naan variety rice pannana taste nalla vanthurum anal indha uthir uthira konjam imsai.
Edhavadhu oru straight-forward method irukka? 1 cup ricekku 2 cups waternnu solluvanga…appadi kanakku panni rice cookerle vacha kooda konjam kuzhainthu thaan pogirathu. Ithannaikkum ponni pacharisi thaan. Enakku Pittsburgle kidaikkira rice vaagunnu nenaikkiren…
Besides that, you’re doing a great job for fellow citizens like us. Munnadi, ponnuku kalyanamna Mallika Badrinath books seedhaname kuduppangannu kelvi pattriken. Adhellam ippa thevaiye illa – unga blog URL onne podhum – jamachidallam! Very very comprehensive – you name it you get it.
I am a regular visitor – neraiya vishayam kathukkittu irukken unga blogle irundhu. Your sampling is perfect – neraiya recipes try pannitten. Ellame romba nalla vanthuthu.
Thiruvadhirai annikku, enga mamiyar thiruvadhirai kali pannanum sonnanga… eppadi pannanum neraiya recipes paathu adha paani, oru maari vandthuthu. Inge vandhu paatha supera recipe pottu vachirukeenga – ippa eppada adutha thiruvadhirai varumnnu irukku.
Appadiye andha thirvadhirai adaikkum oru recipe upload pannunga – please.
Innum oru feedback – mudinja alavu ella recipes kkum oru final picture add panna nalla + usefula irukkum. There are 2 reasons
1) Pictures inspire us to try that recipe
2) They give a good measure on how the final product is to look like. Adhunaale, naan pictures irukka recipes thaan try panni irukken. Oru comfortable feeling thaan – jsri panna maarinnu irukkunnu.
Keep up the good work!
My wishes to your daughter.
-Leena
செவ்வாய்க் கிழமை, மார்ச் 11, 2008 at 9:17 பிற்பகல்
Leena Sudhakar,
ஓரளவு சாதம் வடிப்பது குறித்து இங்கே சொல்லியிருக்கிறேன். http://mykitchenpitch.wordpress.com/2007/01/12/saadham/
உதிர் உதிராக இருக்க முடிந்தவரை பழைய அரிசியாக இருத்தல் நலம்.
வெங்கலப்பானையில் வடிக்கும்போது முக்கால் திட்டத்திலேயே நாம் முன்னெடுத்து கஞ்சியை ஒட்ட வடித்து, மூடிவைத்துவிட்டால் உள்ளே பொலபொலவென்று ஒட்டாமல் வெந்திருக்கும்.
குக்கர் என்றால் அன்றாடம் சமையலில் ஒரு கப் அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் வைக்கிறீர்களோ, அதைவிட கலவன் சாதத்திற்கு அரை கப் தண்ணீர் குறைவாகவே வைக்கவும். முடிந்தவரை அரிசியோடு சேர்த்து மேலும் பல உணவுகளை(பருப்பு, காய்கறி, பயறுகள்…) சமைக்காமல் இருக்கலாம். இதனால் குக்கர் விசில் வர நேரமாகி அதிகம் குழையலாம். தவிர்க்கமுடியாமல் அப்படி வைக்க நேர்ந்தால் இன்னும்கூட தண்ணீரைக் குறைவாக வைக்கவும். முக்கியமாக குக்கரில் ப்ரஷர் வெளியேறியதும் உடனே திறந்துவிடவும். அப்படியும் குழைந்த மாதிரி உணர்ந்தால் அல்லது புது அரிசியாக இருந்து உதிருதிராக இல்லாமல் இருந்தால், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு ஃபேன் அடியில் திறந்துவைத்துவிடலாம். இது அதிகம் மோசமாகமால் தடுக்கும். சாதம் முக்கால் சூட்டிற்குமேல் ஆறியதும் மட்டுமே கலக்க ஆரம்பிக்கவேண்டும்.
அதைவிட எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் அல்லது மைக்ரோவேவ் அவனிலும் சுலபமாக ஒட்டாமல் சாதம் வடிக்கமுடியும்.
பண்டிகை நாள்களில் நாங்கள் அடை செய்வதில்லை. அதனால் போடவில்லை. பின்னால் சேர்க்கிறேன். சென்றவருடம் அக்கார அடிசில் செய்யும்போதே என் நெருங்கிய குடும்ப உறவினர் இறந்துவிட்டதால் தொடர்ந்து மற்ற படங்கள் சேர்க்கமுடியவில்லை.
இந்த வருடம் விட்டுப்போனவைகளில் நியாபகம் இருப்பதற்கெல்லாம் முடிந்தவரை படம் சேர்த்துக்கொண்டு வருகிறேன். வெங்கட் கேட்டதால் மறுநாளே எல்லா வகை புளியோதரைக்கும் ஒரே நாளில் ஆர்வக் கோளாறில் குறிப்புகள் தட்டிவிட்டேன். அப்புறம் பலமுறை புளியோதரை செய்தும் படம் எடுக்கவே தோன்றவில்லை. இனி சேர்க்கிறேன்.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 20, 2008 at 1:01 மு.பகல்
hai
Saw ur receipies but i have a doubt in it. u told to add vendayam to it.
if v r adding it wont the receipie get a bitter taste. please answer me
சனிக்கிழமை, செப்டம்பர் 20, 2008 at 2:01 பிற்பகல்
i came to know about your site thro’ vikadan and terribly obsessed with the vrieties. ethai parpathu , ethai seivadu enru ore confusion
திங்கட் கிழமை, ஜனவரி 5, 2009 at 5:43 பிற்பகல்
plz upload picture too..
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 13, 2009 at 7:46 மு.பகல்
Hi,
The recipe sound great. You should post them on Samukam.com social network in the Tamil recipe/food section.
Best,
Thiru
புதன் கிழமை, பெப்ரவரி 18, 2009 at 9:47 பிற்பகல்
mannuchella: புளி, வெந்தயம் எப்பவும் சிறந்த காம்பினேஷன். நம் அன்றாட சமையல்லயே தினம் குழம்புக்குத் தாளிக்கும்போது நிறைய வெந்தயம் சேர்க்கலாம். கசப்பே இருக்காது. புளியோதரைக்கும் அதுவே. கலந்து ஒருமணிநேரத்துல வெந்தயத்தோட மணம் புளியோதரை முழுக்க விரவி இருக்கும். எள்ளுக்குச் சமமா வெந்தய மணமும் புளியோதரைக்கு முக்கியம். தைரியமா சேர்க்கலாம்.
vijaya: thanks.
ambika: பலதடவை செய்துட்டேன். அடுத்த தடவை செய்யும்போது எடுக்கணும்னு நினைச்சு நினைச்சே தள்ளிப் போகுது. சீக்கிரம் போடறேன்.
tony thiru: நன்றி. நான் எந்த திரட்டி, social networkலயும் சேருவதில்லையே. மன்னிச்சுடுங்க.
திங்கட் கிழமை, மார்ச் 2, 2009 at 11:17 பிற்பகல்
ஊரப்போடமல் ஐயங்கார் item ஏதாவது உண்டா. புளியஞ்சாதத்தை முத நா சாயந்திரமே செய்து மறுநாள் காலையோ மதியமோ சாப்பிட்டு பாருங்கள். சும்மா குப்புன்னு தூக்கும்.
இட்லி அல்லது தோசை மாவைக்கூட பெரும்பாலான ஐயங்கார்கள் 4 அல்லது 5 நாள் புளிக்கவைத்துதான் வார்ப்பார்கள். சாப்பிட்டதுமே கண்கள் செருகும்.
செவ்வாய்க் கிழமை, மார்ச் 17, 2009 at 10:42 பிற்பகல்
Desikachari: புளியோதரை ஊறவெச்சு சாப்பிடுவோம். ஆனா இட்லிமாவு 4, 5 நாள் புளிச்சதா? கொடுமையா இருக்கே. அடிக்கற வெயிலுக்கு அதிகபட்சம் 3 மணி நேரத்துல மாவு பொங்கிடுது. இதுல ஐயங்கார் பேரைவேற இழுக்கறீங்க. தெரியலை.
திங்கட் கிழமை, மே 18, 2009 at 3:20 பிற்பகல்
nandri, jayashree govindarajan. with your recipe weekendla yen veetukarama poramai padum padi, kalakittane.
திங்கட் கிழமை, ஜூலை 6, 2009 at 1:35 பிற்பகல்
onga receipe poliyodharai very supera irrudhadu. nan new maried eppo than samayal kathukiran, endha receipe seidhu katti en vettil elloridam parattu vangenian, edha madhiri any other variety receipe seithu anupunga pls, ungala parthu nan kathukiran pls
திங்கட் கிழமை, ஜூலை 6, 2009 at 1:36 பிற்பகல்
variety ana receipe kids lunch box kodhuvea items ellam sollikonga pls
வியாழன், ஜூலை 23, 2009 at 4:13 பிற்பகல்
Mihavum payanulla samaiyal vilakkam.
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 28, 2009 at 2:25 பிற்பகல்
அன்பு ஜெயஸ்ரீ மேடம்,
தங்களது ஒவ்வொரு உணவுக் குறிப்பும், தங்கள் கைவண்ணத்தால் (எழுத்தால்..) இன்னமும் சுவை கூடித் தெரிகிறது.
உணவின் சுவை கூட்ட ஏலம், முந்திரி, தாளிதத்தோடு தங்கள் கமெண்ட்கள் மிக மிகச் சுவை! அருமையோ அருமை!
ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்… உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!